வியாழன், 4 டிசம்பர், 2014

நட்(பூ)- சகோதரியுமானவள்!

பாத்திமா!


சேர்ந்து இருந்த நாட்கள் மிக குறைவு, ஆனாலும் ஏழு ஜென்மம் தொடர்ந்தது போல் ஒரு பந்தம். குறைவாக பேசுவோம், நிறைய சிரிப்போம்!

அவர் திருமணத்திற்கு முன், தன்னுடன் வேலை பார்த்த நண்பர்கள், தோழிகளை வீட்டுக்கு அழைத்து, காபி போட போய்.. பால் எப்படி காச்சுறது எப்படின்னு தெரியாம..தெரியாமல், கொஞ்சம் கருகவிட்டு அதிலே காபி போட்டு, அனைவருக்கும் கொடுத்ததும், அந்த நண்பர்களில் ஒருவர்," அதை குடித்து விட்டு" "இந்த பொண்ணை எல்லாம் எவன் கட்டுவான்னு?" (இவர் இல்லாத பொழுது) கேட்டதும். பின் மற்ற தோழியின் மூலம் பாத்திமா தெரிந்து கொண்டதும். அத கேட்ட அந்த ஒரு கேள்விக்காக...காலம் பூரா அந்த பொண்ணு கையிலேயே  காபி குடின்னு அந்த ஆண்டவன் முடிவு எடுத்தும்..இதை யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு பாத்திமா, என்கிட்டே சொன்னதும், அதை இது வரைக்கும் நான் Maintain பண்ணதும், இனியும் நான் Maintain பண்ண போறதும் ...ரகசியம்...ஷ்ஷ்...முடியல!...

இன்னைக்கு தான் நீங்க பிரியாணி Master ஆயிட்டீங்கள்ள..பாத்திமா Free-யா விடுங்க ....

தோழிகள் கூட்டம் அனைவருக்கும் ஒரு சேர தகவல் பரிமாறுவது, FB-ல தவறாமல் like போடுவது (அனைவருக்கும்). குழந்தைகளையும் கவனித்துகொண்டு, வேலைக்கும் சென்றுகொண்டு  எப்படி இப்படி Personal Relationship maintain பண்ணுகிறார் என வியப்பேன்.  Hats off  to you Fathima!

 என்னை, எத பண்ணலும்  "கலக்குறீங்க" "கலக்குறீங்கன்னு" சொல்லி சொல்லி உசுபேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கும் அன்பு தோழி! 

தானும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்தி பார்க்கும் குணம் கொண்ட உற்ற தோழி!.

காலம் சில நபர்களை, ரத்த பந்தமாக அமைக்காத பொழுது, உடனே பயணிக்கும் தோழியாய், தோழர்களாய் அமைத்து விடும் என்பதை மனபூர்வமாக நம்புபவள் நான்!


உன்போன்ற தோழிகள் 
இல்லை எனில்..
நான் இங்கு இல்லை....
உடன் பிறக்கவில்லை என்றாலும்..
உற்ற தோழி ஆனாய்..
உடன் பட்டவர்களானோம்...
அன்பால் ஆர்பரிக்கிறோம்..
பண்பால் பரவசமானோம்..
என் உடன் பிறவா சகோதரி...நீ..
பல்லாண்டு காலம்...
நோய் நொடி இன்றி...
நீண்ட ஆரோக்கியத்துடன் 
எல்லா வளமும், நலமும் பெற ..
வாழ்த்துகிறேன்....
என் சகோதரியுமானவளுக்கு!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!



குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிகாப்பது போல,  நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.

இந்த நட்புக்கு இலக்கணமானவள் நீ!



பாத்திமா, இதை படிக்கும் பொழுது உங்கள் கண்ணின் ஓரம் நீர் எட்டி பார்த்திருந்தால் அது என் இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றி அல்ல..நம் நட்புக்கு கிடைத்த வெற்றியடி பெண்ணே!

படிச்சுட்டு எப்படி feel பண்ணீங்கன்னு அப்படியே கீழ comments போட்டுடுங்க! அப்படியே Party எங்கன்னு சொல்லிடுங்க! அப்புறம் நம்ப பிரியாணி??

புதன், 3 டிசம்பர், 2014

பாயம்மா (தாயம்மா!)


எனக்கு இஸ்லாம் மதத்தின் மிகுந்த மரியாதை. அவர்கள் இறை நம்பிக்கையும், அவர்கள் இறைவழிபாடும் என்னை ஆச்சர்ய பட வைக்கும். இதற்கெல்லாம் முதல் காரணம், எங்கள் பாயம்மா! இல்லை இல்லை எங்கள் தாயம்மாவாக இருந்தார் எங்கள் சிறு வயது பருவத்தில். பாயம்மா எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்தவர். அவர்களுக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள்.

எங்கள் மீது மிகுந்த பாசமாக இருப்பார். என்ன செய்தாலும் எங்க வீட்டுக்கு ஒரு பார்சல் அனுப்பிவிடுவார்கள்.

அப்பெல்லாம் பாயம்மா வீடு பிரியாணி சாப்பிட்டு தான் வளர்ந்தேன்னு சொல்லலாம். ரம்ஜான், பக்ரித் மட்டும் அல்ல, அவர்கள் பிள்ளைகளில் நான்கு பையன்கள் ஒவ்வொருத்தராக, துபாய் சென்றார்கள். அவர்கள் ஒவ்வொரு முதல் முறை துபாய் செல்லும்பொழுது "பயணம் செய்ய " விருந்து. அவர்கள் ஊருக்கு விடுமுறைக்கு ஊருக்கு வரும் பொழுது விருந்து என பாயம்மா வீடு களை கட்டும்.



பக்ரித் பண்டிகைக்கு, வசதி படைத்தவர்கள், ஏழைகளுக்கு "கறி" இலவசமாக வழங்கும் அவர்கள் வழிமுறை, இஸ்லாம் மதத்தில், எனக்கு மிகவும் பிடிக்கும் ( ஏழைகளுக்கு உதவுவது). , அதற்காக பாயம்மா வீட்டில் 6 , 7 ஆடு வெட்டுவார்கள்.

அவர்கள் பையன்கள் துபாயிலிருந்து வரும் பொழுது, அவர்கள் கொண்டு வந்த பெட்டி பிரிக்க ஒரு நாள் குறித்து, அவர்கள் நெருங்கிய உறவினர்களை வரவழைத்து தான் பிரிப்பார்கள்.அன்னைக்கும் செம விருந்து தான். எங்களுக்கும் things கொடுப்பார்கள், எனக்கு clip, fancy item, dress material கிடைக்கும், அதெல்லாம் ரொம்ப ஸ்பெஷல், சும்மாவா? துபாய் things ஆச்சே.

பாயம்மா செய்த பிரியாணி போல் இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை. அப்படி ஒரு ருசி. அன்பையும், பிரியாணியையும் அள்ளி தருபவர்கள் பாயம்மாக்கள்!

We miss you Baayamma!!

இஸ்லாம் மதத்துடன், நான் சேர்ந்தே பயணிக்கிறேன். இஸ்லாம் தோழிகள், என் சகோதரிகளாக என் வாழ்வில் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.  (தொடரும்) 



ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வாழும் தேவதைகள்-2!-சித்தி!



வாழும் தேவதைகள்-2! -சித்தி

Small mummy...அப்படி தான் என் சித்தியை கூப்பிடுவேன். ..
சித்தி அவ்வளவு அழகு...அமைதி ..பொறுமை..நிறைந்தவர்..மலேசியாவில் வசிக்கிறார்..ஒரு அழகு பையன்..

இரும்பு மனுசி..எவ்வளவு போராட்டத்தையும்,தன்னுள்ளே அடக்கி யாருடைய தயவும் இன்றி வெற்றி காணும் திறன் படைத்தவர்.

Small mummy you are great!

2 பேருக்கு சமைச்சு இருந்தாலும் ..20 பேருக்கு சமைச்சுட்டு இருந்தாலும்..சமைச்சுட்டு இருக்கிற .சுவடே தெரியாது..Kitchenஅவ்வளவு சுத்தமாக இருக்கும்..சமைக்கிற அடையாளமே இருக்காது..அவ்வளவு நேர்த்தி, இன்னும் அவரிடம் இருந்து கடை பிடிக்க முயல்கிறேன்..ஸ்ஸ்ஸ் முடியல சித்தி முடியல...

"தாயாகி பெற்றெடுக்கும் முன்பே
தாய்மையின் ருசி பிறந்தது..அக்காவின் குழந்தை பிறந்ததிலிருந்து...." எங்கோ படித்தது 

ஆமா சித்தி...உங்க அக்காவுக்கு குழந்தை பிறந்தப்ப..உங்களுக்கு 3 வயது.இல்ல? உலகத்திலேயே குட்டி சித்தி எங்களுக்கு தானே? ஆமாம் எங்க அம்மாவிற்கு திருமணதிற்கு பின் பிறந்தவர். வயது வித்தியாசம் ரொம்ப இல்லாததால்..எங்களிடம் ஒரு நட்பு இழையோடும். சித்திகிட்ட என்ன வேணா பேசலாம்..


அம்மாவை உங்கள் உருவில் பார்க்கிறோம் ..

We miss you...

Happy Birthday Small Mummy............


விதிக்கப்பட்ட நம் உறவு..
விதியின் சதியால்..
சிறிது காலம்..பிரித்து விட்ட பொழுதும்...
உள்ளமும், உணர்வுகளும் ..
புரிந்து கொண்டஉறவானது ...
அதுவே..பலமாய் ...
உறவின் பாலமாய் இருக்கிறது..
மனசும்  இதமாய் இருக்கிறது..

சித்தி நீங்க பல்லாண்டு காலம் சந்தோசமா இருக்கணும்..!



குறள்:522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
குறள் விளக்கம்:
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

அதுவும், இதுவும்!

அப்பெல்லாம் சின்ன வயசுல, ஐயாவுக்கு மேல பயந்த மத்த ஆளுங்க..எல்லாம் வேற யாரு? எல்லாம் நீங்க தான். அதாங்க "பேய், பிசாசு." எந்த புண்ணியவான்/புண்ணியவதி முதல் முதலா "அங்க போகாத அது இருக்கு" "இங்க போகாத இது இருக்கு" (இப்பக்கூட பாருங்க அந்த effect! அந்த வார்த்தைய போடவே பயமா இருக்கு,  எங்க பக்கத்துல வந்து நின்னுடுமோன்னு).

அப்பெல்லாம் இந்த பய புள்ளைங்க வேற கிலிய ஏற்படுத்தும்!  ராத்திரியான பாம்புன்னு சொல்ல கூடாது! மேல சொன்ன வார்த்தை எல்லாம் சொல்லக்கூடாதுன்னு.. அதுங்க காதுல விழுந்தா வந்துடும்னு!" ஷ் இப்ப நினைச்சாலும் கண்ண கட்டுது. நம்ம weakness மட்டும் யார்கிட்டயும் காட்டிக்கவே கூடாது!

                                

அப்பெல்லாம், எங்கள பாத்துக்கிட்ட அந்தம்மா, "என்னதான் Fan காத்து இருந்தாலும், அந்த வேப்ப மர காத்து சுகமே தனின்னு" ஜன்னல சாத்திட்டு படுக்க Allow பண்ண மாட்டாங்க!

நாம பயந்து கொஞ்சம் ஆர்ப்பாட்டம் பண்ண, ஐயாகிட்ட போட்டு கொடுத்துடும் அந்த அம்மா. வேற வழி இல்லை. அப்ப படுத்துக்கிட்டு அந்த வேப்ப மரத்த லேசா ஒர கண்ணால பாக்கறப்ப! அட ஆண்டவா!" ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு, அதுவாவும், ஒவ்வொரு இதுவாவும் தெரியும் பாருங்க.. அட அட..கண்ண இறுக்கி மூடிகிட்டு கட்டில்லிருந்து இறங்கி, கட்டிலுக்கு கீழ படுத்துக்குவேன்! ஷ் அப்பாடா!


ராத்திரில, எது வெடிச்சாலும் வெடிக்கட்டும்னு 'அதுக்கெல்லாம்' போறதே இல்ல. அப்படியே வந்தாலும், வளர்த்த அந்த அம்மாவ கூப்பிட்டா திட்டிக்கிட்டே வரும், அதுக்கு பயந்துகிட்டு, அக்காவ துணைக்கு கூப்பிட்டா மனுசி சாமானியமா எழுந்திருக்க மாட்டாங்க. அக்காவ எப்படியாவது கூப்பிட்டு போவேன். (வீட்டுக்குள்ளேதான், 2  room தாண்டி போகணும் அவ்ளோ தான்!)

ஒரு நாள் அப்படிதான் மார்கழி மாதம், நான் போயிட்டு வர, குளிருக்கு, அக்கா, போர்வையா முக்காடா போத்திக்கிட்டு, உக்காந்துகிட்டே தூங்கிகிட்டு இருக்க, அத பாத்து நான் கத்த, நான் கத்துரத பார்த்து அவங்க கத்த, ஒரே கூத்துதான், அப்பத்தான் தெரியும், அவுகளுக்கும், அதே பயம் இருந்ததும், மனுசி சும்மா நடுச்சுக்கிட்டு இருந்திருக்காங்கன்னு. செம கூத்து! ஐயாகிட்ட நல்ல பாட்டு வாங்கினோம். ஹிம்

என்னை நீ!
பார்த்ததும் இல்லை!
என்னை நீ!
நினைத்ததும் இல்லை!
ஆனால்
பார்க்காமலே..
நினைக்காமலே..
ஆட்டிவைக்கிராயே! என்ன?
பூர்வ ஜென்மத்து பந்தமோ!

ஷ்.. நம்ம கவிதை எழுதலன்ன யாரு எழுதுவாக 'அதுகளுக்காக' பாவம்!

எங்க போனாலும், இருட்டுறதுக்குள்ள வந்துடறது, அப்படி எப்பயாச்சும் இருட்டிடுச்சுன்னா, முடிஞ்சது கதை..ஓட ஓட தூரமும் குறையாது! வீடும் வாராது! கதைதான்! நான் சைக்கிள் ஒட்டி வர்றப்ப, என் சைக்கிள் பின்னாடி யாரோ பிடிச்சு இழுக்கிற மாதிரியே இருக்கும். சைக்கிள் இருக்கிற இடத்திலே ஓட்டுற மாதிரி இருக்கும்..கடவுளே! கடவுளே. என்ன பொழப்புடா சாமி!

இப்பகூட பாருங்க எந்த பிசாசு இத படிச்சுட்டு இருக்கோன்னு..பக் பக்ன்னு இருக்கு!  (ஹிஹி)

உங்க பிள்ளைங்ககிட்ட தப்பி தவிர அத சொல்லி வைச்சுடாதீங்க! அவங்க உள் மனசுல ஓரத்துல ஆழமா பதிஞ்சுடும், தனிய போக வர பயப்புடுவாங்க! கஷ்டம்! குழந்தைங்கள பயம் மட்டும் ஆட்கொண்டால், அவர்கள் in-secured ஆகத்தான் feel பண்ணுவார்கள்.

உங்கள் பிள்ளைங்ககிட்ட தெளிவா சொல்லிடுங்க அப்படி எதுவும் இல்லைன்னு. ஏன்னா அங்க இங்க, பயபுள்ளங்க ஏதாவது சொல்லி அப்புறமா நாம எடுத்து சொல்லி..தெளியவச்சு..ஷ்ஷ்..முடியாதுங்க. அவ்ளோதான் சொல்லிட்டேன்!

நம்ம பிள்ளைங்க, எந்தவித பயமோ, தயக்கமோ இல்லாமல் வீர நடை போடணும் இல்ல!




(Image Courtesy: Web)

உயர்நிலை கல்வி!


ஆமாம் K.H.S.S-ல் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதும், அங்கு
எந்த Subject -லயும்(கணிதம் தவிர) 75% மேல் என்னால் மார்க் வாங்கவே முடியவில்லை, முதல் ரேங்க் என்பது கனவாகி போனது.  Group Leaderஆக மட்டும் தான் இருந்தேன்! Class Leader ஆக முடியவில்லை! ஏனென்றால், நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்த School- ன் Standard வேற, இந்த School Standard வேற. எல்லா பள்ளிகளிலும் இருந்து இங்கு நுழைவு தேர்வில் வெற்றிபெற்றவர்கள், திறமைசாலிகள்! எல்லாரும் போட்டி போடும் பொழுது நான் Average Student தான்! என்று உணர்ந்தபொழுது வலிக்கதான் செய்தது!

அப்புறம் எவ்ளவோ நல்ல கஷ்டபட்டு படிச்சும்,  முதல் மூணு ரேங்க் கூட வாங்க முடியல!  அது தான் ஏன்னு தெரியல! நாளடைவிலே அதே பழகி போய், என்னோட Range அதுதான்னு mind set ஆயிடுச்சு போங்க. நம்ம Eductaion System என்னன்னு சொல்றது? அந்த சூலழல்ல, எனக்கு நிறைய பக்குவம், நிதானம் வந்துடுச்சு!

"There is a time to lead and a time to follow"  ன்னு மனச தேத்திக்கிட்டேன். இத நீங்க யாராச்சும் தப்பா புரிஞ்சுக்கிட்டு போட்டு கொடுத்துடாதீங்கப்பா, அப்புறம் என்னோட BLOG - க்கு தடை விதிச்சுற போராக! கைப்புள்ள இப்பதான் 4 வார்த்தை எழுத பழகுறேன். என்னோட திறமையா(??) பார்த்து யாராச்சும் பத்திரிக்கைக்கு எழுத கூப்பிடுவாங்க அப்படின்னு..என்ன?தலையில அடிச்சுகுறீங்களா? இதுக்கெல்லாம் பின்னாடி  நீங்க ரொம்ப feel பண்ணுவீங்க பாருங்க.

சரி விசயத்துக்கு வரேன்,
நல்லா படிக்கற பிள்ளைங்க, சில நேரம், ஒரு வேலை சுமாரா எழுதி இருந்தாகூட, அவங்க மேல இருக்கிற Confident-ல நல்ல படிக்கிற பிள்ளைன்னு சரியா பதிலா சரிபார்த்தார்களா? என தோணும். மார்க் குறைச்சு போட மாட்டாங்க. நல்ல மார்க் தான்  போடுவாங்க. "என் சகோதரி, ஆசிரியை Cross check செய்தேன், ஆமாம் என ஒத்துகொண்டார்! அவர்கள் நல்லா படிக்கும் பிள்ளைகள், அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையில் 4 மார்க் போடும் இடத்தில 5 மதிப்பெண் போடுவோம் என்றார்கள்". நம்ம எப்பவும் open Statement தான் எப்பவும், ஒளிவு மறைவு கிடையாது! என்னை கேட்டீங்கன்னா, Normal தேர்விற்கே Name System இருக்க கூடாது, Random Number சிஸ்டம் தான் இருக்கணும் அப்பத்தான், இந்த பேர பார்த்து மார்க் போடற கதை எல்லாம் இருக்காது. எப்பவும் முதல் ரேங்க் வாங்குறவங்களே, வாங்கிட்டு இருக்க மாட்டாங்க, எங்கயாவது Politics நடந்தா, அதுவும் இருக்காது. என்னது பள்ளிகளில்Politics என ஆச்சரிய படுறீங்களா? அட போங்கப்பா. குறிப்பட்ட ஜாதி பெயரில், குறிப்பிட்ட சமுகத்தின் பெயரில் நடக்கும் பள்ளிகளில் ஒரு வகையான Politics இருக்கத்தான் செய்கிறது.

உங்க பிள்ளைகள், 100/100, முதல் ரேங்க் வாங்குகிறார்கள் என அவர்களை, தலைகனம் கொள்ள செய்யாதீர்கள்! அனுபவித்த வகையில் சொல்கிறேன், உங்கள் பிள்ளை உங்கள் பள்ளியின் Standard, மற்றும் அவனுடன் படிக்கும் பிள்ளைகளை Compare செய்யும்பொழுது Class topper,  இதை எப்போழுதும் உணர்த்துங்கள்! கற்றது கை மண்ணளவு..கல்லாதது உலகளவு என புரியும்படி சொல்லுங்கள்!


                             

உங்க பிள்ளைங்க தமிழ் மீடியம் படிச்சுட்டு இருக்காங்கன்னா, நீங்க செய்ய வேண்டியது எல்லாம். ஆங்கில தினசரி நாளிதழ் வாங்குங்கள், அவர்களை படிக்க வைத்து, ஐந்து புது வார்த்தை தினம் கண்டுபிடுத்து, Dictionary பார்த்து அர்த்தம் எழுத சொல்லுங்கள். அந்த வார்த்தைகளை வைத்து அமைத்து Sentence எழுதி காட்ட சொல்லுங்கள்!" Vocabulary வளரும். ஒரு வாரம் ஆனதும் அந்த 35 வார்த்தைகளை வைத்து அவர்களை test செய்து பாருங்கள், மீண்டும் மீண்டும்..எனக்கு ஐயா சொன்னதுதான் இதெல்லாம்.. ஆனா முழுசா இதெல்லாம் follow பண்ணல. ஏன்னா அப்பத்தான் எனக்கு படிச்சு Engineer ஆகணும் Doctor ஆகணும்னு எந்த கனவும்..இல்லையே! ஐயாவுக்குத்தானே இருந்துது!

இப்ப இருக்கிற பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் செம சுட்டி, நிறைய கனவு இருக்கிறது! உங்கள் பிள்ளை படிக்கும் பொழுதே, "Spoken english" - உங்கள் வசதிக்கு ஏற்ப தனியாக வகுப்பிற்கு அனுப்புங்கள், அவர்கள் தன்னம்பிக்கை வளரும்.

உங்கள் ஊரில் அந்த மாதிரி வகுப்புகள் இல்லை எனில், அவர்கள் பள்ளியில், பெற்றோர்கள் சார்பாக எடுத்துரைத்து, ஆங்கில வகுப்பிலாவது அனைவரையும், ஆங்கிலத்தில் உரையாட பழக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்! இல்லை உங்களால் சரளமாக உரையாட முடியும் எனில், வீட்டில் அவர்களிடம் குறிப்பிட்ட நேரங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும் என்று பழக்குங்கள்.

அவர்கள்  பின்னாளில், College, Campus Interview என போகும் பொழுது எந்தவித தையக்கமோ, தாழ்வு மனப்பான்மையோ இல்லாமல் வாழ்வில் ஜெயிப்பார்கள்!


நம்ம பிள்ளைகள நல்ல School சேர்த்தோம், நல்லா படிக்கிறார்கள் என்பதோடு மட்டும் நம் கடமை முடியவில்லை. அவர்கள் Globalization சூழலுக்கு சமமான தகுதி பெற்று, எல்லா சூழ் நிலைகளையும் சமாளித்து முன்னேற, நாம்தான் வழி நடத்த வேண்டும்.

உங்கள் உறவினர் பிள்ளை தமிழ் மீடியத்தில் படித்து இன்னைக்கு அமெரிக்காவில் பெரிய பதவியில் இருக்கலாம், அவர் வாழ்ந்த சுழல், அவர் தன்னை செதுக்கிக்கொண்ட விதம் வேற! புரிந்து கொள்ளுங்கள்! நாம தமிழ் மீடியம் படிச்சுதானே முன்னேறுனோம், நம்ம பிள்ளைகளும் அப்படியே வந்துடுவாங்கன்னு தயவு செய்து முடிவு செய்யாதிர்கள். ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற Capacity & Capability பொறுத்துதான், அவர்கள் ஆளுமை திறன் இருக்கும்.

ஆமாங்க, தமிழுக்கு நான் ஒன்னும் எதிராளி இல்லை, தமிழ் மீடியத்துல படிச்சுட்டு,தனியா எந்தவித பயிற்சியும் எடுத்துக்காம பின்னாளில் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இப்பகூட அப்படித்தான். எவ்ளோ நாளைக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது! அவ்வ்வ்வ்..

இப்பகூட, ஒரு document ரெடி பண்ணா கூட ஒரு தடவைக்கு நாலு தடவை grammer mistake இருக்கானு பாத்துகிட்டு..அடச்சே! என்ன பொழப்புடா சாமி!
நான் நடிச்சுட்டு இருக்கிற விஷயம் யாருக்கும் தெரியாது..கை பிள்ளைய காமிச்சு கொடுத்துடாதீங்க!

தாத்தா நீங்க இப்ப உயிரோட இருந்தா உங்கள நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்கணும், "தாத்தா ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி"? (ஒ! ஐஞ்சு வார்த்தையா போச்சு) என்ன திரும்ப சரியா இருக்கான்னு count பண்றீங்களாக்கும்?

தாத்தா, நீங்க தமிழ் தாத்தாவாகவும், ஆங்கில தாத்தாவாகவும், பிச்சு உதறுணீங்களே?  அது எப்படின்னு சொல்லாமலே போயிட்டீங்களே தாத்தா!

திருக்குறள்:
அதிகாரம்: கல்வி
குறள் 400:

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.


பொருள்:
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

Image Courtesy: Web

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

பாலர் பருவமும் & ஆரம்ப கல்வியும்!

சமயத்துல, நம்ம ரத்த பந்தத்தில, இல்ல சொந்தத்தில சில Silent killer இருப்பாங்க அப்படிதான் ஒருத்தர், என் அம்மா வழி தாத்தா, "தமிழ் தாத்தா" அப்படி ஒரு கவிஞர், சினிமாக்கு பாட்டு எழுதி இருக்காரு, நிறைய புத்தகம் போட்டு இருக்காரு! அவரு தமிழ் மேல இருந்த ஆர்வத்திலே, எங்கள எல்லாம் தமிழ் மீடியத்துல தான் படிக்க வைக்கனும்னு உறுதியா சொல்லிட்டாரு.

அதுல கொடுமை என்னன்னா, அவரு சொல்ற எதையுமே காதுல போடாத எங்க ஐயா, இத மட்டும் காது கொடுத்து கேட்டுட்டாக!

அதனால் நாம L.K.G, U.K.G  எல்லாம் படிக்கல நேரடி ஒன்னாம்ப்புதான், அங்கு ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே இருந்தது.

அதுவும் பாத்தீங்கன்ன, ஒன்றாம் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை Super படிப்பு மச்சி.


ஐந்தாம் வகுப்பில் நான்தான் Class leader,  நல்லா படிக்கிறோம் என தலைகனம் நிறைய. எதற்காகவும் Adjust பண்ண மாட்டேன், எங்கள் School-ல் நடக்கும் "பாலர் சபா" வில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி எல்லாத்துலயும் பரிசு தட்டி செல்வேன்.. அப்பத்தான் School-ல்ல Election வந்துச்சு School People Leader பதவிக்கு. எல்லா Class leader நடக்கிற போட்டி. Class leaders வேட்பாளர்கள்
( உங்களுக்கு தெரியாததா? ) நான்காம், மற்றும் ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் வாக்களிக்க(??) உரிமை பெற்றவர்கள்!

அவர்கள் முன்னிலையில், கொடுக்கிற தலைப்பில் 10  நிமிடம் பேசணும்(தலைப்பு அப்பத்தான் தருவாங்க, ஐந்து நிமிடம் தயார் பண்ணிக்க கொடுப்பாங்கா), அதிலிருந்து இருவர் தேர்ந்து எடுத்தார்கள், அதில் நானும், பூமா என்கிற பெண்ணும் இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்றோம். அப்பொழுதும் 10  நிமிட பேச்சு, என் பேச்சுக்கு கிட்டத்தட்ட மழை மாதிரி எனக்கு கை தட்டல்!

 ரெண்டு பேர்ல யாரு செலக்ட் பண்றீங்க, நாங்க பேர சொன்னதும் கை தூக்கணும்! பேப்பர் இல்லை, பெட்டி இல்லை, பைசா செலவில்லாத Election- பா!  ஒரே ஆளு ரெண்டு பேருக்கும் கை தூக்கினா எப்படின்னு யோசிக்கிறீங்க தானே? அதான் இல்லை. மொத்த பசங்க, ரெண்டு பேருக்கும் கிடைச்ச ஒட்டு  vary ஆச்சுன்னா, திரும்ப கை தூக்க சொல்வாங்க! ஹிம்

அப்படி கேட்டதும் பய புள்ளைக, எனக்கு கொஞ்ச பேரும், அவளுக்கு நிறைய பேறும் வாக்களித்தார்கள்(?!?)! நான் சிகப்பாக இல்லையே என வருத்தப்பட்ட ஒரே தருணம்..அந்த தருணம். ஏன்னா பூமா மிகவும் சிகப்பாக, அழகாக இருப்பாள்!

என்னதான் திறமை நமக்கு இருந்தாலும், சமையத்துல அழகு அப்படியேஅள்ளிக்கிட்டு ஜெய்ச்சுடுங்க! என்னைய கேட்டாலே அவளுக்குத்தான் ஓட்டு போட்டுருப்பேன்! அழகா இருக்கிறவங்க மேல ஒரு ஈர்ப்பு இருக்கிறது நியாயம்தானே!

அப்பொழுது, முதல் ரேங்க் தான் வாங்குவேன், தவறிப்போனா ரெண்டாம் ரேங்க். வரலாறு புவியல்ல கூட 100/100 தான். இன்னும் ஞாபகம் இருக்கிறது, ஐந்தாம் வகுப்பில், வரலாறு புவியல் பாடத்தில்  100/100வாங்கி இருந்தேன், என்னைய விட்டே எங்க வரலாறு/புவியல் ஆசிரியை அழைத்து வர சொன்னார் எங்க class teacher. "எப்படி 100/100 போட்டீர்கள் என கேட்டார்? ஆசிரியை, "மதிப்பெண் குறைக்க வாய்ப்பே இல்லை, அப்படி இருக்கிறது ஒவ்வொரு பதிலும்! என சொன்னார்". இப்பதான் பத்து வருசமா 100/100 போடாறாங்க, தமிழும், வரலாறு புவியல் 100/100 என்பது 2000 வருடம் வரை வாய்ப்பே இல்லை!

அதுவும் அந்த ரேங்க், அந்த பெயர் வாங்கிட்ட சான்சே இல்லைங்க. அதுவும் ஒரு போதை தான் இல்லை?, திரும்ப திரும்ப எடுத்துக்குட்டே இருக்கணும்!, பின் தங்கிட்டா கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு Mood out தான். நல்ல விசயத்தில, அதுவும் படிக்கிற விசயத்துல ஒரு போதை இருக்குறது தப்பில்லையே!

                                

ஐந்தாம் வகுப்பு முடிந்து, ஆறாம் வகுப்பிற்கு(தமிழ் மீடியம்), மேல்நிலை பள்ளிக்கு நுழைவு தேர்வு எழுதி, K.H.S.S -ல் தேர்வு பெற்றேன். அங்கே தான் விழுந்தது எனக்கு அடி!  சாதாரண அடி இல்லை! சம்மட்டியால் அடித்த அடி போல்!

திருக்குறள்:
அதிகாரம்: கல்வி
குறள் 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

பொருள்:
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்..

Image Courtesy: Web

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

தந்தையுமானவன்!

பெண் பிள்ளைகளை பெற்ற ..
தகப்பன்கள் பாக்கியசாலிகள்..(தங்க மீன்கள்)
அண்ணணன், தம்பிகளை பெற்ற ..
பெண் பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள்..(நான்)

அண்ணா என்று ஒரு மூன்று எழுத்தில்.. என் அண்ணனை அடைக்கி விட முடியாது!

எல்லாருக்கும் அண்ணன், தம்பி இருக்கலாம், ஆனால் அவர்கள் திருமணத்திற்கு  பிறகும், அதே பொறுப்புடன், பாசத்துடன் இருக்கமுடியுமா?
கொஞ்சம் சிரமம் தான், அவர்கள் குடும்பத்தை கவனிக்கணும் அல்லவா?
என் அண்ணன்  எப்பவும், இப்பவும், ஒரே மாதிரி என்னை வழி நடத்துகிறார். அப்படி அண்ணி அமைந்த வகையிலும் நான் பாக்கியம் செய்து இருக்கிறேன்.




தந்தையுமானவன்!

தந்தையை தாயுமானவனாய்
பெற்ற அதிர்ஷ்டசாலி நான்தான்..
சகோதரனை தந்தையுமானவனாய்
பெற்ற பாக்கியசாலியும் நான்தான்..
தந்தையுமானவனே!
வழி நடத்துகிறாய் நீ..என்னை
அன்பு நெறிகொண்டு..
நான் வாழ்வில் முன்னேறுகிறேன்..
வெற்றி நடைகொண்டு..
என் தந்தையுமானவனுக்கு..
என் இனிய...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..


                                     

இன்றும் ஞாபகம் இருக்கிறது,
நான் வேலைக்கு போக இருந்த முதல் நாள், அஷ்டமி இன்று சேர வேண்டாம் என்று சொன்னாய், பிறகு ஒரு நல்ல நாளில் வேலைக்கு சென்றேன்..இதோ வருடங்கள் ஓடிவிட்டன..அதே கம்பெனி, நல்ல பெயர்..நல்ல வேலை..எல்லாம் உன் ஆசிர்வாதமும்..வழி நடத்தலும் தான்..இன்று நான் Award வாங்கும் வரை கொண்டு சென்று இருக்கிறது..
இதோ உன் பிறந்த நாள் அன்று ..
இந்த Award உனக்கு அர்ப்பணிக்கிறேன்.
இதைவிட Costly-யா உனக்கு வேற ஏதும் GIFT தேவை இல்லைதானே! (ஹி ஹி..)


திருக்குறள் 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.


புதன், 20 ஆகஸ்ட், 2014

நட்பு -2!

சாந்தி.. என்ன வாந்த..போந்த..(வாப்பா, போப்பா மாதிரி தஞ்சை வழக்கு பேச்சு) என கூப்பிடுவாள். தஞ்சை வழக்கு பேச்சு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணும்னா "களவாணி" படம் பாருங்கள். பேச்சு வழக்கு, சொந்தம், பந்தம் எல்லாம் அச்சு, அசலா காமிச்சு இருப்பாரு இயக்குனர். சற்குணம். (Thank you Boss) சொந்த மண் வாசனையில இப்படி ஒரு படம் நான் பாக்கல.

அதுல வர்ற அம்மா சரண்யா மாதிரிதான், எங்க ஊரு அம்மாக்கள் பிள்ளைகளை Support  பண்ணுவார்கள் (எல்லா அம்மாவும் அப்படிதான்..ஆனா அந்த ஜோசியம்..அந்த டயலாக். சொல்றேன்) அதாங்க "ஆடி போயி ..ஆவணி வந்தா அவன் டாப்பா வந்துடுவான்னு ..ஜோசியர் சொல்லி இருக்காருன்னு" அதே போலதான்.

போன வாரம்..இந்த டயலாக் mock பண்ண ஒரு ஜோக் படிச்சேன்.."இந்தியா தெரியாம..ஆடியில சுதந்திரம் வாங்கிடுச்சு..ஆவணியில வாங்கி இருந்தா..இன்னும் டாப்பா வந்து இருக்கும்.." ன்னு..பய புள்ளைங்க என்னமா யோசிக்குதுங்க..ஹிம்

இந்த மாதிரி ஜோசியத்த வச்சே அம்மாக்கள், பிள்ளைகளை காப்பாற்றுவார்கள்!!

உதாரணமா, பையன் சரியா படிக்கலன்னு வச்சுக்கங்க, அப்ப அப்பா திட்டுனாலோ, அடிச்சாலோ, உடனே அந்த அம்மா சொல்வாங்க .."இப்பதாங்க ----- ஜோசியர பார்த்தேன்..அவரு சொன்னாரு..ரெண்டாம் வீட்ல(எந்த வீடுன்னு சரியா தெரியல கொஞ்சம் Adjust பண்ணிக்கோங்க) சந்திரன் மறைஞ்சி இருக்கிறதால..மதி மங்கி போகும்..கொஞ்ச நாள்ல சரியா படிக்க ஆரம்பிச்சுடுவான்னு"

இதே கேட்டு சராசரி அப்பான்னா, சும்மா விட்டுடுவாரு. அதே "தண்ணி" அடிச்சுட்டு, தகராறு பன்றவருன்ன்னு வைங்களேன் " ஒன்னு, ரெண்டு ..ஒன்னு ரெண்டு(Repeattu) ..நம்ம வீட்லேந்து ரெண்டாவது வீட்ல.அம்மன் கோவில் பூசாரி கந்தசாமி தானே இருக்காரு..அது யாருடி சந்திரன்?..அவர் வீட்ல மறைஞ்சுகிட்டு..என் பிள்ளைய படிக்க விடாம பண்றவான்" .."எவனா இருந்தாலும் ஒண்டிக்கு ஒண்டி நேர வர சொல்லு நான் பாத்துகறேன்னு" ஒரே ரகளை நடக்கும்...அப்புறம் அந்தம்மா தலையில அடிச்சுக்குட்டு போயிடும்.(எல்லாம் கற்பனைதாங்க..)

அம்மாவுக்கும், பையனுக்கும் உள்ள புரிதல் இருக்கு பாருங்க சான்சே இல்லை.

அம்மான்னா அம்மாதான்..!!! (பாத்தது..படித்து ..கேட்டது மட்டும்..)



இங்க பாருங்க..topic மாற்றி எங்கோயோ போயிட்டேன்..ஆங்..சாந்தி விசயத்துக்கு வரேன்..

ஏழாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். ஒன்றாகவே School போயிட்டு, ஒன்றாகவே வருவோம்!

பதினோறாம் வகுப்பு நான் வேற School..அவ வேற School ..இருந்தாலும் சனி, ஞாயிறு சந்திப்போம் , ஒன்றாகவே கோயிலுக்கு போவோம். அப்ப எனக்கு எங்க ஐயா Cycle வாங்கி கொடுத்து இருந்தாங்க!".  சாந்திக்கு Cycle ஓட்ட தெரியாது..அதனால எப்பவும் நான் doubles அடிப்பேன்.

சாந்தியுடன் கூட பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். அவளுக்கு இளைய அண்ணன் "சின்னா" அண்ணன், அவர பத்தி சொல்லி ஆகணும்.மற்ற அண்ணன்கள் திருமணம் ஆகிவிட, சின்ன வயதிலே தந்தையை இழந்தவள் என்பதால், சாந்தி மேல ரொம்ப பாசமா இருப்பாரு "சின்னா" அண்ணன்.

உதாரணமா சொல்லனும்னா, தஞ்சையில் அவ்ளோ dress variety இருக்காதுன்னு, சென்னை போய், வாங்கி வருவாரு" அப்படி வாங்கி கொடுத்தாதான் பாசம்னு நான் சொல்லல. அவர் அவ்ளோ செய்ததும், அவரது அர்பணிப்பும் என்ன ஆனது என படிக்கும் பொழுது தெரிந்து கொள்வீர்கள்!.

 "சின்னா" அண்ணன், சாந்திக்கிட்ட, "சைக்கிள் ஓட்ட கத்துக்கோ, சைக்கிள் வாங்கி தரேன்னு" சொல்லல.புது சைக்கிள் வாங்கி கொடுத்து, என்னிடம் கத்துக்க சொன்னார்! என் சைக்கிள் வச்சு கத்து கொடுத்தா..சைக்கிள் கீழ விழும்..சைக்கிள் அடி படும்னு சொன்னார்" அதான் புதுசா வாங்கிட்டேன் சொன்னாரு.."அப்ப.. சாந்தி புது சைக்கிள் விழுந்தா பரவாயில்லையான்னு கேட்டேன்"..சிரிச்சாங்க. "அவங்க அவங்களுக்கு, அவங்க things மேல ஒரு ப்ரியம் இருக்கும்மா" அப்படின்னு சொன்னார்!

சாந்தி, என்கிட்டே சொன்னா, "சைக்கிள் கத்து கொடு..ஆனா என் புது சைக்கிள் கீழ விழ கூடாது betன்னு" ஷ்ஷ் ..தெரியாம OK சொல்லிட்டேன்ங்க..சனி ஞாயுறு தானே meet பண்ணுவோம்..1 hr training..

அன்னைக்கு, அப்படிதான்..சைக்கிள் ஒட்டி கிட்டே...மறந்த மாதிரி காமராஜ் ரோட்டுக்கு வந்துட்டோம்! "அய்யயோ...சாந்தி..அவன் வந்துட போறேன்னு!" சொல்லி முடிக்கறதுக்குள் அவன் வந்துட்டான்!
?

?
அப்படியே உங்க கற்பனை வேற எங்காச்சும் போயுருக்குமே? தெரியுமே உங்கள பத்தி..

அவன் வேற யாரும் இல்லை..காமராஜ் ரோட்டுல இருக்கிற தெரு நாய்..அதுக்கு Two wheeler-ல போறவங்கள கண்டாலே என்ன ஆகுமோ தெரியாது...குறைச்சுகிட்டே பல்ல காட்டிட்டு துரத்திட்டு வரும்..கிட்ட தட்ட சைக்கிள் pedal கிட்ட வந்துடும்..பசங்கன்னா...கால தூக்கி, சைக்கிள் முன்னாடி wheel மேல வச்சுப்பாங்க! பெண்ணா பிறந்துட்டோமேன்னு ..கண்ட ..கண்ட நாயெல்லாம் நினைக்க ..வைக்கும் பாருங்க!  அடச்சே! இதுக்காகவே ஒரு தெரு..சுத்தி போவேன்..சாந்திக்கும் தெரியும்!

அவன் "அவ்வவ் அவ்வ்ன்னு" குறைச்சு கிட்டே!..கவ்வ வர..
என் கவனம் சிதற..
சாந்தி Balance விட..
அவ தொப்புன்னு கீழ விழ..
அப்பாடா!..சைக்கிள் மட்டும்..என் பிடியில..

"அதுக்குள்ளே..வேற ஒரு வண்டி வர..அவன் அவங்கள துரத்திட்டு போயிட்டான்!"

சாந்திக்கு நல்ல அடி..அவளுக்கு அழுகை வந்துச்சு..என்ன பாத்து கேட்டா.."பாவி..சைக்கிள இப்படி பிடுச்சுக்கிட்டு என்னைய விட்டுட்டுயே!"ன்னு. நான் சீரியஸா முகத்த வச்சுகிட்டு  சொன்னேன்.."Bet என்னன்னா சைக்கிள் கீழ விழகூடாதுன்னுதான்..நீ விழ கூடாதுன்னு இல்லை" அப்படின்னு..வலிய மறந்து..அப்படி சிரிச்சா!

அவளுக்கு, சைக்கிள் ஓட்டும் பொழுது, எதிரே எந்த 4 wheeler -ம்வந்துட கூடாது..தொப்புன்னு குதிச்சுடுவா.இந்த லச்சனத்துல ஒட்டுனா..நடக்கிற காரியமா?

சொன்னா நம்ப மாட்டீங்க..சைக்கிள ஓட்ட கத்துக்க.. 6 மாசம் எடுத்துகிட்டா..படுபாவி" நானும் அசரலேயே!..என்னோட training ..அவ்ளோ மோசமான்னு என்னைய தப்பால்லாம் நினைச்சுடாதீங்க! அவள் அப்படிதான்! அப்படி ஒரு நிதானம்!
                                        
அந்த சைக்கிள, அவள வச்சு  balance பண்ணேன் பாருங்க..அந்த experience..வாழ்க்கையிலே எந்த நிலையிலும் நான் balance விடறதே இல்லை..ஹிம்ம் ..இதெல்லாம் படிக்கணும்னு உங்க தலை எழுத்து.

இவ்ளோ பொறுமையா இருக்கிற நான் என்னோட 10 வயதில் எப்படி இருந்தவள் உங்களுக்கு தெரியுமா?  எல்லாத்துலயும் ஒரு flash back இருந்தா சுவாரஷ்யம் தானே!  என்னோட பாலர் பருவம் படிங்கப்பு!

கதையில ஒரு Twist--ஆன்னு கேக்குறீங்கள?
அப்படியெல்லாம் இல்லைங்க..என்னோட வாழ்வின்  சில நிகழ்வுகளில் இருந்து , சில கருத்துக்களை முன் வைக்கலாம்னு தான்! என்ன தையிரியத்துல உன் இஷ்டத்துக்கு உன் கதைய எழுதுறே.. இதெல்லாம் நாங்க படிக்கணுமான்னு கேக்குறீங்களா? வேற வழி இல்லை அப்பு!

நிஜமா சொல்லனும்னா, இப்ப என்னோட பதிவு உங்களுக்கு பிடிக்கலன்னா கூட உங்களால கிழிக்க முடியாதுல்ல, அந்த தைரியம்தான் சாமி வேற ஒன்னும் இல்லை.

திருக்குறள்
குறள் 781:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

விளக்கம்:
நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?

(Image courtesy:web)

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

நட்பு -1!



ஏழாம் வகுப்பில்(தஞ்சை  K.H.S.School)  அறிமுகம், அமைதிக்கு மறு பெயர் அவள் பெயர். சாந்தி!

இன்றும் ஞாபகம் இருக்கிறது, ஒரு நாள் விளையாட்டு நேரத்தில், volley ball விளையாட ஆள் கிடைக்காமல் என்னை அழைத்தாள்.

மெதுவாக பேச ஆரம்பிக்க, அவள் சிறு வயதில் தந்தையை இழந்து விட்டதை சொல்லி வருத்தப்பட்டாள். அப்பாவை பார்த்ததில்லை என்றாள். நான் அம்மாவை பார்த்ததில்லை. இது போதாதா? நாங்கள் தோழிகள் ஆனோம்.

சாந்தி கொஞ்சம் moody type அதனால், அவளுக்கு அதிகம் friends இல்லை. எனக்கு இரண்டு, முன்று நண்பிகள் இருந்தார்கள்.

அதில் ஒருவள்,  ஒரு நாள் இன்னொருத்தியின் Water bottle(Fridge - ல், தண்ணி ஊற்றி வைக்கும் plastic bottle ) வாங்கி தண்ணி குடிக்கும் பொழுது, கீழே போட்டு உடைத்து விட்டாள்.

bottle  "உடைத்தது" தெரிந்தால் அம்மா திட்டுவார்கள், என சொந்தக்காரி அழ..
bottle உடைச்சுட்டேன் தெரிஞ்சா, எங்க அப்பா என்ன கொன்னுடுவாருன்னு உடைத்தவள் அழ,

எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

ஒரே யோசனை, உங்க அம்மாகிட்ட, தெரியாம உடைசுட்டோம்னு, நாங்க எல்லாம் வந்து சொல்லிடறோம், என சமாதானபடுத்தி அவள் வீட்டுக்கு போனோம். அவங்க அம்மா (ரொம்ப நல்லவங்க!?!)  எங்கள பார்த்து சொன்னங்க "என் பொண்ணு யாரோட bottle-யும் உடைச்சு இருந்தா, நான் புது பாட்டில் வாங்கி கொடுத்து அனுப்புவேன்னு பட்டுன்னு, முஞ்சில அடிக்காம, ஆனா, அடிச்சு சொல்லிட்டாங்கன்னா பாருங்களேன்.

நாங்க திரு திருன்னு முழிச்சுட்டு வீடு திரும்பினோம். வரும் வழியில், "என்னதான் இருந்தாலும், அவ அம்மா அப்படி கேட்டு இருக்க கூடாதுன்னு" ஒருத்தி சொல்ல..இல்ல "
அது தான் சரி" அப்பொழுது தான் நாம அடுத்தவங்க பொருள வாங்கினா கவனமா திருப்பி கொடுக்கணும்னு ஒரு பொறுப்பு இருக்கும்" அப்படி நினைச்சு கேட்டு இருப்பாங்கன்னு நாங்களே சமாதானம் படுத்திகிட்டோம்.

மறு நாள் பிளான் போட்டோம்,  எல்லாரிடம் உள்ள கை காசு(தலைக்கு இரண்டு ரூபா கூட தேறல..ஹி ஹி) போட்டு எட்டு ரூபாய்க்கு பாட்டில் வாங்கிடலாம்னு பேசி முடிவு பண்ணி. சாந்தியிடம் அவள் கைகாசு கேட்டேன். அவ என்னடான்னா..
"நான் என்ன ஒரு வாய் தண்ணி குடிச்சேனா? "
"இல்லை பாட்டில் உடைச்சதுக்கும் எனக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?."
"நான் ஏன் கொடுக்கவேணும் காசு?"
அப்படி, இப்படின்னு..கட்டபொம்மன்கிட்ட வரி கேட்ட கதையா என்ன பார்த்து கேள்விமேல் கேள்வி கேட்டா,

அவ உன் friend, நான் உனக்காக கூட வந்தேன்னு", வேணும்னா, ஐம்பது பைசா தரேன்னு, பெரிய மனசோட கொடுத்தா." அவளோட நேர்மை எனக்கு பிடித்து இருந்தது (??!!).

நீங்களே சொல்லுங்க, bottle -ல் உடைச்சவ ஒருத்தி, அப்பாவியா, நான் திட்டு வாங்கினேன். இப்பவும் அப்படிதாங்க..இப்படி எல்லார் கிட்டயும் அடிவாங்குரதால...என்ன ரொம்ம்ப நல்லவன்னு நினைச்சுராதீங்க.(சும்மா ஒரு பேச்சு சொன்னேன்ப்பா...)

அப்புறம் ஒரு வழியா தேத்தி, ஒரு புது bottle வாங்கி கொடுத்து அனுப்பினோம்.

உடைச்சவ முகத்தை பாக்கணுமே, அழுதுகிட்டே, அப்படியே சிரிச்சது.,இப்ப நினைத்தால் .அப்படியே கடலோர கவிதை ரேகாவ நாபகபடுத்துற மாதிரி இருக்கிறது.(அந்த seen தெரியுமே உங்களுக்கு!  கொடியிலே மல்லிகை பூ பாடல்ல, சத்தியராஜ் கடல்ல காண போன மாதிரி வரும், அதுக்கு அந்த அம்மா ரேகா ஒரு அழுகை அழுது, அப்புறம், சத்தியராஜ் பெரிய மீனோட அந்த அம்மா பக்கத்துல வந்து நிப்பாரே, அப்ப சிரிக்குமே அதே தான்)

அந்த பாட்ட பாக்கணும்னு தோணுச்சுன்ன இங்கே  கிளிக் பண்ணவும்.(seen 2.25 - 4.05)

அவ சந்தோசத்த பார்த்தப்ப, அதைவிட அன்னைக்கு பெரிய சந்தோசம் வேற எதுவும் இல்லை.

சந்தோஷத்திலேயே பெரிய சந்தோசம் அடுத்தவங்கள சந்தோஷ படுத்தி பாக்கறது தானே!
                                 

பிரச்சனை முடிஞ்சுதுன்னு தானே நினைச்சிங்க, அதான் இல்லை..

உடைத்தவள், எல்லாம் settle ஆனதும், சாவகாசம, அவுக அம்மாக்கிட்ட சொல்லி இருக்கு,  அந்த பொண்ணு வந்து எங்க கிட்ட, "அம்மா  உங்க எல்லாரையும் வீட்டுக்கு வர சொன்னாங்கன்னு", உங்கள என் அம்மா பாக்கணும்னு சொன்னாங்க.."வரலன்ன School-க்கு வரேன்னு சொன்னாங்கன்னு"  சொல்லுச்சு..அப்படியே பக்குன்னு ஆச்சு எங்களுக்கு!அன்னைக்கு அவளுக்கு நாங்க கொடுத்த dose இருக்கே ..sema dose.எல்லாதையும் அமைதியா வாங்கிகிடுச்சு!

பய புள்ளைக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம், பண்ணதெல்லாம் பண்ணிட்டு அம்மாக்கிட்ட போட்டு கொடுத்துட்டாளே! அவுங்க School வருவதுக்குள்..நாம போயுடனுமே..அப்படியே School முடிஞ்சதும் அவ வீட்டுக்கு போனோம். ரொம்ப தூரம் எல்லாம் இல்ல..எல்லார் வீடும்.. 2 தெரு முதல்  5 தெருக்குள்ள தான் இருந்தது. அப்பொழுது நாங்கள் வாசித்த ஸ்ரீநீவாசபுரம், நட்பும் நட்பு சார்ந்த இடமாக இருந்தது..அவ்வளவு ஆட்டம்!!

அவங்க அம்மா ..வாசலுக்குள் நுழையும்போதே "வாங்கம்மா வாங்க.. பெரிய மனுசிகளா" அப்படின்னு கூப்பிட்டாங்க!"  செமத்தியா வாங்கபோரோம்னு நினைக்கிற மாதிரியே இருந்துச்சு அவங்க அழைப்பு. அவங்க முகத்தில சிரிப்பு இருக்கான்னு பாத்தோம் இம்கும்..சுத்தமா இல்லை.

அந்த மாதிரி சமயத்துல பாருங்க."ஒருத்தர  ஒருத்தர் முன்னாடி அனுப்பி
(இளிச்ச வாய முன்னாடி தள்ளிவிட்டு)  யார் பின்னால ஒளிஞ்சுக்க்கலாம்னு தானே பாப்போம். எவ்ளோதான் இடம் இருந்தாலும்..வரிசையில தான் போவோம். எவ்ளோ தான் நடந்தாலும் இருந்த இடத்துலேயே நடந்துக்கிட்டு இருப்போம் பாருங்க..அட அட..இன்னைக்கு நினச்சாலும் சிரிப்பு வருது போங்க.கடைசியில தள்ளிவிட்டு, முன்னாடி நின்ன அந்த ஏமாளி.. நான்தான் வேற யாரு(ஹிம்)!

எப்பவும் ஆஞ்சநேயர தான் துணைக்கு அழைப்பேன். தைரியம் கொஞ்சம் வந்துடும்..ஆனா அன்னைக்கு அவங்க அம்மா முகத்த பாத்தப்ப கொஞ்சம் basement ஆடத்தான் செஞ்சது.

"எல்லாரும் தனி தனியா நில்லுங்க, உங்க முகத்தை பாக்கணுமேன்னு"  சொன்னங்க. பய புள்ள ஒண்ணு ஒண்ணா பக்கத்துல வந்து நின்னுச்சு,(ஷ்ஷ் அப்பாட..கொஞ்சம் தெம்பா இருந்துச்சு).

"உங்கள்ள யாரு..புது bottle வாங்கி நீங்களே கொடுத்துடலாம்னு முடிவு பண்ணது?" ன்னு முதல் கேள்விய போட்டாங்க பாருங்க"  பயபுள்ள எல்லாரும் என்னைய கை காட்டுச்சுங்க! (எவ்வளவு பாசம்?! )

என்னைய பாத்து கேட்டாங்க "இன்னைக்கு அவ பானைய உடைச்சா...வாங்கி கொடுத்துட்டீங்க (mind voice-"இல்ல..அவ bottle தானே உடைச்சா!")" நாளைக்கு யானைய உடைச்சா வாங்கி தந்துடுவீங்களா? (mind voice - ஒரு ரைமிங் வேணும்தான் அதுக்காக இப்படியா கேப்பீங்க! )

அந்தமாதிரி சமயத்துல, முகத்த எப்படி வச்சுக்கணும்னு, எங்கிட்ட ஒரு format இருந்தது.

1 . நார்மலா இமை துடிக்கரதுக்கு பதிலா..அடிக்கடி இமைக்கணும்
2.  கைய கட்டிக்கணும் (லேசா)( Attention, stand at ease la பின்னாடி கை கை வைச்சுப்போமே, அதே மாதிரி முன்னாடி வச்சுக்கணும்)
3.  பயம் கொஞ்சமா இருந்தாலும், இல்லைன்னாலும்..பாக்கறதுக்கு நாம ரொம்ப பயப்படற மாதிரி  இருக்கணும்!

அவ்ளோதான்

அதை அப்படியே execute பண்ணேன்.

நான் அவங்கள பாத்து "அம்மா.. அப்படியெல்லாம் அவ உடைக்க மாட்டா..பாட்டில் கீழ விழுந்ததால தான் உடைஞ்சு போச்சுன்னு" ரொம்ப அப்பாவியா சொன்னேன். சிரிச்சுட்டாங்க. அப்பாடி!

அம்மான்னு கூப்பிட்டது ice வைக்க எல்லாம் இல்லை..என் friends அம்மா அப்பாவை,நானும் அம்மா அப்பா என்று அழைப்பது வழக்கம்(என்னை பற்றி தெரியாதவர்களுக்கு!)

அவ அம்மா எங்கள பாத்து,
"நீங்க உங்க friend-க்காக, அந்த அம்மாகிட்ட போய் excuse கேட்ட வரைக்கும் OK." "ஆனா உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா, நீங்களே தீக்கணும்னு நினைக்க கூடாது. வீட்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லனும்னு Advise பண்ணாங்க"  நாங்க mind-ல note பண்ணிகிட்டோம்.

இனிமே அவ எதாச்சும் பண்ணிட்டு பயந்தா கூட எங்கிட்ட வந்து சொல்லுங்கன்னு சொன்னாங்க" நிறைய sweets கொடுத்தாங்க. ஆளுக்கு ஒரு cover கொடுத்தார்கள், அதுல sticker bindi, clip, bangles , நிறைய fancy items"

தலைக்கு ரெண்டு ரூபா  bottle வாங்க போட்டோம்..திரும்ப கிடைச்சது பத்து ரூபாய்க்கு மேல! சூப்பர் இல்ல! ரொம்ப Happy-யா வீட்டுக்கு போனோம்!

bottle உடைத்தவளும், அவங்க அம்மாவும் தான் Shopping போய், எங்களுக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி இருக்காங்க..அவ Surprise பண்ண நினைச்சாளாம்!

வீட்டுக்கு போனதும், gift யார் கொடுத்தான்னு எல்லார் வீட்லயும் கேட்டு..நாங்க பானை வாங்கின கதைய சொல்லி..sorry..sorry ..bottle..வாங்கின கதை சொல்லி.. அப்புறம் தனி தனியா அவுக.. அவுக வீட்ல வாங்கி கட்டி கொண்டது ..ஹிம் அதெல்லாம் சொன்னா..இந்த பதிவு தாங்காது!

Bottle உடைச்சவ Delhi- ல settle ஆயிட்டா. Bottle owner எங்க இருக்கான்னு தெரியல..ஹிம்

மக ராசி ..நீ இத படிக்க நேர்ந்தால், உன் Contact details கொடுத்துட்டு போ, அப்படியே உங்க அம்மாவை ரொம்ப கேட்டேன்னு சொல்லு.

சாந்தி எங்கேன்னு? கேக்குறீங்களா? அதுக்கு நீங்க இன்னும் மூணு, நாலு episode(?) காத்து இருக்கணுமே! அவள ஒரு அத்தியாத்தில் அடக்கி விட முடியாது..ராட்சசி..அன்பான ராட்சசி!


குறள் 789
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை

விளக்கம் 
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்

                          

வெள்ளி, 31 ஜனவரி, 2014

தாயுமானவன்-3

எனக்கு தெரிந்தவர்கள், ஐயா, கிரிமினல் லாயரா? இல்லை சிவிலா? என என் சின்ன வயதில் கேட்பார்கள். எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஐயாவிடம் கிரிமினல், சிவில் அப்படின்னா என்னவென்று கேட்டேன்.
ஐயா, சொன்னார்கள்.  உதாரணமாக, ஒரே இடம் எனக்கு சொந்தமானது என இருவர் சொன்னால், அவர்கள் நீதி மன்றத்தை அணுகி, முறையாக நீதி பெற்றால், அது சிவில். அதே இடத்திற்காக, அவர்கள் நீதிமன்றத்தை அணுகாமல், அவர்கள் அடித்துகொண்டார்கள் எனில், அது கிரிமினல் என்றார்கள்.  அந்த வயதில், கிரிமினல் என்றால் எனக்கு அந்தளவில் தெரிந்தால் பொழுதும் என்று ஐயா சொன்ன பதில் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது

ஐயா, சாப்பாடு விசயத்தில் விருப்பமானவர். தினம் ஒரு குழம்பு, ரசம்,கூட்டு, பொரியல், துவையல், ஒரு கீரை கட்டாயம் இருக்கனும். என்ன மழையானாலும், கீரை எப்படியாவது வாங்கி வருவார்கள். இல்லையெனில், வீட்டில் உள்ள முருங்கை கீரையாவது செய்யவேண்டும்.

ஐயாவிடம், சமையலில், எதுவும் தெரியவில்லை என சொல்ல முடியாது,
"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என சொல்வார்கள்" ஒரு பெண்ணுக்கு சமையல் ரொம்பவும் முக்கியம், எதோடு, எது சேர்த்தல் ருசியை கூட்டலாம் என அறிந்து செயல் படனும் என்பார்கள். சமையலும் ஒரு கலைதான், விரும்பி செய்தால் சரியாக வரும். கடமைக்கு செய்யகூடாது என்பார்கள். ஐயா பிரியாணி செய்து தருவார்கள், அவ்வளவு அம்சமாக இருக்கும். ஏதும், விசேசம் என்றால் இலையில் சாப்பிடும் பொழுது, பரிமாறும் விதம் சொல்லி கொடுப்பார்கள்.

 
 
 ஐயா, அரசியலில் சிறிது காலம் பணியாற்றியபடியால், கொஞ்சம் பிரபலமாக பலருக்கு தெரியும், ஐயாவை, சில விழாக்களுக்கு மேடையில் பேச, தலைமை தாங்க அழைப்பார்கள், தலைப்பு கொடுத்தால் பொழுதும், அதற்காக தனியாக மெனக்கெட மாட்டார்கள். அப்படியே பேசிவிட்டு வந்துடுவார்கள்.  நீங்களும் நேரம் கிடைக்கும் பொழுது நிறைய புத்தகம் படியுங்கள், இணையத்திலே நேரம் கிடைக்கும் பொழுது படியுங்கள். இல்லை நிறைய விஷயம் தெரிந்தவர்களை நண்பர்களாக வைத்து கொள்ளுங்கள். கேள்வி ஞானம் வளரும்.
 

புதன், 29 ஜனவரி, 2014

தாயுமானவன்! - 2

ஐயா,  நாங்கள் சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது தினமும் யோகா மற்றும் பூஜை செய்வார். இப்பொழுது பூஜை தொடர்ந்து செய்வார்.
காலை ஏழரை மணிக்கு குளித்து முடித்து பூஜை ரூமில் உக்கார்ந்தால், சிவ மந்திரம்

"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்" 
என ஆரம்பித்து, கந்த சஷ்டி முழுவதும் பாட்டாக பாடுவார், அவர் பாடுவது அக்கம் பக்கம் வீட்டுக்கு கேக்கும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பூஜை செய்வார். அந்த நேரத்தில் என்னையும், தம்பியையும் பூஜையில் உக்கார வைத்து பார்த்தார்கள். நாங்கள் ரெண்டு பெரும், பூஜையில் வைத்து கொடுக்கும் கல்கண்டு, திராட்சையை உத்து பாத்துகொண்டு இருப்போம். அப்புறம், நாங்க பூஜையில் கவனம் செலுத்துவதில்லை என் தெரிந்தபின், பூஜைக்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் பூஜை முடிந்ததும் கல்கண்டு, திராட்சை மட்டும் தவறாமல் கிடைக்கும் (இன்று வரை).

ஐயாவிடம், பயம் அதிகம் இருந்த படியால், அவர் நடமாடும் பொழுது, மரம் ஏறி மாங்கா பறிக்கறது, இந்த மாதிரி வேலை எல்லாம் பாக்கறதில்லை(ஐந்தாவது படிக்கும் பொழுது). ஆனா பூஜையில் இருந்தால் அந்த ஒரு மணி நேரம்..ஆட்டம் தான். ஐயாவின் பாட்டு தான் சிக்னல், பாட்டு சுரம் குறைய குறைய, பூஜை முடியும் நேரம் தெரிந்து,  அப்படியே சீட்ல வந்து உக்காந்து படிக்க ஆரம்பிச்சுடுவோம்.

அன்று அப்படி தான் மரம் ஏறிய சுவாரசியத்தில், பாட்டை கோட்டை விட்டு விட்டோம். பூஜை முடிந்ததும், நீர் விழாவிய, தண்ணிரை செடியிலொ, மரத்திலோ ஊற்றுவார்கள், அன்னைக்குன்னு பார்த்து, மாமரத்தில் மேலே ஊற்ற வர..மரத்தில் நானும், என் தம்பியும்.."ஐயோ" அப்படியே பக்கத்துக்கு வீட்டு மாடிக்கு தாவலம்னு பாத்தா, காலு எட்டல.."கடவுளே மேல பாக்காம தண்ணி உத்தகூடாதான்னு " நினைக்கங்காட்டியும், பாத்துட்டாக.

அம்புட்டுதான்.."வாங்க இங்க ரெண்டு பெரும்" கூப்புட்டாக..பெண் பிள்ளைகள் எங்கள அடிக்க மாட்டக. எப்பொழுதும், அண்ணன் தம்பிக்குத்தான் அடி விழும்..ஆனா அன்னைக்கு நான் மரம் ஏறியதுக்கு முதுகுல டின்னு கட்ட போராகன்னு பயந்துக்கிட்டே போனேன்"

ஹாலுக்கு போனதும், என் தம்பிக்கு ஒரு அடி முதுகுல, அப்படியே ஓடி போய் பயபுள்ள புத்தகத்த, தலை கீழ புடிச்சு(*நான் சிக்னல் குடுத்தத கவனிக்காம) படிக்க ஆரம்பிச்சுது, அதுக்கு ஒரு அடி.அப்புறம் என்ன எனக்கு அடி விழுந்துச்சான்னு? ரொம்ப சந்தோசமா, நீங்க படிக்கற மாதிரில்ல தெரியுது.

ஐயா, என் சடைய புடிச்சு இழுத்தாக, அம்புட்டுதான், கால சூட ஏதோ நனைச்சுது, குனிஞ்சு பார்த்தா, டான்க் பர்ஸ்ட் ஆயிடுச்சு. என்ன சிரிக்குறீங்களா!..நீங்க எங்க ஐயா கிட்ட இருந்த என்னல்லாம் வெடிச்சு இருக்குமோ? தெரியுமா?

நல்ல வேலை அடி விழழ. அப்புறம் அந்த கர்மத்த, நானே கழுவனும்னு சொல்லிபுட்டாக."பொம்பள புள்ள, கை கால் உடைஞ்சா உன்னைய எவன் கட்டுவான்னு" கேட்டாக.  அம்புட்டுதான், அப்புறம் மரம் ஏறுவது இல்லை.

ஐயா, நாங்கள் தேர்வு எழுதும் பொழுதெல்லாம் இந்த பாடலை தவறாமல் நினைவூட்டுவார்.

"மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார் "
(குமரகுருபர சுவாமிகள் நீதிநெறி விளக்கம்)

பொருள்:
தம் உடம்பின் வருத்தத்தைக் கவனியார், பசியையும் கவனிக்காமல், கண்ணுறங்ங்காமல்,  யார் தீங்கு செய்தாலும் அதைப்பொருட்படுத்தாமல்  பிறர் செய்யும் அவமதிப்பையும் கருதாமல் தன குறிக்கோளை மட்டும் நினைப்பவர், வாழ்வில் முன்னேற்றம் அடைவர்.

எங்கள் வீட்டில் அனைவருமே ஓரளவு நன்றாக படித்தோம்.
எனக்கு வேலைக்கு போகும் எண்ணம் எல்லா சுத்தமாக இல்லை.

ஆனா ஐயாவுக்கு நான் Civil Service தேர்வாகி IAS or IPS ஆகணும்னு நினைத்தார்கள்(அவர் கனவு நிறைவேற வில்லை என்பதால் இருக்கலாம்)

 +2 குரூப் 1, கணிதம் ,அறிவியல் தேர்ந்தெடுத்து தேர்வாகியும் , +2 முடித்ததும், என்னை வரலாறு முக்கிய பாடமாக, எடுத்து கல்லுரி படிப்பை தொடர சொன்னார்கள். Group-1 முக்கிய பாடம் வரலாறு எடுத்தால் சுலபமாக இருக்கும்னு ஐயா நினைத்தார்கள்

ஐயா ஆசைப்படி, நானும் B.A(வரலாறு ) மட்டும் விண்ணப்பித்து இருந்தேன்(தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில்)

நான் இப்ப என்னவா இருக்கேன்னு, என்னைய பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும். தெரியாத  நீங்கள் தாயுமானவன்-3 தொடரவும். ஹி ஹி




செவ்வாய், 28 ஜனவரி, 2014

வாழும் தேவதைகள்! - 1-அக்கா!


என் அக்காவின் இருபது வயது வரை, வேலை ஆள் உதவி மூலம் நாங்கள் வளர்ந்தோம். வேலை செய்தவருக்கு, சத்துணவு அமைப்பாளராக அரசு வேலை கிடைக்க, அக்கா கல்லூரி படிப்பு முடிந்து இருபது வயதில்,  எனது  பன்னிரெண்டாம் வயதில் அவர் குடும்ப பொறுப்பை சுமந்தார்.

பொறுமைக்கு, மறு பெயர். என் அக்கா!
தனக்காக அவர் எதுவுமே செய்தது இல்லை. வீடு, ஐயா, தம்பி, தங்கைகள் தான் உலகம் என வாழ்ந்தவர். அவர் தோழி Computer Centre வைத்து இருந்தார், அதன் மூலம் சுற்றுலா செல்லும் வாய்ப்பு என எது வந்தாலும் அக்கா என்னை அனுப்பி விடுவார், அவர் Computer கற்றுக்கொள்ள  ஆசை இருந்தும், அவர் சென்றால் சமயத்தில் நான் வீட்டு வேலை செய்ய வேண்டி வரும் என்பதால், என்னை வகுப்புக்கு அனுப்பினார்.

எந்த வேலையும் அவர் என்னை செய்ய சொல்ல மாட்டார், இழுத்துபோட்டுக்கொண்டு எல்லாம் செய்வார். அக்காவுக்கு, தூங்கறவங்கள எழுப்பினால் பிடிக்காது. நானாக எழுந்திருக்கும் வரை, எழுப்ப மாட்டார். வீட்டு வரவு செலவு கணக்குகளை, பைசா பாக்கியில்லாமல், தினம் தினம் எழுதி வைப்பார்(இன்று வரை)

அக்கா, தங்கை எல்லாம் சின்ன விசயத்திற்கும் சண்டை போடும் இந்த காலத்தில், என் அக்கா எனக்கு இன்னொரு அம்மாவாக இருந்து வழி நடத்தினார். ஆம் சமயத்தில் தெய்வங்கள் அம்மாவாக, அக்காவாக, மகளாகவும் நமக்கு அமையும். அது நாம் செய்த பாக்கியம்.



அன்பால் அரவணைத்தாய்..
பாசத்தால் பரவசபடுத்தினாய்..
நீ எங்களை பெற்று எடுக்காத தாய்..

நாங்கள் மேற்படி முன்னேற..
உன் மேற்படிப்பை துறந்தாய்..

உன் சந்தோசத்தை..
எங்கள் முகத்தில் பார்க்க ஆசைபட்டாய்!

எங்கள் கருப்பு வெள்ளை கனவுகளுக்கு..
உன் எண்ணத்தை  வண்ணங்களாய் .. அள்ளி தந்தாய்..

உனக்கு, என் நன்றியை சொல்ல..
இந்த ஜென்மம் போதாதம்மா..

இன்னொரு மனித ஜென்மம் எடுக்க வேண்டும்..
நீ என் மகளாக பிறக்க வேண்டும்.
நான் உன் தாயாக வேண்டும்.

என் அக்கா மாலாவிற்கு.. இந்த பதிவு சமர்ப்பணம்..


WE MISS YOU MANI(MALA) AKKA!


திங்கள், 27 ஜனவரி, 2014

தாயுமானவன்!-1

நாங்கள் ஐந்து பிள்ளைகள், பதினோரு வயது என் அக்கா, ஒன்பது மற்றும் ஐந்து வயதில் இரண்டு அண்ணன்கள், மூன்று வயதில் நான், மற்றும் ஒன்றரை வயதில் என் தம்பி, என் அம்மா இந்த உலகத்தை விட்டு சென்ற பொழுது. ஒரே நாள் வாந்தி மயக்கம், ஜீரம் என ஆஸ்பத்திரி போனவர், மறு நாள் திரும்ப பிணமாகத்தான் வந்தார்கள். காலனுக்கு காரணம் தேவை இல்லையே.

என் அம்மாவின் இறுதி சடங்கிற்கு வந்தவர்கள், எங்களை பார்த்து கதறி அழுததாக அக்கா சொல்வார்கள். அதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. என் அப்பா, நாங்கள் சிறு வயதில் இருக்கையில் திருமணம் செய்தால், மறுதாரம் எங்களை கொடுமைபடுத்தினால் என்ன செய்வது என நாங்கள் வளரும் வரை (பத்து வருடம் கழித்து திருமணம் செய்தார்) மறுமணம் செய்யவில்லை. ஐயாவிடம் ரொம்ப மரியாதை, நேரே உக்காந்து நான் பேசியதே இல்லை.

அப்பா, IAS தேர்வில் முதல் கட்டம், தேர்வாகி முக்கிய தேர்வில் தேர்வாகவில்லை(அப்பா எங்களிடம் இது வரை காட்டி கொண்டதே இல்லை), ரொம்ப அறிவாளி என தாத்தா சொல்வார்

அப்பாவுக்கு, திருக்குறள் மேல் உள்ள அவர் ஆர்வம் என்னை வியக்க வைக்கும்.

தாத்தா அவரை சட்டம் படிக்க வைத்தார். என் அப்பா உயர் நீதிமன்ற வேலையாக சென்னை செல்வார், திரும்ப வந்ததும் என்ன வாங்கி வந்து இருக்கிறார் என ஆர்வமாக பெட்டியை பார்த்தால், புத்தமாக நிறைந்து இருக்கும். எங்களுக்கு ஏமாற்றமாய் இருக்கும். அப்பாவுக்கு, புத்தகம் என்றால் கொள்ளை பிரியம்.

திருப்புகழ்
தேவாராம்
சுய முன்னேற்ற புத்தகங்கள்
அறிவியல் ஆராய்ச்சி
நபிகளின் பொன் மொழிகள்
ஏசுபிரானின் பொன்மொழிகள்
சித்த வைத்தியம்
கை வைத்தியம்

என எல்லா பிரிவுகளிலும் புத்தகம் அடுக்கி இருக்கும். எங்கள் வீட்டு வரவேற்பறையில், சிறிய புத்தக நிலையமே இருக்கிறது. எங்களை அடிக்கடி "படிங்க..படிங்க "என்பார்..இம்கும்..நாங்கெல்லாம் இப்பயே அப்படி...அப்ப கேக்கவா வேணும். இருந்தாலும் நேரம் கிடைக்கும் பொழுது சிறிது படிப்பேன்.

மதம் தாண்டி அவர் எண்ணங்கள் இருக்கும், நபிகளின் பொன்மொழிகள் என்னை மிகவும் கவர்ந்தவை,

"கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்."

"தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது."

"பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்."

"குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்."

" தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்க பயிற்சியும் ஆகும்."

"தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது."

இவையெல்லாம் என் தந்தை, புத்தகம் மூலமாக எனக்கு கற்று கொடுத்தவை.

எனக்கு பிடித்த ஏசுபிரானின் பொன்மொழிகள்,

"உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."

"உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்."

" உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."

" மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்."

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்." - என்னை சிந்திக்க வைத்த பொன்மொழிகள்

அப்பா மூன்று மணி நேரம் கூட தூங்க மாட்டார். எப்பொழுதும் படித்து கொண்டே இருப்பார். "கற்றது கை மண் அளவு ..கல்லாதது உலக அளவு" என்பார்.

நீங்கள், உங்கள் பிள்ளைக்கு அளிக்கும் மிக உயர்ந்த பரிசு, ஒரு நல்ல புத்தகமாக இருக்கட்டும். காலத்திற்கும் அழியாத பரிசாகவே இருக்கும்.

நான் படித்த அதே புத்தகம் நாளை என் மகள் படிப்பாள். தலைமுறை தொடரும்.

இரவல் கொடுத்த நிறைய புத்தகம் திரும்ப வரவில்லை.

நீங்கள் ஒரு புத்தக பிரியர் எனில், புத்தகம் மட்டும் இரவல் கொடுத்தால், உடனே  வாங்கி விடுங்கள். இல்லை எனில், சாதுர்யமாக  தவிர்த்து விடுங்கள். வீட்டிலே வந்து படித்துவிட்டு போக சொல்லுங்கள்.

தாயுமானவன்!

தூக்கம் மறந்த வேளையிலே..
கதை..சொல்லி..தூங்க வைத்தான்..
அவன் தாயும்... அல்ல..

கைபிடித்து ..
வழி நடத்தினான்..
அவன் என் பாதுகாவலனும் அல்ல..

படிக்க மறந்த வேளையிலே..
கல்வி கற்று கொடுத்தான்..
அவன் என் ஆசானும் அல்ல..

கஷ்டம் வந்த வேளையிலே..
கை கொடுக்க ஓடி வந்தான்..
அவன் கடவுளும் அல்ல..

கடைசிவரை நான் இருக்கேன் என்றான்
என் காதலனோ.. கணவனோ..அல்ல..

அவன் எல்லாவற்றிற்கும் மேலானவன்..
என் தகப்பன்... அவன் எனக்கு தாயுமானவன்..

அப்பாவை ஐய்யா என அழைக்க சொல்லி எங்க அம்மா சொன்னதாக அக்கா சொல்வார். இன்றும் ஐய்யா என்று தான் அழைப்போம்.

ஐயா உங்களுக்கான பதிவு இது

I MISS YOU AYYA!

அக்கா, நீ ஊருக்கு போகும்போது அய்யாவுக்கு, இந்த பதிவை காட்ட வேண்டும்.

சனி, 25 ஜனவரி, 2014

துரை தாத்தா!

என் தாத்தாவிற்கு ஐந்து பிள்ளைகள் பிறந்து இறந்த பின், என் தந்தை பிறந்ததாக தாத்தா சொல்வார், என் பாட்டி பதினோராவது பிள்ளை பிறக்கும் பொழுது கருப்பை வெடித்து(என்ன கொடுமை!) இறந்ததாக என் தாத்தா சொல்வார்.

எங்கள் ஊரில் ஒரு பழக்கம், (உங்கள் ஊரிலும் இருக்கலாம்) இறந்த நாள் அன்று, இடுகாட்டுக்கு சென்ற உற்றார் உறவினர், இறந்தவர் வீட்டில் அன்று இரவு சாப்பிடுவார்கள்.

அப்படி என் தாத்தா உறவினருடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது, சாம்பாருக்கு நெய் கொண்டு வரும்படி கேட்டாராம். என் தாத்தா தன சாப்பாட்டு ருசியை அன்று கூட விட்டு கொடுக்க தயாராக இல்லை என்பது தான் உண்மை. என் உறவினர்கள் இன்றும் ஆச்சரியப்படும் விசயம் இது. எனக்குள் எழுந்த கேள்விகள்,

என் பாட்டியின் பதினைந்து வருட தாம்பத்தியம் எப்படி இருந்து இருக்கும்?

என் தாத்தா, என் பாட்டியை பிள்ளை பெற்று கொடுக்கும் இயந்திரமாகத்தான் பார்த்தாரா?

இன்றும் மனைவியை,  இயந்திரமாக பார்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  இன்றும் தன் பெற்றோர், மனைவி, பிள்ளைகளிடம் கலந்தாலோசிக்காத ஆண்கள், தனது முடிவே சரியென நினைப்பவர்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவ்வாறான ஆண்கள் எதிர்பாராத விதமாக வகையில், அவர்கள் இல்லாத சூல்நிலையில் அந்த குடும்பம் திக்கு முக்காடி போகும்.

அதுவும் கடன் கொடுக்கல், வாங்க இருப்பின், அந்த குடும்பத்தின் நிலைமையை கேட்கவே வேண்டாம். அவர்களை ஏமாற்ற ஒரு கூட்டம் காத்து கொண்டு இருக்கும்.

உங்கள் மனைவி, உங்களுக்கு பின் உங்கள் குடும்பத்தை அவர் தான் காப்பாற்ற வேண்டும்((நீங்கள் நம்பினாலும், நம்பா விட்டாலும் இதுதான் உண்மை), இதற்க்கு உங்கள் மனைவியை தயார் படுத்தி வைத்து இருக்குறீர்களா?

பெண் பிள்ளைகளை வளர்க்கும் பொழுது அவர்களுக்கென்று தனித்தன்மை ஏற்படும் வகையில் வளருங்கள். அப்படி வளர்ந்த பிள்ளைகள் விவரம் தெரிந்தவர்கள் இருப்பார்கள். உங்கள் மனைவி வெளி உலகம் தெரியாமல் வளர்ந்தவர் ஆயின், உங்களை திருமணம் செய்த பின்னும் வெளி உலகம் தெரியாமல் இருக்கிறார் எனில்,அதற்க்கு  நீங்கள் தான் பொறுப்பாளி.

அதற்க்கு என்னவெல்லாம் செய்யலாம்,

உங்கள் மனைவி, நீங்கள் இல்லாத சூல்நிலையிலும்,தன்னம்பிக்கையோடு ,  தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என நினையுங்கள்.

உனக்கு ஒன்றும் தெரியாது, பேசாம வேலைய பாரு என ஒதுக்கி விட்டு வேலையை பார்க்காதீர்கள். அவருக்கு புரியும்படி கற்று கொடுங்கள். அவர் அதற்கெல்லாம் லாயக்கு இல்லை என்று நீங்களே  முடிவு செய்யாதீர்கள்.

வங்கி பரிமாற்றமோ, உங்கள் குழந்தைக்கு பீஸ் கட்டுவதோ, சிறு சிறு வேலைகளை அவர்களை விட்டு செய்ய சொல்லுங்கள்.

உங்கள் மனைவி விபரம் தெரிந்தவர் ஆகிவிட்டால் உங்களுக்கு மரியாதை இருக்காது என நீங்களே முடிவு செய்யாதீர்கள். அவர் உங்கள் மனைவி, உங்களுக்கான கௌரவத்தை எந்த நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டார். உங்களுக்கு வேண்டியது எல்லாம் நம்பிக்கைதான்.

பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தை, உங்கள் நம்பக தகவல்களை, சிலர் ஈமெயில்-ல் வைத்து இருப்பீர்கள், இருப்பினும்ஒரு குறிபேட்டில் எழுதி வையுங்கள். வாங்கிய நாள், திருப்பி கொடுத்த நாள் அனைத்தையும் எழுதி வையுங்கள். அதை உங்கள் மனைவியிடம் கொடுத்து வையுங்கள்.

நீங்கள் உங்கள் பண பரிமாற்றம் விஷயம் அனைத்தும் உங்கள் மனைவிக்கு தெரியும் என்ற விசயத்தை பணம் வாங்குபவர்களுக்கு மறைமுகமாக தெரிவியுங்கள். பின்னாளில், உங்கள் குடும்பம் ஏமாறாமல் இருக்க வசதியாக இருக்கும்.

மனிதம் வளர்ப்போம். எங்கும் சந்தோசம் நிறையட்டும்.

"நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலை கழகம்" என நான் சொல்லியா உங்களுக்கு தெரிய வேண்டும்.
 

வெள்ளி, 24 ஜனவரி, 2014

புனிதா அக்கா!

புனிதா அக்கா!

என் தந்தையின் நண்பரின் மகள்..
அழகும் அறிவும் ஒன்றாக அமைய பெற்றவள். வாரம் ஒரு முறையாவது அக்காவை பாக்கணும். ஏன்  தெரியுமா? பாதம் வரை முடிவளர்ந்த பெண்கள் நிறைய பேர் இருக்கலாம்.

நான் பார்த்த முதல் பெண், புனிதா அக்கா.  பார்க்காத இன்னொரு பெண் என் அம்மா( புகைபடத்தில் இருப்பவர்),


என் மூன்று வயதில்  உலகத்தை விட்டு பிரிந்தவர், என் அக்கா பதினோரு வயதில் என் அம்மா இறந்ததால். என் அக்காவிடம் அம்மாவை பற்றி நிறை கேள்விபட்டு இருக்கிறேன். என் கேள்விகள் சுத்தி, சுத்தி இந்த நீண்ட முடியை பற்றியே இருக்கும்..அம்மா எப்படி தலை குளிச்சு துண்டு கட்டுவார்கள்?.அப்படி இப்படி என. அம்மா அழகு என அக்கா சொல்வார்கள்.

அந்த நீண்ட முடியை கொண்ட அக்காவை பாக்கும் பொழுது என் அம்மாவை காண்பது போல் உணர்வு. அதான் வாரம் ஒரு முறையாவது புனிதா அக்காவை பார்க்கணும். அக்காவிற்கு முடியை பராமரிப்பதில் அத்தனை ஆர்வம், அவரோட உயிர் என்றே சொல்லலாம். அக்கா ஆங்கில இலக்கியம் படித்தவர். அழகா ஆங்கிலத்தில் உரையாடுவார். அவரின் தந்தை வீட்டிலே பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில் பேசுவார். என் தாத்தா தமிழ் புலவர் என்பதால் எங்கள் அனைவரையும் தமிழ் வழி வகுப்பில் சேர்த்தார்கள். அதனால் அக்கா பேசுவதை வாயைபிளந்து பார்த்து கொண்டு இருப்பேன். புனித அக்கா குடும்பத்தோடு அவர்கள் சொந்த ஊருக்கு(தஞ்சை பக்கம் ஒரத்தநாடு) திருவிழாவுக்கு போகும்பொழுது, அவரை பார்த்த அவர்களது தூரத்து உறவினர் திருமணம் செய்ய பெண் கேட்டு வந்தார்கள். அக்கா மூன்றாம் வருடம் கல்லூரி படிப்பில் இருந்ததால், அவர்கள் வீட்டில் திருமணத்திர்க்கு ஆயத்தமாக இல்லை. மாப்பிள்ளை வீட்டார் பிடிவாதமாக இருந்ததால், நல்ல இடம் என புனிதா அக்காவை திருமணம் செய்து வைத்தார்கள்.

திருமணதிற்கு பின் அக்கா மறு அழைப்பிற்கு வந்த பொழுது, சில உண்மைகளை சொன்னார்கள். அதாவது அவரின் மாமியாருக்கு மகள் வழி பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக இருந்ததாகவும், அக்கா தன அழகை காட்டி அவர் பையனை மயக்கி விட்டதாகவும் வார்த்தைக்கு வார்த்தை  பேசுகிறார்கள். என் கணவரிடம் சொன்னால், கொஞ்ச நாள் போனால் சரியாகி விடும் என்கிறார்" என சொல்லி அழுதார்கள்.

அதற்க்கு பிறகு அக்காவிற்கு நிறைய சோதனைகளை கடக்க வேண்டி இருந்தது. அக்காவிடம் அவர் மாமியார் நிறைய வார்த்தைகள் விட, அவரும் திரும்ப பதிலடி  கொடுக்கும் நிலைமை. "அழகாய் இருக்கும் திமிர்" என அடிக்கடி வார்த்தைகளால் சுட்டெரித்து கொண்டு இருந்திருக்கிறார்.

அக்காவின் பிரார்த்தனை "அவர் மாமியாரின் பேத்திக்கு(கணவரின் சகோதரி மகள் ) நல்ல வரன் அமைந்து, நல்லபடி இருக்கணும்"  என்பதே.

அவர் கணவரும் அம்மா பிள்ளை என்பதால் தப்பை தட்டி கேட்க்கும் தைரியம் இல்லை.

அக்காவிற்கு அழகாய் ஆண் குழந்தை, அடுத்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர் ஊர்க்கு வரும்பொழுது அவரை தவறாமல் போய் பார்ப்பேன்.

ஒரு முறை அக்காவிற்கு உடம்பு சரியில்லை ஊருக்கு வந்து இருக்கிறார்கள் என்றார்கள்.என்னவென்று கேட்டபோது எதோ சண்டையில், அக்கா, மாமியாரிடம் நியாயம் கேட்க, அன்றே அவர் தூங்கி கொண்டு இருந்த பொழுது இரவில் அவரது அந்த நீண்ட முடியை அறுத்து விட்டதாகவும் "அழகாய் இருப்பதால் தானே திமிர்" என அவரை அடக்க அவர் அந்த மாமியார் எனும் மிருகம் கையாண்ட விதமும், அதற்க்கு பிறகு  அக்காவிற்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதையும் கேட்ட என் ஒட்டு மொத்த நாடியும் அடங்கி போனது. கடவுளே, எனக்கே இப்படி என்றால் அக்காவிற்கு எப்படி இருக்கும்?

அதற்க்கு பிறகு
நான் அக்காவை பார்க்கவே இல்லை..பார்க்கும் தைரியமும் இல்லை..

அக்கா குழந்தைகளை எண்ணி அவர்களுடனே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆம் அவர் வாழ்ந்து காட்டவேண்டும்.

முடிதானே இதில் என்ன இருக்கிறது என நீங்கள் கேட்டால் உங்களுக்கான பதிவு இது இல்லை.

எனக்கு எழும் கேள்வி,

அந்த மாமியாரின் மகன் தன் விருப்படி திருமணம் செய்ததால்
அக்காவுக்கு ஏன் இத்தனை கொடுமை?

தான் விரும்பிய மனைவி திருமணம் செய்யும் அளவு பிடிவாதமாய் இருந்த அந்த கணவன், மனைவியை கடைசிவரை சந்தோசமாக வைக்க ஏன் நினைக்கவில்லை? இந்த அளவு கொடுமையை அனுமதிப்பது ஏன்? இவர்களுக்கெல்லாம் திருமணம் எதற்கு?

தன் வீட்டுக்கு வரும் மருமகள், தன் மகள் என நினைக்கும் மாமியார்களும், மாமியாரை தன் தாய் போல் பாவிக்கும் மனதை பெண்கள் கொண்டால் என்றுமே பெண்ணினம் பேசப்படும்.

நீங்கள் திருமணம் ஆனவரோ, திருமணதிற்காக பெண் தேடுபவரோ உங்களுக்கு நான் சொல்வது இது தான்,

அவள் உங்கள் மனைவி, உங்களையே உலகம் என எண்ணி வாழ்பவள், என்றும் அவளை கலங்க வைக்காதீர்கள்.


எங்கும் சந்தோசம் நிறையட்டும்.

ஜெய்ப்பது நிஜம்!

உணர்வுகளை  கட்டுபடுத்துவதில் தான் நாம் மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறோம் என்பது உங்களுக்கு தெரியும்

நம்முடனே வாழும் மிருங்கங்களினால் ஏற்படும்
வஞ்சம்,
துரோகம்,
துன்பம் இவைகளை பொறுமையாய் கடப்பதில் மூலம் நாம் வாழ்வில் ஜெயிப்பது நிஜம்.

மன்னிப்பது நல்ல குணம்..
மறப்பது தெய்வகுணம்..கேள்விப்பட்டு இருப்பீர்கள்

விட்டு கொடுத்து, மன்னித்து விட்டு வாழும் பெண் தெய்வங்களால் தான் இன்றும் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இல்லையெனில் பல குடும்பங்கள் தலை எடுக்காமல் போயிருக்கும்.

அனைவருக்குமே திருந்த மறு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆணோ, பெண்ணோ உங்களுக்கு திருந்த வாய்ப்பு  கிடைத்து இருந்தால். இப்பொழுதே திருந்தி விடுங்கள்.இல்லை நீங்கள் ஏதும் தவறு செய்பவர்கள் எனில் இதை படிக்கும் பொழுதாவது திருந்தவாது முயற்சி செய்யுங்கள். இல்லை இந்த சமுகம் உங்களை கல்லால் அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் எனும் நிலையில் அவர்களுக்கான தண்டனை கிடைக்கும் வரை ஓய கூடாது.

நமது இந்திய பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் இன்றும் உலக அளவில் பெருமையாய் பேசப்படும் அளவில் இருப்பதில் நமது அனைவருக்குமே பெருமை. அதுவும் தமிழ்  பண்பாட்டை கட்டி காப்பதில் நம் தமிழர்களுக்கு மிகவும் அக்கறை உண்டு என்பதை நம் சமுகத்தின் மூலம் நான் அறிவேன்.

என் பதிவை படிக்கும் உங்கள் மனதில்,
நேர்மறையான சிந்தனை,
இந்த சமூகத்திற்கு ஏதேனும் நல்லது செய்யனும்
இந்த பிறவி பயனை நல்லபடியா கடக்குனும்னு ஏதேனும் ஒன்று உங்கள் மனதில் உதித்தால் நான் பிறந்த பயனை அடைந்துவிட்டதாக உணர்வேன்.

தஞ்சையில் பிறந்தவள்..தமிழ் மண்ணின் சுவாசத்தை அறிந்தவள்..

உங்கள் ஆதரவு என்னை ஊக்கபடுத்தும். நிறைய எழுதனும்னு ஆசை ..பார்க்கலாம்!!!

புதன், 15 ஜனவரி, 2014


ஸ்ரீ குரு கீதை ...





எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு
குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை
குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை
குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை
குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை
குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை
குருவிற்கு சமமான உயர்வுமில்லை
சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்
தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி
பூஜைக்கு மூலம் குருவின் பாதம்
மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்
முக்திக்கு மூலம் குருவின் கிருபை
*************************************************************************

மகா பெரியவா அருள்வாக்கு

* இதயமே கடவுளின் இருப்பிடம். அதன் தூய்மையை காப்பது நம் கடமை.

* தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது இஷ்ட தெய்வத்தின் திருவடிகளை மனதில் தியானியுங்கள்.

* உண்ணும் உணவை கடவுளுக்கு நன்றியுடன் அர்ப்பணித்து விட்டு, பிரசாதமாக சாப்பிடுங்கள்.

* ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள். ஒழுக்கமுடையவன் ஈடுபடும் எந்தச் செயலிலும் அழகுணர்வு மிளிரும்.

* கடவுள் நமக்கு சக்தியும், புத்தியும் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.

“நம்ம வீடுகளுக்கு யார் வந்தாலும், அவாளுக்கு வயறு நன்னா நெறையற மாதிரி, முகம் சுளிக்காம, சந்தோஷமா சாப்பாடு போட்டாலும்,தர்மம்ன்னு யார் வந்தாலும் நம்மால முடிஞ்சதை தாராளமா குடுத்தாலும்….இகலோக சௌக்யமும் பரலோக சௌக்யமும் நிச்சயமா கெடைக்கும்!..”

- காஞ்சிப்பெரியவர்
நன்றி - rightmantra.com

*******************************************************************
வணக்கம்!
என் வாசல் வரை வந்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

என் வாழ்வில் சந்தித்த சாதாரண மனிதர்களின் சிறந்ததொரு பக்கத்தை உங்களிடம் பகிர போகிறேன்.

என் படைப்பு நிச்சயம் உங்களை..
சமயத்தில் சிந்திக்கவும்..
சமயத்தில் சிரிக்கவும் வைக்கும்.

என் முகவரி தேடி வந்த உங்களில் யாரேனும் ஒருவருக்கேனும் சின்னதா நேர்மறையான மாற்றம் நிகழ்ந்தால் நான் வெற்றி அடைந்து விட்டதாக சந்தோஷப்படுவேன்.

ஆசிர்வதிக்கப்பட்டவள்!

என் உறவினரோ, என் நண்பரோ இல்லாத நீங்கள் என் முகவரி தேடி வந்து இருந்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் தானே!

என் வாழ்வில் புயல் வீசும் தருணத்திலும், ஆலமர நிழலில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே உங்களுடன் பேசும் மன நிலையில் நான் இருக்கேன் என்றால் நான் ஆசிர்வதிக்கபட்டவள் தானே!

எனக்கு பிடித்த மகாகவி பாரதியின் வரிகள்,

"தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?"

எனக்கு பிடித்த பாடல் வரிகள்..(படம்: சத்தம் போடாதே)

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமாலே கண்டம் தாண்டுமே

முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்ததே வா

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

காட்டில் உள்ள செடிக்களுகெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல் தான் வெள்ளம் கிடையாது

வருந்தாதே வா

பிடித்த வசனம்(படம்: வீரம்)
நம்ம சுத்தி இருக்குறவங்கள நாம நல்லபடியா
பாத்துகிட்டா ..கடவுள் நம்மள பாத்துக்குவான்..

பிடித்த திருக்குறள்:
குறள்: 314 :
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன் நயம் செய்து விடல்.

Inspired Quotes

We should not give up and we should not allow the problem to defeat us.
- Abdul Kalam
You have to dream before your dreams can come true.
- Abdul Kalam