ஞாயிறு, 15 நவம்பர், 2015

DD - 2 (தெய்வீக ராகம்! திவ்யா! -2)

நீங்க திவ்யாவுக்கு கொடுத்த வரவேற்ப்ப நினைச்சு ரொம்ப ஆச்சரியமா போச்சு! எந்த பதிவும் இல்லாத அளவு, இந்த பதிவு Reach ஆயிருக்கு! Thanks to everybody who read continuously!

தெய்வீக ராகம்! திவ்யா! -2!

நான் தஞ்சையில் ஒரு Computer Centre - ல் வேலை பார்த்த விபரம் முன்னரே சொல்லி இருந்தேன்ல, அங்க தான் திவ்யாவ பார்த்தேன். திவ்யாவும் அங்க Class எடுத்துட்டு இருக்கிற விவரம் தெரிஞ்சது. அவ அங்க மூன்றாம் வருடம், B.E படித்து கொண்டே, அங்கு Part time class எடுத்து கொண்டு இருந்தாள். மாலை நேரம் மற்றும் சனி, ஞாயிறு தான் அதிகம் சந்திப்போம். விடுமுறை நாட்களில் பகலில் சந்திப்போம்.

அவள் அப்பா, அவள் ரெண்டாம் வருடம் படிக்கும் பொழுது (ஒரு வருடத்திருக்கு முன்னால்) Heart Attack - ல் இறந்து விட்டதாகவும், அவர் இருக்கும் வரை, அவரது General Store வருமானம், தங்களது தேவைக்கே சரியாக இருந்ததாகவும்,  ரெண்டு அக்காவிற்கு, திருமணம் ஆகி விட்டதாகவும், ஒரு தங்கை இருப்பதாகவும் சொன்னாள்.

சித்தப்பா மற்றும், சித்தப்பாவின், மகன் (அண்ணன்) மேல் பார்வையில் இவர்கள் இருப்பதாகவும் சொன்னாள்.  சித்தப்பா உதவி செய்வதாகவும், ஆனால், College fees அதிகம் ஆதலால், படிப்பை பாதியிலே நிறுத்த சொன்னதால், குடும்ப நண்பர் ஒருவரின் Centre இது, அவர் recommend வேலைக்கு வந்து கொண்டே படிக்கிறேன், என சொன்னாள். B.E படிப்பது அவள் கனவென்றாள். "நீ நேசிச்சு படிக்கிற படிப்பு உனக்கு வந்தே சேரும்னு ஆறுதல் சொன்னேன்."

எனக்கு அம்மா இல்லை, அவளுக்கு அப்பா இல்லை, அது போதுமே! சீக்கிரமே Friends ஆயிட்டோம்.

நான் regular staff , திவ்யா Study Holidays - என்பதால், ரெகுலரா  வந்துட்டு இருந்தா.
அப்ப ஒரு நாள். என்னைக்கும் Use பண்ற System அன்னைக்கு மக்கர் பண்ணதால, வேற ஒரு system மாத்தி உக்காந்தேன். அப்பத்தான், நான் இருந்த System, Key board-க்கு கீழே ஒரு Cover இருந்தத பார்த்தேன். அது கொஞ்சம் கனமாக இருந்தது.

நான் சுத்தி முத்தி பாக்க, எல்லாரும் System-ல Busy-ஆ இருந்ததால் என்னை கவனிக்கவில்லை,ஆனால் எனக்கு பின்னால் நின்ற திவ்யா "என்ன?" என்றாள். "தெரியல"ன்னேன்.அங்க இருந்தவங்க கிட்ட "இந்த Cover உங்களோடதான்னு கேட்டேன்," எல்லாரும் இல்லை என்றார்கள்.

Admin Staff யாரிடமாவது, அந்த Cover கொடுத்துட்டு கிளம்பலாம்னா,  யாரும் இல்லை. எல்லாரும் கிளம்பினதும், அந்த Cover எடுத்து முன்ன பின்ன பார்த்தேன், ஒரு ஊரு, பேரு ஒன்னும் இல்லை. என்னவா இருக்கும்? என திவ்யாவ பார்த்து கேட்டேன், "தெரியல" , பேசாம Admin Table-ல வச்சுட்டு கிளம்புன்னா. எனக்கு அது என்னவா இருக்கும்னு ஒரு தெரிஞ்சுக்க ஒரே ஆவல்,

பிரிச்சு பாப்போமா? ன்னு திவ்யாகிட்ட கேட்டேன், "என்னைய இந்த வம்புல மாட்டி விடாதேன்னு" சொன்னாள். வச்சுட்டு வரியா? நான் கிளம்புறேன்னு கிளம்பி முன்னாடி போனாள். எனக்கு மனசே இல்ல, "கொஞ்சம் பிரிச்சு, அது என்னனு பார்த்துட்டு திரும்ப வைக்கலாம்" னேன். அவள் பதில் சொல்வதற்குள், நானே ஒட்டி இருந்த கவரை, தண்ணி தொட்டு, பிரிச்ச சுவடு தெரியாமல், பிரித்தேன். ஷ் ஷ்..Unauthorized - ஆ ஒரு வேலை செய்ஞ்சா எவ்ளோ டென்ஷன் இருக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சது. முடியல...அவ்!

Cover பிரிக்குமுன், அவள் வேற, யாரோ வர்ற சத்தம் கேக்குதுன்னு திகிலுட்டினாள். "அடிபாவி இங்க என்ன murder - ஆ பண்ணிட்டு இருக்கேன்னு, கொஞ்சம் பேசாம இருக்கியான்னு அதட்டினேன்."

ஆகா!! பிரிச்சவுடன் தெரிஞ்சது, அது ஒரு காதல் கடிதம் என...தெரிஞ்சவங்க யாருக்கோ, எழுதனதுன்னா படிக்க கூடாதுன்னு, மேலோட்டமா பார்த்தேன்.

"அன்புள்ள தீபாவிற்கு", என ஆரம்பித்து, கடிதமும், கவிதையுமா ஒரு 6, 7 பக்கம் இருந்தது.  கடைசி பக்கத்தில், அன்புடன் "சத்யா" என முடித்து இருந்தது. அதை தான் பார்த்தேன், அதற்குள், "நான் கிளம்புறேன் பா" சொல்லிட்டு அவள் ஓட்டமும் நடையுமா கிளம்பினாள்.

 திவ்யா, உனக்கு "தீபா" தெரியுமான்னு கேட்டேன், "தெரியல", சென்டர்-ல எங்க யாரும் அந்த பேர்ல இல்லைன்னா. எனக்கும் தெரிந்து யாருமே இல்லை. "அப்படின்னா யாரோ யார்கிட்டையோ , கொடுக்க சொன்னதா கூட இருக்கலாம்" ..அப்படின்னா இந்த லெட்டெர் முழுசா படிக்கறது தப்பில்லன்னு தோனுச்சு, அவள் கிட்ட சொன்னேன். "அசிங்கமா, இல்ல, அடுத்தவங்க லெட்டெர், எப்படி நாம படிக்கறது?" ன்னு கேட்டா.."ஹலோ!, எனக்கு Love letter எப்படி இருக்கும்னு பாக்கணும் "ன்னேன். கொஞ்ச நேரம் உக்காருன்னு சொல்லி, அவள் உக்காரவச்சு படிக்க ஆரம்பிச்சேன்.

மனசுல நின்ன அந்த வரிகள் மட்டும் உங்களுக்காக...(நாகரிகம் கருதி, அந்த கடிதத்தில் சம்மந்தபட்டவர்களின், சொந்த வரிகளை, இங்கு நான் குறுப்பிடவில்லை!)

"நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது..
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே..
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே.."

என ஆரம்பித்து எழுத பட்டிருந்தது.."அடடே...என்னமா! கவிதை எழுதி இருக்கான் பாரு?" அப்படின்னு திவ்யாவ பார்த்து கேட்டேன், அவ மூஞ்சு ஏகத்துக்கு மாறி இருந்துச்சு, "உன் மூஞ்சி, அது "பூவே, செம்பூவே, சினிமா பாட்டு வரிகள்" ன்னு ..தலையில அடிச்சுகிட்டா...."அடங்கொக்கமக்கா!"ன்னு Continue பண்ணேன்.

"நேற்று போல் இன்று இல்லை,
இன்று போல் நாளை இல்லை.
அன்பிலே வாழும் நெஞ்சில்,
ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால்,
உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும் சொல்லவா".

என ஆரம்பிச்சதுமே, அது எந்த பாட்டுன்னு எனக்கே தெரிஞ்சது, இருந்தாலும் Continue பண்ணேன்..

என்னை நான் தேடி தேடி,
உன்னிடம் கண்டுக் கொண்டேன்.
பொன்னிலே பூவை அள்ளும்,
புன்னகை மின்னுதே.
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே.
அன்பே இன்பம் சொல்ல வா

காதலின் தீபம் ஒன்று,
ஏற்றினாளே என் நெஞ்சில்.
ஊடலில் வந்த சொந்தம்,
கூடலில் கண்ட இன்பம்.
மயக்கம் என்ன,காதல் வாழ்க."

"பொண்ணு , காதல் விளக்க ரொம்ப தூண்டி விட்டு எரிய விட்டா போலவே? ன்னு கேட்டுகிட்டே..திவ்யா முறைக்க, முறைக்க ..அடுத்து படிக்க ஆரம்பிச்சேன்.."

"வைகை கரை காற்றே நில்லு
வஞ்சி தனை பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
வஞ்சி தனை தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளை
கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு"

இன்னும் சில வரிகள், அந்த பையன் சொந்த நடையில் இருக்க, கொஞ்சம் சோகமா இருந்தது....மனசுக்கு கஷ்டமா ஆச்சு.....அந்த எழுத்துக்கள் அவ்ளோ powerful-ஆ இருந்தது..படிக்க படிக்க..அந்த தீபா, சத்தியாவ பாக்கனும்னு ஆர்வம் ஜாஸ்தியாச்சு..அதுவரை கிண்டல் பண்ணின நான்..கொஞ்சம் மரியாதையுடன் அந்த கடிதத்தை தொடர்ந்தேன்..


"உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது ..
இன்பம் பிறந்தது ..

