புதன், 17 ஜூன், 2015

என் லட்சியம்!

Bsc (Maths), கல்லூரி படிப்புக்கு பின்,  ஐயாவின் ஆசைப்படி Group - 1, Main exam, Mathematics. எடுத்து எழுதினேன். மிகவும் சிரமமாக இருந்தது. 
ஏனோ தானோன்னு எழுதினேன். தேர்வாகவில்லை(ஐயா சொல்ற மாதிரி நானெல்லாம் நுனி புள் மேஞ்ச மாடு).

 M.C.A படிக்கணும்னு ஐயாகிட்ட கேட்டேன், ஐயாவோ, விரைவில் எனக்கு திருமணம் செய்ய இருப்பதாகவும், 3 வருடம் படிப்பு தாமதமாகிவிடும் என்றார்கள். (எல்லாம் அம்மா இல்லாததால் தான், அவர் கடமையை நேரத்தில் செய்ய நினைத்தார்கள்)

உறவிலே ஒரு வரன் வர, அதை முடிக்க ஆயத்தமானார்கள்.அவர்கள் வரதட்சணை குறியாக இருந்தாது எனக்கு பிடிக்க வில்லை.என் மனதுக்கு பிடிக்க வில்லை, என ஆஷ்தான பிள்ளையாரிடம்(Municipal colany) போய் வேண்டினேன். "கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடு" "உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன் என"

 
அட!!!..2 நாளில் பிறிதொரு கல்யாண  பேச்சு வார்த்தையில், அவர்கள்
பேச்சு வார்த்தை பிடிக்காமல், ஐயாவே "என் மகளுக்கு இப்போதைக்கு திருமணம் செய்வதாய் இல்லை, நீங்கள் கிளம்புங்கள்" என சொல்லி விட்டார்கள்.
 
அந்த சமயத்தில் தான், நாம இப்படியே இருக்க கூடாது ..மேல படிக்கணும், அதுவும்   M.C.A படிக்கணும்னு தோணுச்சு

அப்ப, நம்ப தம்பி சிங்கையில் தான் இருந்தார். அவர் அனுப்பிய Colorful photo பாத்து மெர்சலாயிட்டேன் .
 
M.C.A முடித்து , சிங்கப்பூரில் Software Engineer வேலை பாக்கணும் என லட்சியம் தோன்றியது . என் லட்சியம் அடையும் நோக்கத்தில், பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க மறந்தேன். அதுக்கு அந்த பிள்ளையார் என்ன பண்ணார் தெரியுமா?
Pls..wait...I will tell you later...
 
வீட்டையும் பாத்துக்கிட்டு படிக்கனும்னா, Distance Education தான் சரின்னு, check பண்ணா, அடுத்த நாள், Bharathidasan university, M.C.A படிப்புக்கு Application கொடுக்க
கடைசி நாள், ஐயா, உடனே OK சொல்லும் மன நிலையில் இல்லை என தெரிந்தது.
 
 
மொள்ளமாரிதனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும்..மனசு சொல்லுச்சு
நானே ஐயா Sign, போட்டு Application, கொடுத்து வந்துவிட்டேன்.
Acknowldgement / Admission card ஏதும் வீட்டுக்கு வந்துட கூடாது வேற ..
தாத்தா வீட்டு Address கொடுத்துவிட்டேன். அப்பால நாலு தெரு தள்ளி தான் தாத்தா(அம்மா வழி தாத்தா) இருந்தாக..

அப்பாவும், தாத்தாவும் பேசிக்க மாட்டாக, போட்டு கொடுக்கவும் வேலை இல்லை...ஷ்ஷ் ..அப்பா!! இந்த ஒரு சின்ன மூளை..  என்னவெல்லாம் யோசிக்க வைக்குது...
 
மனசு பக் பக் என அடித்து கொண்டிருந்தது. 
 
என் லட்சியம் நிறைவேறியதா? ஐயா OK சொன்னார்களா ?
 
Pls wait....
 
அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:67)
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
 
பொருள்:
தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவனைக் கற்றோர் கூடி இருக்கும் அவையில் முந்தியிருக்குமாறு கல்வியில் வல்லனாக்குதல்.

1 கருத்து: