திங்கள், 12 அக்டோபர், 2015

RIP - ஆச்சிம்மா!



ஆச்சிம்மா பற்றி என் சிறு வயதில் என் அக்காவின் மூலம் தெரிந்து கொள்ள நேர்ந்தது. நான் அவர நேரா பாக்க வில்லை. ஆமாம், ஆச்சிம்மா , தனது மகன் பூபதிக்கு எனது அக்காவின் தோழியை (தஞ்சையை சேர்ந்த), +2 முடித்த உடனே நிச்சயம் செய்தார்கள். அந்த நிச்சய விழாவிற்கு சென்று  வந்தார்களாம், அக்கா ஆச்சி பற்றி நிறைய சொன்னார்கள். ரொம்ப Simple - ஆ வந்து இருந்தார்கள். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. எல்லாரையும் கையை பிடித்து நலம் விசாரித்தார்கள். தன்னை தேடி வந்த அனைவரையும் முகம் சுழிக்காமல் கை கொடுத்து பேசி கொண்டு இருந்தார்கள். பேரன் பிறந்ததும் ராஜராஜன் என்ற தஞ்சை மன்னன் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்கள் என்றதும், ஆச்சி மேல் மரியாதை. பேரன்  பிறந்தவுடனே, "தன் பேரனை டாக்டர்தான், ஆக்குவேன் என்று சொன்னார்களாம்", அக்கா மூலம் கேள்வி பட்டேன். அது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதற்க்கு பிறகு அவர் பேரன் ராஜ ராஜன் டாக்டர் படிக்கிறார், என எதோ பத்திரிகையில் படித்ததும், பேரனை நினைத்தது போல் டாக்டர் ஆகிவிட்டாரே என, எனக்கே சந்தோசமாக இருந்தது. ஆச்சி படம் பாக்கும் பொழுது, அவ்ளோ சந்தோசமா இருக்கும்.  

ஆச்சிம்மா பற்றி கவிதா பாரதி குறிப்பிட்டது


"பத்திரிகையொன்றில் அவரைப்பற்றி கட்டுரை எழுதுவதற்காக ஆச்சியைச் சந்தித்தேன்... தன் வாழ்க்கையைப்பற்றி பேச ஆரம்பித்தவர் கண்கலங்கி, பின் கதறி அழத்தொடங்கிவிட்டார்.


தீராச்சாபம் என்னைப் பிடித்திருக்கிறது என்று கரைந்து ததும்பிய அவரை ஆறுதல்படுத்த என்னிடம் வார்த்தைகளில்லை. வெளிச்சம் தரும் திரியைச் சுற்றி கருப்பு என்பது போல் வலி நிரம்பிய இதயத்தோடுதான் அவர் நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்திருக்கிறார். அவர் சுமந்த துயரங்களுக்காக வருந்தலாம்.. மரணத்திற்காக வருந்த வேண்டிய அவசியமில்லை.. பாவப்பட்ட அந்த ஆத்மாவிற்கு மரணம் விடுதலையாகவுமிருக்கலாம். நீங்கள் ஏங்கிய சாந்தியும், சமாதானமும் இனியேனும் உங்களுக்குக் கிட்டட்டும் தாயே!"

கவிதா பாரதி 
Credit :Tamilbeat

ஆமா ஆச்சி! உங்கள் ஆத்மா சாந்தி அடைய எங்கள் பிரார்த்தனைகள்!.

சிரிக்கவைத்த பல பிரபலங்களின் இன்னொரு பக்கம், சாந்தமும், அமைதியும் இல்லாததாகவே இருக்கிறது. உள்ளத்தில் அழுது, உதடுகள் சிரித்து, நம்மை சிரிக்க வைத்த, ஆச்சிம்மா இப்பொழுது இல்லை.

RIP - ஆச்சிம்மா!

1 கருத்து: