திங்கள், 27 ஜூலை, 2015

நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா!!

இரவு 8.30, ஹிம்.. ஒரு வழியா ஊருக்கு திரும்ப வாரேன்திரும்ப வாரேன்திரும்ப வாரேன்னு சொல்லிட்டு கிளம்பியாச்சு...
Flight- ஏறி உக்காந்தா, window seat கிடைக்கல,1st seat -  - உக்காந்தேன். பக்கத்துல ரெண்டு Seat - ளையும் 2 ஆசாமிகள்.
அக்கா பையனுக்கு வாங்கின Special things & Jewels இருந்த Bag மடியில வைச்சு இருந்தேன். இம்ஹும் ..Hand Bag தவிர எதுவும் வைத்துக்கொள்ள கூடாது என பிடுங்காத கொறையா Air hostess வாங்கி மேல வைச்சுது.  

அப்பத்தான் லேசா கவனிச்சேன் அந்த ரெண்டு ஆசாமிகளும் அவசர அவசரமாவேட்டிய போட்டு எதையோ மூடுன மாதிரி இருந்தது.

 Air hostess cross - பண்ணும் போதும் இழுத்து இழுத்து மூடி வைக்க!..பக் பக் ன்னு இருந்துச்சு... அவங்க பாக்காதப்ப லேசா ஒர கண்ணால அது என்னன்னு  உத்து பார்த்தேன்ஒரு  Black color Bag... மட்டும் தெரியுது, ரெண்டாவது ஆசாமி மூடுனது ஒன்னும் தெரியல

அட பாவிகளா!  ஒளிச்சு வைக்கற மாதிரி என்னடா வச்சு இருக்கீங்கன்னு பக்குன்னுச்சுரெண்டு பெரும் பேசிக்கிட்டாலும் தமிழனான்னு கண்டு பிடிக்கலாம். பேசவே இல்லை.. எப்படி கண்டு பிடிக்கறது? யாரா இருப்பாங்கன்னு திகிலோட ஒக்காந்து இருந்தேன்.


வேஷ்டி, சட்டை.. கண்டிப்பா  தமிழன்தான், எதோ பத்திரமா things வச்சு இருப்பாங்கன்னு கொஞ்சம் மனச தேத்திக்குட்டு உக்காந்து இருந்தேன்!  light வேற Off பண்ணிட்டாங்க.  சின்ன வெளிச்சத்துல ஒன்னும் சரியா தெரியலதூங்கலாம்னு பார்த்த tension- தூக்கம் வேற வரல.

ஒரு 2 மணி நேரம் முடிந்து இருக்கும்லேசா ஓர கண்ணால நோட்டம் விட்டபடியே நான் இருக்க, கொஞ்ச நேரத்தில். கடைசி ஆசாமி குனிந்து Bag Open 
பண்ணினான். எதோ 2, 3 box எடுத்து கீழ வைக்க. எனக்கு கிளி பிடிச்சுடுச்சு. பேசாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு சிவனேன்னு ஊர்ல இருந்து இருக்கலாம். இப்படி வந்து மாட்டிகிட்டோமே! கடவுளே நீதான் துணைன்னு உக்காந்து வேடிக்கை (??) பாக்க ஆரம்பிச்சுட்டேன்

பக்கத்துல ஒருத்தி உக்காந்து இருக்கிற பயமே இல்லை. படுபாவிங்க! அடுத்து எனக்கு அடுத்த ஆளு ஒரு அவன் Bag-லேந்து ரெண்டு மூணு  Box எடுத்து  வைக்கரைட்டு!...அம்ம்புட்டுதான்! ரெண்டு பெரும் எதோ பிளான் பண்ணி வந்து இருக்காங்கன்னு முடிவு பண்ணேன்! 
நிறைய சினிமா வேற பாத்ததுலமனசு பட படன்னு அடிச்சுக்குது

அதுக்கு மேல என்னால முடியல...அப்படியே நைசா போய் Air hostess-ட்ட சொல்லிடலாம்னு seat -ட்ட விட்டு எழுந்து toilet போற மாதிரி போனேன்!