(உறவுகள் தொடர்கதை ....)"

கடைசியா முடித்த அந்த வரிகள், அந்த பெண்ணின் நிலையை, கொஞ்சம் சோகமாகவே காட்டபட்டது ரொம்பவே மனசு கஷ்டம்மாச்சு.
"இன்னும், சில சொந்தவரிகளில் எழுதி முடித்து விட்டு,  குறிப்பு:  நாளைக்கு வரும் பொழுது, Yellow கலர் சுடிதாரில் வரவும்னு, போட்டு இருந்தது."

வாவ்..என்ன லெட்டெர் ?, பயபுள்ள, சினிமா பாட்டு வரியா போட்டு அந்த பொண்ண மடக்கி இருப்பானோ?" என நான் நினைக்கும் நேரத்தில், அவளிடமிருந்து சத்தம்.."படிச்சுட்டியா?"  "போய்,  அந்த table-ல, அந்த Cover, வைச்சுட்டு வா!"ன்னா..

"இல்ல, நான் வைக்க மாட்டேன், வேற யாரும் இந்த படிக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல, யாருன்னு தெரிஞ்சுகிட்டு , அவங்க கிட்ட சேர்ப்போம், இல்லன்னா..அப்படியே விட்டுடுவோம். நல்ல ரெண்டு மனச வேற யாரும் கிண்டல் பண்றது பாவம்.அப்படின்னு, நானே என் Bag -ல போட்டு கிளம்புனேன், "என்னமாச்சும் பண்ணுன்னு அவ வீட்டுக்கு போய்ட்டா"

நான் வீட்டுக்கு போயிட்டேன், அந்த வரிகள் மீண்டும், மீண்டும் மனசுல ஓடிகிட்டே இருந்தது. அந்த தீபா யாராக இருக்கும், அவளுக்கு அப்படி என்ன கஷ்டம்? அப்படி. கொஞ்ச நேரத்துல அப்படியே மறந்துட்டு, சொந்த வேலையில Busyஆயிட்டேன். அப்புறம், நம்ம அண்ணனுமானவர்,(அதான் தம்பி) வீட்டுக்கு வந்தார். அப்பத்தான் அந்த லெட்டெர்  இருக்கிற ஞாபகம் வந்துச்சு. ஏதாவது Money Change வேணும்ன்னா, என் Bag எடுப்பாரு, ஆகா, அந்த Letter பாத்துட்டா...கடவுளே..!

யாரோ, யாருக்கோ எழுதுன லெட்டெர், நான் என் பதறனும்னு, உங்க mind voice எனக்கு கேக்குது. என்னன்னா?, என் தம்பி இருக்காரே, கற்பனையிலே கதாகாலேட்சபம் பண்ணுவாரு!

பொதுவா UG-ல ஒரு 10 நாள் இடைவெளி விட்டுதான் Allied paper exam நடக்கும் இல்ல? ..நான் Statistics Exam (B.sc Maths) முடிச்சு வரப்ப, ஒரு பஞ்சாயத்த வீட்ல கூட்டி (வேற யாரு, நம்ம அக்கா, அண்ணன் ) இருந்தாரு தம்பி, "Regular paper exams,  Continuous- ஆ தான் வரும், இவ்ளோ Gap விட்டு வைக்க மாட்டங்கன்னு"உண்மைய சொல்லு ,  Arear Exam தானே எழுத போனே?"ன்னு கேட்டாரு . ஒரு முறை முறைச்சு, Time table எடுத்து தூக்கி போட்டேன்,

இப்படியானப்பட்டவர் , இந்த கடிதத்தை பார்க்கும் பட்சத்தில், அந்த தீபாவுக்கும், சத்தியாவுக்கும் நான்தான் Courier Service பண்றேன்னு, பஞ்சாயத்த கூட்டுவாரே!, அது மட்டும் இல்ல, அந்த சத்யாவும், தீபாவும், யாருன்னு கேட்டு சாமி ஆடுவறேன்னு, நான் யாரென்னு சொல்றது? அவ்..திகிலாச்சு..உலகத்திலேயே, தம்பி பயந்த ஒரே அக்கா, நாந்தேன்.:-(
பய புள்ள அந்த பக்கம் போனதும், Bag-லேந்து Letter எடுத்து ஒளிய வைக்கனும்னு பார்த்தேன்.

அவர் சாமி கும்பிடும் நேரம் பார்த்து, அந்த letter எடுத்து, பக்கத்தில் அடுக்கி வச்சு இருந்த "தி ஹிந்து"  நியூஸ் பேப்பர் Sunday பேப்பர் (கலர் பேப்பர் இருக்கும்) அடையாளம் பார்த்து சொருகி வைத்தேன். ஷ்! அப்பா!...இப்படி தெரியாத ஆளு, தெரியாத ஒருத்திக்கு எழுதுன லெட்டெர மறைக்கறதுக்கே, குடல் வாய் வழியா வந்துடும் போல இருக்கே! எப்படி இந்த பய புள்ளைகளுக்கு இம்புட்டு தைரியம் வருது!..அடச்சே கருமம் புடிச்ச காதல்..அப்படின்னுதான் (சத்தியமா) நினைச்சேன்!.

அத..இப்ப நினைச்சாலும், சிப்பு சிப்பா(சிரிப்பு ) வருது..சில விஷயங்கள் கற்பனையான்னு நீங்க நினைக்கலாம்?, ஆனா அனுபவித்து சொல்றேன். இதெல்லாம் நடந்துச்சு..

முதல்ல காலையில தீபா? யார்னு கண்டுபிடிக்கணும், அவங்க கிட்ட letter ஒப்படைக்கணும், இல்லைன்னா, dispose பண்ணிடணும்னு நினைச்சுக்கிட்டேன்.

திவ்யா சொன்னது எவ்ளோ நிஜம், "இந்த வம்புல என்னை மாட்டிவிடாதேன்னு சொன்னாளே!" நாம சரியா மாட்டிகிட்டோமே!" அவ பேச்சை பேசாம கேட்டு இருக்கலாம்னு..மனசு பொலம்புது..

அப்பன்னு பார்த்து, நம்ம தாயுமானவர்(அதான் அப்பா) ..அந்த ரூமுக்கு வந்தார், என்ன வேணும்னு பதறிட்டு கேட்டேன். பக்கத்துக்கு வீடு பாய், கடைசி நான்கு நாள் , News paper கேட்டு வந்து இருக்காரு. சொல்லிகிட்டே எடுக்க போக..

அன்னைக்கு. செவ்வாய் கிழமை, .நான்கு நாள் என்றால் சனி, ஞாயிறு, திங்கள் செவ்வாய், (விரல் விட்டு எண்ணுனது நானுல்ல) கடவுளே...பாய்,அவர் பையனுக்கு வேலை வாய்ப்பு பார்க்க, தினம் முதல் நாள் பேப்பர் வாங்கி பார்பார். இப்படி நாலு நாள் சேர்த்து வாங்குவாருன்னு நினைச்சு கூட பாக்கல!.அப்பா பேப்பர் எடுக்க போறாங்க Letter கிழே விழ போகுது..இல்ல பாய் கையிலே கிடைக்கபோகுது..போச்சு...எல்லாம் போச்சு...

நான் மாட்டிகிட்டேனா?
தீபாவ கண்டு பிடிச்சேனா?  Wait பண்ணுங்க ப்ளீஸ்..
                                                                                                                             (தொடரும்..) 

புதன், 4 நவம்பர், 2015

தெய்வீக ராகம்! திவ்யா!

திவ்யா...(பெயர் மாற்ற பட்டுள்ளது, அவள் நலன் கருதி)

அவளது நம்பிக்கைக்குகுரிய சினேகிதி நான்..ஏன் அப்படி சொன்னேன்னு உங்களுக்கு பிறகு புரியும்..

ஜனவரி மூன்றாவது வார சனி கிழமை(தை மாதம்),  காலை 8.30 மணி (ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு), திருச்சியில் நான் Hostel -ல் இருந்த பொழுது இரண்டு நாட்கள் என்னுடன் தங்க வேண்டும் என தஞ்சையில் இருந்து வந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திருச்சியில் எந்த வேலையும் இல்லை..என்ன விஷயம் என்று கேட்டால் எல்லா கோயிலுக்கும் போகணும்னு சொன்னாள்.

வார வாரம், நான் தஞ்சை வீட்டுக்கு போய்டுவேன், இவ வரதுனால, ஒரு பிரார்த்தனை இருக்கு, இவ வர்ற விஷயம் சொல்லிட்டு வீட்டுக்கு இந்த வாரம்  Leave சொல்லிட்டேன்.

அப்பொழுதுதான் Cell Phone Use பண்ண ஆரம்பிச்ச நேரம். அதுவும் நான் வேலைக்கு சென்றதால். என்னிடம் Cell Phone இருந்தது. அவளிடம் Cell phone இல்லை. அவள் அம்மாவிடம் இருந்து Call வந்தது. "இரண்டு நாளைக்கு எதுவும் தொந்தரவு பண்ணாதீங்க, மௌன விரதம் இருந்துட்டு, திருச்சில எல்லா கோயிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு தான் வந்தா" "ஒரு வாரமாக, ஒரு மாதிரியாக இருக்கிறாள், உன்கிட்ட ஏதும் சொன்னாளா? என பதட்டமாக கேட்டார்கள்". "இல்லைம்மா, நான் எதுவும்னா உங்களுக்கு Phone பண்றேன்ன்னு சொல்லிட்டு வச்சுட்டேன். "

ஏதும் பிரச்சனையான்னு அவள்கிட்ட கேட்டேன்..

"மௌன விரதம் இருந்து இன்னைக்கு எல்லா கோயிலுக்கும் போகணும், நீ என் கூட வான்னு கூப்பிட்டா.."பேசாம என்னால முடியாது..உனக்காக வரேன்னு" சொன்னேன்.

இன்னைக்கு ஒருநாள் தானே, நாளைக்கு பேசுவ இல்ல? ன்னு கேட்டேன்
அதற்க்கு அவள், "இன்னைக்கு மட்டும் எல்லா கோயிலுக்கும் போறோம், நாளைக்கு உன்கூடதான் இருப்பேன், ஆனா நீ எங்கிட்ட பேசமாட்ட, என்னைய பாக்கவும் முடியாது.." என்னோட மௌன விரதம் இன்னைக்கு காலை 9 மணிக்கு ஆரம்பிக்குது. திங்கள் காலை 8 மணிக்கு முடியுது, நீ Monday Office கிளம்பறப்ப, நான் உன் கூடவே, கிளம்பி தஞ்சை போயிடுறேன்னா!"

"அடிபாவி, என்னடி புதிர் போடறன்னு சொல்றதுக்குல்லையே...சைகையில, நேரம் 9 ஆச்சுன்னு காமிச்சா..."
                                                      

பொலம்பிகிட்டே போனேன்..எல்லா கோயிலுக்கும் போனோம்..உச்சி பிள்ளையார், வெக்காளியம்மன் கோயில், ஸ்ரீ ரங்கம்...கிட்டத்தட்ட 9, 10 கோயில்..


பயபுள்ள 50 Km (Trichy) தள்ளி வந்தும், ஏதும் ஆப்பு வைக்க வந்துருக்கோ(?) அப்படின்னு ஒரே பதட்டம்.

இதற்கிடையில், 2, 3 தடவை அவங்க அம்மாவிடமிருந்து போன், அவள் மௌன விரதம் இருப்பதால். நான் இடையில் மாட்டிக்கொண்டேன்.
இரவு 9 மணிக்கு, திரும்ப வந்தோம். ஒரு பேப்பர்-ல் எழுதி காமித்தாள். "நான் தூங்க போறேன். என்னை திங்கள் காலை எட்டு மணிக்கு எழுப்பவும்"!", இதுனால உனக்கு எந்த பிரச்னையும் வராது, உனக்கு எள்ளளவும் தீங்க செய்ய மாட்டேன்னு" (உறுதி மொழி வேற) இதை யாரிடமும் சொல்ல கூடாது, என்னை எழுப்பவோ, என்னை Disturb பண்ணவோ கூடாது...என் மேல் சாத்தியம்.( அவளே சத்தியம் பண்ணிகிட்டா(?)" இந்த மாதிரி Sentiment பேத்தல் எல்லாம், பொண்ணுங்க கிட்டசெல்லுமே!.என்கிட்டேயும் செல்லுச்சு..

ஆகா..பயபுள்ள எதோ திட்டத்துல தான் வந்து இருக்கு போல..பதட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல, எகிறி போச்சு. வீட்ல சொல்றதா வேணாமா? ஒரே பயம்..நம்மகூட தான் காலையிலிருந்து இருக்கா. ஏதும் விபரீதமா தெரியல!
என்ன பண்ண, என்ன நம்பி வந்துட்டா..என்ன ஒரு நாளைக்கு தூங்க போறா? தூங்கட்டும். என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு நொடியை நகர்த்தினேன்..

சனி இரவு(9.30), அவ எங்க போனாலும் ஒரு கண்ணு அவ மேல வச்சு இருந்தேன், அவள் இல்லாத நேரத்தில், அவள் பையில் ஏதும் இருக்கான்னு பாத்தேன் (விஷம், sleeping tablet ..அப்படி, இப்படி)  ஆமா கிட்டத்தட்ட 36 மணி நேரம் கழிச்சு எழுப்புன்னு சொன்னா? யாருக்கு பொறுக்கும்.?

இன்னைக்கு கடைய சாத்துனா, Monday தான் கடைய திறப்பா?? ..ஆகா மொத்தம் என் கடைய காலி பண்ண வந்து இருக்கான்னு தெரியுது..மனசுல நினைச்சு கிட்டேன்...அவ மூஞ்ச பார்த்தா திட்டணும்னு தோணல...அப்படி என்ன வேண்டுதலா இருக்கும்?

பாத்ரூம் அப்படி இப்படி, எங்க போனாலும், கையில எதாவது இருக்கான்னு பார்த்தேன்..ஒன்னும் சந்தேக படர மாதிரி இல்லை...

                          

இரவு(11.30) :


அவ தூங்கிட்டா!(??) , எனக்கு தூக்கம் வரல...12 இருக்கும் அசந்து தூங்கறேன்..ஒரு 2 மணி நேரம் தூங்கி இருப்பேன்...முகத்துல எதோ இடிக்கற மாதிரி இருக்க...அப்படியே விலக்கி, பார்த்தா...அவ...மேல Fanla தொங்க....அப்படியே காலு என் முகத்துல இடிக்குது........ஆ ஆ!!!!!!!


நான் வீச்சுன்னு கத்தி ...திடுக்குன்னு முழிச்சு பார்த்தா....ரூம் அப்படியே இருக்கு...அவ அப்படியே தூங்குறா!...ரோட்டுல் எதோ ஒரு நாய் கத்துற சத்தம் கேக்குது....

இந்த  மூளை ஏன் இவ்ளோ யோசிக்குதுன்னு தெரியல...நெறைய சினிமா பார்த்துட்டோம் போல.. அவ்வ்வ்வ்வ்....

இவ்ளோ பெரிய சத்தம் போட்டும், ஒரு சலனம் இல்லையேன்னு போத்தி படுத்து இருந்த அவள் உருவத்தை பார்த்து முறைத்தேன்..ஆமா...நான் கத்துனது கனவுல இல்ல??(!) அவளுக்கு எப்படி கேட்டு இருக்கும்..அடச்சே...ஒரு நாள்ல இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டாளே!

இன்னைக்கு தூங்கின மாதிரி தான் நினைச்சு..உருண்டு பிரண்டு கொண்டு, அந்த இரவு போனது....

மறு நாள், ஞாயிறு காலை 9.00,
Breakfast time, Dining Hall போறாப்ப, அடுத்த room பொண்ணுங்க விசாரிக்க, உடம்பு சரியில்ல, படுத்து இருக்கான்னு சொல்லி சமாளிச்சேன்..அவளுக்கு ரெண்டு பூரி, தட்டுல எடுத்து வர மாதிரி எடுத்து வந்தேன்..சந்தேகம் வரகூடாது பாருங்க?(!)... என்னால சாப்பிட முடியல, சாதாரண நாள்ல, 5, 6 பூரி ன்னு 2 round போவேன்...அன்னைக்கு ஒன்னு கூட இரங்கல..அதையும் Dust bin - ல போட்டேன்...பக்கத்துல அப்பப்ப சும்மா ஒரு கப் , தட்டு சாப்பிட்டு வச்ச மாதிரி வச்சு இருந்தேன் (இப்பதான் சாப்பிட்டு, தூங்குறான்னு சொல்ல!) Sister rounds (christian hostel) வந்தப்ப கேட்டாங்க, அவங்க கிட்டயும் சமாளிச்சேன்.

ஞாயிறு மணி 10

ஏதாவது 1, 2 ன்னு போக, பொண்ணு எழுந்து இருக்கும்னு பார்த்தா...ஹிம்கும்...ஒன்னும் இல்ல..அப்பதான் ஞாபகம் வந்தது. முதல் நாள் சனி அன்று, பிரசாதம் போல கொஞ்சம் சாப்பிட்டதும். நான் தண்ணி
bottle, bottle -ஆ  குடிச்சப்ப, வேணுமா? வேணுமா? கேட்டப்ப..அவ ..வேணாம் வேணாம்னு சொன்னதும்...அடிபாவி!

ஞாயிறு மணி 12, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்!அவளிடம் எ ந்த சலனமும் இல்லை, அசைவும் இல்லை, வைத்துள்ள புளி கரைக்குது...நெஞ்சு பட படைக்க, அவள் போர்வை விலக்கி, கை தொட்டு பார்த்தேன்..அப்பா...கதகதப்பு இருந்தது (வேறு எதும்னா, உடம்பு சில்லுன்னு ஆயுடும்னு படிச்ச ஞாபகம்)..எப்படியெல்லாம் யோசிக்க வச்சுட்டு படுத்து இருக்கா? சத்தியம் வேற...கடவுளே...நீதான் என்ன காப்பாத்தனும். இன்னும் 20 மணி நேரம் போகணுமே....போன் Silent - ல போட்டு , அதையே பாத்துக்கிட்டு, அவங்க அம்மா phone வந்தா சமாளிச்சுகிட்டு, பேசிகிட்டு, முடியல....ஷ்..ஷ்..

எனக்கு அவளை பற்றி நன்றாக தெரியும் என்பதால், அவள் மனதை நோகடிக்க விரும்ப வில்லை, என்னிடம் பேசுவதை தவிர்க்கவே, அவள் மௌன விரத நாடகம் போட்டிருப்பதாக, தோணியது" , திங்ககிழமை பேசுவ இல்லை, இருக்குடி உனக்குன்னு நினைச்சுக்கிட்டேன்"

அன்னைக்கு ஒரு நாள் குளிக்கறது இல்லைன்னு முடிவு பண்ணேன். அவளை விட்டு நகர மனம் இல்லை. சுத்தி, சுத்தி வந்தேன். சாப்பாடும் செல்லல!..

திவ்யா!
இந்த அன்பு ராட்சசிக்காக, நான் ஏன் இவ்ளோ பெரிய risk எடுக்கிறேன்?
இவள் எப்படி என் நட்பு வட்டத்துக்குள் வந்தாள்? என்ன அப்படி ஒரு பந்தம்?" என பலவாறு எண்ணியவரே, என் மனம் 3 வருடம் பின்னோக்கி போனது!(எதையும் சுவாரசியமா சொல்லணும் இல்ல?,திவ்யா எப்ப எழுந்தா? எழுந்தாளா? இல்லையா? என்னாச்சு...தொடர்ந்து படிங்க..உங்களைவிட நானும் ஆவலா இருக்கேன், நான் அனுபவத்த அந்த சுவாரசியம்..tention....அப்படியே உங்களுக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன்..பாக்கலாம்...)"

---தொடரும்

திங்கள், 12 அக்டோபர், 2015

RIP - ஆச்சிம்மா!



ஆச்சிம்மா பற்றி என் சிறு வயதில் என் அக்காவின் மூலம் தெரிந்து கொள்ள நேர்ந்தது. நான் அவர நேரா பாக்க வில்லை. ஆமாம், ஆச்சிம்மா , தனது மகன் பூபதிக்கு எனது அக்காவின் தோழியை (தஞ்சையை சேர்ந்த), +2 முடித்த உடனே நிச்சயம் செய்தார்கள். அந்த நிச்சய விழாவிற்கு சென்று  வந்தார்களாம், அக்கா ஆச்சி பற்றி நிறைய சொன்னார்கள். ரொம்ப Simple - ஆ வந்து இருந்தார்கள். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. எல்லாரையும் கையை பிடித்து நலம் விசாரித்தார்கள். தன்னை தேடி வந்த அனைவரையும் முகம் சுழிக்காமல் கை கொடுத்து பேசி கொண்டு இருந்தார்கள். பேரன் பிறந்ததும் ராஜராஜன் என்ற தஞ்சை மன்னன் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்கள் என்றதும், ஆச்சி மேல் மரியாதை. பேரன்  பிறந்தவுடனே, "தன் பேரனை டாக்டர்தான், ஆக்குவேன் என்று சொன்னார்களாம்", அக்கா மூலம் கேள்வி பட்டேன். அது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதற்க்கு பிறகு அவர் பேரன் ராஜ ராஜன் டாக்டர் படிக்கிறார், என எதோ பத்திரிகையில் படித்ததும், பேரனை நினைத்தது போல் டாக்டர் ஆகிவிட்டாரே என, எனக்கே சந்தோசமாக இருந்தது. ஆச்சி படம் பாக்கும் பொழுது, அவ்ளோ சந்தோசமா இருக்கும்.  

ஆச்சிம்மா பற்றி கவிதா பாரதி குறிப்பிட்டது


"பத்திரிகையொன்றில் அவரைப்பற்றி கட்டுரை எழுதுவதற்காக ஆச்சியைச் சந்தித்தேன்... தன் வாழ்க்கையைப்பற்றி பேச ஆரம்பித்தவர் கண்கலங்கி, பின் கதறி அழத்தொடங்கிவிட்டார்.


தீராச்சாபம் என்னைப் பிடித்திருக்கிறது என்று கரைந்து ததும்பிய அவரை ஆறுதல்படுத்த என்னிடம் வார்த்தைகளில்லை. வெளிச்சம் தரும் திரியைச் சுற்றி கருப்பு என்பது போல் வலி நிரம்பிய இதயத்தோடுதான் அவர் நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்திருக்கிறார். அவர் சுமந்த துயரங்களுக்காக வருந்தலாம்.. மரணத்திற்காக வருந்த வேண்டிய அவசியமில்லை.. பாவப்பட்ட அந்த ஆத்மாவிற்கு மரணம் விடுதலையாகவுமிருக்கலாம். நீங்கள் ஏங்கிய சாந்தியும், சமாதானமும் இனியேனும் உங்களுக்குக் கிட்டட்டும் தாயே!"

கவிதா பாரதி 
Credit :Tamilbeat

ஆமா ஆச்சி! உங்கள் ஆத்மா சாந்தி அடைய எங்கள் பிரார்த்தனைகள்!.

சிரிக்கவைத்த பல பிரபலங்களின் இன்னொரு பக்கம், சாந்தமும், அமைதியும் இல்லாததாகவே இருக்கிறது. உள்ளத்தில் அழுது, உதடுகள் சிரித்து, நம்மை சிரிக்க வைத்த, ஆச்சிம்மா இப்பொழுது இல்லை.

RIP - ஆச்சிம்மா!

சனி, 19 செப்டம்பர், 2015

ICE - Contact No. உங்க கிட்ட இருக்கு தானே?

இரண்டு நாள் வேலை நிமித்தமாக கடந்த மாதம் ஆக - 18 சிங்கப்பூரில் இருந்து தஞ்சை வந்து இருந்தேன். ஆக -19, எனது விமான பயணம் திருச்சியிலிருந்து, சிங்கப்பூர் இரவு 11.45 க்கு. நான் 10 மணிக்குள் விமான நிலையத்தில் இருக்கவேண்டும். 

நான் இரவு 8.30 மணிக்கு தஞ்சையிலிருந்து கிளம்பினால் 10.00 க்கு திருச்சி விமான நிலையத்தை அடைந்து விடலாம் என்று Schedule போட்டு கிளம்பி கொண்டு இருந்தேன்.  நான் மாலை 7.15 மணிக்கு, தஞ்சை பாலாஜி நகரில் உள்ள புண்ணிய மூர்த்தி -Department Store-ல் முக்கிய தானிய வகைகளை வாங்கி கொண்டு,  ஆட்டோவில் ஏற முற்பட்டேன். 

அதாவது நான் வீடு வந்து, விமான நிலையம் கிளம்பவே எனக்கு நேரம் இருந்தது. அந்த நொடி, படார் என சத்தம் கேட்டது. இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளம்பெண், அங்கிருந்த Road, Divider -ல்குவிந்து இருந்த மணலில் சறுக்கி, வந்த வேகத்தில். அவர் தலை அந்த Road, Divider -ல் மோதி சறுக்கி விழுந்தார். 

அவர் விழுந்த அந்த வேகமும், அந்த சுழலும் , அவர் ஹெல்மெட் போடவில்லை என்றால் என்னவாகி இருப்பார், என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதோடு, உதவிக்கு வந்த அனைவரும் தயக்கம் காட்ட, நான் சட்டென, ஓடி சென்று அவரை தூக்கினேன், வலது கால் பாதம் தேஞ்சி, மேல் அப்படியே செதுக்கி, சதை பெயர்ந்து விட்டிருந்தது.  ரத்தம் கொட்டி கொண்டி இருந்தது. அங்கிருந்தவரிடம் அவரது வாகனத்தை, பத்திரமாக நிறுத்தி வைத்து வைக்க சொல்லி, பூட்டி, சாவியை அவர் Hand bag - ல் போட சொன்னேன்..

மணி: 7.30
Accident - வழி வகுக்கும், மணல் நிறைந்த ரோடு (for Sample) 


உடனே அவரை ஒரு "ஆட்டோ" வில் ஏற்றி, அருகில் இருந்த தேவா மருத்துவமனையில் சேர்த்தேன்.  

 சிகிச்சைக்கான தொகை (சிறிய தொகை தான்) கட்ட சொன்னார்கள், டாக்டருக்கு தெரியபடுத்திவிட்டு, முதலுதவி செய்ய ஆரம்பித்தார்கள், அவரை அப்படியே விட்டு செல்ல மனம் இல்லை. அந்த பெண்ணின் Handbag -ல் இருந்த மொபைல் எடுத்து. முக்கிய நபருக்கு தெரியபடுத்த  ICE  number [In case of Emergency] எதாவது இருக்கிறதா என்று தேடி பார்த்தேன். number எதுவும் இல்லை.  அம்மா, அப்பா என தேடி பார்த்தேன் number எதுவும் இல்லை.  அண்ணா, அக்கா , Mummy, Daddy இம்ஹும் ...

அதற்குள் 30  நிமிடம் கரைந்து விட்டிருந்தது. 

மணி 8.00
அப்பொழுது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது, அவரிடம், விவரத்தை சொல்லி, கொஞ்சம் வர முடியுமா?  என கேட்டேன். அதுக்கு அவர், என்ன Accident -ணு  ஜோக் பண்றீங்களா? செருப்பாலே அடிப்பேன்னார். எனக்கு tension ஆயிடுச்சு. அப்புறம் விளக்கி சொன்னதும், அவர் மன்னிப்பு கேட்டு கொண்டார்.  அவர் உறவினர் என்றும் , வெளியூரில் இருப்பதாகவும் சொன்னார்.

உள்ளே சென்று பார்த்தேன், வழியால் துடித்து அழுது கொண்டு இருந்தார். நல்ல வேலையாக பேசும் நிலையில் இருந்தார், ஆனாலும் பதட்டத்தில் இருக்க, யாரிடம் சொல்லணும், சொல்லுங்க என்றேன். அப்பா, அம்மா இருவரும் இறந்து விட்டதாகவும், பாட்டி, தாத்தாவிடம் இருப்பதாகவும் சொன்னார். மனசு என்னோவோ என்றாகிவிட்டது. வயதானவர்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ என எண்ணி, அவரது தோழி நம்பரை வாங்கி அவரிடம் விவரத்தை சொன்னேன், அவர் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாக சொன்னார். சிறிது நேரம் காத்து இருந்தேன், அவர் கையில் ஒரு ஆயிரம் ருபாய் பணம் கொடுத்தேன். அவரது நம்பரையும் வாங்கி கொண்டேன். 

அவர் மறுக்கவே, நானும் உங்கள் சகோதரி மாதிரிதான் "உங்களுக்கு பணம் உதவி தேவை இல்லை என்றாலும், அவசர மருந்து எதுவும் வாங்க பயன்படும்" என்று கையில் திணித்தேன். ஏதும் முக்கிய மருந்து வாங்கி வேண்டி இருந்தால் உதவி செய்யுங்கள் என சொல்லி, அங்கிருந்த உதவியாளரை வேண்டினேன்.  அவரது தோழி வரும் வரை பார்த்து கொள்ளுமாறு கேட்டு கொண்டேன். அவரும் ஒத்து கொண்டார். 

மணி 8.15, மறுபடி நான் ஆட்டோ பிடித்து வீடு சேர  மணி 8.45
எப்பொழுதும் கடைசியில் Bag Pack பண்ணியதும் எடை பார்த்து கிளம்புவது வழக்கம், அன்று நேரம் இல்லாத காரணத்தால் அப்படியே Pack பண்ணி கிளம்பினேன். மணி 9.15, 45 நிமிடம் தாமதம். Flight late -ஆ எடுக்க வாய்ப்பு இருக்குமா ? இம்ஹும் க்கு Tiger Airways வேற Award வாங்கி இருக்கு..தாமதமாக எடுக்க.வாய்ப்பே இல்லை.

Flight Miss, பண்ணலும் கவலை இல்லை, நல்லது பண்ணினோம் என நினைத்த பொழுது ரொம்ப சந்தோசமாக இருந்தது. இந்த மாதிரி என்னை பக்குவபடுத்தியதில் ரைட் மந்த்ராவுக்கு
(www.rightmantra.com) நிறைய பங்கு உண்டு. 

போகும் வழியில், அந்த பெண்ணின் Number- க்கு போன் பண்ணினேன், Wrong Number என்றார்கள். பதட்டத்தில் Phone number தவறாக சொல்லி இருக்கலாம் என நினைத்து கொண்டேன்.  மனசெல்லாம், கொஞ்ச நேரம்,  அந்த பெண்ணை சுற்றியே இருந்தது. அவ்வளவு இரத்தம் சிந்தி, நான் யாரையும் பார்த்ததில்லை. 

திருச்சி விமான நிலையம் வந்தடைய மணி 11.00.
உள்ளே அனுமதி இல்லை, Counter மூடிவிட்டதாக சொன்னார்கள். மிகவும் வேண்டி கேட்க, அனுமதி அளித்தார்கள். Boarding Pass போட சென்றேன்,



 Check-in Bag  6 Kg எடை கூடுதலாக இருப்பதாகவும் Rs. 9000 பணம் செலுத்த வேண்டி உள்ளது என்றார்கள். 25 kg நான் புக் பண்ணி இருந்தேன். 18 Kg-ல் ஒரு Bag 13 Kg-ல் ஒரு Bag.

Weight 31 Kg காட்டியது. அவர்கள் விடுவதாய் இல்லை. கடைசியில் நான் வாங்கிய தானிய வகைகள் மொத்தம் Rs. 3000 தான். அது என்னை பார்த்து சிரித்தது. 13 kg- வில் 6Kg பிரித்து எடுக்க நேரம் இல்லை. 

Rs. 3000 விலை கொண்ட தானியங்கள் (திணை, வரகு, கேழ்வரகு ) அடங்கிய  அந்த  Bag-க்கு Rs. 9000கொடுக்க வேண்டுமா? என்ற தயக்கத்தோடு , பணம் செலுத்துவது தான் வழி என யோசித்த அந்த வினாடியில்,, பக்கத்துக்கு Counter -ல் இருந்த ஒரு நபர்(எனக்கு முன் வந்த நபர்), தனக்கு குறைவான Baggage weight இருப்பதாகவும், அந்த 13 Kg bag தான் எடுத்து வருவதாகவும் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை.

இது போன்ற உதவி யாருமே செய்ய மாட்டார்கள். நாமலே கேட்டாலும், உள்ள என்ன இருக்கோ, ஏது இருக்கோ என யாருமே உதவிக்கு வர மாட்டார்கள். 

நான் யாரென்று தெரியாது, எப்படி இப்படி? என்னால் நம்ப முடியவில்லை. ஒரு உதவி, அதுவும் கடைசி ஆளா நிக்கிறப்ப?? சிறிது நேரம் என்னால் நம்ப முடியவில்லை. இதே நான் ஒரு மணி நேரம் முன்னால் வந்து இந்த விஷயம் நடந்து இருந்தாலும் நான் பெரியதாக எடுத்து இருக்க மாட்டேன். அன்றைக்கு நானும் அந்த நபரும் தான் Counter - இல் கடைசி ஆட்கள். அவரே எனக்கு உதவியது என்னால் நம்ப முடியவில்லை. அவர் Check in bag label, என்னிடம் தந்து விட்டு,  நான் நன்றி சொல்வதற்குள், அங்கிருந்து சென்று விட்டார். அவரது பெயரை பார்த்தேன். "சுந்தரம்" என்று இருந்தது.


நான் காலம் நேரம் பார்க்காமல் எங்கயோ செய்த உதவி, எனக்கு வேற வழியில வந்துடுச்சா? நீங்க தான் சொல்லணும் ...

பிரதி பலன் பார்க்காமல், அவர் செய்த உதவியை நினைத்து பார்கிறேன். அவருக்கு என் நன்றிகள். அவர் சிங்கப்பூரில் எங்கு இருக்கிறார்? எந்த விபரமும் தெரியவில்லை. ஒரு வேலை உங்களுக்கு தெரிந்தவராயின். என் நன்றிய மறக்காம சொல்லுங்க.

என் தம்பியிடம், அடிபட்ட அந்த பெண்ணை, நலம் விசாரிக்க சொன்னேன், அவர் விசாரித்து விட்டு ,  எனக்கு தகவல் சொன்னார், அந்த பெண் தையல் போட்டு, discharge ஆகி, வீடு சேர்ந்து விட்டதாக சொன்னார்கள். பதட்டத்தில் Phone no. ஒரு நம்பர் மாற்றி கொடுத்து விட்டார் எனவும்,  அந்த பெண் , என் தம்பியிடம், என் பெயர்கூட தெரியாது என என் பெயரை கேட்டுள்ளார்,  அவர் என் பெயரை சொன்னதும், அவர் கண்கலங்கி, அவரது அம்மாவின் பெயரும் "அனுசியா" என சொன்னார்களாம். அவர் எனது சிங்கப்பூர் நம்பர் வாங்கி SMS செய்து இருந்தார்.  சில content விடு பட்டு இருந்தது. இருந்தாலும், அவர் சொல்ல வந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த SMS:



ரொம்ப சந்தோஷ பட்டு என்னிடமும் அந்த பெண் பேசினார். இந்தமாதிரி சமயத்தில், யாருமே உதவிக்கு வர மாட்டார்கள், அதுவும் பெண்கள் ரொம்ப தயங்குவார்கள், என குறிப்பிட்டார். 

ஒரு தடவை உதவி செய்து, அந்த சந்தோசத்தை அனுபவித்து விட்டீர்கள்  எனில், அதற்கே அடிமை ஆகி விடுவீர்கள். நல்ல விஷயம் செய்து கொண்டே இருப்பீர்கள்.  அப்புறம் பாருங்க..உங்களுக்கே உங்கள ரொம்ப பிடிக்கும். 

இது மாதிரி நிறைய இருக்கு, ஆனா ஒரு Awareness - க்காக தான், இந்த நிகழ்வை பதிவு செய்கிறேன். 

நீங்க முதல்ல செய்ய வேண்டியது எல்லாம். 
Phone, Pin lock - இல்லாதவங்க "ICE" என்று உங்களுக்கு வேண்டிய நபர் Store பண்ணி கொள்ளுங்கள். அவசர கால உ தவிக்கு தேவைப்படும்,. முடிந்தவரை ICE பற்றி தெரியாதவதர்களுக்கு, தெரியபடுத்துங்கள். 

Phone Pin lock - இருக்கிறவர்கள், உங்கள் Money purse - ல், Photo வைக்கும் பகுதியில் , உங்கள் பெயர் ,  Blood group  அவசர கால தொடர்பு எண், அவரது பெயர், நண்பரா? உறவினரா? (Amma/Appa/Friend/Relative) குறிப்பிட்டு வையுங்கள்.  இதை நீங்கள் ஏற்கனவே நிறைய படித்து இருப்பீர்கள், எங்க இருக்கான்னு ஒரு தடவை உங்க purse /mobile phone check பண்ணி பாருங்க?

ஆபத்தான தருணத்தில், வயதான தாய், தந்தை, கலவரபடாமல் இருக்க இது உதவும். 

தயவு செய்து ஹெல்மெட் போடுங்க. சட்டத்தை மதித்து அல்ல, உங்கள் விலை மதிப்பில்லா உயிரை மதித்து ஹெல்மெட் 
போடுங்கள் ..

மகனை வழி பார்த்து இருக்கும், அம்மாக்களை கலவரப்படுதாதீர்கள்..

காலமெல்லாம் நீங்களே கதி என வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்கள் வாழ்கை துணையை கலங்க வைக்காதீர்கள் ...

மாலை அப்பாவை, ஆசையொடு பார்க்க காத்திருக்கும் மகளோ மகனோ...துடிக்கவிடாதீர்கள்...

உங்கள் உயிர் உங்களை விட, உங்கள் குடும்பத்திற்கு பொக்கிஷம்...உங்களிடம் உயிராய் இருப்பவர்களுக்கு உன்னதம்...


Singapore - Road

சிங்கப்பூர் போன்ற மேலை நாடுகளில், ரோட்டில் சேரும் மணலை Machine cum vehicle வைத்து  அடிக்கடி Clean பண்ணுவார்கள். இங்க இந்த மாதிரி,  ஒரு Accident-ம் நடக்க வாய்ப்பே இல்லை. 

நாம் அரசாங்கத்தை எதிர்பார்த்து இருப்பதில், எந்த அர்த்தமும் இல்லை. நாமலே இறங்கி சுத்தம் பண்ணாதான் நம்ப தலை தப்பிக்கும். என்னதான் என் அண்ணன், தம்பி என நாங்கள் அனைவரும்  இங்க சிங்கப்பூர்-ல Safe- ஆக இருந்தாலும். உங்கள மாதிரி அண்ணன், தம்பிங்க, அக்கா, தங்கைகள் அந்த மாதிரி ரோட்டில் பயணம் செய்கிறீர்கள் என நினைக்கும் பொழுது, நெஞ்சு கனக்கிறது. தயவு செய்து ஏதாவது பண்ணணுங்க. நீங்க பொது நலம் பேணுபவரா? இந்த மாதிரி நல்ல விசயத்துல, ஈடுபட்டு நமக்கு நாமே, உதவி கொள்ள தயாரா? ? எனக்கு Email அனுப்புங்க. dharzha@gmail.com.

விபத்தில்லா எதிர் காலம் உங்கள் கையில்.. சமூக வலைதளங்களில் பறந்து விரிந்து கிடக்கும், உங்கள் மனித நேயத்தை, நான்  உரசி பார்க்கிறேன். சவாலை ஏற்று கொள்ள நீங்கள் தயாரா?

உங்களுக்கு உதவ, உங்கள் சகோதர, சகோதரிகள் நிறைய பேர் காத்து இருக்கிறோம். தேவை, பொது நலம் பேணும் நபர்கள் ஒரு ஏரியாவுக்கு நாலு பேர்.

சின்னதா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம், எல்லாம் நீங்களும் உங்க குடும்பமும் சந்தோசமா இருக்கத்தானே?. நன்றி

செய்நன்றி அறிதல்.
குறள் 105: 
உதவி வரைத்தன்று உதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

பொருள்:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்



திங்கள், 31 ஆகஸ்ட், 2015

ஒரு கனவு கண்டால்! அதை தினம் முயன்றால்!

அக்காவின் குழந்தையை பார்த்ததும், எல்லாம் பறந்து போய்ச்சு.

இருந்தாலும் , தினம் நான் சிங்கப்பூரில் வேலை பார்த்ததும், அங்கு நான் முன்னாடி visit பண்ண இடம் எல்லாம் அடிக்கடி மனகண்ணில் வந்து போகும். குறிப்பிட்ட ஒரு தெருவில் நடந்து போகும்படி அடிக்கடி நினைவில் வந்து போகும்.

தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை( சிங்கப்பூர்) தவணை முறையில் நேசிக்கிறேன்!  (ஹி ஹி!)



விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி
வழியுதே என் சிங்கப்பூர்..

அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்
போதும் போதும் போதும்


அழியாமலே ஒரு ஞாபகம்
அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் நினைவால்..
சுவாசம் பெருமூச்சாகும்! 
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை முயற்சி! எத்தனை ஆசை!
தடுமாறுதே தடம் மாறுதே
அட பூமி கனவில் உடைந்து போகுதே! 


(Remix பாடல்:தேவதையை


வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ சிங்கப்பூர்??


(Remix பாடல்: பூங்காற்றிலே..) 



எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா..


கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்...



ஷ்..முடியல இல்ல? 

இப்படியே இருந்தா, எல்லாம் மறந்துடும்னு, சென்னை, நுங்கம்பாக்கம் ஒரு IT company - Dotnet Consultant  வேலை பார்க்க தொடங்கினேன். ஒரு வருடம் ஓடியது.

அப்பொழுது,  ஒரு  Project - Lead பண்ணி முடிக்கணும்னு  என்கிற பொறுப்பு வந்தது.  பொறுப்ப எடுத்துகிட்டா, இடையில முடிக்காம சிங்கப்பூர் போனா மனசு கஷ்டப்படும் (அவ்வளவு விசுவாசம்). அப்படியே Continue பண்ணா  நம்ப Singapore கனவு  தேங்கி போய்டும்னு, 2 மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு பிறகு தெரிவிப்பதாக சொன்னேன். வீட்டுல விடுவாகளா?? முடியாதுன்னுட்டாக!..நான் Onsite Assignment - ன்னு பீலா விட்டுட்டு
அப்படியே சிங்கப்பூர் கிளம்பிட்டேன்.

சிங்கபூர் வந்தவுடனே, நம்ப அண்ணனுமானவர், அதான் தம்பி, எங்க உங்க Company? , நான் Office போறப்ப Taxi-ல விடறேன்னார். இனிமே தானே Company கண்டு பிடிக்கணும்னு ஈஈ ன்னேன்..தலையில அடிச்சுட்டு போயிட்டாரு.

வந்து 15 நாளில் வேலையும் கிடைத்து, Employment Pass Approve ஆகி விட்டது. ஆம் என் கனவு நிறைவேறியது. அப்படியே சென்னை வேலையை resign பண்ணினேன்.

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்! (
பாடல்: ஒவ்வொரு பூக்களுமே சொல்..!)






என் விடா முயற்சி, எனக்கு பலன் கொடுத்தது. நான் எனக்கு வேலை கிடைக்காமல் சிங்கையில் இருந்த காலத்தில். "இந்த இடம் எனக்கு மிக பிடித்து இருக்கிறது ..உன்னிடத்தில் எனக்கொரு இடம் இல்லையா?" என அடிக்கடி கேட்பேன்! " (எல்லாம் சிங்கப்பூர் கிட்டதான் பேசுவேன்!)
சிரிக்காதிங்க, நீங்களும் முயற்சி பண்ணுங்க..எல்லாமே நல்லதா நடுக்கும். ஒரு முறை, எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய கட்டுரை படிக்க நேர்ந்தது, அதில் அவர் சொல்லி இருப்பார், அவருக்கு கால் வலியால் , அவதி படும்பொழுது, அவர் தன் வலி உள்ள காலிடம் "என் வலியை போக்கி விடு, உனக்கு கொலுசு போடுறேன்"  என பேசுவாராம். நிதர்சனமான உண்மை. அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். எல்லாம் மனம் செய்யும் மாயைதான். ஆனால் அதில் ஒரு சுவாரசியம்.

ஆனால் கலாம் சார் சொன்னபடி பார்த்தல், என் வழி..

ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!


மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!


வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!  (பாடல்: ஒவ்வொரு பூக்களுமே சொல்..!)

எனக்கென ஒரு இடம் கிடைத்த அந்த தருணத்தில், சிங்கப்பூர் மண்ணை எடுத்து, கொஞ்ச நேரம் என் கையில் வைத்து கொண்டேன். ஏன்? எதற்கு? என சொல்ல தெரியவில்லை. அந்த தருணம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..!
உண்மை சொல்லு பெண்ணே -என்னை
என்ன செய்ய உத்தேசம்..!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..!
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..!


அடி ஆத்தாடி... 
இளமனசொன்று இறக்கை கட்டிப்பறக்குது 
சரிதானா..! 
அடி அம்மாடி.. 
ஒரு அலை வந்து மனசில அடிக்குது 
அது தானா..!

உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவள்  மேகம் ஆக... யாரோ(சிங்கப்பூர்) காரணம்..!



 திருக்குறள்:619

தெய்வத்தான் ஆகா எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.


குறள் விளக்கம்:

நல்லோர்களாகிய நம் முன்னோர்களின் முயற்சிகள் 

தோல்வியை தந்திருந்தாலும், 

நம் விடாமுயற்சி, நம் உடல் உழைப்புக் கேற்ற 

வெற்றியைத் தரும்



புதன், 29 ஜூலை, 2015

RIP - எ.பி.ஜே.அப்துல் கலாம் சார்!!



நம்முடைய இளைஞர்களின் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் 2020ம் ஆண்டில் வல்லரசு நாடாக மாறி விடுவோம் என்று உறுதி பட சொன்னவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் அப்துல்கலாம் நாட்டுமக்களுக்காக 2007ம் ஆண்டு ஆற்றிய உரையிலிருந்து 

"நாட்டில் உள்ள 25 வயதுக்குட்பட்ட 54 கோடி பேரையும் ஊக்கப்படுத்தி உத்வேகத்துடன் அவர்களை சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்."

அவரின் நம்பிக்கையெல்லாம்,


இளைஞர்கள் சக்தி
ஊழலற்ற நிர்வாகம்
பசுமை புரட்சி
விவசாய விஞ்ஞானிகள்


இவையெல்லாம் நாட்டை அபரிமித வளர்ச்சி அடைய செய்யும் என்பதாகும் 
ஏவுகணை ஆபத்தானதுதானே” என்ற கேள்விக்கு,
அது நம் பாதுகாப்புக்காகவே அன்றி,
ஆயுதத்தை மட்டுமல்ல,
பூக்களை அனுப்பினாலும் வீசிவரும் விஞ்ஞானமிது” என பொக்ரான் சோதனைக்கு புதிய உரை சொன்னவர் நீங்கள் !

அப்துல்கலாமிற்கு பிடித்த திருக்குறள்

அவரது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். 

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்க லாகா வரண். 

இந்த குறள்தான், தனது வாழ்விற்கு வளம் கொடுத்தது என்று அவரே ஒரு மேடையில் பேசும் போது கூறியுள்ளார். இதன் பொருள் அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து நிற்கும் என்பதாகும். பூமிக்கு மேலே, பூமிக்கு கீழே, பூமியில் என எந்த விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது உண்மை.

எங்கள கனவு நாயகன், உங்களின் உருவத்தை, எங்கள் பிள்ளைகளின் மாறுவேட போட்டிகளில் கூட, உங்களை முன்னிறுத்தி பார்த்தோமே! அவர்கள் நன்றாக perform செய்யாத பொழுது கூட, உங்கள் உருவத்திற்காக எதாவது பரிசை தட்டி சென்றார்களே அதை அறிவீரோ!

எனது  சகோதரியின் மகன், 3 வயதில்...ஒரு மாறுவேட போட்டியில்..






என்னை பொறுத்த வரையில், இந்த பாடல் வரிகள் உங்களுக்கு மிக்க பொருந்தும்...


************************

உண்மையைச் சொல்லி
நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவுகொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்

************************
"உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யார
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு 
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாட
உலக நாயகனே... உலக நாயகனே..
கண்டங்கள் கண்டு வியக்கும்...
இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்..(( ஐ.நா - ல்உரையாற்றயவர் நீங்கள் அல்லவா!)"

"நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் 
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் 

ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று

ஆயிரம் பிறவி கொண்டாய்

உன் வாழ்வில் ஆயிரம் திரைகள் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுறவில்லை" (தோல்வியுமில்லை அல்லவா?)

"உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில் நூறு அவதாரம்
முகங்களை உரித்து மனங்களை படித்து
பேரும் கொண்ட அறிவு கொண்டான் விஞ்ஞானி
விரல்களுக்குள்ளே விருச்சங்கள் தூங்கும்
உன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
நெருப்பினில் கிடந்து நெடுந் தவம் சிறந்து
நீயெனும் நிலை கடந்தாய்...
இப்போது நிருபணம் ஆகிவிட்டாய்.."

****************************************************

அவரின் வாழ்கை வரலாறு, "அக்னி சிறகுகள்" "" படித்து இருக்கீர்களா?  
என் தந்தை(தாயுமானவர்)  ஒரு புத்தக பிரியர் ஆதலால் 
அந்த வரத்தை நான் பெற்றேன் (Year 2005)...
அந்த பாக்கியத்தை நான் பெற்றேன்..

அதை படித்தீர்கள் ஆனால், அந்த மாபெரும் மேதை என்கிற விருட்சத்தின் விதை என்னவென்று அறிவீர்கள்.
அந்த வேர் இந்திய மக்களின் மனதில் எவ்வாறு ஊன்றி வளரந்தது என்பதை அறீவீர்கள்!

நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை…
நாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர்…
இந்தப் ‘பாரதரத்னத்தின்’ அறிவியல் தவச்சாலையில்
பற்றி எறிந்த ‘அக்கினி’ பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது…
தினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும்
கைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை…
இங்கே இவர் தம் கதை சொல்ல வருகிறார்.
இது இவர் கதை மட்டுமல்ல.
இந்திய அறிவியலின் மேன்மைக் கதை…
சோதனைகளின் சாதனைக் கதை…
உறுதிகொண்ட நெஞ்சின் ஓயாத உழைப்பின் கதை…
தாயகம் சாதித்துவிட்ட தன்னிறைவின் கதை…
தீர்க்க தரிசனத்தின் கதை…
ஒரு கடலோரப் படகுக்காரர் மகன்
கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதை.
ஒரு கவிஞன் விஞ்ஞானி ஆன கதை!
                                         - அக்னி சிறகுகள்

அக்னி சிறகுகள், எழுத்துருவத்தில் எங்களுக்கு அளித்த அருண் திவாரி அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்!

தனது சுயசரிதை புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டி கட்டுரை எழுதியுள்ளார்.

அவரது தாய் எவ்வளவு கஷ்டப்பட்ட சூழ்நிலையில் வளர்த்து வந்தார் என்பதையும், அந்த சூழ்நிலையில் கலாம் பட்ட கஷ்டங்களையும் கட்டுரை கூறுகிறது. 

சுயசரிதையின் ஒரு சிறு பகுதி..



"காலை 4 மணிக்கு எழுந்து படிக்க, பேப்பர் பண்டல் தூக்க, அதை வினியோகிக்க, பள்ளிவாசல் செல்ல, பள்ளிக்கூடம் செல்ல, மாலையில் பேப்பருக்கான பணம் வசூலிக்க என ஓடிக் கொண்டே இருப்பேன். ஆனாலும், இரவு 11 மணி வரை படிப்பேன். நான் சாதிப்பேன் என என் தாயார் நம்பியிருக்க வேண்டும்." 


ஒரு நாள், இரு நாள் அல்ல இந்த வாழ்க்கை..இளமைப் பருவம் முழுவதுமே...


"வயதில் எமது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு கோவிலில் கார்த்திகை மாதத்தில் முப்பது நாளும் வில்லுப்பாட்டு நடக்கும். பாட்டு பாடுபவர் ராமாயணத்தில் ராமரின் வளர்ப்பை சொல்லும் போது இந்த கருத்தை முன் வைப்பார்."

"வானில் இருந்து வரும் நீர் வாழை இலையில் படும் போது இலையின் நிறத்தில் இருக்கிறது. அதிலுருந்து மண்ணில் கீழ் விழும் போது மண்ணின் நிறத்திற்கு மாறி விடும். து போல் தான் எதுவும் தெரியாமல் பிறக்கும் குழந்தை வளர்ப்பில் தான் உருமாறுகிறது என்று அவரது கருத்து  நீண்டு செல்லும்."



பொருளுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நாம், நமது சந்ததியினருக்கு, நமது வளர்ப்பிற்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம் என்பதில் தான் அவர்களது எதிர்காலமே இருக்கிறது. என்ற செய்தியை நமக்காக விட்டு சென்று இருக்கிறார் கலாம் அவர்கள்.






கலாமின் கவிதையின் ஒரு பகுதியே அவர் தாயின் மீது கொன்ட பக்திக்கு சாட்சி..



என் மனதை உருக்கிய அந்த வரிகள்!



கடல் அலைகள், பொன் மணல், 
புனித யாத்ரிகர்களின் நம்பிக்கை, 
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு- 
இவை யெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ, 
என் அன்னையே ! 

சுவர்க்கத்தின் ஆதரவுக் கரங்களாய் 
எனக்கு நீ வாய்த்தாய். 
போர்க்கால நாட்கள் என் நினைவிற்கு 
வருகின்றன. 
வாழ்க்கை ஓர் அறைகூவலாய் அமைந்த 
கொந்தளிப்பான காலம் அது- 

கதிரவன் உதிப்பதற்குப் பலமணிநேரம் முன்பே 
எழுந்து நடக்க வேண்டும் வெகுதூரம் 
கோயிலடியில் குடியிருந்த ஞானாசிரியரிடம் 
பாடம் கற்கச் செல்ல வேண்டும். 
மீண்டும் அரபுப் பள்ளிக்குப் பல மைல் தூரம். 
மணல் குன்றுகள் ஏறி இறங்கி 
புகைவண்டி நிலையச் சாலைக்குச் சென்று 
நாளிதழ் கட்டு எடுத்து வந்து 
அந்தக் கோயில் நகரத்து மக்களுக்கு 
வினியோகிக்க வேண்டும். 
அப்புறம்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். 

இரவு படிக்கச் செல்லுமுன் 
மாலையில் அப்பாவுடன் வியாபாரம். 

இந்தச் சிறுவனின் வேதனைகளை யெல்லாம் 
அன்னையே, நீ, அடக்கமான வலிமையால் 
மாற்றினாய். 
எல்லாம் வல்ல ஆண்டவனிடமிருந்து மட்டுமே 
தினசரி ஐந்து முறை தொழுது 
நீ உன் பிள்ளைகளுக்கு வலிமை சேர்த்தாய். 

தேவைப்பட்டவர்களுடன் உன்னிடமிருந்த 
சிறந்தவற்றை நீ பகிர்ந்து கொண்டாய். 
நீ எப்போதும் கொடுப்பவளாகவே இருந்தாய். 
இறைவன் மீது வைத்த நம்பிக்கையையும் 
சேர்த்தே எதையும் நீ கொடுத்தாய். 

எனக்குப் பத்து வயதாக இருந்த போது 
நிகழ்ந்தது நன்றாக நினைவில் நிற்கிறது 
ஒரு பவுர்ணமி நாள் இரவு அது. 
என் உடன் பிறந்தார் பொறாமை கொள்ள 
நான் உன் மடியில் படுத்திருந்தேன். 
என் உலகம் உனக்கு மட்டுமே 
தெரியும் என் அன்னையே. 

நள்ளிரவில் நான் கண்விழித்தேன் 
என் முழங்கால் மீது உன் கண்ணீர்த்துளி பட்டு... 
உன் பிள்ளையின் வேதனை 
உனக்குத் தானே தெரியும், தாயே? 
உன் ஆதரவுக் கரங்கள் 
என் வேதனையை மென்மையாய் அகற்றின. 
உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் 
எனக்கு வலிமை தந்தன. 
அதைக் கொண்டே நான் இந்த உலகை 
அச்சமின்றி எதிர் கொண்டேன். 

என் அன்னையே, 
நாம் மீண்டும் சந்திப்போம் 
அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில். 



அந்த இறுதி நாள் வந்து விட்டதே கலாம் சார்! தாயை காண சென்று விட்டீர்களா?



நமக்கு இப்படியொரு வாழ்வியல் முன்னுதாரணத்தை, கலாம் வடிவில் கொடுத்த அந்த தாய்க்கு வணக்கங்கள்!



பக்கம் - 36 கடைசி பத்தியில் குறிப்பிட்டு இருப்பார்..

உங்களுடைய குழந்தைகள் எல்லாம் உங்களுடைய குழந்தைகள்  அல்ல. 
தமக்காகவே ஏங்கிகொண்டிருக்கும் வாழ்கையின் வாரிசுகள் . அவர்கள் உங்கள் மூலமாக வந்தவர்கள்.  அவர்களிடம் நீங்கள் உங்கள் அன்பை வழங்கலாம். ஆனால் உங்களுடைய சிந்தனைகளை அல்ல. தங்களுக்கு என்ற சிந்தனை கொண்டவர்கள் அவர்கள்.

பக்கம் - 44 கடைசி பத்தியில் குறிப்பிட்டு இருப்பீர்களே! ..

"சந்தோசத்தை அனுபவிப்பதருக்கு மக்களை பக்குவ படுத்திய காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகளின் உண்மையான பக்தர்கள் செயின்ட் ஜோசப் கல்லூரியில் எனக்கு ஆசிரியர்களாக அமைந்து இருந்தார்கள்" என என் குருவை பற்றி போகிற போக்கில் குறுப்பிட்டு இருப்பீர்களே! 

அவர் தம் சுய சரிதையிலிருந்து சில வைர வரிகள்!

ஒருவர் தன் வாழ்நாளில் தனக்குரிய இடத்தில் என்ன நிலையில் இருக்கிறாரோ, நல்லதோ கெட்டதோ எந்த நிலையை அவர் எட்டி இருந்தாலும் அது தெய்வ சங்கல்பம்.

நம்பிக்கை வைத்தால் உன் தலைவிதியை உன்னால் மாற்றி அமைக்க முடியும்.

எந்த சிக்கலான சூழ்நிலையிலும் பலனைப் பற்றி யோசிக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இரு.  ஏனென்றால் சிக்கலான எல்லா விஷயங்களிலுமே இழப்பு என்பது தவிர்க்க முடியாது.

மற்றவர்களை அறிந்தவன் பண்டிதன். தன்னை அறிந்தவன்தான் உண்மையான கல்விமான்.  விவேகம் தராத கல்வி பயனற்றது.

எதிர்கால வாய்ப்புகள் பற்றி யாரும் கவலைப்படவே கூடாது.  மாறாக வலுவான அடித்தளம் அமைப்பது அது பற்றிய ஆர்வம், தேர்வு செய்துள்ள துறையில் தீவிரமான நாட்டத்தை வளர்த்துக் கொள்வது என்பதுதான் மிகவும் முக்கியம்.

கடவுள் உங்களுடைய நம்பிக்கையாகவும், ஜீவனாகவும் , வழிகாட்டியாகவும் இருந்து உங்களுடைய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் ஒளி  வழங்கட்டும்.

எனக்கான வாய்ப்புக்களை நானேதான்  உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சர்வ சக்தி கொண்ட எல்லைகள்தான் உன்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.  எவ்வளவு அதிக சுமையையும் உன்னால் மட்டுமே தூக்க முடியும்.  எவ்வளவு வேகமாகவும் உன்னால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும்.  எவ்வளவு கடுமையாகவும் உன்னால் மட்டுமே பாடுபட முடியும். எவ்வளவு தொலைவாக இருந்தாலும் உன்னால் மட்டுமே பயணப்பட முடியும்.  

