செவ்வாய், 28 ஜனவரி, 2014

வாழும் தேவதைகள்! - 1-அக்கா!


என் அக்காவின் இருபது வயது வரை, வேலை ஆள் உதவி மூலம் நாங்கள் வளர்ந்தோம். வேலை செய்தவருக்கு, சத்துணவு அமைப்பாளராக அரசு வேலை கிடைக்க, அக்கா கல்லூரி படிப்பு முடிந்து இருபது வயதில்,  எனது  பன்னிரெண்டாம் வயதில் அவர் குடும்ப பொறுப்பை சுமந்தார்.

பொறுமைக்கு, மறு பெயர். என் அக்கா!
தனக்காக அவர் எதுவுமே செய்தது இல்லை. வீடு, ஐயா, தம்பி, தங்கைகள் தான் உலகம் என வாழ்ந்தவர். அவர் தோழி Computer Centre வைத்து இருந்தார், அதன் மூலம் சுற்றுலா செல்லும் வாய்ப்பு என எது வந்தாலும் அக்கா என்னை அனுப்பி விடுவார், அவர் Computer கற்றுக்கொள்ள  ஆசை இருந்தும், அவர் சென்றால் சமயத்தில் நான் வீட்டு வேலை செய்ய வேண்டி வரும் என்பதால், என்னை வகுப்புக்கு அனுப்பினார்.

எந்த வேலையும் அவர் என்னை செய்ய சொல்ல மாட்டார், இழுத்துபோட்டுக்கொண்டு எல்லாம் செய்வார். அக்காவுக்கு, தூங்கறவங்கள எழுப்பினால் பிடிக்காது. நானாக எழுந்திருக்கும் வரை, எழுப்ப மாட்டார். வீட்டு வரவு செலவு கணக்குகளை, பைசா பாக்கியில்லாமல், தினம் தினம் எழுதி வைப்பார்(இன்று வரை)

அக்கா, தங்கை எல்லாம் சின்ன விசயத்திற்கும் சண்டை போடும் இந்த காலத்தில், என் அக்கா எனக்கு இன்னொரு அம்மாவாக இருந்து வழி நடத்தினார். ஆம் சமயத்தில் தெய்வங்கள் அம்மாவாக, அக்காவாக, மகளாகவும் நமக்கு அமையும். அது நாம் செய்த பாக்கியம்.



அன்பால் அரவணைத்தாய்..
பாசத்தால் பரவசபடுத்தினாய்..
நீ எங்களை பெற்று எடுக்காத தாய்..

நாங்கள் மேற்படி முன்னேற..
உன் மேற்படிப்பை துறந்தாய்..

உன் சந்தோசத்தை..
எங்கள் முகத்தில் பார்க்க ஆசைபட்டாய்!

எங்கள் கருப்பு வெள்ளை கனவுகளுக்கு..
உன் எண்ணத்தை  வண்ணங்களாய் .. அள்ளி தந்தாய்..

உனக்கு, என் நன்றியை சொல்ல..
இந்த ஜென்மம் போதாதம்மா..

இன்னொரு மனித ஜென்மம் எடுக்க வேண்டும்..
நீ என் மகளாக பிறக்க வேண்டும்.
நான் உன் தாயாக வேண்டும்.

என் அக்கா மாலாவிற்கு.. இந்த பதிவு சமர்ப்பணம்..


WE MISS YOU MANI(MALA) AKKA!


5 கருத்துகள்:

  1. "ஆசிர்வதிக்கப்பட்டவள்" என்னும் தலைப்பை தேர்ந்தெடுத்தன் மூலம் உற்சாகமும்,தன்னம்பிக்கையும் தங்களிடம் நிறைந்திருக்கிறது என்பது வெளிப்படுகிறது.கடந்தகால வாழ்க்கையை திரும்பிபார்ப்பதும்,நம்முடன் இருப்பவர்களின்,இருந்தவர்களின் சிறப்பைப்பற்றி பேசுவது தனிப்பண்பாகும்.தங்களின் தலைசிறந்த பண்புக்கு வாழ்த்துக்கள்.

    "புயல் வீசும்பொழுதும்,தென்றலில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பேசுகிறேன்" என்பதில் தங்களின் போராட்ட குணமும்,பொறுமையும் வெளிப்படுகிறது."புனிதா அக்கா" கட்டுரையில் கணவரின் இயலாமை குறித்து வருந்துவதும்,மாமியாரின் கொடூர செயலை கண்டித்ததிலும் தங்களின் 'நடுநிலை' விளங்குகிறது.

    Flight-ல் குருவிகளுடுனான தங்களின் சேட்டை ரசிக்கும்டியாக இருந்தது.
    " துரை தாத்தாவின் 'நெய் ஊற்றி சாப்பிடும் பழக்கம்'(அம்மாச்சி இறந்த நாளிலும்),உங்கள் தோழி திவ்யா உடனான நிகழ்வுகள்,கம்ப்யூட்டர் சென்ட்டரில் யாரோ யாருக்கோ எழுதிய காதல் கடிதத்தை பிரித்து படித்து பிறகு உரியவர்களிடம் சேர்க்க முயற்சிப்பது,எல்லா நிகழ்வுகளின் முடிவிலும் ஒரு முடிச்சை போடுவது(Twist),திருக்குறளில் முடிப்பது.." இப்படி சுவாரஸ்யங்கள் நிறைந்த தகவல்களை தெகட்டாமல் தந்துள்ளீர்கள்.

    தம்பியுடனான ஒரு பதிவில் 'ஆண்பாவம்' ரேவதியின் சுட்டித்தனத்தை நினைவுப்படுத்தியது.தங்கள் அய்யாவின்(அப்பா) தமிழ் ஆர்வத்தைக்கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.தாங்கள் விரும்புகிற வாழ்க்கையை ஆண்டவன் தங்களுக்கு வழங்குவான்.
    நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு