நாம் வாழ்கையில எப்பயாவது, எதார்த்தமா சந்திக்கிறவங்க , நம்ம வாழ்க்கைய புரட்டி போட்டுட்டு போய்டுவாங்க, அப்படிதான் எனக்கும் ஒரு விஷயம் நடந்தது.
நான் சாந்திக்கு Cycle ஓட்ட கத்து கொடுத்ததுதான் உங்களுக்கு தெரியுமே!.
அப்ப ஒரு நாள், அவ இருந்த Apartment -ல இருந்த Common pipe-ல, சாந்தியும் நானும் பலூன்ல தண்ணி புடிச்சு விளையாடிக்கிட்டு இருந்தோம்.அப்ப அந்த பக்கம் செடிக்கு தண்ணி ஊற்ற, தண்ணி பிடிக்க ஒரு Aunty வந்தாங்க, நாங்க பத்து பலூன்லையும் தண்ணி புடிச்சுட்டுதான் தருவோம்னு கண்டிப்பா சொல்லிட்டோம். எங்கள பாத்து "என்ன இவ்ளோ பெரிய பசங்களா இருக்கீங்க, பலூன் வச்சு விளையாடுறீங்கன்னு" கேட்டுட்டே போய்ட்டாங்க.
அப்பொழுது கல்லூரியில் சேர வேண்டிய தருணம்.
என் தாயுமானவர், அது தான் எங்க ஐயா, என்னைய IPS ஆகணும்னு நினைச்சதால என்னை B,A History எடுத்து படிக்க சொன்னங்க ( +2-ல் 1st Group எடுத்து இருந்தும் ). அப்பத்தான் சுலபமா பண்ணலாம்னு நினைச்சாங்க. நானும் B.A History மட்டும் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் Apply பண்ணி இருந்தேன்.அப்பொழுது எனக்கென்ற எந்த விருப்பமும் இல்லை. ஆனால் B.A (History) படிக்க சுத்தமாக விருப்பம் இல்லை.
ஐயா சொன்னதால் B.A history Apply பண்ணி, கல்லூரிக்கு Admission செய்யும் நாளில், வரிசையில் அமர்ந்து இருந்தேன். அப்பொழுது ஒரு Madam எங்கிட்ட வந்து, என்ன Group? என்ன Admission?என்ன Subject? என்று கேட்டார்கள். நான் பதில் சொல்லிக்கொண்டே , இவங்கள எங்கோ பாத்திருக்கோமேன்னு நினைச்சேன்..ஆனா சுத்தமா ஞாபகம் வரல! என்ன? B,A History எடுத்துட்டு படிக்க போற? IPS Try பண்ண வேற Subject எடுக்க கூடாதுன்னு யாரு சொன்னா? நீ உன் group, subject எடுத்து படி.ச்சு, IPS எழுதலாமே! உனக்கு B.sc (Maths) படிக்க இஷ்டமானு கேட்டாங்க. எனக்கு தலை கால் புரியல.
OK ன்னு சொன்னேன், Madam உங்கள எங்கோ பாத்து இருக்கேனே! இழுத்தேன்..அவங்க உடனே, "பலூன் வாங்கித்தரேன்..Water fillup பண்றியான்னு கேட்டாங்க..நான் சிரித்தேன்..அவங்களும் சிரித்தாங்க.."என் கண்ணின் ஓரம் சின்ன நீர்த்துளி!
அங்கயே Maths Dept HOD கிட்ட பேசினார்கள், ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கான 1 Quota இருக்கு , நாளைக்கு Admission கடைசி நாள், அந்த Group-லிருந்து யாரும் வரலைன்னா. Admission.பண்ணிக்குங்க என்று சொல்லி விட்டார். B.Sc Maths Application போடததால, என்னைய B.A History Admission போட்டு History Class போக சொன்னார்கள்.நாளை பார்க்கலாம் என்றார்கள்.
எனக்கு நம்பிக்கை இருந்தது. அதே போல் மறு நாள் எனக்கு Group மாற்றம் கிடைத்தது, நல்லபடியாக மூன்று வருடம் படித்து முடித்தேன். என் வாழ்கையே மாற்றிய அந்த வாழும் தேவதை லக்ஷ்மி மேடம். அவர்கள் யார்? எனக்கு என்ன ஒரு உறவு? தெரிந்தவரா? அறிந்தவரா? இது எப்படி நிகழ்ந்தது எனக்கு இன்றுமே ஒரு புரியாத புதிர். எல்லாம் அவன் செயல் அன்றி வேறொன்றும் இல்லை.
தென்றலா நீங்கள்?
என் வாழ்வில் வசந்தம் வீசி சென்றதால்!
மேகமா நீங்கள்?
என் மேல் கல்வி சாரலை தூரி சென்றதால்!
தெய்வமா நீங்கள்?
என் வாழ்வை மாற்றி அமைத்ததால்!
Hats off to you Lakshmi Madam!
திருக்குறள்:
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒப்புரவறிதல்.
குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
பொருள்:
பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.