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

சந்தேகத்தை அறவே விடுத்து அலட்டிக் கொள்ளாமல் இருக்கும்போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்.

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொண்டு சமாளியுங்கள்.

வாட்டி வதைத்தாலும் கடுமையாகப் பாடுபட்டால்தான் பிரச்சனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு  காணமுடியும்.

பிரச்சனைகள்தான் உள்ளார்ந்த துணிச்சலையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.

நான் என்றுமே தெய்வ நம்பிக்கை கொண்டவன்.  எனது பணியில் இறைவனையும்  பங்குதாரராக சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.  அபாரமான வேலைக்கு எனக்கிருக்கும் திறமையை விட  அதிகம் தேவை என்பதை அறிந்திருந்தேன்.  எனவே கடவுளால் மட்டுமே தரக் கூடிய உதவியை நாடினேன்.

உனது எல்லா நாள்களிலும் தயாராக இரு 
எவரையும் சம உணர்வோடு சந்தி 
நீ பட்டறைக் கல்லானால் அடிதாங்கு 
நீ சுத்தியானால் அடி.

உனது பயணத்தில் நடை போடுவதற்கு இறைவன் உனக்கு ஒளி  காட்டுவான்.

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

உங்கள் முன்னே  நடமாடித் திரிவதற்காக எந்த  தேவ தூதரையும் நாங்கள் அனுப்பவில்லை. ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக நடந்து கொள்வதை வைத்துதான் உங்களை சோதிக்கிறோம். அதற்குக் கூட உங்களிடம் பொறுமை இல்லையா ?

கவலைப் படாதே, முணுமுணுக்காதே 
மனம் தளராதே, இப்போதுதான் 
வாய்ப்புக்கள் வர ஆரம்பித்துள்ளன 
சிறந்த  பணி  இன்னும் ஆரம்பமாகவில்லை 
சிறந்த பணி இன்னும்  முடிக்கப் படவில்லை.

காலத்தின் மணல் பரப்பில் 
உன் காலடிச் சுவடுகளைப் 
பதிக்க விரும்பினால் 
உனது கால்களை 
இழுத்து இழுத்து நடக்காதே.

உங்களுடைய  கல்வியையும் திறமையையும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அறிவாற்றல்தான் நிதர்சனமான நிலையான சொத்து என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

வெற்றி அடைந்த எல்லோரிடமும் காணப்படும் பொதுவான அம்சம் முழுமையான பொறுப்புணர்வு. 

வெற்றிகளால் மட்டுமே நாம் உயர்ந்துவிட முடியாது. தோல்விகளாலும் நாம் முன்னேறுவோம் என்பதை எப்போதுமே  மறந்துவிடக் கூடாது.

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு எதிர்காலத்திற்காக மட்டும் வாழ்வது சாரமற்ற முழுமை அடையாத ஒரு வாழ்க்கை.  சிகரத்தை எட்டுவதற்காக மலையின் பல்வேறு பகுதிகளை அனுபவிக்காமல் மலை ஏறுவதைப் போன்றது அந்த வாழ்க்கை.  இந்தப் பகுதிகளில்தான் மலையின் ஜீவன் இருக்கிறது.  சிகரத்தில் அல்ல.

மற்றவர்களின் சிந்தனையில் விளைந்த ஆதாயங்களைப் பயன்படுத்திக் கொண்டு நான் என்றுமே வாழ்ந்தது இல்லை. எனது வாழ்க்கையை நிர்ணயம் செய்திருப்பது   எனது இயல்புதான்.

யாருக்கு பெருமை போய்ச் சேரும் என்பதைப் பொருட்படுத்தாமல் செயல் ஆற்றுபவர்கள் மூலம்தான் மகத்தான காரியங்களை இறைவனால் நிறைவேற்ற முடியும்.

அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆழமான ஈடுபாடு கொள்ளுங்கள். உடனே கிடைக்கும் செயற்கையான சந்தோஷத்தைத் துரத்தி அலையாதீர்கள். 

எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சுயசரித நூலான அக்கினிச்சிறகுகள் என்ற நூலை மின்நூலாக பெறுவதற்கான இணைப்பை உங்களுக்காக கொடுத்துள்ளேன். 


பதிவிறக்கம் செய்து படித்து, அவரை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..



*************************************************************

உறக்கத்திலேயே காண்பது கனவு அல்ல. உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு.  கனவு காண்பது என்பது ஒவ்வொரு இளைஞர் வாழ்விலும் கடமையாகும். அந்த கனவை நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். விடா முயற்சியோடு செயல்பட வேண்டும்.
தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா பலமான வளர்ந்த நாடாகும், என்பதே அவரது லட்சியம் 
அவரது கனவு நனவாக பாடுபடுவோம் இன்றைக்கு அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவர் கண்ட கனவை நனவாக்க இன்றைய இளைய தலைமுறையினர் இணைந்து பாடுபடவேண்டும். இதுவே நாம் அவருக்கு செலுத்தும் கடமையாகும்.


உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று இந்திய ஜனநாயகத்தின் மாண்பினை விளக்கிய மணிவிளக்கு நீங்கள். கிரேக்க தேசத்தின் நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அந்த உரையில்தான், சங்கத்தமிழினுடைய உன்னதத்தை, பழந்தமிழர் நாகரிகத்தை, 
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" -  கணியன் பூங்குன்றனார். .
என்ற தமிழரின் கோட்பாட்டை எடுத்துரைதீர்கள். தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் உலகளாவிய பெருமை சேர்த்த மகான்  நீங்கள்!
"83 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் ஒரு குழந்தை அழுது கொண்டே  பிறந்தது. அந்த குழந்தை வாழ்ந்து முடிந்து, இந்த மண்ணில் மடிந்து இப்போது இந்தியாவையே அழவைத்து விட்டுச் சென்றது."  -  வைரமுத்து 

என்னை பொறுத்த வரையில் எல்லா குழந்தைகளும் அழுதுகொண்டே பிறக்கின்றன. அவர்கள் வாழ்ந்து முடிந்து இறுதி பயணம் செல்லும் பொழுது எத்தனை இதயங்கள் கனத்து போகின்றன என்பதை பொறுத்தே, அவர்கள் வாழ்வின் சகாப்தம் அடங்கி இருக்கிறது. 

நீங்கள் நிருபித்து விட்டீர்கள். நீங்கள் இருந்த காலம் 
எங்கள் வாழ்வின் வசந்தகாலம்..
எங்கள் மாணவர்களின் பொற்காலம்...
உங்கள் வாழ்கை ஒரு சகாப்தம் என ..

நேருவின் மறைவுக்கு பின், இந்திய மக்கள் ஒரு சேர மருகி நிற்கும் உன்னத தலைவர் நீங்கள் என பத்திரிகைகள் புழலாரம் சூடுகிறது.

நேரு, மகாத்மா காலத்தில் நாங்கள் இல்லை, நாங்கள் பார்த்த நேரு, மகாத்மாவின் ஒட்டு மொத்த உருவமும் நீங்கள் அல்லவா!

உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பதே..
எங்கள் தலைமுறைக்கு நாங்கள் ஒரு சாட்சி அல்லவா!

இப்படி ஓயாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறீர்களே - எப்போது ஓய்வு எடுப்பீர்கள் ? என்ற கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் "ஓய்வு என்பது என்ன. நமக்குப் பிடித்த வேலையை மகிழ்ச்சியாக செய்து கொண்டு இருப்பதுதான். அதனால் நான் எப்போதும் ஓய்வாகத் தான் இருக்கிறேன்". எனப் பதிலளித்தீர்கள்..
ஒருமுறை சிறந்த தலைவனுக்கான அடிப்படைத் தகுதிகள் (good leadership qualities)  என்ன என்று உங்களிடம்  கேட்டபோது, பட்டியலிட்ட ஆறு அடிப்படைத் தகுதிகள்:

1. உயரிய நோக்கம் ( Great Vision) 
2. புதிய பாதையில் பயனித்தல் (Able to travel the untravelled path)
3. தோல்விகளை எதிர்கொள்ளும் திறமை (Able  to manage failures)
4. முடிவெடுக்கும்  துணிவு (Courage to take decision)
5. நேர்மையான செயல் மூலமான வெற்றி (Work with integrity and succeed with it)
6. மனிதர்களுடன் பழகும் திறன் (Able  to mix with people)  

எனப் பதிலளித்தீர்கள். எப்படி ஐயா உங்களால் மாட்டும் எல்லாம் சாத்தியமாகிறது?


ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விவேக்., ‘மறுபிறவி ஒன்று இருந்தால் எப்படி பிறக்க ஆசை?' என உங்களிடம் கேள்வி எழுப்பினார்,

அதற்கு நீங்கள், "மறுபிறவி என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படி ஒன்று இருந்தால் இந்தியாவில் மீண்டும் பிறக்கவே எனக்கு ஆசை. உலகநாடுகள் அதிசயிக்கும்... ஏனென்றால் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு. வருங்காலத்தின் இந்தியாவின் முன்னேற்றம் உலக நாடுகளை அதிசயிக்கும் வகையில் இருக்கும். அதுபோன்ற சமயத்தில் மீண்டும் இந்தியாவில் பிறக்க வேண்டும்எனப் பதிலளித்தீர்கள் 

உங்களின் நிறை வேற கூடிய கவாய் நீங்கள் குறிப்பிட்டது 150 கோடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சி. அதை பார்க்காமல் நீங்கள் எங்களை விட்டு விடுவீர்களா கலாம் சார்! 

நீங்கள் மறு பிறவி எடுத்து இருப்பீர்கள் என நம்புகிறோம்! 

மீண்டு வாருங்கள்! மீண்டும் வாருங்கள்...
உங்கள் மக்களை வழி நடத்துங்கள்...

எங்கள் மாணவர்கள்.. உங்கள் விரிவுரைக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள்! விட்ட இடத்திலிருந்து நீங்கள் அல்லவா தொடங்க வேண்டும்...கண்ணீருடன்....முடிக்கின்றேன்...