ஞாயிறு, 15 நவம்பர், 2015

DD - 2 (தெய்வீக ராகம்! திவ்யா! -2)

நீங்க திவ்யாவுக்கு கொடுத்த வரவேற்ப்ப நினைச்சு ரொம்ப ஆச்சரியமா போச்சு! எந்த பதிவும் இல்லாத அளவு, இந்த பதிவு Reach ஆயிருக்கு! Thanks to everybody who read continuously!

தெய்வீக ராகம்! திவ்யா! -2!

நான் தஞ்சையில் ஒரு Computer Centre - ல் வேலை பார்த்த விபரம் முன்னரே சொல்லி இருந்தேன்ல, அங்க தான் திவ்யாவ பார்த்தேன். திவ்யாவும் அங்க Class எடுத்துட்டு இருக்கிற விவரம் தெரிஞ்சது. அவ அங்க மூன்றாம் வருடம், B.E படித்து கொண்டே, அங்கு Part time class எடுத்து கொண்டு இருந்தாள். மாலை நேரம் மற்றும் சனி, ஞாயிறு தான் அதிகம் சந்திப்போம். விடுமுறை நாட்களில் பகலில் சந்திப்போம்.

அவள் அப்பா, அவள் ரெண்டாம் வருடம் படிக்கும் பொழுது (ஒரு வருடத்திருக்கு முன்னால்) Heart Attack - ல் இறந்து விட்டதாகவும், அவர் இருக்கும் வரை, அவரது General Store வருமானம், தங்களது தேவைக்கே சரியாக இருந்ததாகவும்,  ரெண்டு அக்காவிற்கு, திருமணம் ஆகி விட்டதாகவும், ஒரு தங்கை இருப்பதாகவும் சொன்னாள்.

சித்தப்பா மற்றும், சித்தப்பாவின், மகன் (அண்ணன்) மேல் பார்வையில் இவர்கள் இருப்பதாகவும் சொன்னாள்.  சித்தப்பா உதவி செய்வதாகவும், ஆனால், College fees அதிகம் ஆதலால், படிப்பை பாதியிலே நிறுத்த சொன்னதால், குடும்ப நண்பர் ஒருவரின் Centre இது, அவர் recommend வேலைக்கு வந்து கொண்டே படிக்கிறேன், என சொன்னாள். B.E படிப்பது அவள் கனவென்றாள். "நீ நேசிச்சு படிக்கிற படிப்பு உனக்கு வந்தே சேரும்னு ஆறுதல் சொன்னேன்."

எனக்கு அம்மா இல்லை, அவளுக்கு அப்பா இல்லை, அது போதுமே! சீக்கிரமே Friends ஆயிட்டோம்.

நான் regular staff , திவ்யா Study Holidays - என்பதால், ரெகுலரா  வந்துட்டு இருந்தா.
அப்ப ஒரு நாள். என்னைக்கும் Use பண்ற System அன்னைக்கு மக்கர் பண்ணதால, வேற ஒரு system மாத்தி உக்காந்தேன். அப்பத்தான், நான் இருந்த System, Key board-க்கு கீழே ஒரு Cover இருந்தத பார்த்தேன். அது கொஞ்சம் கனமாக இருந்தது.

நான் சுத்தி முத்தி பாக்க, எல்லாரும் System-ல Busy-ஆ இருந்ததால் என்னை கவனிக்கவில்லை,ஆனால் எனக்கு பின்னால் நின்ற திவ்யா "என்ன?" என்றாள். "தெரியல"ன்னேன்.அங்க இருந்தவங்க கிட்ட "இந்த Cover உங்களோடதான்னு கேட்டேன்," எல்லாரும் இல்லை என்றார்கள்.

Admin Staff யாரிடமாவது, அந்த Cover கொடுத்துட்டு கிளம்பலாம்னா,  யாரும் இல்லை. எல்லாரும் கிளம்பினதும், அந்த Cover எடுத்து முன்ன பின்ன பார்த்தேன், ஒரு ஊரு, பேரு ஒன்னும் இல்லை. என்னவா இருக்கும்? என திவ்யாவ பார்த்து கேட்டேன், "தெரியல" , பேசாம Admin Table-ல வச்சுட்டு கிளம்புன்னா. எனக்கு அது என்னவா இருக்கும்னு ஒரு தெரிஞ்சுக்க ஒரே ஆவல்,

பிரிச்சு பாப்போமா? ன்னு திவ்யாகிட்ட கேட்டேன், "என்னைய இந்த வம்புல மாட்டி விடாதேன்னு" சொன்னாள். வச்சுட்டு வரியா? நான் கிளம்புறேன்னு கிளம்பி முன்னாடி போனாள். எனக்கு மனசே இல்ல, "கொஞ்சம் பிரிச்சு, அது என்னனு பார்த்துட்டு திரும்ப வைக்கலாம்" னேன். அவள் பதில் சொல்வதற்குள், நானே ஒட்டி இருந்த கவரை, தண்ணி தொட்டு, பிரிச்ச சுவடு தெரியாமல், பிரித்தேன். ஷ் ஷ்..Unauthorized - ஆ ஒரு வேலை செய்ஞ்சா எவ்ளோ டென்ஷன் இருக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சது. முடியல...அவ்!

Cover பிரிக்குமுன், அவள் வேற, யாரோ வர்ற சத்தம் கேக்குதுன்னு திகிலுட்டினாள். "அடிபாவி இங்க என்ன murder - ஆ பண்ணிட்டு இருக்கேன்னு, கொஞ்சம் பேசாம இருக்கியான்னு அதட்டினேன்."

ஆகா!! பிரிச்சவுடன் தெரிஞ்சது, அது ஒரு காதல் கடிதம் என...தெரிஞ்சவங்க யாருக்கோ, எழுதனதுன்னா படிக்க கூடாதுன்னு, மேலோட்டமா பார்த்தேன்.

"அன்புள்ள தீபாவிற்கு", என ஆரம்பித்து, கடிதமும், கவிதையுமா ஒரு 6, 7 பக்கம் இருந்தது.  கடைசி பக்கத்தில், அன்புடன் "சத்யா" என முடித்து இருந்தது. அதை தான் பார்த்தேன், அதற்குள், "நான் கிளம்புறேன் பா" சொல்லிட்டு அவள் ஓட்டமும் நடையுமா கிளம்பினாள்.

 திவ்யா, உனக்கு "தீபா" தெரியுமான்னு கேட்டேன், "தெரியல", சென்டர்-ல எங்க யாரும் அந்த பேர்ல இல்லைன்னா. எனக்கும் தெரிந்து யாருமே இல்லை. "அப்படின்னா யாரோ யார்கிட்டையோ , கொடுக்க சொன்னதா கூட இருக்கலாம்" ..அப்படின்னா இந்த லெட்டெர் முழுசா படிக்கறது தப்பில்லன்னு தோனுச்சு, அவள் கிட்ட சொன்னேன். "அசிங்கமா, இல்ல, அடுத்தவங்க லெட்டெர், எப்படி நாம படிக்கறது?" ன்னு கேட்டா.."ஹலோ!, எனக்கு Love letter எப்படி இருக்கும்னு பாக்கணும் "ன்னேன். கொஞ்ச நேரம் உக்காருன்னு சொல்லி, அவள் உக்காரவச்சு படிக்க ஆரம்பிச்சேன்.

மனசுல நின்ன அந்த வரிகள் மட்டும் உங்களுக்காக...(நாகரிகம் கருதி, அந்த கடிதத்தில் சம்மந்தபட்டவர்களின், சொந்த வரிகளை, இங்கு நான் குறுப்பிடவில்லை!)

"நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது..
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே..
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே.."

என ஆரம்பித்து எழுத பட்டிருந்தது.."அடடே...என்னமா! கவிதை எழுதி இருக்கான் பாரு?" அப்படின்னு திவ்யாவ பார்த்து கேட்டேன், அவ மூஞ்சு ஏகத்துக்கு மாறி இருந்துச்சு, "உன் மூஞ்சி, அது "பூவே, செம்பூவே, சினிமா பாட்டு வரிகள்" ன்னு ..தலையில அடிச்சுகிட்டா...."அடங்கொக்கமக்கா!"ன்னு Continue பண்ணேன்.

"நேற்று போல் இன்று இல்லை,
இன்று போல் நாளை இல்லை.
அன்பிலே வாழும் நெஞ்சில்,
ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால்,
உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும் சொல்லவா".

என ஆரம்பிச்சதுமே, அது எந்த பாட்டுன்னு எனக்கே தெரிஞ்சது, இருந்தாலும் Continue பண்ணேன்..

