வியாழன், 4 டிசம்பர், 2014

நட்(பூ)- சகோதரியுமானவள்!

பாத்திமா!


சேர்ந்து இருந்த நாட்கள் மிக குறைவு, ஆனாலும் ஏழு ஜென்மம் தொடர்ந்தது போல் ஒரு பந்தம். குறைவாக பேசுவோம், நிறைய சிரிப்போம்!

அவர் திருமணத்திற்கு முன், தன்னுடன் வேலை பார்த்த நண்பர்கள், தோழிகளை வீட்டுக்கு அழைத்து, காபி போட போய்.. பால் எப்படி காச்சுறது எப்படின்னு தெரியாம..தெரியாமல், கொஞ்சம் கருகவிட்டு அதிலே காபி போட்டு, அனைவருக்கும் கொடுத்ததும், அந்த நண்பர்களில் ஒருவர்," அதை குடித்து விட்டு" "இந்த பொண்ணை எல்லாம் எவன் கட்டுவான்னு?" (இவர் இல்லாத பொழுது) கேட்டதும். பின் மற்ற தோழியின் மூலம் பாத்திமா தெரிந்து கொண்டதும். அத கேட்ட அந்த ஒரு கேள்விக்காக...காலம் பூரா அந்த பொண்ணு கையிலேயே  காபி குடின்னு அந்த ஆண்டவன் முடிவு எடுத்தும்..இதை யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு பாத்திமா, என்கிட்டே சொன்னதும், அதை இது வரைக்கும் நான் Maintain பண்ணதும், இனியும் நான் Maintain பண்ண போறதும் ...ரகசியம்...ஷ்ஷ்...முடியல!...

இன்னைக்கு தான் நீங்க பிரியாணி Master ஆயிட்டீங்கள்ள..பாத்திமா Free-யா விடுங்க ....

தோழிகள் கூட்டம் அனைவருக்கும் ஒரு சேர தகவல் பரிமாறுவது, FB-ல தவறாமல் like போடுவது (அனைவருக்கும்). குழந்தைகளையும் கவனித்துகொண்டு, வேலைக்கும் சென்றுகொண்டு  எப்படி இப்படி Personal Relationship maintain பண்ணுகிறார் என வியப்பேன்.  Hats off  to you Fathima!

 என்னை, எத பண்ணலும்  "கலக்குறீங்க" "கலக்குறீங்கன்னு" சொல்லி சொல்லி உசுபேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கும் அன்பு தோழி! 

தானும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்தி பார்க்கும் குணம் கொண்ட உற்ற தோழி!.

காலம் சில நபர்களை, ரத்த பந்தமாக அமைக்காத பொழுது, உடனே பயணிக்கும் தோழியாய், தோழர்களாய் அமைத்து விடும் என்பதை மனபூர்வமாக நம்புபவள் நான்!


உன்போன்ற தோழிகள் 
இல்லை எனில்..
நான் இங்கு இல்லை....
உடன் பிறக்கவில்லை என்றாலும்..
உற்ற தோழி ஆனாய்..
உடன் பட்டவர்களானோம்...
அன்பால் ஆர்பரிக்கிறோம்..
பண்பால் பரவசமானோம்..
என் உடன் பிறவா சகோதரி...நீ..
பல்லாண்டு காலம்...
நோய் நொடி இன்றி...
நீண்ட ஆரோக்கியத்துடன் 
எல்லா வளமும், நலமும் பெற ..
வாழ்த்துகிறேன்....
என் சகோதரியுமானவளுக்கு!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிகாப்பது போல,  நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.

இந்த நட்புக்கு இலக்கணமானவள் நீ!பாத்திமா, இதை படிக்கும் பொழுது உங்கள் கண்ணின் ஓரம் நீர் எட்டி பார்த்திருந்தால் அது என் இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றி அல்ல..நம் நட்புக்கு கிடைத்த வெற்றியடி பெண்ணே!

படிச்சுட்டு எப்படி feel பண்ணீங்கன்னு அப்படியே கீழ comments போட்டுடுங்க! அப்படியே Party எங்கன்னு சொல்லிடுங்க! அப்புறம் நம்ப பிரியாணி??

புதன், 3 டிசம்பர், 2014

பாயம்மா (தாயம்மா!)


எனக்கு இஸ்லாம் மதத்தின் மிகுந்த மரியாதை. அவர்கள் இறை நம்பிக்கையும், அவர்கள் இறைவழிபாடும் என்னை ஆச்சர்ய பட வைக்கும். இதற்கெல்லாம் முதல் காரணம், எங்கள் பாயம்மா! இல்லை இல்லை எங்கள் தாயம்மாவாக இருந்தார் எங்கள் சிறு வயது பருவத்தில். பாயம்மா எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்தவர். அவர்களுக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள்.

எங்கள் மீது மிகுந்த பாசமாக இருப்பார். என்ன செய்தாலும் எங்க வீட்டுக்கு ஒரு பார்சல் அனுப்பிவிடுவார்கள்.

அப்பெல்லாம் பாயம்மா வீடு பிரியாணி சாப்பிட்டு தான் வளர்ந்தேன்னு சொல்லலாம். ரம்ஜான், பக்ரித் மட்டும் அல்ல, அவர்கள் பிள்ளைகளில் நான்கு பையன்கள் ஒவ்வொருத்தராக, துபாய் சென்றார்கள். அவர்கள் ஒவ்வொரு முதல் முறை துபாய் செல்லும்பொழுது "பயணம் செய்ய " விருந்து. அவர்கள் ஊருக்கு விடுமுறைக்கு ஊருக்கு வரும் பொழுது விருந்து என பாயம்மா வீடு களை கட்டும்.பக்ரித் பண்டிகைக்கு, வசதி படைத்தவர்கள், ஏழைகளுக்கு "கறி" இலவசமாக வழங்கும் அவர்கள் வழிமுறை, இஸ்லாம் மதத்தில், எனக்கு மிகவும் பிடிக்கும் ( ஏழைகளுக்கு உதவுவது). , அதற்காக பாயம்மா வீட்டில் 6 , 7 ஆடு வெட்டுவார்கள்.

அவர்கள் பையன்கள் துபாயிலிருந்து வரும் பொழுது, அவர்கள் கொண்டு வந்த பெட்டி பிரிக்க ஒரு நாள் குறித்து, அவர்கள் நெருங்கிய உறவினர்களை வரவழைத்து தான் பிரிப்பார்கள்.அன்னைக்கும் செம விருந்து தான். எங்களுக்கும் things கொடுப்பார்கள், எனக்கு clip, fancy item, dress material கிடைக்கும், அதெல்லாம் ரொம்ப ஸ்பெஷல், சும்மாவா? துபாய் things ஆச்சே.

பாயம்மா செய்த பிரியாணி போல் இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை. அப்படி ஒரு ருசி. அன்பையும், பிரியாணியையும் அள்ளி தருபவர்கள் பாயம்மாக்கள்!

We miss you Baayamma!!

இஸ்லாம் மதத்துடன், நான் சேர்ந்தே பயணிக்கிறேன். இஸ்லாம் தோழிகள், என் சகோதரிகளாக என் வாழ்வில் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.  (தொடரும்)