ஆமாம் K.H.S.S-ல் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதும், அங்கு
எந்த Subject -லயும்(கணிதம் தவிர) 75% மேல் என்னால் மார்க் வாங்கவே முடியவில்லை, முதல் ரேங்க் என்பது கனவாகி போனது. Group Leaderஆக மட்டும் தான் இருந்தேன்! Class Leader ஆக முடியவில்லை! ஏனென்றால், நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்த School- ன் Standard வேற, இந்த School Standard வேற. எல்லா பள்ளிகளிலும் இருந்து இங்கு நுழைவு தேர்வில் வெற்றிபெற்றவர்கள், திறமைசாலிகள்! எல்லாரும் போட்டி போடும் பொழுது நான் Average Student தான்! என்று உணர்ந்தபொழுது வலிக்கதான் செய்தது!
அப்புறம் எவ்ளவோ நல்ல கஷ்டபட்டு படிச்சும், முதல் மூணு ரேங்க் கூட வாங்க முடியல! அது தான் ஏன்னு தெரியல! நாளடைவிலே அதே பழகி போய், என்னோட Range அதுதான்னு mind set ஆயிடுச்சு போங்க. நம்ம Eductaion System என்னன்னு சொல்றது? அந்த சூலழல்ல, எனக்கு நிறைய பக்குவம், நிதானம் வந்துடுச்சு!
"There is a time to lead and a time to follow" ன்னு மனச தேத்திக்கிட்டேன். இத நீங்க யாராச்சும் தப்பா புரிஞ்சுக்கிட்டு போட்டு கொடுத்துடாதீங்கப்பா, அப்புறம் என்னோட BLOG - க்கு தடை விதிச்சுற போராக! கைப்புள்ள இப்பதான் 4 வார்த்தை எழுத பழகுறேன். என்னோட திறமையா(??) பார்த்து யாராச்சும் பத்திரிக்கைக்கு எழுத கூப்பிடுவாங்க அப்படின்னு..என்ன?தலையில அடிச்சுகுறீங்களா? இதுக்கெல்லாம் பின்னாடி நீங்க ரொம்ப feel பண்ணுவீங்க பாருங்க.
சரி விசயத்துக்கு வரேன்,
நல்லா படிக்கற பிள்ளைங்க, சில நேரம், ஒரு வேலை சுமாரா எழுதி இருந்தாகூட, அவங்க மேல இருக்கிற Confident-ல நல்ல படிக்கிற பிள்ளைன்னு சரியா பதிலா சரிபார்த்தார்களா? என தோணும். மார்க் குறைச்சு போட மாட்டாங்க. நல்ல மார்க் தான் போடுவாங்க. "என் சகோதரி, ஆசிரியை Cross check செய்தேன், ஆமாம் என ஒத்துகொண்டார்! அவர்கள் நல்லா படிக்கும் பிள்ளைகள், அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையில் 4 மார்க் போடும் இடத்தில 5 மதிப்பெண் போடுவோம் என்றார்கள்". நம்ம எப்பவும் open Statement தான் எப்பவும், ஒளிவு மறைவு கிடையாது! என்னை கேட்டீங்கன்னா, Normal தேர்விற்கே Name System இருக்க கூடாது, Random Number சிஸ்டம் தான் இருக்கணும் அப்பத்தான், இந்த பேர பார்த்து மார்க் போடற கதை எல்லாம் இருக்காது. எப்பவும் முதல் ரேங்க் வாங்குறவங்களே, வாங்கிட்டு இருக்க மாட்டாங்க, எங்கயாவது Politics நடந்தா, அதுவும் இருக்காது. என்னது பள்ளிகளில்Politics என ஆச்சரிய படுறீங்களா? அட போங்கப்பா. குறிப்பட்ட ஜாதி பெயரில், குறிப்பிட்ட சமுகத்தின் பெயரில் நடக்கும் பள்ளிகளில் ஒரு வகையான Politics இருக்கத்தான் செய்கிறது.
உங்க பிள்ளைகள், 100/100, முதல் ரேங்க் வாங்குகிறார்கள் என அவர்களை, தலைகனம் கொள்ள செய்யாதீர்கள்! அனுபவித்த வகையில் சொல்கிறேன், உங்கள் பிள்ளை உங்கள் பள்ளியின் Standard, மற்றும் அவனுடன் படிக்கும் பிள்ளைகளை Compare செய்யும்பொழுது Class topper, இதை எப்போழுதும் உணர்த்துங்கள்! கற்றது கை மண்ணளவு..கல்லாதது உலகளவு என புரியும்படி சொல்லுங்கள்!
உங்க பிள்ளைங்க தமிழ் மீடியம் படிச்சுட்டு இருக்காங்கன்னா, நீங்க செய்ய வேண்டியது எல்லாம். ஆங்கில தினசரி நாளிதழ் வாங்குங்கள், அவர்களை படிக்க வைத்து, ஐந்து புது வார்த்தை தினம் கண்டுபிடுத்து, Dictionary பார்த்து அர்த்தம் எழுத சொல்லுங்கள். அந்த வார்த்தைகளை வைத்து அமைத்து Sentence எழுதி காட்ட சொல்லுங்கள்!" Vocabulary வளரும். ஒரு வாரம் ஆனதும் அந்த 35 வார்த்தைகளை வைத்து அவர்களை test செய்து பாருங்கள், மீண்டும் மீண்டும்..எனக்கு ஐயா சொன்னதுதான் இதெல்லாம்.. ஆனா முழுசா இதெல்லாம் follow பண்ணல. ஏன்னா அப்பத்தான் எனக்கு படிச்சு Engineer ஆகணும் Doctor ஆகணும்னு எந்த கனவும்..இல்லையே! ஐயாவுக்குத்தானே இருந்துது!
இப்ப இருக்கிற பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் செம சுட்டி, நிறைய கனவு இருக்கிறது! உங்கள் பிள்ளை படிக்கும் பொழுதே, "Spoken english" - உங்கள் வசதிக்கு ஏற்ப தனியாக வகுப்பிற்கு அனுப்புங்கள், அவர்கள் தன்னம்பிக்கை வளரும்.
உங்கள் ஊரில் அந்த மாதிரி வகுப்புகள் இல்லை எனில், அவர்கள் பள்ளியில், பெற்றோர்கள் சார்பாக எடுத்துரைத்து, ஆங்கில வகுப்பிலாவது அனைவரையும், ஆங்கிலத்தில் உரையாட பழக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்! இல்லை உங்களால் சரளமாக உரையாட முடியும் எனில், வீட்டில் அவர்களிடம் குறிப்பிட்ட நேரங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும் என்று பழக்குங்கள்.
அவர்கள் பின்னாளில், College, Campus Interview என போகும் பொழுது எந்தவித தையக்கமோ, தாழ்வு மனப்பான்மையோ இல்லாமல் வாழ்வில் ஜெயிப்பார்கள்!
நம்ம பிள்ளைகள நல்ல School சேர்த்தோம், நல்லா படிக்கிறார்கள் என்பதோடு மட்டும் நம் கடமை முடியவில்லை. அவர்கள் Globalization சூழலுக்கு சமமான தகுதி பெற்று, எல்லா சூழ் நிலைகளையும் சமாளித்து முன்னேற, நாம்தான் வழி நடத்த வேண்டும்.
உங்கள் உறவினர் பிள்ளை தமிழ் மீடியத்தில் படித்து இன்னைக்கு அமெரிக்காவில் பெரிய பதவியில் இருக்கலாம், அவர் வாழ்ந்த சுழல், அவர் தன்னை செதுக்கிக்கொண்ட விதம் வேற! புரிந்து கொள்ளுங்கள்! நாம தமிழ் மீடியம் படிச்சுதானே முன்னேறுனோம், நம்ம பிள்ளைகளும் அப்படியே வந்துடுவாங்கன்னு தயவு செய்து முடிவு செய்யாதிர்கள். ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற Capacity & Capability பொறுத்துதான், அவர்கள் ஆளுமை திறன் இருக்கும்.
ஆமாங்க, தமிழுக்கு நான் ஒன்னும் எதிராளி இல்லை, தமிழ் மீடியத்துல படிச்சுட்டு,தனியா எந்தவித பயிற்சியும் எடுத்துக்காம பின்னாளில் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இப்பகூட அப்படித்தான். எவ்ளோ நாளைக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது! அவ்வ்வ்வ்..
இப்பகூட, ஒரு document ரெடி பண்ணா கூட ஒரு தடவைக்கு நாலு தடவை grammer mistake இருக்கானு பாத்துகிட்டு..அடச்சே! என்ன பொழப்புடா சாமி!
நான் நடிச்சுட்டு இருக்கிற விஷயம் யாருக்கும் தெரியாது..கை பிள்ளைய காமிச்சு கொடுத்துடாதீங்க!
தாத்தா நீங்க இப்ப உயிரோட இருந்தா உங்கள நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்கணும், "தாத்தா ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி"? (ஒ! ஐஞ்சு வார்த்தையா போச்சு) என்ன திரும்ப சரியா இருக்கான்னு count பண்றீங்களாக்கும்?
தாத்தா, நீங்க தமிழ் தாத்தாவாகவும், ஆங்கில தாத்தாவாகவும், பிச்சு உதறுணீங்களே? அது எப்படின்னு சொல்லாமலே போயிட்டீங்களே தாத்தா!
திருக்குறள்:
அதிகாரம்: கல்வி
குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
பொருள்:
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
Image Courtesy: Web
Nice Advice Akka..I will follow the same.
பதிலளிநீக்கு