சனி, 19 செப்டம்பர், 2015

ICE - Contact No. உங்க கிட்ட இருக்கு தானே?

இரண்டு நாள் வேலை நிமித்தமாக கடந்த மாதம் ஆக - 18 சிங்கப்பூரில் இருந்து தஞ்சை வந்து இருந்தேன். ஆக -19, எனது விமான பயணம் திருச்சியிலிருந்து, சிங்கப்பூர் இரவு 11.45 க்கு. நான் 10 மணிக்குள் விமான நிலையத்தில் இருக்கவேண்டும். 

நான் இரவு 8.30 மணிக்கு தஞ்சையிலிருந்து கிளம்பினால் 10.00 க்கு திருச்சி விமான நிலையத்தை அடைந்து விடலாம் என்று Schedule போட்டு கிளம்பி கொண்டு இருந்தேன்.  நான் மாலை 7.15 மணிக்கு, தஞ்சை பாலாஜி நகரில் உள்ள புண்ணிய மூர்த்தி -Department Store-ல் முக்கிய தானிய வகைகளை வாங்கி கொண்டு,  ஆட்டோவில் ஏற முற்பட்டேன். 

அதாவது நான் வீடு வந்து, விமான நிலையம் கிளம்பவே எனக்கு நேரம் இருந்தது. அந்த நொடி, படார் என சத்தம் கேட்டது. இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளம்பெண், அங்கிருந்த Road, Divider -ல்குவிந்து இருந்த மணலில் சறுக்கி, வந்த வேகத்தில். அவர் தலை அந்த Road, Divider -ல் மோதி சறுக்கி விழுந்தார். 

அவர் விழுந்த அந்த வேகமும், அந்த சுழலும் , அவர் ஹெல்மெட் போடவில்லை என்றால் என்னவாகி இருப்பார், என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதோடு, உதவிக்கு வந்த அனைவரும் தயக்கம் காட்ட, நான் சட்டென, ஓடி சென்று அவரை தூக்கினேன், வலது கால் பாதம் தேஞ்சி, மேல் அப்படியே செதுக்கி, சதை பெயர்ந்து விட்டிருந்தது.  ரத்தம் கொட்டி கொண்டி இருந்தது. அங்கிருந்தவரிடம் அவரது வாகனத்தை, பத்திரமாக நிறுத்தி வைத்து வைக்க சொல்லி, பூட்டி, சாவியை அவர் Hand bag - ல் போட சொன்னேன்..

மணி: 7.30
Accident - வழி வகுக்கும், மணல் நிறைந்த ரோடு (for Sample) 


உடனே அவரை ஒரு "ஆட்டோ" வில் ஏற்றி, அருகில் இருந்த தேவா மருத்துவமனையில் சேர்த்தேன்.  

 சிகிச்சைக்கான தொகை (சிறிய தொகை தான்) கட்ட சொன்னார்கள், டாக்டருக்கு தெரியபடுத்திவிட்டு, முதலுதவி செய்ய ஆரம்பித்தார்கள், அவரை அப்படியே விட்டு செல்ல மனம் இல்லை. அந்த பெண்ணின் Handbag -ல் இருந்த மொபைல் எடுத்து. முக்கிய நபருக்கு தெரியபடுத்த  ICE  number [In case of Emergency] எதாவது இருக்கிறதா என்று தேடி பார்த்தேன். number எதுவும் இல்லை.  அம்மா, அப்பா என தேடி பார்த்தேன் number எதுவும் இல்லை.  அண்ணா, அக்கா , Mummy, Daddy இம்ஹும் ...

அதற்குள் 30  நிமிடம் கரைந்து விட்டிருந்தது. 

மணி 8.00
அப்பொழுது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது, அவரிடம், விவரத்தை சொல்லி, கொஞ்சம் வர முடியுமா?  என கேட்டேன். அதுக்கு அவர், என்ன Accident -ணு  ஜோக் பண்றீங்களா? செருப்பாலே அடிப்பேன்னார். எனக்கு tension ஆயிடுச்சு. அப்புறம் விளக்கி சொன்னதும், அவர் மன்னிப்பு கேட்டு கொண்டார்.  அவர் உறவினர் என்றும் , வெளியூரில் இருப்பதாகவும் சொன்னார்.