அங்க பொய் நின்னுட்டு நைசா திரும்பி என் Seat ஒரு look 
விடலாம்னு பார்த்தாஎனக்கு பக்கத்துல உக்காந்து இருக்கிற ஆளு எட்டி பாக்க, பக்குன்னு ஆயிடுச்சு..

என்னை  air hostess பாக்க...நான் "Can i have warm water pls?" கேட்டேன்கொடுத்தவுடன் வாங்கி குடிச்சுட்டு என் Seat 

வந்துட்டேன்

அடிப்பாவிலட்சியம்குறிகோள்னு இப்படி அல்லாடிகிட்டு நிக்குறியே
ஏக புலம்பல் மனசுல...காதல் பிரிவுல தான்  ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு வருசமா தெரியுமா? இந்த மாதிரி நேரத்துலயும் தான். ஹிம்  

ஒரு மணி நேரத்தில் Flight, Chennai சேர்ந்துடும்னு அங்க 

Pilot announce பண்ணார். 


அதை நீ எப்படியா முடிவு பண்றமுடிவு பண்றவனுங்க இங்க 
இருக்கானுங்கன்னுஎன் Mind voice கேட்டுச்சு(எந்த மாதிரி நேரத்திலையும் இந்த நக்கலுக்கு 
மட்டும் கொறைச்சலே இருக்காது..)

சரியா ஒரு ஐந்து நிமிஷம் ஆயிருக்கும...அந்த ஓரத்துல உக்காந்து இருக்குறவன் சட்டைய கிழட்டுனான். ஆஅஹா! கலங்கிடுச்சு.......அக்கம் பக்கம் பார்த்தா!எல்லாம் பத்து நாள் தூங்கதவங்க மாதிரி தூங்க...

நல்ல வேலை tea shirt மாதிரி எதோ போட்டு இருந்தான்..குனிந்து ஒரு Box பிரித்தான் 
?


?


?


?

எல்லாம் Branded Watches. எடுத்து shoulder வரைக்கும் மாற்ற மாதிரி தெரிஞ்சது. வரிசையா எடுத்து shoulderலேந்து மாட்டினான். எனக்கு அடுத்த ஆள், அதே மாதிரி பிரித்து எடுத்து மாட்ட..அட பாவிகளாநீங்க குருவிங்களாடா?? என்னைய ஒரு 4 மணி 
நேரம் படாத பாடு படுத்துநீகநீங்கல்லாம் நல்லா வருவீங்கடா!. பெருமூச்சு விட்டேன். 

நான் எதோ மாட்டி விட்டுடுவேன்னுநினைச்சானோ என்னவோ
என்கிட்டே "எல்லாம் சொந்த காரங்களுக்கு..Customs புடிச்சா கஷ்டம்." அதான்னு சொல்ல..நான் ஒரு reaction காட்டிக்கல.

அப்புறம் எங்க எங்க எத எத மாட்டுனானுங்க  தெரியாது. கடைசியா எழுந்து ஒருவன் வேஷ்டியில toilet போனவன், Pant போட்டு திரும்ப வந்தான். 

ஒரு வழிய சென்னை வந்து கேட்டேன். எப்படி இவ்ளோ branded watch அப்படி மறைச்சு எடுத்து வராங்க Scanning machine - தெரியாதான்னு. அதுல Battery கிழட்டி விட்டால் கண்டு பிடிக்க முடியாது என்றார்கள்.  

சட்டம் தன கடைமையை செய்து கொண்டு இருக்க..குருவிகளும் இப்படி பறந்து கொண்டுதான் இருக்குன்னு அப்பத்தான் தெரிஞ்சது. 

திருக்குறள்:44 - குற்றம் கடிதல்
  
குற்றமே காக்க பொருளாக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.


விளக்கம்:

தனக்கு முடிவைத்தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே, குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக்கொள்க.



1 கருத்து: