ஐயா, அண்ணன், தம்பி எனக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்தார்கள்.
மனசெல்லாம், Chinese new year - February என்று சொல்லி கொண்டு இருந்தது.
Singapore வேலைக்கெல்லாம் போக வேண்டாம், திருமணம் செய்து விட்டு போகலாம் என்றார்கள். நீங்க பாட்டுக்கு Alliance பாருங்க, அமையட்டும் பண்ணிக்கறேன்ன்னு சொல்லிட்டு, என் வேலை முயற்சி தொடர்ந்தேன்.
மனசெல்லாம், Chinese new year - February என்று சொல்லி கொண்டு இருந்தது.
Singapore வேலைக்கெல்லாம் போக வேண்டாம், திருமணம் செய்து விட்டு போகலாம் என்றார்கள். நீங்க பாட்டுக்கு Alliance பாருங்க, அமையட்டும் பண்ணிக்கறேன்ன்னு சொல்லிட்டு, என் வேலை முயற்சி தொடர்ந்தேன்.
எனது "வாழும் தேவதை" அக்கா, திருமணம் முடிந்து குழந்தை இல்லாமல் , 5 வருடம் கழித்து கர்ப்பமாக இருந்தார்கள்.
வேலை சந்தர்ப்பம், விட்டால் கிடைக்காது. "நீ முயற்சி செய்" என அக்கா சொல்லியதால் கிளம்பி விட்டேன்.
Dotnet Interview-க்கு என்னை முழுவதுமாக தயார் செய்துகொண்டேன்.
மனசெல்லாம்.அவர்களை விட்டு செல்கிறோமே என்கிற கஷ்டம் இருந்தது. அக்காவின் மாமியார் அவர்கள் நன்றாக கவனித்து கொண்டதால், நான் கிளம்பி விட்டேன்.
வந்து 1 மாதத்தில் Dotnet - Position வேலை கிடைத்தது. வேலை உடனே ஆரம்பிக்கணும்னு சொல்லி, மறுநாளே வேலை ஆரம்பிக்க சொல்லி விட்டார்கள்.
ஆனால் , company, Employment Pass Apply பண்ணியது ,Reject ஆகிவிட்டது. திரும்ப Appeal பண்ணினார்கள். அதுவும் Reject ஆகிவிட்டது, கிட்டத்தட்ட 2 மாதம் vIsa extension வாங்கினேன். Local Singaporeans / Permanent Resident வேலை இல்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும் என எனது Company-க்கு Minsitry of Manpower லிருந்து Reply வந்ததாக சொன்னார்கள்.
விசாரித்த பொழுது, Employment pass நிறுத்தவில்லை. கிடைப்பவர்களுக்கு கிடைத்து கொண்டுதான் இருக்கிறது என்றார்கள். ஒன்று, இரண்டு பேர் Employment Pass Approve -ஆக வேலைக்கு வந்ததையும் என்னால் பார்க்க முடிந்தது. அப்ப, எனக்கு மட்டும் ஏன் இப்படி? தெரியவில்லை. நம்ம நேரம் பாருங்க, ஒரு அடி ஏறுனா, ரெண்டு அடி சறுக்குது.. அந்த நேரம் ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. Free - யா விடு மாமு..
திரும்பவும் போனேன். கடைசிக்கு முதல் நாள் வேண்டும் என. விசா Sunday முடிய, நான் Saturday - Extension Application உள்ளே கொடுத்தேன். அவர்கள் சரியாக கவனிக்காததால் என்னை, Monday வந்து Passport Collect பண்ணிக்க சொன்னார்கள்.
எனது அலுவலக நண்பர்கள் , "இனி நான் Singapore வரவே முடியாது", நிச்சயம் Remarks இருக்கும் என பேசிகொண்டார்கள்.
எப்படியும் Visa கிடைச்சுடும்னு நினைத்து போனால், தர முடியாது என்றார்கள். அப்படி என்றால் நீங்க Saturday சொல்லி இருக்கணும். இப்ப என்கிட்ட Visa/ Ticket இல்லை. நேற்றோடு முடிந்தது. அப்புறம் எப்படி நான் போவது?
என்றேன். இரண்டு நாளில் ஒரு தேதியில் Ticket Book பண்ணி விட்டு வர சொன்னார்கள். அந்த தேதி வரை விசா தருவதாக சொன்னார்கள். நான் 15 நாள் கழித்து Ticket book பண்ணிவிட்டு வந்து நின்றேன். Officer Visa கொடுத்து விட்டார்...
English communication,
இந்த மாதிரி நேரத்துல நாம் பேச நினைச்சாலும் "தொண்டைக்கும், வயிற்றுக்கும் உருவமில்லா ஒரு உருளையும் உருளும்(வைரமுத்து சொன்ன மாதிரி )" பாருங்க..
ஷ் அப்பா..கொஞ்சம் பேச தெரிந்தாலும், நம்ப செல்லம் Inferiority Complex நம்மள புடிச்சு இழுக்கும் பாருங்க..அடடே...
விசா வாங்க நான் Normal Englsih Conversation, கீழே உள்ளபடி பேசி இருக்கணும்
சிங்கப்பூர் - Company வெளியே Local English பேசுவது மிக சுலபம் என தெரிந்து கொண்டேன். Can / Can not use பண்ணி நாம் சுலபமாக பேசிவிடலாம்.எப்படி தெரியுமா?
எப்படி பேசி Visa வாங்கினேன்னு உங்களுக்கு சொல்றேனே..என் உரையாடல்.
I can go India yesterday if you cannot give visa on Saturday. How can I go now without visa and ticket? எப்புடி?
இப்படிதான் உரையாடலை முடித்து கொள்கிறார்கள்.
என் ஆரம்ப கால உரையாடல் இப்படிதான் இருந்தது.
அந்த மாதிரி சமயத்தில், English Conversation, மிகவும் சிரமமாக இருக்கும். அங்கே IT Company -ல் Business Analsyt -ஆக வேலை பார்த்த ஒரு பெண்ணிடம், (அதுவும் UK client) Telephone / video conference கலக்குவார். "எப்படிங்க தமிழ் மீடியம் படிச்சு , Foreign Client சமாளிக்கறது?"என கேட்டேன்.
நானும் உங்கள மாதிரிதான் ஐந்து வருடங்களுக்கு முன், புலம்பிக்கொண்டு இருந்தேன் என்றார். ஆச்சர்யமாக இருந்தது.
அவரின் முதல் Interview (Office Admin - With local company - Viruthu Nagar) ,
அவர்க்கு கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று "Telephone Conversation "உங்கள்
Boss வெளியே சென்று இருக்கிறார் என்றால், ஆங்கிலத்தில் எப்படி சொல்வீர்கள் என கேட்டார்களாம்?"
அவரின் பதிலை கேட்டு நான் ஆடி போயிட்டேன்.
அவரின் பதில் " My boss is out of order"
கொஞ்சம் கூட தயங்காமல் என்னிடம் சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை. முதல்ல Inferiority complex தூக்கி போடுங்க, எல்லாம் தானா வரும் என சொன்னார்கள். அவரின் முயற்சி எப்படி பட்டதாக இருக்கும் என யோசித்து கொண்டே இருந்தேன். என்னுள் சில தெளிவு கிடைத்தது
எப்படியோ Visa வாங்கி 4 மாசம் , ____(?) பார்த்துட்டு வந்துட்டேன்.
இந்த தடவை கவலை இல்லை. முயற்சி வெற்றி. அதன் Outcome நம்ம கையில் இல்லை என தேற்றி கொண்டேன். அக்காவின் குழந்தை பார்க்கும் ஆவலாய் India திரும்பினேன்.
ஐயா சொல்லுவார்கள், நமக்கான வேலை, நமக்கான வாழ்க்கை துணை இந்த ரெண்டில் ஒன்று சரியாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நரகம்தான் என.
அது மட்டும் அல்ல , Flight -ல பக்கத்துல அமர்ந்து வரும் மனுசனாளையும், வாழ்கை இல்லை..அந்த பயணம் முழுவதுமே..நரகம் தான்னு எனக்கு அந்த விமான பயணம் அமைந்தது...உஷ் அப்பா ....என்ன நடந்தது தெரியுமா??
மீண்டும் Singapore வந்தேனா? இல்ல திருமணம் ஆனதா? Pls wait...
குறள்:612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
குறள் விளக்கம்:
செயலைத் தொடங்கிக் குறையாக விட்டவரை இவ்வுலகம் கைவிடும்; ஆகையால், செயலில் முயற்சி இல்லாது இருத்தலைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வளவு சிக்கல் உள்ளதையும், அதை மன உறுதியுடன் சமாளித்ததிற்கும் பாராட்டுகள்... மனதில் உள்ள வலி புரிகிறது... ஆனால் அனைத்தும் ஜெயமே... தொடர்கிறேன்...
பதிலளிநீக்கு