என்னை நான் தேடி தேடி,
உன்னிடம் கண்டுக் கொண்டேன்.
பொன்னிலே பூவை அள்ளும்,
புன்னகை மின்னுதே.
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே.
அன்பே இன்பம் சொல்ல வா

காதலின் தீபம் ஒன்று,
ஏற்றினாளே என் நெஞ்சில்.
ஊடலில் வந்த சொந்தம்,
கூடலில் கண்ட இன்பம்.
மயக்கம் என்ன,காதல் வாழ்க."

"பொண்ணு , காதல் விளக்க ரொம்ப தூண்டி விட்டு எரிய விட்டா போலவே? ன்னு கேட்டுகிட்டே..திவ்யா முறைக்க, முறைக்க ..அடுத்து படிக்க ஆரம்பிச்சேன்.."

"வைகை கரை காற்றே நில்லு
வஞ்சி தனை பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
வஞ்சி தனை தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளை
கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு"

இன்னும் சில வரிகள், அந்த பையன் சொந்த நடையில் இருக்க, கொஞ்சம் சோகமா இருந்தது....மனசுக்கு கஷ்டமா ஆச்சு.....அந்த எழுத்துக்கள் அவ்ளோ powerful-ஆ இருந்தது..படிக்க படிக்க..அந்த தீபா, சத்தியாவ பாக்கனும்னு ஆர்வம் ஜாஸ்தியாச்சு..அதுவரை கிண்டல் பண்ணின நான்..கொஞ்சம் மரியாதையுடன் அந்த கடிதத்தை தொடர்ந்தேன்..


"உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது ..
இன்பம் பிறந்தது ..

(உறவுகள் தொடர்கதை ....)"

கடைசியா முடித்த அந்த வரிகள், அந்த பெண்ணின் நிலையை, கொஞ்சம் சோகமாகவே காட்டபட்டது ரொம்பவே மனசு கஷ்டம்மாச்சு.
"இன்னும், சில சொந்தவரிகளில் எழுதி முடித்து விட்டு,  குறிப்பு:  நாளைக்கு வரும் பொழுது, Yellow கலர் சுடிதாரில் வரவும்னு, போட்டு இருந்தது."

வாவ்..என்ன லெட்டெர் ?, பயபுள்ள, சினிமா பாட்டு வரியா போட்டு அந்த பொண்ண மடக்கி இருப்பானோ?" என நான் நினைக்கும் நேரத்தில், அவளிடமிருந்து சத்தம்.."படிச்சுட்டியா?"  "போய்,  அந்த table-ல, அந்த Cover, வைச்சுட்டு வா!"ன்னா..

"இல்ல, நான் வைக்க மாட்டேன், வேற யாரும் இந்த படிக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல, யாருன்னு தெரிஞ்சுகிட்டு , அவங்க கிட்ட சேர்ப்போம், இல்லன்னா..அப்படியே விட்டுடுவோம். நல்ல ரெண்டு மனச வேற யாரும் கிண்டல் பண்றது பாவம்.அப்படின்னு, நானே என் Bag -ல போட்டு கிளம்புனேன், "என்னமாச்சும் பண்ணுன்னு அவ வீட்டுக்கு போய்ட்டா"

நான் வீட்டுக்கு போயிட்டேன், அந்த வரிகள் மீண்டும், மீண்டும் மனசுல ஓடிகிட்டே இருந்தது. அந்த தீபா யாராக இருக்கும், அவளுக்கு அப்படி என்ன கஷ்டம்? அப்படி. கொஞ்ச நேரத்துல அப்படியே மறந்துட்டு, சொந்த வேலையில Busyஆயிட்டேன். அப்புறம், நம்ம அண்ணனுமானவர்,(அதான் தம்பி) வீட்டுக்கு வந்தார். அப்பத்தான் அந்த லெட்டெர்  இருக்கிற ஞாபகம் வந்துச்சு. ஏதாவது Money Change வேணும்ன்னா, என் Bag எடுப்பாரு, ஆகா, அந்த Letter பாத்துட்டா...கடவுளே..!

யாரோ, யாருக்கோ எழுதுன லெட்டெர், நான் என் பதறனும்னு, உங்க mind voice எனக்கு கேக்குது. என்னன்னா?, என் தம்பி இருக்காரே, கற்பனையிலே கதாகாலேட்சபம் பண்ணுவாரு!

பொதுவா UG-ல ஒரு 10 நாள் இடைவெளி விட்டுதான் Allied paper exam நடக்கும் இல்ல? ..நான் Statistics Exam (B.sc Maths) முடிச்சு வரப்ப, ஒரு பஞ்சாயத்த வீட்ல கூட்டி (வேற யாரு, நம்ம அக்கா, அண்ணன் ) இருந்தாரு தம்பி, "Regular paper exams,  Continuous- ஆ தான் வரும், இவ்ளோ Gap விட்டு வைக்க மாட்டங்கன்னு"உண்மைய சொல்லு ,  Arear Exam தானே எழுத போனே?"ன்னு கேட்டாரு . ஒரு முறை முறைச்சு, Time table எடுத்து தூக்கி போட்டேன்,

இப்படியானப்பட்டவர் , இந்த கடிதத்தை பார்க்கும் பட்சத்தில், அந்த தீபாவுக்கும், சத்தியாவுக்கும் நான்தான் Courier Service பண்றேன்னு, பஞ்சாயத்த கூட்டுவாரே!, அது மட்டும் இல்ல, அந்த சத்யாவும், தீபாவும், யாருன்னு கேட்டு சாமி ஆடுவறேன்னு, நான் யாரென்னு சொல்றது? அவ்..திகிலாச்சு..உலகத்திலேயே, தம்பி பயந்த ஒரே அக்கா, நாந்தேன்.:-(
பய புள்ள அந்த பக்கம் போனதும், Bag-லேந்து Letter எடுத்து ஒளிய வைக்கனும்னு பார்த்தேன்.

அவர் சாமி கும்பிடும் நேரம் பார்த்து, அந்த letter எடுத்து, பக்கத்தில் அடுக்கி வச்சு இருந்த "தி ஹிந்து"  நியூஸ் பேப்பர் Sunday பேப்பர் (கலர் பேப்பர் இருக்கும்) அடையாளம் பார்த்து சொருகி வைத்தேன். ஷ்! அப்பா!...இப்படி தெரியாத ஆளு, தெரியாத ஒருத்திக்கு எழுதுன லெட்டெர மறைக்கறதுக்கே, குடல் வாய் வழியா வந்துடும் போல இருக்கே! எப்படி இந்த பய புள்ளைகளுக்கு இம்புட்டு தைரியம் வருது!..அடச்சே கருமம் புடிச்ச காதல்..அப்படின்னுதான் (சத்தியமா) நினைச்சேன்!.

அத..இப்ப நினைச்சாலும், சிப்பு சிப்பா(சிரிப்பு ) வருது..சில விஷயங்கள் கற்பனையான்னு நீங்க நினைக்கலாம்?, ஆனா அனுபவித்து சொல்றேன். இதெல்லாம் நடந்துச்சு..

முதல்ல காலையில தீபா? யார்னு கண்டுபிடிக்கணும், அவங்க கிட்ட letter ஒப்படைக்கணும், இல்லைன்னா, dispose பண்ணிடணும்னு நினைச்சுக்கிட்டேன்.

திவ்யா சொன்னது எவ்ளோ நிஜம், "இந்த வம்புல என்னை மாட்டிவிடாதேன்னு சொன்னாளே!" நாம சரியா மாட்டிகிட்டோமே!" அவ பேச்சை பேசாம கேட்டு இருக்கலாம்னு..மனசு பொலம்புது..

அப்பன்னு பார்த்து, நம்ம தாயுமானவர்(அதான் அப்பா) ..அந்த ரூமுக்கு வந்தார், என்ன வேணும்னு பதறிட்டு கேட்டேன். பக்கத்துக்கு வீடு பாய், கடைசி நான்கு நாள் , News paper கேட்டு வந்து இருக்காரு. சொல்லிகிட்டே எடுக்க போக..

அன்னைக்கு. செவ்வாய் கிழமை, .நான்கு நாள் என்றால் சனி, ஞாயிறு, திங்கள் செவ்வாய், (விரல் விட்டு எண்ணுனது நானுல்ல) கடவுளே...பாய்,அவர் பையனுக்கு வேலை வாய்ப்பு பார்க்க, தினம் முதல் நாள் பேப்பர் வாங்கி பார்பார். இப்படி நாலு நாள் சேர்த்து வாங்குவாருன்னு நினைச்சு கூட பாக்கல!.அப்பா பேப்பர் எடுக்க போறாங்க Letter கிழே விழ போகுது..இல்ல பாய் கையிலே கிடைக்கபோகுது..போச்சு...எல்லாம் போச்சு...

நான் மாட்டிகிட்டேனா?
தீபாவ கண்டு பிடிச்சேனா?  Wait பண்ணுங்க ப்ளீஸ்..
                                                                                                                             (தொடரும்..) 

1 கருத்து: