திங்கள், 27 ஜூலை, 2015

நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா!!

இரவு 8.30, ஹிம்.. ஒரு வழியா ஊருக்கு திரும்ப வாரேன்! திரும்ப வாரேன்! திரும்ப வாரேன்னு சொல்லிட்டு கிளம்பியாச்சு...
Flight-ல ஏறி உக்காந்தா, window seat கிடைக்கல,1st seat -  -ல உக்காந்தேன். பக்கத்துல ரெண்டு Seat - ளையும் 2 ஆசாமிகள்.
அக்கா பையனுக்கு வாங்கின Special things & Jewels இருந்த Bag மடியில வைச்சு இருந்தேன். இம்ஹும் ..Hand Bag தவிர எதுவும் வைத்துக்கொள்ள கூடாது என பிடுங்காத கொறையா Air hostess வாங்கி மேல வைச்சுது.  

அப்பத்தான் லேசா கவனிச்சேன் அந்த ரெண்டு ஆசாமிகளும் அவசர அவசரமா, வேட்டிய போட்டு எதையோ மூடுன மாதிரி இருந்தது.

 Air hostess cross - பண்ணும் போதும் இழுத்து இழுத்து மூடி வைக்க!..பக் பக் ன்னு இருந்துச்சு... அவங்க பாக்காதப்ப லேசா ஒர கண்ணால அது என்னன்னு  உத்து பார்த்தேன். ஒரு  Black color Bag... மட்டும் தெரியுது, ரெண்டாவது ஆசாமி மூடுனது ஒன்னும் தெரியல! 

அட பாவிகளா!  ஒளிச்சு வைக்கற மாதிரி என்னடா வச்சு இருக்கீங்கன்னு பக்குன்னுச்சு! ரெண்டு பெரும் பேசிக்கிட்டாலும் தமிழனான்னு கண்டு பிடிக்கலாம். பேசவே இல்லை.. எப்படி கண்டு பிடிக்கறது? யாரா இருப்பாங்கன்னு திகிலோட ஒக்காந்து இருந்தேன்.


வேஷ்டி, சட்டை.. கண்டிப்பா  தமிழன்தான், எதோ பத்திரமா things வச்சு இருப்பாங்கன்னு கொஞ்சம் மனச தேத்திக்குட்டு உக்காந்து இருந்தேன்!  light வேற Off பண்ணிட்டாங்க.  சின்ன வெளிச்சத்துல ஒன்னும் சரியா தெரியல. தூங்கலாம்னு பார்த்த tension-ல தூக்கம் வேற வரல.

ஒரு 2 மணி நேரம் முடிந்து இருக்கும், லேசா ஓர கண்ணால நோட்டம் விட்டபடியே நான் இருக்க, கொஞ்ச நேரத்தில். கடைசி ஆசாமி குனிந்து Bag Open 
பண்ணினான். எதோ 2, 3 box எடுத்து கீழ வைக்க. எனக்கு கிளி பிடிச்சுடுச்சு. பேசாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு சிவனேன்னு ஊர்ல இருந்து இருக்கலாம். இப்படி வந்து மாட்டிகிட்டோமே! கடவுளே நீதான் துணைன்னு உக்காந்து வேடிக்கை (??) பாக்க ஆரம்பிச்சுட்டேன். 

பக்கத்துல ஒருத்தி உக்காந்து இருக்கிற பயமே இல்லை. படுபாவிங்க! அடுத்து எனக்கு அடுத்த ஆளு ஒரு அவன் Bag-லேந்து ரெண்டு மூணு  Box எடுத்து  வைக்க. ரைட்டு!...அம்ம்புட்டுதான்! ரெண்டு பெரும் எதோ பிளான் பண்ணி வந்து இருக்காங்கன்னு முடிவு பண்ணேன்! 
நிறைய சினிமா வேற பாத்ததுல. மனசு பட படன்னு அடிச்சுக்குது. 

அதுக்கு மேல என்னால முடியல...அப்படியே நைசா போய் Air hostess-ட்ட சொல்லிடலாம்னு seat -ட்ட விட்டு எழுந்து toilet போற மாதிரி போனேன்!

அங்க பொய் நின்னுட்டு நைசா திரும்பி என் Seat ஒரு look 
விடலாம்னு பார்த்தா! எனக்கு பக்கத்துல உக்காந்து இருக்கிற ஆளு எட்டி பாக்க, பக்குன்னு ஆயிடுச்சு..

என்னை  air hostess பாக்க...நான் "Can i have warm water pls?" கேட்டேன். கொடுத்தவுடன் வாங்கி குடிச்சுட்டு என் Seat 

வந்துட்டேன். 

அடிப்பாவி! லட்சியம், குறிகோள்னு இப்படி அல்லாடிகிட்டு நிக்குறியே! 
ஏக புலம்பல் மனசுல...காதல் பிரிவுல தான்  ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு வருசமா தெரியுமா? இந்த மாதிரி நேரத்துலயும் தான். ஹிம்  

ஒரு மணி நேரத்தில் Flight, Chennai சேர்ந்துடும்னு அங்க 

Pilot announce பண்ணார். 


அதை நீ எப்படியா முடிவு பண்ற? முடிவு பண்றவனுங்க இங்க 
இருக்கானுங்கன்னு! என் Mind voice கேட்டுச்சு(எந்த மாதிரி நேரத்திலையும் இந்த நக்கலுக்கு 
மட்டும் கொறைச்சலே இருக்காது..)

சரியா ஒரு ஐந்து நிமிஷம் ஆயிருக்கும...அந்த ஓரத்துல உக்காந்து இருக்குறவன் சட்டைய கிழட்டுனான். ஆஅஹா! கலங்கிடுச்சு.......அக்கம் பக்கம் பார்த்தா!எல்லாம் பத்து நாள் தூங்கதவங்க மாதிரி தூங்க...

நல்ல வேலை tea shirt மாதிரி எதோ போட்டு இருந்தான்..குனிந்து ஒரு Box பிரித்தான் 
?


?


?


?

எல்லாம் Branded Watches. எடுத்து shoulder வரைக்கும் மாற்ற மாதிரி தெரிஞ்சது. வரிசையா எடுத்து shoulderலேந்து மாட்டினான். எனக்கு அடுத்த ஆள், அதே மாதிரி பிரித்து எடுத்து மாட்ட..அட பாவிகளா! நீங்க குருவிங்களாடா?? என்னைய ஒரு 4 மணி 
நேரம் படாத பாடு படுத்துநீக. நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா!. பெருமூச்சு விட்டேன். 

நான் எதோ மாட்டி விட்டுடுவேன்னு, நினைச்சானோ என்னவோ, 
என்கிட்டே "எல்லாம் சொந்த காரங்களுக்கு..Customs புடிச்சா கஷ்டம்." அதான்னு சொல்ல..நான் ஒரு reaction காட்டிக்கல.

அப்புறம் எங்க எங்க எத எத மாட்டுனானுங்க  தெரியாது. கடைசியா எழுந்து ஒருவன் வேஷ்டியில toilet போனவன், Pant போட்டு திரும்ப வந்தான். 

ஒரு வழிய சென்னை வந்து கேட்டேன். எப்படி இவ்ளோ branded watch அப்படி மறைச்சு எடுத்து வராங்க Scanning machine -ல தெரியாதான்னு. அதுல Battery கிழட்டி விட்டால் கண்டு பிடிக்க முடியாது என்றார்கள்.  

சட்டம் தன கடைமையை செய்து கொண்டு இருக்க..குருவிகளும் இப்படி பறந்து கொண்டுதான் இருக்குன்னு அப்பத்தான் தெரிஞ்சது. 

திருக்குறள்:44 - குற்றம் கடிதல்
  
குற்றமே காக்க பொருளாக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.


விளக்கம்:

தனக்கு முடிவைத்தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே, குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக்கொள்க.



புதன், 15 ஜூலை, 2015

சிங்கப்பூர்- நினைத்தாலே இனிக்குமா? - 2

ஐயா, அண்ணன், தம்பி  எனக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்தார்கள்.

மனசெல்லாம், Chinese new year - February என்று சொல்லி கொண்டு இருந்தது.

Singapore வேலைக்கெல்லாம் போக வேண்டாம், திருமணம் செய்து விட்டு போகலாம் என்றார்கள். நீங்க பாட்டுக்கு Alliance பாருங்க, அமையட்டும் பண்ணிக்கறேன்ன்னு சொல்லிட்டு, என் வேலை முயற்சி தொடர்ந்தேன்.  

எனது "வாழும் தேவதை" அக்கா, திருமணம் முடிந்து குழந்தை இல்லாமல் , 5 வருடம் கழித்து கர்ப்பமாக இருந்தார்கள்.

வேலை சந்தர்ப்பம், விட்டால் கிடைக்காது. "நீ முயற்சி செய்" என அக்கா சொல்லியதால் கிளம்பி விட்டேன்.

Dotnet Interview-க்கு என்னை முழுவதுமாக தயார் செய்துகொண்டேன்.

மனசெல்லாம்.அவர்களை விட்டு செல்கிறோமே என்கிற கஷ்டம் இருந்தது. அக்காவின் மாமியார் அவர்கள் நன்றாக கவனித்து கொண்டதால், நான் கிளம்பி விட்டேன்.
வந்து 1 மாதத்தில் Dotnet - Position வேலை கிடைத்தது. வேலை உடனே ஆரம்பிக்கணும்னு சொல்லி, மறுநாளே வேலை ஆரம்பிக்க சொல்லி விட்டார்கள்.

ஆனால் , company,  Employment Pass Apply பண்ணியது ,Reject ஆகிவிட்டது. திரும்ப Appeal பண்ணினார்கள். அதுவும் Reject ஆகிவிட்டது, கிட்டத்தட்ட 2 மாதம் vIsa extension வாங்கினேன். Local Singaporeans / Permanent Resident வேலை இல்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும் என எனது Company-க்கு Minsitry of Manpower லிருந்து Reply வந்ததாக சொன்னார்கள்.

விசாரித்த பொழுது, Employment pass நிறுத்தவில்லை. கிடைப்பவர்களுக்கு கிடைத்து கொண்டுதான் இருக்கிறது என்றார்கள். ஒன்று, இரண்டு பேர் Employment Pass Approve -ஆக வேலைக்கு வந்ததையும் என்னால் பார்க்க முடிந்தது. அப்ப, எனக்கு மட்டும் ஏன் இப்படி? தெரியவில்லை. நம்ம நேரம் பாருங்க, ஒரு அடி ஏறுனா, ரெண்டு அடி சறுக்குது.. அந்த நேரம் ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. Free - யா விடு மாமு..

ICA - Immigration Checkpoint Authority சென்று விடாமல் Visa extenstion வாங்கினேன், 3 மாதம் முடிந்தது. பதினைந்து நாட்கள் கொடுத்து இது தான் கடைசி Extension என்றார்கள்.

திரும்பவும் போனேன். கடைசிக்கு முதல் நாள் வேண்டும் என. விசா Sunday முடிய, நான் Saturday - Extension Application உள்ளே கொடுத்தேன். அவர்கள் சரியாக கவனிக்காததால் என்னை, Monday வந்து Passport Collect பண்ணிக்க சொன்னார்கள்.

எனது அலுவலக நண்பர்கள் , "இனி நான் Singapore வரவே முடியாது", நிச்சயம் Remarks இருக்கும் என பேசிகொண்டார்கள்.

எப்படியும் Visa கிடைச்சுடும்னு நினைத்து போனால், தர முடியாது என்றார்கள். அப்படி என்றால் நீங்க Saturday சொல்லி இருக்கணும். இப்ப என்கிட்ட Visa/ Ticket இல்லை. நேற்றோடு முடிந்தது. அப்புறம் எப்படி நான் போவது?
என்றேன். இரண்டு நாளில் ஒரு தேதியில் Ticket Book பண்ணி விட்டு வர சொன்னார்கள். அந்த தேதி வரை விசா தருவதாக சொன்னார்கள். நான் 15 நாள் கழித்து Ticket book பண்ணிவிட்டு வந்து நின்றேன். Officer Visa கொடுத்து விட்டார்...

English communication,
இந்த மாதிரி நேரத்துல நாம் பேச நினைச்சாலும் "தொண்டைக்கும், வயிற்றுக்கும் உருவமில்லா ஒரு உருளையும்  உருளும்(வைரமுத்து சொன்ன மாதிரி )" பாருங்க..
ஷ் அப்பா..கொஞ்சம் பேச தெரிந்தாலும்,  நம்ப செல்லம் Inferiority Complex நம்மள புடிச்சு இழுக்கும் பாருங்க..அடடே...
விசா வாங்க நான்  Normal Englsih Conversation, கீழே உள்ளபடி பேசி இருக்கணும்
If you could have told me earlier, I would have gone by this time. You are rejecting my visa in last minute, then it will be very difficult for me to get ticket. You pls help to provide at least 1 week visa."

சிங்கப்பூர் - Company வெளியே Local English பேசுவது மிக சுலபம் என தெரிந்து கொண்டேன். Can / Can not use பண்ணி நாம் சுலபமாக பேசிவிடலாம்.எப்படி தெரியுமா?
எப்படி பேசி Visa வாங்கினேன்னு உங்களுக்கு சொல்றேனே..என் உரையாடல்.
I can go India yesterday if you cannot give visa on Saturday. How can I go now without visa and ticket? எப்புடி?
இப்படிதான் உரையாடலை முடித்து கொள்கிறார்கள்.

என் ஆரம்ப கால உரையாடல் இப்படிதான் இருந்தது.

அந்த மாதிரி சமயத்தில், English Conversation, மிகவும் சிரமமாக இருக்கும்.  அங்கே IT Company -ல் Business Analsyt  -ஆக வேலை பார்த்த ஒரு பெண்ணிடம், (அதுவும்  UK client) Telephone / video conference கலக்குவார்.    "எப்படிங்க தமிழ் மீடியம் படிச்சு , Foreign Client  சமாளிக்கறது?"என கேட்டேன்.

நானும் உங்கள மாதிரிதான் ஐந்து வருடங்களுக்கு முன், புலம்பிக்கொண்டு இருந்தேன் என்றார். ஆச்சர்யமாக இருந்தது.
அவரின் முதல் Interview (Office Admin - With local company - Viruthu Nagar) ,
அவர்க்கு கேட்கப்பட்ட  கேள்விகளில் ஒன்று  "Telephone Conversation "உங்கள்
Boss வெளியே சென்று இருக்கிறார் என்றால், ஆங்கிலத்தில் எப்படி சொல்வீர்கள் என கேட்டார்களாம்?"
அவரின் பதிலை கேட்டு நான் ஆடி போயிட்டேன்.
அவரின் பதில் " My boss is out of order"
கொஞ்சம் கூட தயங்காமல் என்னிடம் சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை.  முதல்ல Inferiority complex தூக்கி போடுங்க, எல்லாம் தானா  வரும் என சொன்னார்கள். அவரின் முயற்சி எப்படி பட்டதாக இருக்கும் என யோசித்து கொண்டே இருந்தேன்.  என்னுள் சில தெளிவு கிடைத்தது 

வேலை இருக்கிறது, Employment Pass இல்லை என்றால் எப்படி இருக்கும்?
எப்படியோ Visa வாங்கி 4 மாசம் , ​​​____(?)  பார்த்துட்டு வந்துட்டேன்.
அந்த நேரம் என் அக்காவிற்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. என் கடமை என்னை அழைப்பதாக எண்ணிக்கொண்டு கிளம்பினேன்.

இந்த தடவை கவலை இல்லை. முயற்சி வெற்றி. அதன் Outcome  நம்ம கையில் இல்லை என தேற்றி கொண்டேன். அக்காவின் குழந்தை பார்க்கும் ஆவலாய் India திரும்பினேன்.



ஐயா சொல்லுவார்கள், நமக்கான வேலை, நமக்கான வாழ்க்கை துணை இந்த ரெண்டில் ஒன்று சரியாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நரகம்தான் என. 

அது மட்டும் அல்ல , Flight -ல பக்கத்துல அமர்ந்து வரும் மனுசனாளையும், வாழ்கை இல்லை..அந்த பயணம் முழுவதுமே..நரகம் தான்னு எனக்கு அந்த விமான பயணம் அமைந்தது...உஷ் அப்பா ....என்ன நடந்தது தெரியுமா??

மீண்டும் Singapore வந்தேனா? இல்ல திருமணம் ஆனதா?  Pls wait...

குறள்:612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
        
குறள் விளக்கம்:
செயலைத் தொடங்கிக் குறையாக விட்டவரை இவ்வுலகம் கைவிடும்; ஆகையால், செயலில் முயற்சி இல்லாது இருத்தலைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ளி, 3 ஜூலை, 2015

சிங்கப்பூர்- நினைத்தாலே இனிக்குமா?


சிங்கப்பூர் அழகு ..சுத்தம் ..
மனசில் பசக்குன்னு ஒட்டிக்குச்சு ..
நினைத்தாலே இனிக்கும், நிசம் தான், சொர்க்கம் போல தென்கிழக்காசியாவில் பூலோக சொர்க்கமாக போற்றப்படும் சிங்கப்பூர் , 
அடி ஆத்தி எம்புட்டு அழகு! ஆஹா!  Super..
இப்படி ஒரு சுத்தமா! வாய் பிளந்தேன்!

சிங்கப்பூர் பற்றி நாம் தெரிந்து கொண்டது, மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடு. விடுதலைக்குப் பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினைத் தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். இவர்களுக்கு அடுத்ததாக மலாய், மற்றும் சிங்கப்பூர் இந்தியர்கள் இருகின்றனர்.  மக்கள்தொகை: 5,183,700(2011 year) அவ்வளவு தான்!.  ஆனால் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் நிறைய..

இங்க நமக்கு ஒரு இடம் இல்லாம போயிடுமா?  என்ற நம்பிக்கையில், வேலை தேட ஆரம்பித்தேன். Online Job websites apply பண்ணினேன். நாள் கட கடவென, நகர தொடங்கியது. Enquiry பண்ணி phone call கூட எதுவும் வர வில்லை. நிறைய தடவை போன்ல ஏதும் பிரச்சனையான்னு Check பண்ணது தான் மிச்சம்..
இம் ஹிம்!
Job Agencies / Consultants நேரவே பார்த்து வேலை வாய்ப்பு தேடலாம்னு கிளம்பினேன். Internation Plaza - Tanjong Pagar ல் நிறைய Consultants இருக்காங்க அங்க போய் பாருங்கன்னாங்க.
International Plaza - Reception - ல Consultant list வாங்கி நேராக சென்று apply செய்தேன்.  இந்த தகவல் எல்லாம் ஏன் சொல்றேன்னா..பய புள்ளைங்க யாரவது, சிங்கப்பூர்  வேலை முயற்சி பண்ணிங்கண்ணா உதவுமேன்னு தான்!

International Plaza building:..

 அங்க, "4வது Quarter வேலை வாய்ப்பு கம்மியாக தானே இருக்கும். இந்த நேரத்தில் ஏன் வந்தீர்கள் என கேட்டார்கள்? " ( நான் October மாதத்தில் சென்று இருந்தேன்).  Chinese new year - February வருது, அதற்க்கு பிறகு வேலை வாய்ப்பு அதிகம் இருக்கும், இப்ப சரியான நேரம் இல்லையே ஒன்னு, ரெண்டு பேரு சொன்னார்கள் வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. 

ஒரு மாதம் முடியும் நேரம், ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான் என்கிற நிலைமை. இந்த மாதிரி நேரத்தில், வேலை கிடைக்கலங்கிற விஷயம் பெருசா நிக்காது. பெருசா Build up பண்ணி வந்தோமே, ஊர்ல போய் அவுக முகத்தில முழிக்கறது எப்படிங்கறதுதான்! இதுக்கு இடையில, ஐயா, அண்ணன், தம்பி தீவிரமா, மாப்பிள்ளை பார்த்தார்கள். இம்ஹும் ஜாதகம் பொருந்தல. எல்லா ஜோசியரையும் போய் பாத்தாக! அவுக சொன்னகளாம்.."ஆமா ஜாதக கட்டம் House full, ராகு, கேது, சனி, செவ்வாய் எல்லாம்  உக்காந்து இருக்காகன்னு!..நடக்குமா? நடக்க விட்டும்ம்மான்னேன்!  எம்புட்டு பாசம்!(?) நம்ம கட்டத்துல உக்காந்து இருக்காக! 


நாமதான் ஒரு குறிக்கொளோட இருந்தோமா அத பத்தி எல்லாம் கவலை படவே இல்லை..
நான் , தீவிர ஆஞ்சநேயர் , பிள்ளையார் பக்தை. நேரா Little India -ல இருக்கிற வீர காளியம்மன் கோயில் போய் , ஆஞ்சநேயர் பார்த்து, எதோ அவருதான் என்னைய சிங்கப்பூர் வர சொன்ன மாதிரியும், போய் உரிமையா சண்டை போட்டேன். நம்மக்கிட்ட , வேண்டுதலே தனி "சாமி நீ அத பண்ணு , நான் இத செய்யறேன்னு"  பழக்கம் எல்லாம் இல்லை. முன்னாடியே நேர்த்திகடன் பண்ணிட்டு, நீங்க பாத்து பண்ணுங்கன்னு வேண்டுவேன் "

வீர காளியம்மன் கோயில்



அப்பதானே அவுங்களும் Commit ஆனதுக்கு ஏதாவது பண்ணுவாக!(?)
உஷ் அப்பா!

தம்பி, முயற்சி பண்ணது போதும் India கிளம்புன்னாக!
என் பேச்ச நானே கேக்கமாட்டேன்..இந்த விசயதுல ஹிம்..
சிங்கப்பூர் விசா extend பண்ண ஏதாவது குறுக்கு வழி இருக்கான்னு check பண்ணி பார்த்தேன். பக்கத்து நாட்டுக்கு போயிட்டு திரும்ப வந்தா இன்னொரு மாசம் கிடைக்கும்னாக!...அது போதாதா! அப்படியே எங்க சித்தி, மலேசியால இருந்தாகளா! மலேசியா புறப்பட்டேன்.
   
அங்கு 3 நாட்கள் டேரா போட்டு, திரும்ப வந்தேன்.

மீண்டும் தேடினேன், தேடினேன்! 
ஓடினேன் ஓடினேன்!
சிங்கப்பூர் எல்லைக்கே ஓடினேன் வேலை தேடி!
விசா முடிந்ததால் திரும்ப வந்து விட்டேன்! 


ஆம்..மனசுல பாரத்தோட, இந்தியா திரும்பினேன்! 

மனசெல்லாம், Chinese new year - February, Chinese new year - February என்று சொல்லி கொண்டு இருந்தது.  இரெண்டே மாதத்தில்,  இன்னொரு தடவை Try பண்றேன்னு சொன்னேன்!

என்ன ஆச்சு தெரியுமா? Pls wait...

திருக்குறள் 616
:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

பொருள்:
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

செவ்வாய், 30 ஜூன், 2015

என் இலட்சியத்தை தேடி - 2!

இரண்டு shift வேலை, 7 am to  2 pm, 3pm to 10 pm, நான் 7 am to  2 pm Shift எடுத்து என் வேலையை ஆரம்பித்தேன். தஞ்சையில் 5.45 பஸ்சில் கிளம்பினால் தான் 7 மணிக்கு வர முடியும்.கொஞ்சம் சிரமமாக இருந்தது.  ஆரம்பத்தில்  வேலையில் ஒரு doubt , தஞ்சையில் centre -ல் தெரிந்த பெண்ணிடம் கேட்க போய், அந்த பெண் என்னிடம் "எப்படி சமாளிக்க போறீங்க?பேசாம வேலைய விட்டுங்கன்னார்.."  கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.


அதுக்கெல்லாம் கவலை படலை. இதுக்கெல்லாம் முடங்கி உக்காந்துட முடியுமா? ஒண்ணுமே தெரியலன்னா OK.  Practical experience, இல்லாததால சில கஷ்டம். எப்படியும் சமாளிக்கணும்னு  தோணுச்சு 
 
எனது morning Shift முடிந்து, மதியம்  3pm to 7 pm, என் வேலையை continue பண்ணினேன்.. தெரியாததை 2nd shift நபர்களிடம் கற்றுக்கொண்டு , என் வேலையை முடித்தேன். அதாவது 7 மணி நேரம் முடிக்க வேண்டியதை, கற்று கொண்டு 12 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய நிலைமையில் இருந்தேன். 2nd Shift நபர்கள் என்னை training எடுக்க வந்தவராக தான் நினைத்து இருப்பார்கள். வேற எதுவுமே பேச மாட்டேன், ரொம்ப அமைதின்னு நினைச்சு இருப்பாங்க. ஆனா உண்மை என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும்.


 3 மாதத்தில் 1st Shift - ல் 7 மணி நேரத்தில் வேலையை முடிக்கும்படி தேறினேன். நல்லபடியா ஒரு வருடம் 6 மாதம் ஓடியது.


 
மனதெல்லாம், சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் ஒன்றரை வருட experience போதுமேன்னு நினைத்தேன். வேலையை விட்டேன். வேலை பார்த்ததெல்லாம் தஞ்சை , திருச்சி, local company, சுத்தமா English communication கிடையாது. அவ்வளவாக பேசவும் தெரியாது. Tamil Medium ன்னு ஏற்கனவே புலம்புனத படிச்சு இருப்பீங்களே..இம். ... Chennai, Bangaloreன்னு Interview Attend பண்ணி இருக்கணும். அதுவும் இல்லை..எவ்ளோ தைரியம் பாருங்க? Singapore போகணும்னு முடிவு பண்ணிட்டேன் .
 
என் தொல்லை தாங்காமல், நம்ப அண்ணனுமானவர் (அதான் தம்பி)  Visa ஏற்பாடு பண்ண, ஏதோ  தைரியம்  flight book பண்ணி கிளம்பிட்டேன். அதுவும் local flight எல்லாம் இல்லை ,  Singapore Airlines...வேலை கிடைச்சுடும்னு அம்புட்டு நம்பிக்கை!
 
முதல் விமான பயணம். அதை அனுபவிக்கும் மன நிலையில் நான் இல்லை. கிளம்பி விட்டோம்? சாத்தியமா? மனதில் ஆயிரம் கேள்விகள்..
அந்த flight முழவதும், என் கனவால் நிரம்பியதாகவே இருந்தது.
 
Singapore Visa 15 நாட்கள் தான் கொடுத்தார்கள், மீண்டும் 15 நாள் extend பண்ணலாம் என்றார்கள். ஒரு மாதத்தில் வேலை வாங்க வேண்டும்??
 

என் கனவு நிறைவேறியதா? Pls wait...

 

திருக்குறள் :  591:

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
  

பொருள் :

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.