ஏழாம் வகுப்பில்(தஞ்சை K.H.S.School) அறிமுகம், அமைதிக்கு மறு பெயர் அவள் பெயர். சாந்தி!
இன்றும் ஞாபகம் இருக்கிறது, ஒரு நாள் விளையாட்டு நேரத்தில், volley ball விளையாட ஆள் கிடைக்காமல் என்னை அழைத்தாள்.
மெதுவாக பேச ஆரம்பிக்க, அவள் சிறு வயதில் தந்தையை இழந்து விட்டதை சொல்லி வருத்தப்பட்டாள். அப்பாவை பார்த்ததில்லை என்றாள். நான் அம்மாவை பார்த்ததில்லை. இது போதாதா? நாங்கள் தோழிகள் ஆனோம்.
சாந்தி கொஞ்சம் moody type அதனால், அவளுக்கு அதிகம் friends இல்லை. எனக்கு இரண்டு, முன்று நண்பிகள் இருந்தார்கள்.
அதில் ஒருவள், ஒரு நாள் இன்னொருத்தியின் Water bottle(Fridge - ல், தண்ணி ஊற்றி வைக்கும் plastic bottle ) வாங்கி தண்ணி குடிக்கும் பொழுது, கீழே போட்டு உடைத்து விட்டாள்.
bottle "உடைத்தது" தெரிந்தால் அம்மா திட்டுவார்கள், என சொந்தக்காரி அழ..
bottle உடைச்சுட்டேன் தெரிஞ்சா, எங்க அப்பா என்ன கொன்னுடுவாருன்னு உடைத்தவள் அழ,
எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒரே யோசனை, உங்க அம்மாகிட்ட, தெரியாம உடைசுட்டோம்னு, நாங்க எல்லாம் வந்து சொல்லிடறோம், என சமாதானபடுத்தி அவள் வீட்டுக்கு போனோம். அவங்க அம்மா (ரொம்ப நல்லவங்க!?!) எங்கள பார்த்து சொன்னங்க "என் பொண்ணு யாரோட bottle-யும் உடைச்சு இருந்தா, நான் புது பாட்டில் வாங்கி கொடுத்து அனுப்புவேன்னு பட்டுன்னு, முஞ்சில அடிக்காம, ஆனா, அடிச்சு சொல்லிட்டாங்கன்னா பாருங்களேன்.
நாங்க திரு திருன்னு முழிச்சுட்டு வீடு திரும்பினோம். வரும் வழியில், "என்னதான் இருந்தாலும், அவ அம்மா அப்படி கேட்டு இருக்க கூடாதுன்னு" ஒருத்தி சொல்ல..இல்ல "
அது தான் சரி" அப்பொழுது தான் நாம அடுத்தவங்க பொருள வாங்கினா கவனமா திருப்பி கொடுக்கணும்னு ஒரு பொறுப்பு இருக்கும்" அப்படி நினைச்சு கேட்டு இருப்பாங்கன்னு நாங்களே சமாதானம் படுத்திகிட்டோம்.
மறு நாள் பிளான் போட்டோம், எல்லாரிடம் உள்ள கை காசு(தலைக்கு இரண்டு ரூபா கூட தேறல..ஹி ஹி) போட்டு எட்டு ரூபாய்க்கு பாட்டில் வாங்கிடலாம்னு பேசி முடிவு பண்ணி. சாந்தியிடம் அவள் கைகாசு கேட்டேன். அவ என்னடான்னா..
"நான் என்ன ஒரு வாய் தண்ணி குடிச்சேனா? "
"இல்லை பாட்டில் உடைச்சதுக்கும் எனக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?."
"நான் ஏன் கொடுக்கவேணும் காசு?"
அப்படி, இப்படின்னு..கட்டபொம்மன்கிட்ட வரி கேட்ட கதையா என்ன பார்த்து கேள்விமேல் கேள்வி கேட்டா,
அவ உன் friend, நான் உனக்காக கூட வந்தேன்னு", வேணும்னா, ஐம்பது பைசா தரேன்னு, பெரிய மனசோட கொடுத்தா." அவளோட நேர்மை எனக்கு பிடித்து இருந்தது (??!!).
நீங்களே சொல்லுங்க, bottle -ல் உடைச்சவ ஒருத்தி, அப்பாவியா, நான் திட்டு வாங்கினேன். இப்பவும் அப்படிதாங்க..இப்படி எல்லார் கிட்டயும் அடிவாங்குரதால...என்ன ரொம்ம்ப நல்லவன்னு நினைச்சுராதீங்க.(சும்மா ஒரு பேச்சு சொன்னேன்ப்பா...)
அப்புறம் ஒரு வழியா தேத்தி, ஒரு புது bottle வாங்கி கொடுத்து அனுப்பினோம்.
உடைச்சவ முகத்தை பாக்கணுமே, அழுதுகிட்டே, அப்படியே சிரிச்சது.,இப்ப நினைத்தால் .அப்படியே கடலோர கவிதை ரேகாவ நாபகபடுத்துற மாதிரி இருக்கிறது.(அந்த seen தெரியுமே உங்களுக்கு! கொடியிலே மல்லிகை பூ பாடல்ல, சத்தியராஜ் கடல்ல காண போன மாதிரி வரும், அதுக்கு அந்த அம்மா ரேகா ஒரு அழுகை அழுது, அப்புறம், சத்தியராஜ் பெரிய மீனோட அந்த அம்மா பக்கத்துல வந்து நிப்பாரே, அப்ப சிரிக்குமே அதே தான்)
அந்த பாட்ட பாக்கணும்னு தோணுச்சுன்ன இங்கே கிளிக் பண்ணவும்.(seen 2.25 - 4.05)
அவ சந்தோசத்த பார்த்தப்ப, அதைவிட அன்னைக்கு பெரிய சந்தோசம் வேற எதுவும் இல்லை.
சந்தோஷத்திலேயே பெரிய சந்தோசம் அடுத்தவங்கள சந்தோஷ படுத்தி பாக்கறது தானே!
பிரச்சனை முடிஞ்சுதுன்னு தானே நினைச்சிங்க, அதான் இல்லை..
பய புள்ளைக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம், பண்ணதெல்லாம் பண்ணிட்டு அம்மாக்கிட்ட போட்டு கொடுத்துட்டாளே! அவுங்க School வருவதுக்குள்..நாம போயுடனுமே..அப்படியே School முடிஞ்சதும் அவ வீட்டுக்கு போனோம். ரொம்ப தூரம் எல்லாம் இல்ல..எல்லார் வீடும்.. 2 தெரு முதல் 5 தெருக்குள்ள தான் இருந்தது. அப்பொழுது நாங்கள் வாசித்த ஸ்ரீநீவாசபுரம், நட்பும் நட்பு சார்ந்த இடமாக இருந்தது..அவ்வளவு ஆட்டம்!!
அவங்க அம்மா ..வாசலுக்குள் நுழையும்போதே "வாங்கம்மா வாங்க.. பெரிய மனுசிகளா" அப்படின்னு கூப்பிட்டாங்க!" செமத்தியா வாங்கபோரோம்னு நினைக்கிற மாதிரியே இருந்துச்சு அவங்க அழைப்பு. அவங்க முகத்தில சிரிப்பு இருக்கான்னு பாத்தோம் இம்கும்..சுத்தமா இல்லை.
அந்த மாதிரி சமயத்துல பாருங்க."ஒருத்தர ஒருத்தர் முன்னாடி அனுப்பி
(இளிச்ச வாய முன்னாடி தள்ளிவிட்டு) யார் பின்னால ஒளிஞ்சுக்க்கலாம்னு தானே பாப்போம். எவ்ளோதான் இடம் இருந்தாலும்..வரிசையில தான் போவோம். எவ்ளோ தான் நடந்தாலும் இருந்த இடத்துலேயே நடந்துக்கிட்டு இருப்போம் பாருங்க..அட அட..இன்னைக்கு நினச்சாலும் சிரிப்பு வருது போங்க.கடைசியில தள்ளிவிட்டு, முன்னாடி நின்ன அந்த ஏமாளி.. நான்தான் வேற யாரு(ஹிம்)!
எப்பவும் ஆஞ்சநேயர தான் துணைக்கு அழைப்பேன். தைரியம் கொஞ்சம் வந்துடும்..ஆனா அன்னைக்கு அவங்க அம்மா முகத்த பாத்தப்ப கொஞ்சம் basement ஆடத்தான் செஞ்சது.
"எல்லாரும் தனி தனியா நில்லுங்க, உங்க முகத்தை பாக்கணுமேன்னு" சொன்னங்க. பய புள்ள ஒண்ணு ஒண்ணா பக்கத்துல வந்து நின்னுச்சு,(ஷ்ஷ் அப்பாட..கொஞ்சம் தெம்பா இருந்துச்சு).
"உங்கள்ள யாரு..புது bottle வாங்கி நீங்களே கொடுத்துடலாம்னு முடிவு பண்ணது?" ன்னு முதல் கேள்விய போட்டாங்க பாருங்க" பயபுள்ள எல்லாரும் என்னைய கை காட்டுச்சுங்க! (எவ்வளவு பாசம்?! )
என்னைய பாத்து கேட்டாங்க "இன்னைக்கு அவ பானைய உடைச்சா...வாங்கி கொடுத்துட்டீங்க (mind voice-"இல்ல..அவ bottle தானே உடைச்சா!")" நாளைக்கு யானைய உடைச்சா வாங்கி தந்துடுவீங்களா? (mind voice - ஒரு ரைமிங் வேணும்தான் அதுக்காக இப்படியா கேப்பீங்க! )
அந்தமாதிரி சமயத்துல, முகத்த எப்படி வச்சுக்கணும்னு, எங்கிட்ட ஒரு format இருந்தது.
1 . நார்மலா இமை துடிக்கரதுக்கு பதிலா..அடிக்கடி இமைக்கணும்
2. கைய கட்டிக்கணும் (லேசா)( Attention, stand at ease la பின்னாடி கை கை வைச்சுப்போமே, அதே மாதிரி முன்னாடி வச்சுக்கணும்)
3. பயம் கொஞ்சமா இருந்தாலும், இல்லைன்னாலும்..பாக்கறதுக்கு நாம ரொம்ப பயப்படற மாதிரி இருக்கணும்!
அவ்ளோதான்
அதை அப்படியே execute பண்ணேன்.
நான் அவங்கள பாத்து "அம்மா.. அப்படியெல்லாம் அவ உடைக்க மாட்டா..பாட்டில் கீழ விழுந்ததால தான் உடைஞ்சு போச்சுன்னு" ரொம்ப அப்பாவியா சொன்னேன். சிரிச்சுட்டாங்க. அப்பாடி!
அம்மான்னு கூப்பிட்டது ice வைக்க எல்லாம் இல்லை..என் friends அம்மா அப்பாவை,நானும் அம்மா அப்பா என்று அழைப்பது வழக்கம்(என்னை பற்றி தெரியாதவர்களுக்கு!)
"நீங்க உங்க friend-க்காக, அந்த அம்மாகிட்ட போய் excuse கேட்ட வரைக்கும் OK." "ஆனா உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா, நீங்களே தீக்கணும்னு நினைக்க கூடாது. வீட்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லனும்னு Advise பண்ணாங்க" நாங்க mind-ல note பண்ணிகிட்டோம்.
இனிமே அவ எதாச்சும் பண்ணிட்டு பயந்தா கூட எங்கிட்ட வந்து சொல்லுங்கன்னு சொன்னாங்க" நிறைய sweets கொடுத்தாங்க. ஆளுக்கு ஒரு cover கொடுத்தார்கள், அதுல sticker bindi, clip, bangles , நிறைய fancy items"
தலைக்கு ரெண்டு ரூபா bottle வாங்க போட்டோம்..திரும்ப கிடைச்சது பத்து ரூபாய்க்கு மேல! சூப்பர் இல்ல! ரொம்ப Happy-யா வீட்டுக்கு போனோம்!
bottle உடைத்தவளும், அவங்க அம்மாவும் தான் Shopping போய், எங்களுக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி இருக்காங்க..அவ Surprise பண்ண நினைச்சாளாம்!
வீட்டுக்கு போனதும், gift யார் கொடுத்தான்னு எல்லார் வீட்லயும் கேட்டு..நாங்க பானை வாங்கின கதைய சொல்லி..sorry..sorry ..bottle..வாங்கின கதை சொல்லி.. அப்புறம் தனி தனியா அவுக.. அவுக வீட்ல வாங்கி கட்டி கொண்டது ..ஹிம் அதெல்லாம் சொன்னா..இந்த பதிவு தாங்காது!
Bottle உடைச்சவ Delhi- ல settle ஆயிட்டா. Bottle owner எங்க இருக்கான்னு தெரியல..ஹிம்
மக ராசி ..நீ இத படிக்க நேர்ந்தால், உன் Contact details கொடுத்துட்டு போ, அப்படியே உங்க அம்மாவை ரொம்ப கேட்டேன்னு சொல்லு.
சாந்தி எங்கேன்னு? கேக்குறீங்களா? அதுக்கு நீங்க இன்னும் மூணு, நாலு episode(?) காத்து இருக்கணுமே! அவள ஒரு அத்தியாத்தில் அடக்கி விட முடியாது..ராட்சசி..அன்பான ராட்சசி!
குறள் 789
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
விளக்கம்
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்
Wonderful
பதிலளிநீக்குWonderful Anu...
பதிலளிநீக்குWonderful Anu.. Super writing.. Very interesting to read your padhivu....
பதிலளிநீக்குThank you Madam...
நீக்குI love the ending with Kural and Vilakkam . Great Job!!
பதிலளிநீக்கு