புதன், 4 நவம்பர், 2015

தெய்வீக ராகம்! திவ்யா!

திவ்யா...(பெயர் மாற்ற பட்டுள்ளது, அவள் நலன் கருதி)

அவளது நம்பிக்கைக்குகுரிய சினேகிதி நான்..ஏன் அப்படி சொன்னேன்னு உங்களுக்கு பிறகு புரியும்..

ஜனவரி மூன்றாவது வார சனி கிழமை(தை மாதம்),  காலை 8.30 மணி (ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு), திருச்சியில் நான் Hostel -ல் இருந்த பொழுது இரண்டு நாட்கள் என்னுடன் தங்க வேண்டும் என தஞ்சையில் இருந்து வந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திருச்சியில் எந்த வேலையும் இல்லை..என்ன விஷயம் என்று கேட்டால் எல்லா கோயிலுக்கும் போகணும்னு சொன்னாள்.

வார வாரம், நான் தஞ்சை வீட்டுக்கு போய்டுவேன், இவ வரதுனால, ஒரு பிரார்த்தனை இருக்கு, இவ வர்ற விஷயம் சொல்லிட்டு வீட்டுக்கு இந்த வாரம்  Leave சொல்லிட்டேன்.

அப்பொழுதுதான் Cell Phone Use பண்ண ஆரம்பிச்ச நேரம். அதுவும் நான் வேலைக்கு சென்றதால். என்னிடம் Cell Phone இருந்தது. அவளிடம் Cell phone இல்லை. அவள் அம்மாவிடம் இருந்து Call வந்தது. "இரண்டு நாளைக்கு எதுவும் தொந்தரவு பண்ணாதீங்க, மௌன விரதம் இருந்துட்டு, திருச்சில எல்லா கோயிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு தான் வந்தா" "ஒரு வாரமாக, ஒரு மாதிரியாக இருக்கிறாள், உன்கிட்ட ஏதும் சொன்னாளா? என பதட்டமாக கேட்டார்கள்". "இல்லைம்மா, நான் எதுவும்னா உங்களுக்கு Phone பண்றேன்ன்னு சொல்லிட்டு வச்சுட்டேன். "

ஏதும் பிரச்சனையான்னு அவள்கிட்ட கேட்டேன்..

"மௌன விரதம் இருந்து இன்னைக்கு எல்லா கோயிலுக்கும் போகணும், நீ என் கூட வான்னு கூப்பிட்டா.."பேசாம என்னால முடியாது..உனக்காக வரேன்னு" சொன்னேன்.

இன்னைக்கு ஒருநாள் தானே, நாளைக்கு பேசுவ இல்ல? ன்னு கேட்டேன்
அதற்க்கு அவள், "இன்னைக்கு மட்டும் எல்லா கோயிலுக்கும் போறோம், நாளைக்கு உன்கூடதான் இருப்பேன், ஆனா நீ எங்கிட்ட பேசமாட்ட, என்னைய பாக்கவும் முடியாது.." என்னோட மௌன விரதம் இன்னைக்கு காலை 9 மணிக்கு ஆரம்பிக்குது. திங்கள் காலை 8 மணிக்கு முடியுது, நீ Monday Office கிளம்பறப்ப, நான் உன் கூடவே, கிளம்பி தஞ்சை போயிடுறேன்னா!"

"அடிபாவி, என்னடி புதிர் போடறன்னு சொல்றதுக்குல்லையே...சைகையில, நேரம் 9 ஆச்சுன்னு காமிச்சா..."
                                                      

பொலம்பிகிட்டே போனேன்..எல்லா கோயிலுக்கும் போனோம்..உச்சி பிள்ளையார், வெக்காளியம்மன் கோயில், ஸ்ரீ ரங்கம்...கிட்டத்தட்ட 9, 10 கோயில்..


பயபுள்ள 50 Km (Trichy) தள்ளி வந்தும், ஏதும் ஆப்பு வைக்க வந்துருக்கோ(?) அப்படின்னு ஒரே பதட்டம்.

இதற்கிடையில், 2, 3 தடவை அவங்க அம்மாவிடமிருந்து போன், அவள் மௌன விரதம் இருப்பதால். நான் இடையில் மாட்டிக்கொண்டேன்.
இரவு 9 மணிக்கு, திரும்ப வந்தோம். ஒரு பேப்பர்-ல் எழுதி காமித்தாள். "நான் தூங்க போறேன். என்னை திங்கள் காலை எட்டு மணிக்கு எழுப்பவும்"!", இதுனால உனக்கு எந்த பிரச்னையும் வராது, உனக்கு எள்ளளவும் தீங்க செய்ய மாட்டேன்னு" (உறுதி மொழி வேற) இதை யாரிடமும் சொல்ல கூடாது, என்னை எழுப்பவோ, என்னை Disturb பண்ணவோ கூடாது...என் மேல் சாத்தியம்.( அவளே சத்தியம் பண்ணிகிட்டா(?)" இந்த மாதிரி Sentiment பேத்தல் எல்லாம், பொண்ணுங்க கிட்டசெல்லுமே!.என்கிட்டேயும் செல்லுச்சு..

ஆகா..பயபுள்ள எதோ திட்டத்துல தான் வந்து இருக்கு போல..பதட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல, எகிறி போச்சு. வீட்ல சொல்றதா வேணாமா? ஒரே பயம்..நம்மகூட தான் காலையிலிருந்து இருக்கா. ஏதும் விபரீதமா தெரியல!
என்ன பண்ண, என்ன நம்பி வந்துட்டா..என்ன ஒரு நாளைக்கு தூங்க போறா? தூங்கட்டும். என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு நொடியை நகர்த்தினேன்..

சனி இரவு(9.30), அவ எங்க போனாலும் ஒரு கண்ணு அவ மேல வச்சு இருந்தேன், அவள் இல்லாத நேரத்தில், அவள் பையில் ஏதும் இருக்கான்னு பாத்தேன் (விஷம், sleeping tablet ..அப்படி, இப்படி)  ஆமா கிட்டத்தட்ட 36 மணி நேரம் கழிச்சு எழுப்புன்னு சொன்னா? யாருக்கு பொறுக்கும்.?

இன்னைக்கு கடைய சாத்துனா, Monday தான் கடைய திறப்பா?? ..ஆகா மொத்தம் என் கடைய காலி பண்ண வந்து இருக்கான்னு தெரியுது..மனசுல நினைச்சு கிட்டேன்...அவ மூஞ்ச பார்த்தா திட்டணும்னு தோணல...அப்படி என்ன வேண்டுதலா இருக்கும்?

பாத்ரூம் அப்படி இப்படி, எங்க போனாலும், கையில எதாவது இருக்கான்னு பார்த்தேன்..ஒன்னும் சந்தேக படர மாதிரி இல்லை...

                          

இரவு(11.30) :


அவ தூங்கிட்டா!(??) , எனக்கு தூக்கம் வரல...12 இருக்கும் அசந்து தூங்கறேன்..ஒரு 2 மணி நேரம் தூங்கி இருப்பேன்...முகத்துல எதோ இடிக்கற மாதிரி இருக்க...அப்படியே விலக்கி, பார்த்தா...அவ...மேல Fanla தொங்க....அப்படியே காலு என் முகத்துல இடிக்குது........ஆ ஆ!!!!!!!


நான் வீச்சுன்னு கத்தி ...திடுக்குன்னு முழிச்சு பார்த்தா....ரூம் அப்படியே இருக்கு...அவ அப்படியே தூங்குறா!...ரோட்டுல் எதோ ஒரு நாய் கத்துற சத்தம் கேக்குது....

இந்த  மூளை ஏன் இவ்ளோ யோசிக்குதுன்னு தெரியல...நெறைய சினிமா பார்த்துட்டோம் போல.. அவ்வ்வ்வ்வ்....

இவ்ளோ பெரிய சத்தம் போட்டும், ஒரு சலனம் இல்லையேன்னு போத்தி படுத்து இருந்த அவள் உருவத்தை பார்த்து முறைத்தேன்..ஆமா...நான் கத்துனது கனவுல இல்ல??(!) அவளுக்கு எப்படி கேட்டு இருக்கும்..அடச்சே...ஒரு நாள்ல இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டாளே!

இன்னைக்கு தூங்கின மாதிரி தான் நினைச்சு..உருண்டு பிரண்டு கொண்டு, அந்த இரவு போனது....

மறு நாள், ஞாயிறு காலை 9.00,
Breakfast time, Dining Hall போறாப்ப, அடுத்த room பொண்ணுங்க விசாரிக்க, உடம்பு சரியில்ல, படுத்து இருக்கான்னு சொல்லி சமாளிச்சேன்..அவளுக்கு ரெண்டு பூரி, தட்டுல எடுத்து வர மாதிரி எடுத்து வந்தேன்..சந்தேகம் வரகூடாது பாருங்க?(!)... என்னால சாப்பிட முடியல, சாதாரண நாள்ல, 5, 6 பூரி ன்னு 2 round போவேன்...அன்னைக்கு ஒன்னு கூட இரங்கல..அதையும் Dust bin - ல போட்டேன்...பக்கத்துல அப்பப்ப சும்மா ஒரு கப் , தட்டு சாப்பிட்டு வச்ச மாதிரி வச்சு இருந்தேன் (இப்பதான் சாப்பிட்டு, தூங்குறான்னு சொல்ல!) Sister rounds (christian hostel) வந்தப்ப கேட்டாங்க, அவங்க கிட்டயும் சமாளிச்சேன்.

ஞாயிறு மணி 10

ஏதாவது 1, 2 ன்னு போக, பொண்ணு எழுந்து இருக்கும்னு பார்த்தா...ஹிம்கும்...ஒன்னும் இல்ல..அப்பதான் ஞாபகம் வந்தது. முதல் நாள் சனி அன்று, பிரசாதம் போல கொஞ்சம் சாப்பிட்டதும். நான் தண்ணி
bottle, bottle -ஆ  குடிச்சப்ப, வேணுமா? வேணுமா? கேட்டப்ப..அவ ..வேணாம் வேணாம்னு சொன்னதும்...அடிபாவி!

ஞாயிறு மணி 12, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்!அவளிடம் எ ந்த சலனமும் இல்லை, அசைவும் இல்லை, வைத்துள்ள புளி கரைக்குது...நெஞ்சு பட படைக்க, அவள் போர்வை விலக்கி, கை தொட்டு பார்த்தேன்..அப்பா...கதகதப்பு இருந்தது (வேறு எதும்னா, உடம்பு சில்லுன்னு ஆயுடும்னு படிச்ச ஞாபகம்)..எப்படியெல்லாம் யோசிக்க வச்சுட்டு படுத்து இருக்கா? சத்தியம் வேற...கடவுளே...நீதான் என்ன காப்பாத்தனும். இன்னும் 20 மணி நேரம் போகணுமே....போன் Silent - ல போட்டு , அதையே பாத்துக்கிட்டு, அவங்க அம்மா phone வந்தா சமாளிச்சுகிட்டு, பேசிகிட்டு, முடியல....ஷ்..ஷ்..

எனக்கு அவளை பற்றி நன்றாக தெரியும் என்பதால், அவள் மனதை நோகடிக்க விரும்ப வில்லை, என்னிடம் பேசுவதை தவிர்க்கவே, அவள் மௌன விரத நாடகம் போட்டிருப்பதாக, தோணியது" , திங்ககிழமை பேசுவ இல்லை, இருக்குடி உனக்குன்னு நினைச்சுக்கிட்டேன்"

அன்னைக்கு ஒரு நாள் குளிக்கறது இல்லைன்னு முடிவு பண்ணேன். அவளை விட்டு நகர மனம் இல்லை. சுத்தி, சுத்தி வந்தேன். சாப்பாடும் செல்லல!..

திவ்யா!
இந்த அன்பு ராட்சசிக்காக, நான் ஏன் இவ்ளோ பெரிய risk எடுக்கிறேன்?
இவள் எப்படி என் நட்பு வட்டத்துக்குள் வந்தாள்? என்ன அப்படி ஒரு பந்தம்?" என பலவாறு எண்ணியவரே, என் மனம் 3 வருடம் பின்னோக்கி போனது!(எதையும் சுவாரசியமா சொல்லணும் இல்ல?,திவ்யா எப்ப எழுந்தா? எழுந்தாளா? இல்லையா? என்னாச்சு...தொடர்ந்து படிங்க..உங்களைவிட நானும் ஆவலா இருக்கேன், நான் அனுபவத்த அந்த சுவாரசியம்..tention....அப்படியே உங்களுக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன்..பாக்கலாம்...)"

---தொடரும்

11 கருத்துகள்:

 1. Super Anu... eppo monday Varum ? ..

  Neenga kadhai eludhuradhai pathi konjam yosikkalame....

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. ethellam romba too much anu... Divya va vida, you are giving too much surprise...

  பதிலளிநீக்கு