உள்ளே சென்று பார்த்தேன், வழியால் துடித்து அழுது கொண்டு இருந்தார். நல்ல வேலையாக பேசும் நிலையில் இருந்தார், ஆனாலும் பதட்டத்தில் இருக்க, யாரிடம் சொல்லணும், சொல்லுங்க என்றேன். அப்பா, அம்மா இருவரும் இறந்து விட்டதாகவும், பாட்டி, தாத்தாவிடம் இருப்பதாகவும் சொன்னார். மனசு என்னோவோ என்றாகிவிட்டது. வயதானவர்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ என எண்ணி, அவரது தோழி நம்பரை வாங்கி அவரிடம் விவரத்தை சொன்னேன், அவர் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாக சொன்னார். சிறிது நேரம் காத்து இருந்தேன், அவர் கையில் ஒரு ஆயிரம் ருபாய் பணம் கொடுத்தேன். அவரது நம்பரையும் வாங்கி கொண்டேன். 

அவர் மறுக்கவே, நானும் உங்கள் சகோதரி மாதிரிதான் "உங்களுக்கு பணம் உதவி தேவை இல்லை என்றாலும், அவசர மருந்து எதுவும் வாங்க பயன்படும்" என்று கையில் திணித்தேன். ஏதும் முக்கிய மருந்து வாங்கி வேண்டி இருந்தால் உதவி செய்யுங்கள் என சொல்லி, அங்கிருந்த உதவியாளரை வேண்டினேன்.  அவரது தோழி வரும் வரை பார்த்து கொள்ளுமாறு கேட்டு கொண்டேன். அவரும் ஒத்து கொண்டார். 

மணி 8.15, மறுபடி நான் ஆட்டோ பிடித்து வீடு சேர  மணி 8.45
எப்பொழுதும் கடைசியில் Bag Pack பண்ணியதும் எடை பார்த்து கிளம்புவது வழக்கம், அன்று நேரம் இல்லாத காரணத்தால் அப்படியே Pack பண்ணி கிளம்பினேன். மணி 9.15, 45 நிமிடம் தாமதம். Flight late -ஆ எடுக்க வாய்ப்பு இருக்குமா ? இம்ஹும் க்கு Tiger Airways வேற Award வாங்கி இருக்கு..தாமதமாக எடுக்க.வாய்ப்பே இல்லை.

Flight Miss, பண்ணலும் கவலை இல்லை, நல்லது பண்ணினோம் என நினைத்த பொழுது ரொம்ப சந்தோசமாக இருந்தது. இந்த மாதிரி என்னை பக்குவபடுத்தியதில் ரைட் மந்த்ராவுக்கு
(www.rightmantra.com) நிறைய பங்கு உண்டு. 

போகும் வழியில், அந்த பெண்ணின் Number- க்கு போன் பண்ணினேன், Wrong Number என்றார்கள். பதட்டத்தில் Phone number தவறாக சொல்லி இருக்கலாம் என நினைத்து கொண்டேன்.  மனசெல்லாம், கொஞ்ச நேரம்,  அந்த பெண்ணை சுற்றியே இருந்தது. அவ்வளவு இரத்தம் சிந்தி, நான் யாரையும் பார்த்ததில்லை. 

திருச்சி விமான நிலையம் வந்தடைய மணி 11.00.
உள்ளே அனுமதி இல்லை, Counter மூடிவிட்டதாக சொன்னார்கள். மிகவும் வேண்டி கேட்க, அனுமதி அளித்தார்கள். Boarding Pass போட சென்றேன், Check-in Bag  6 Kg எடை கூடுதலாக இருப்பதாகவும் Rs. 9000 பணம் செலுத்த வேண்டி உள்ளது என்றார்கள். 25 kg நான் புக் பண்ணி இருந்தேன். 18 Kg-ல் ஒரு Bag 13 Kg-ல் ஒரு Bag.

Weight 31 Kg காட்டியது. அவர்கள் விடுவதாய் இல்லை. கடைசியில் நான் வாங்கிய தானிய வகைகள் மொத்தம் Rs. 3000 தான். அது என்னை பார்த்து சிரித்தது. 13 kg- வில் 6Kg பிரித்து எடுக்க நேரம் இல்லை. 

Rs. 3000 விலை கொண்ட தானியங்கள் (திணை, வரகு, கேழ்வரகு ) அடங்கிய  அந்த  Bag-க்கு Rs. 9000கொடுக்க வேண்டுமா? என்ற தயக்கத்தோடு , பணம் செலுத்துவது தான் வழி என யோசித்த அந்த வினாடியில்,, பக்கத்துக்கு Counter -ல் இருந்த ஒரு நபர்(எனக்கு முன் வந்த நபர்), தனக்கு குறைவான Baggage weight இருப்பதாகவும், அந்த 13 Kg bag தான் எடுத்து வருவதாகவும் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை.

இது போன்ற உதவி யாருமே செய்ய மாட்டார்கள். நாமலே கேட்டாலும், உள்ள என்ன இருக்கோ, ஏது இருக்கோ என யாருமே உதவிக்கு வர மாட்டார்கள். 

நான் யாரென்று தெரியாது, எப்படி இப்படி? என்னால் நம்ப முடியவில்லை. ஒரு உதவி, அதுவும் கடைசி ஆளா நிக்கிறப்ப?? சிறிது நேரம் என்னால் நம்ப முடியவில்லை. இதே நான் ஒரு மணி நேரம் முன்னால் வந்து இந்த விஷயம் நடந்து இருந்தாலும் நான் பெரியதாக எடுத்து இருக்க மாட்டேன். அன்றைக்கு நானும் அந்த நபரும் தான் Counter - இல் கடைசி ஆட்கள். அவரே எனக்கு உதவியது என்னால் நம்ப முடியவில்லை. அவர் Check in bag label, என்னிடம் தந்து விட்டு,  நான் நன்றி சொல்வதற்குள், அங்கிருந்து சென்று விட்டார். அவரது பெயரை பார்த்தேன். "சுந்தரம்" என்று இருந்தது.


நான் காலம் நேரம் பார்க்காமல் எங்கயோ செய்த உதவி, எனக்கு வேற வழியில வந்துடுச்சா? நீங்க தான் சொல்லணும் ...

பிரதி பலன் பார்க்காமல், அவர் செய்த உதவியை நினைத்து பார்கிறேன். அவருக்கு என் நன்றிகள். அவர் சிங்கப்பூரில் எங்கு இருக்கிறார்? எந்த விபரமும் தெரியவில்லை. ஒரு வேலை உங்களுக்கு தெரிந்தவராயின். என் நன்றிய மறக்காம சொல்லுங்க.

என் தம்பியிடம், அடிபட்ட அந்த பெண்ணை, நலம் விசாரிக்க சொன்னேன், அவர் விசாரித்து விட்டு ,  எனக்கு தகவல் சொன்னார், அந்த பெண் தையல் போட்டு, discharge ஆகி, வீடு சேர்ந்து விட்டதாக சொன்னார்கள். பதட்டத்தில் Phone no. ஒரு நம்பர் மாற்றி கொடுத்து விட்டார் எனவும்,  அந்த பெண் , என் தம்பியிடம், என் பெயர்கூட தெரியாது என என் பெயரை கேட்டுள்ளார்,  அவர் என் பெயரை சொன்னதும், அவர் கண்கலங்கி, அவரது அம்மாவின் பெயரும் "அனுசியா" என சொன்னார்களாம். அவர் எனது சிங்கப்பூர் நம்பர் வாங்கி SMS செய்து இருந்தார்.  சில content விடு பட்டு இருந்தது. இருந்தாலும், அவர் சொல்ல வந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த SMS:ரொம்ப சந்தோஷ பட்டு என்னிடமும் அந்த பெண் பேசினார். இந்தமாதிரி சமயத்தில், யாருமே உதவிக்கு வர மாட்டார்கள், அதுவும் பெண்கள் ரொம்ப தயங்குவார்கள், என குறிப்பிட்டார். 

ஒரு தடவை உதவி செய்து, அந்த சந்தோசத்தை அனுபவித்து விட்டீர்கள்  எனில், அதற்கே அடிமை ஆகி விடுவீர்கள். நல்ல விஷயம் செய்து கொண்டே இருப்பீர்கள்.  அப்புறம் பாருங்க..உங்களுக்கே உங்கள ரொம்ப பிடிக்கும். 

இது மாதிரி நிறைய இருக்கு, ஆனா ஒரு Awareness - க்காக தான், இந்த நிகழ்வை பதிவு செய்கிறேன். 

நீங்க முதல்ல செய்ய வேண்டியது எல்லாம். 
Phone, Pin lock - இல்லாதவங்க "ICE" என்று உங்களுக்கு வேண்டிய நபர் Store பண்ணி கொள்ளுங்கள். அவசர கால உ தவிக்கு தேவைப்படும்,. முடிந்தவரை ICE பற்றி தெரியாதவதர்களுக்கு, தெரியபடுத்துங்கள். 

Phone Pin lock - இருக்கிறவர்கள், உங்கள் Money purse - ல், Photo வைக்கும் பகுதியில் , உங்கள் பெயர் ,  Blood group  அவசர கால தொடர்பு எண், அவரது பெயர், நண்பரா? உறவினரா? (Amma/Appa/Friend/Relative) குறிப்பிட்டு வையுங்கள்.  இதை நீங்கள் ஏற்கனவே நிறைய படித்து இருப்பீர்கள், எங்க இருக்கான்னு ஒரு தடவை உங்க purse /mobile phone check பண்ணி பாருங்க?

ஆபத்தான தருணத்தில், வயதான தாய், தந்தை, கலவரபடாமல் இருக்க இது உதவும். 

தயவு செய்து ஹெல்மெட் போடுங்க. சட்டத்தை மதித்து அல்ல, உங்கள் விலை மதிப்பில்லா உயிரை மதித்து ஹெல்மெட் 
போடுங்கள் ..

மகனை வழி பார்த்து இருக்கும், அம்மாக்களை கலவரப்படுதாதீர்கள்..

காலமெல்லாம் நீங்களே கதி என வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்கள் வாழ்கை துணையை கலங்க வைக்காதீர்கள் ...

மாலை அப்பாவை, ஆசையொடு பார்க்க காத்திருக்கும் மகளோ மகனோ...துடிக்கவிடாதீர்கள்...

உங்கள் உயிர் உங்களை விட, உங்கள் குடும்பத்திற்கு பொக்கிஷம்...உங்களிடம் உயிராய் இருப்பவர்களுக்கு உன்னதம்...


Singapore - Road

சிங்கப்பூர் போன்ற மேலை நாடுகளில், ரோட்டில் சேரும் மணலை Machine cum vehicle வைத்து  அடிக்கடி Clean பண்ணுவார்கள். இங்க இந்த மாதிரி,  ஒரு Accident-ம் நடக்க வாய்ப்பே இல்லை. 

நாம் அரசாங்கத்தை எதிர்பார்த்து இருப்பதில், எந்த அர்த்தமும் இல்லை. நாமலே இறங்கி சுத்தம் பண்ணாதான் நம்ப தலை தப்பிக்கும். என்னதான் என் அண்ணன், தம்பி என நாங்கள் அனைவரும்  இங்க சிங்கப்பூர்-ல Safe- ஆக இருந்தாலும். உங்கள மாதிரி அண்ணன், தம்பிங்க, அக்கா, தங்கைகள் அந்த மாதிரி ரோட்டில் பயணம் செய்கிறீர்கள் என நினைக்கும் பொழுது, நெஞ்சு கனக்கிறது. தயவு செய்து ஏதாவது பண்ணணுங்க. நீங்க பொது நலம் பேணுபவரா? இந்த மாதிரி நல்ல விசயத்துல, ஈடுபட்டு நமக்கு நாமே, உதவி கொள்ள தயாரா? ? எனக்கு Email அனுப்புங்க. dharzha@gmail.com.

விபத்தில்லா எதிர் காலம் உங்கள் கையில்.. சமூக வலைதளங்களில் பறந்து விரிந்து கிடக்கும், உங்கள் மனித நேயத்தை, நான்  உரசி பார்க்கிறேன். சவாலை ஏற்று கொள்ள நீங்கள் தயாரா?

உங்களுக்கு உதவ, உங்கள் சகோதர, சகோதரிகள் நிறைய பேர் காத்து இருக்கிறோம். தேவை, பொது நலம் பேணும் நபர்கள் ஒரு ஏரியாவுக்கு நாலு பேர்.

சின்னதா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம், எல்லாம் நீங்களும் உங்க குடும்பமும் சந்தோசமா இருக்கத்தானே?. நன்றி

செய்நன்றி அறிதல்.
குறள் 105: 
உதவி வரைத்தன்று உதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

பொருள்:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்