வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கலைஞர் கருணாநிதி


இன்று ஏராளமான கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் போன்றோர் கட்சிக்கு அப்பாற்பட்டு கலைஞரை நேசிப்பததற்கு காரணம் அவர் வகித்த பதவி கிடையாது. அவரது பண்பும், பாசமும்தான். அதேபோல, ஆட்சி நிர்வாகம், ஸ்தாபன முதிர்ச்சி, தொலைதூரப் பார்வை, எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் எளிதில் கையாளும் திறமை, மாற்றாரின் கடும் விமர்சனங்களையும் சகித்து கொள்ளும் பக்குவம் போன்ற அனைத்தும் கருணாநிதிக்கு உரியவை.

அவர் பொன் மொழிகளும், அதற்க்கு அவர் உதாரணமாக இருந்ததும், உங்கள் பார்வைக்கு..
முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்புவரும் தயக்கம். "முடித்தே தீருவோம்" என்பது வெற்றிக்கான தொடக்கம்." 
திருக்குவளை கிராமத்தில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்த கலைஞர் கருணாநிதி மனதில் எப்போதும் துணிவும் நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்து வந்ததால்தான் அவர் கால் பதித்த அனைத்து துறைகளிலும் வெற்றி கண்டார். "முடித்தே தீருவோம்" என்ற துணிவு இருந்ததால் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை நிறுவி, இன்றும் என்றும் அதன் தாக்கம் தொடர வழிவகுத்தவர். 


"துணிவிருந்தால் துக்கமில்லை. துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை."
இதுவும் அவரின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் காட்டும் அவரது மேற்கோள்தான். தன் அரசியல் வரலாற்றில்தான் நின்ற தொகுதியில் தோற்றதாக சரித்திரமே இல்லை. அவர் துக்கமில்லாமல் துணிவோடு வெற்றித் தலைவனாக வலம் வந்தார் என்பதற்கு இந்த ஒரு செய்தி போதுமே.

புத்தகத்தில் உலகத்தை படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாக படித்தால் அனுபவம் தழைக்கும்."
உலகத்தையே புத்தகமாக படித்தவர்களில் கலைஞரை விட திறமைசாலிகள் எவரேனும் உளரோ? மற்றவர்களைப் படிப்பதிலும் கணிப்பதிலும் சிறந்து விளங்கியதால் மட்டுமே கலைஞர் இத்தனை வருடங்கள் வெற்றித் தலைவராக வலம் வர முடிந்தது.

"சிரிக்கத் தெரிந்த மனிதன்தான் உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன்."
வார்த்தை விளையாட்டுகள் மூலம் நகைச்சுவை கொண்டு வருவதில் கலைஞருக்கு நிகர் கலைஞரே. தனது உடல்நிலை நலிவடைந்து மருத்தவ சிகிச்சைக்கு மருத்துவரிடம் வந்தபோது கூட, மருத்துவர் அவரை மூச்சை இழுத்து விட  சொல்ல.. "மூச்சை விட்டு விட கூடாது என்றுதான் இங்கு வந்தது" என்று நகைச்சுவையாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் திரைக்கதை வசனங்களில் வரும் நகைச்சுவை சிரிக்க மட்டுமில்லை சிந்திக்கவும் வைத்தது என்பதில் சந்தேகமில்லை. சட்டப்பேரவைகளில் சிரிப்பலைகளை ஏற்படுத்துவதிலும் வல்லவர். 

இதுபோன்று அவர் நமக்கு விட்டுச்சென்ற பாடங்கள் நிறைய...

சமயோசிதமும் நகைச்சுவை உணர்வும்தான் கலைஞர் கருணாநிதியின் அடையாளம்.
அதிநுட்பமான திறமையைத் தன்னகத்தே கொண்ட தலைவர் கலைஞர்தான். பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது அவர் அளித்த நகைச்சுவையான பதில்கள் இவை. கலைஞரின் பதில்கள் ஒவ்வொன்றும் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவாக வந்தது சிறப்பு! 
 (நன்றி - விகடன்)
கேள்வி: ``அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களைத் திறந்து வைக்கிறாரே?''
பதில் : ``ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு சொர்க்கவாசலைத் திறந்துவிட்டோம் என்கிறார்களே... அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!''
 கேள்வி: ``சட்டமன்றப் பேச்சுக்கும் பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?’’
பதில் : ``மனக்கணக்குக்கும் வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.’’
 கேள்வி: ``செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே?''
பதில்: ``செவ்வாயில் இருந்தால் அது உமிழ்நீர். தண்ணீர் அல்ல.''
 கேள்வி : ``விவாதம்-வாக்குவாதம்-விதண்டாவாதம் மூன்றும் எப்படி இருக்க வேண்டும்?''
பதில் : ``விவாதம்-உண்மையாக இருக்க வேண்டும். வாக்குவாதம்-சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும். விதண்டாவாதம்-தவிர்க்கப்பட்டாக வேண்டும்.''
 கேள்வி: ``கோழி முதலா, முட்டை முதலா?''
பதில் :``முட்டை வியாபாரிகளுக்கு முட்டையும், கோழி வியாபாரிகளுக்கு கோழியும்தான் முதல்.''
 கேள்வி: ``இளம் மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?''
பதில் : ``இளம் வயதில் அரசியல் என்பது அத்தைப்பெண் போல. பேசலாம், பழகலாம். சுற்றிச் சுற்றி வரலாம். ஆனால், தொட்டு மட்டும் விடக்கூடாது!''
 கேள்வி: ``தலையில் முடி கொட்டியது குறித்து எப்போதாவது வருந்தியிருக்கிறீர்களா?''
பதில்: ``இல்லை. அடிக்கடி முடிவெட்டிக்கொள்ளுவதற்கு ஆகும் செலவு மிச்சமென்று மகிழ்ந்துதான் இருக்கிறேன்.''
 கேள்வி: ``தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் அரசு ஆணையைத் தள்ளிப்போடவேண்டுமென்று சிலர் கோரிவருகிறார்களே..?'' 
பதில்: ``தலையில் ஒன்றும் இல்லையென்றால் தள்ளி வைக்கலாம்.''
 கேள்வி: ``உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?''
பதில் : ''எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்''
  கேள்வி: ``சட்டமன்றத்துக்கு உள்ளே போகும்போது என்ன நினைப்பீர்கள்?''
பதில் : ``கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று.''
 கேள்வி: ``நினைவாற்றல், சொல்லாற்றல், வாதத்திறன்-ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எது முக்கியம்?''
பதில் : ``நினைவாற்றலுடன்கூடிய வாதத்திறன்மிக்க சொல்லாற்றல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் முக்கியம்.''
 கேள்வி : ``கேள்வி கேட்பது எளிதா, பதில் சொல்வது எளிதா?''
பதில் : ``பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்பது எளிதல்ல.''
 கேள்வி : ``தி.மு.க. ஆட்சி இரண்டு முறை (1976 மற்றும் 1991) டிஸ்மிஸ் ஆனபோது என்ன நினைத்தீர்கள்?''
பதில் : ``பதவியைத் தோளில் போட்டுக்கொள்ளும் துண்டு என்றும், மக்களுக்காக ஓடியாடி உழைப்பதே சிறந்த தொண்டு என்றும் எண்ணியிருப்பவனுக்கு ஆட்சிக் கலைப்பு என்பது ஒன்றும் பெரிதல்ல.''
கேள்வி:  ``உங்கள் வீட்டில் மதுரை ஆட்சியா... சிதம்பரம் ஆட்சியா?
பதில்: ``கலைஞர் ஆட்சி!''
 கேள்வி : ``உங்கள் அமைச்சரவையிலே உள்ளவர்களில் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப்படுத்துங்களேன்?''
பதில் : ``மனதிலே இடம் பெற்ற பிறகுதானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். மந்திரிசபையில் இடம் பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல.''
**************************************
இந்தச் சூரியன் இன்னும் ஒளிவீசும் நம் உள்ளத்தில்.
ஓய்வெடுக்காமல் உழைத்தவன்...இதோ ஓய்வெடுக்கிறான்"  
இனி கலைஞர் கருணாநிதி என்பது வரலாறு! 

வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்

சனி, 3 ஜூன், 2017

நீங்கள் ஒரு பெண்...

நீங்கள் ஒரு பெண், உங்களை யாரும் கடத்தவில்லை.

உங்களை கட்டிலில் படுக்க வைத்து இருக்கிறார்கள். ஒருவர் உங்கள் ஆடைகளை களைந்து, உங்களை நிர்வாண படுத்துகிறார். நான்கு பேர் வருகிறார்கள், உங்களை யாரும் காயபடுத்தவில்லை. ஆனாலும்  உங்கள் உடம்பை தொட்டு, எங்கேயும் காயம் இருக்கிறதா  என பார்க்கிறார்கள். ஒருவர் கையில் கேமரா இருக்கிறது, நடப்பவற்றை பதிவு பண்ணுகிறார்.

என்ன தூக்கி வாரி போடுகிறதா?

நீங்கள் தற்கொலை பண்ணி விட்டீர்கள். ஆத்திரத்தில் எடுத்த முடிவு.







சம்பவம் 1:  குழந்தை பள்ளிக்கு செல்ல Uniform எடுத்தால், எல்லாம் அழுக்காக இருக்கிறது, வீட்டில் இருக்கும் மனைவி, அதை கூட கவனிக்காமல் என்ன பண்ணுகிறார், என  கோவத்தில் "இதை கூட கவனிக்காத நீ, இருந்து என்ன?" என கேட்கிறார்.  மாலை அலுவலகம் விட்டு திரும்ப வரும்பொழுது, மனைவி விஷம் சாப்பிட்டு இருந்து விட்டார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் அனாதையாக விடப்படுகிறார்கள். அவர்கள் பட்ட கஷ்டம் நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டியதில்லை.

சம்பவம்:2  மனைவி, கணவனின் மீது மிகவும் அன்பு கொண்டவர், மிகவும் ஆசை மிக்கவர். எந்த பெண்ணிடம் பேசினாலும் பிடிக்காது. மனைவியின் எதிர்ப்பை மீறி ஒரு பெண்ணிற்கு  (வழி தெரியாமல், அவர்கள் செல்லும் திருமணத்திற்கு செல்லும் பெண்ணிற்கு) lift கொடுக்கிறார். மனைவியும் கூடவே வருகிறார், மனைவியால் தனது ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்ததும் தூக்கு மாட்டி இருந்து விடுகிறார்.  ஒரு ஆண், ரெண்டு பெண் குழந்தைகள். அன்னையின் அன்பிற்கு ஏங்கி தவிக்கிறார்கள். யார் வந்து அவர்கள் துயரை போக்குவது?

உங்கள் அன்புக்குரியவரை கலங்க விடாதீர்கள். உங்கள் பிள்ளைகள் அனாதையாகி விடுவார்கள். உங்கள் அன்புக்குரியவரை கேள்வி கேட்டு கொன்று விடுவார்கள். அவர் உங்களை கொலை செய்ததாய் சந்தேகபடுவார்கள்.உங்கள் இறப்பிற்கு காரணம் என்னவென்று, உங்கள் உடம்பை கூறு போட்டு பார்ப்பார்கள்,   அவசரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் குடும்பத்தை பாதிக்கபடக்கூடாது. வலி தற்காலிகமானது. கடந்து போய்விடும். தற்கொலை நிரந்தரம். உங்களால் மீண்டும் ஓர் வாழ்க்கை வாழ முடியாது.

குழந்தையை ஒரு அம்மா இருந்து பார்ப்பது போல் உலகத்தில் யாரும் பார்க்க கவனிக்க முடியாது. உங்கள் உயிரை எடுக்க யார் அதிகாரம் குடுத்தது?

இதை படிப்பவர் ஒரு ஆணாக இருப்பின்,  உங்கள் மனைவி, உங்களுக்காகவே வாழ்பவர், தெரியாமலும் அவர் மனதை காயப்படுத்தாதீர்கள். அவர் எடுக்கும் ஆபத்தான முடிவு,  உங்கள் எதிர்காலத்தை கலங்க வைத்துவிடும்.

பேச்சில் கவனம் இருக்கட்டும், கண்டிப்பில் கனிவும் இருக்கட்டும். வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். அதற்க்கு வலி அதிகம்.
இந்த உலகம் அன்பினாலும், அன்பானவர்களாலும் சூழப்பட்டது. துன்பம் வரும் நேரத்தில், அவர்களை நினைத்து அவர்களுக்காக வாழுங்கள்.  உங்களுக்காக துடிக்கும் இதயங்களை கண்ணீரில் மிதக்கவிட்டு சுயநலமாக என்றும் முடிவு எடுக்காதீர்கள்.



நன்றி.

Image Courtesy: Web

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு நடத்த மல்லுகட்டு !

ஜல்லிக்கட்டு நடத்த மல்லுகட்டு ! (click here to read article)

My FM12.3 (Only for friends) Published in Thats Tamil.

காளைகளுக்காக  போராட்டம் நடத்தும் எங் (Young)  காளைகளுக்கு
சமர்ப்பணம் !



Thank you very much for your support.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

DD - 3 (தெய்வீக ராகம்! திவ்யா! -3)

அவர்கிட்ட, பின்னாடியே போய்..சண்டே பேப்பர் தம்பி வாங்கிட்டு வர சொன்னாருன்னு சொல்லி நானே எடுத்துட்டு வந்துட்டேன்.

சீக்கிரமே கிளம்பி திவ்யா வீட்டுக்கு போனேன்., சீக்கிரம் வா  centre-க்கு போகணும்..தீபாவை கண்டு பிடிக்கணும்னு சொன்னேன். எப்படி கண்டு பிடிப்பன்னு கேட்டா? நான் மஞ்சள் கலர் சுடிதார் பொண்ணுதான் தீபான்னேன். அவ அப்படி சிரிச்சா.."அடிப்பாவின்னு..ஏன் இப்படி சிரிக்கறன்னு கேட்டேன்".., அவ பதில் சொல்லல..

 centre-க்கு கிளம்பி போனோம். அங்க பாக்கிற பெண்ணையெல்லாம், தீபாவா இருக்குமான்னே பார்த்தேன். மஞ்சள் கலர் சுடிதாரை தேடினேன்! கடைசியா கண்டு பிடித்தேன்! எங்க சென்டர் மேனேஜர் மேடம், மஞ்சள் சுடிதார் போட்டு இருந்தாங்க. திவ்யாட்ட போய் , இவங்களா இருக்குமான்னு கேட்டேன்.திவ்யா என்ன அடிச்சு இருப்பா!  அவங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைங்க இருக்குன்னா!

என்னைய பார்த்து திவ்யா சொன்னா, எனக்கென்னவோ அந்த "தீபா" நீன்னு சந்தேகமா இருக்குன்னா" ..." அப்படியே ஷாக் ஆயிட்டேன்...என்னதுன்னேன் ?" ..நீ கூட தான் இன்னைக்கு மஞ்சள் சுடிதார்ல வந்து இருக்க!"..அப்பத்தான் குனிஞ்சு பார்த்தேன்..நானும் மஞ்சள் கலந்த சுடிதார் தான் அன்னைக்கு போட்டிருந்தேன்..ஒரே சிரிப்பு."

அவ என்ன பார்த்து "உன்ன கொல்லப்போறேன்" அந்த லெட்டர் தீபாவே இன்னும் படிக்கல, அது உங்கிட்ட தான் இருக்குன்னா..அட ஆமாம் தலையில அடிச்சுக்கிட்டேன்.

வேற கிளாஸ் Students பொன்ணுங்க கிராஸ் பண்ணறப்ப எல்லாம்.."தீபா" ன்னு குறிப்பிட்டு பேசுவேன் ..யாரவது திரும்பி பாத்தா அவதான் தீபா!"  ம்கூம் எவளும் பாக்கல.

 திரும்ப அதே இடத்துல ஏதும் லெட்டர் இருக்கான்னு பார்த்தேன். ஒன்னும் இல்லை. ரெண்டு நாள் தேடி பார்த்தேன் ஒரு பிடியும் கிடைக்கல. லெட்டர் டிஸ்போஸ் பண்ணிட்டு என் சொந்த வேலைய பார்த்தேன். 

கிளாஸ் விட்டு செல்லும் பொழுது, Public Telephone Booth - ல் சித்தியுடன் பேசுவாள் திவ்யா. சித்தி காதல் திருமணம் செய்ததால் அம்மா, தாத்தா எவரும் சித்தியிடம் பேசுவதில்லை என்றாள். சித்தி எங்கு இருக்கிறார் என கேட்டேன். கரந்தையில் (தஞ்சைக்கு அருகில்) என்றாள். அப்பொழுது செல்போன் அறிமுகம் ஆனா நேரம், எங்களிடம் இல்லைஒவ்வொரு தடவையும் குறைந்தது அரை மணி நேரமாவது பேசுவாள். உள்ளே கதவை சாத்திக்கொண்டு பேசுவாள் அன்றாடம் நடந்ததை பற்றி, வீட்டு விஷயம் பற்றி பேசுவாள்.(காதில் விழும்).. சித்தி, இவளிடம் ரொம்ப பாசமாக இருப்பார்கள் என்றாள். நாம ஏதாவது பண்ணி அவங்க அம்மாவை, சித்தியுடன் சேர்த்து வைக்கலாம்னு முயற்சி பண்ணேன்.


மறுநாள் திவ்யா வீட்டுக்கு போகும் பொழுது, திவ்யா அம்மாவிடம், நான் பேச்சு கொடுத்தேன். "காதல் திருமணத்திற்கு" நீங்கள் எதிரியாம்மா? அவுங்க ஷாக் ஆகி, ஏன், என்ன விஷயம் என்றார்கள். திவ்யா இதை எதிர் பார்க்கவில்லை. அவள் முகம் மாறி போயிருந்தது. அவங்க அம்மா உடனே "வேண்டாம், அவளை பத்தி பேச வேணாம்!" என சொல்லி  என ஒரே வார்த்தையில் என் வாயை மூடி விட்டார்கள். வெளியே வந்ததும்,திவ்யா காச்சு..  மூச்சுன்னு கத்தினா ....என்னைய மாட்டிவிட பொறியான்னு கத்தினா..நான் கப் சிப் ஆயிட்டேன் .


தினம்  centre-க்குபோவதும், வரும்பொழுது அவள் சித்தியிடம் பேசிவிட்டு வீட்டுக்கு வருவோம். அவள் அம்மாவிடம் இதை பத்தி அவள் சொல்வதில்லை என்பதால். நானும் காட்டிக்கொள்ளவில்லை. இப்படியாக ஒரு மாதம் போயிருக்கும். அன்று, கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரின் மகன் (Boss) செமினார், ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால் மதியம் செல்லவேண்டி இருந்தது. அவள் வீட்டிற்கு சென்றேன். அவள் வரவில்லை, நீ போ என்றாள்! அவர் எடுக்கிற கிளாஸ் யார் கவனிக்கிறது கமெண்ட் அடிச்சா ".  "அவர் நல்லாத்தானே எடுப்பார்! " எப்பவும் அப்படி யாரையும் பேசமாட்டாளேன்னு யோசிச்சுகிட்டே நான் மட்டும் சென்றேன்.


மறுநாள் centre-க்கு போகும்பொழுது, காலேஜ் Final year Project என்ன எடுக்க போறீங்கன்னு, திவ்யாவிடம் , Boss கேட்டார்.  அவள் ஒன்னும் decide பண்ணல அப்படின்னு சொல்லிட்டு மூஞ்ச திருப்பிக்கிட்டா. என்ன கேட்டருன்னு இப்படி பேசுற! "ஓவர்ப்பான்னு" சொன்னேன்.அவ பதிலுக்கு, எல்லாம் இப்படித்தான் பேச்சு கொடுப்பாங்க..அப்புறம் வேற எங்காச்சும் போய் நிக்கும்னா! நான் , அடிப்பாவின்னு நினச்சு கிட்டேன்! இது போல், அவர் சாதாரணமாக எது கேட்டாலும் சரியாக பேசமாட்டாள்! அவர் அந்த பக்கம் போனதும் எள்ளும் கொள்ளும் வெடிப்பாள்! அவருக்கும், அவளைப்பற்றி தெரியும் போல , கண்டுக்காம போயிடுவார். 


சில நாள் கழித்து, சென்னை அவள் அம்மாவுடன் , உறவினர் வீட்டு திருமணத்திற்கு  செல்ல இருந்தாள். எனக்கும் சென்னை செல்ல ஆசை. ன் தாயுமானவரை (அப்பா) கேட்டேன், அக்காவை பாத்துட்டு வரலாம் என்றேன் . ஓகே சொல்ல, நான் ticket எடுக்க இருந்தேன். அவளே எடுத்துவிட்டதாக சொன்னாள்.


தஞ்சை Railway Station,  எங்க Birth-ல ஏறி உக்காந்தோம். கிளம்பும் நேரம், வேகமா ஒருத்தர் வந்து எங்கள்Birth-க்கு எதிரே ஏறினார். யாருன்னு பார்த்த "Boss" .

திவ்யா birth-க்கு  opposite birth அவரோடது ,அவரை பாத்ததும், நான் திவ்யா முஞ்ச பார்த்தேன்! அவ என்ன முறைக்க! நான் கவனிக்காதமாதிரி உக்காந்துட்டேன்!

திவ்யாக்கு பிடிக்காததால், அப்பாகிட்டயும் introduce பண்ணல.


Train, கிளம்ப ஆரம்பிக்க, என் அப்பா, 
அவர்கிட்ட கிட்ட பேச்சு கொடுத்தார், தம்பி என்ன பண்றீங்க? எங்க போறீங்கன்னு ? எனக்கு ஒரே சிரிப்பு. திவ்யா காலின்னு! எங்க அப்பா, என்னையும், திவ்யாவையும், நிறைய புகழ்ந்தார்! கம்ப்யூட்டர் சென்டர்ல - ஒர்க் பண்றோம்னு!  Boss,  "ஆமா! என்னோட சென்டர்லதான்னு சொல்லவும்! " அப்படியே அப்பா ஷாக் ஆயிட்டாரு.. "என்னம்மா?ன்னு" என்னைய பாக்க!  ஆமா, நாங்க introduce பண்றதுக்குள்ள நீங்கலே introduce ஆயிட்டிங்கன்னு சொல்லி தப்பிச்சேன். ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்த சத்தம் கேட்டது. நான் தூங்கி போனேன்! 

மறுநாள், சென்னை சென்றதும் அவர் அவர் இடத்துக்கு போய்ட்டோம்! சென்னையிலிருந்து திரும்ப வந்ததும், திவ்யாவுக்கு Birthday வந்தது! திவ்யா போட்டு இருந்த dress ரொம்ப அழகா இருந்தது! Costly-வும் இருந்தது. Dress Super -ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே, அவள் இடை மறித்து எதோ சொல்ல வந்தாள்! அதற்குள் அவ அம்மா வந்தார்கள்! என்னம்மா? Birthday-ன்னா சிம்பிளா ஏதாவது வாங்க வேண்டியதுதானே? எதற்கு Costly டிரஸ் எடுத்து கொடுத்தன்னு..என்னைய பார்த்து கேட்டார்கள்!"  என் mind voice "இது எப்ப  நடந்துச்சுன்னு " கேட்டுச்சு!  நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!( இப்படி வடிவேல் மாதிரி நம்பள நிக்க வைக்குறாளே!, இருடின்னு நினைச்சுக்க்ட்டேன்)


கோயில் போலாம்ன்னு கிளம்பினோம்! வெளிய வந்ததும், உண்மைய சொல்லு! யார் எடுத்து கொடுத்த dress -ன்னு கேட்டேன்? "சித்தி கொடுத்து அனுப்பினாங்கன்னா!"   உன்கிட்ட சொல்றதுக்குள்ள அம்மா கேட்டுட்டாங்கன்னு சொன்னா!  சரி பய பிள்ளை போகட்டும்னு விட்டேன்! ஆமா, பொழுதுக்கும் என்கூடதான் வெளிய போறே! எப்போ கொடுத்தாங்கன்னு கேட்டேன்? சென்டர்-ல  courier வந்துச்சுன்னா!  சொல்ல மறந்துட்டேன்னா!

பிள்ளையார் கோயிலுக்குஅர்ச்சனை பண்ண ஒரு கூடை மட்டுமே அவளிடம் இருந்தது, தேங்காய் பழம்,  விளக்கேத்த எலும்பிச்சை பழம், நெருப்பட்டி இருந்தது!


கொஞ்சம் lemon 
பிழிஞ்சுதரியா ? விளக்கேத்தணும்னு கேட்டா!, நான்  ready பண்ணிட்டு இருந்தேன்! 

அப்புறம் அர்ச்சனை பண்ணிட்டு வெளியே வந்தோம்!. அவளிடம் ஒரு plastic bag இருந்தது! உள்ளே எதோ gift box தெரிஞ்சது!  "இது என்ன திடீர்ன்னு, ஒரு Gift எப்படின்னு கேட்டேன்?" நம்ம குருக்கள், தாத்தாவுக்கு வேண்டியவர், தாத்தா சொல்லி இருக்கணும் போல, அதான் Gift கொடுத்தார்ன்னு சொன்னா!"


திரும்ப குருக்களை பார்த்தேன்! அவர்க்கு ஒரு 60 வயசு இருக்கும், அவர் இப்படி gift பார்த்து வாங்கியதாக, எனக்கு தோணவில்லை,  Gift அப்படி Pack பண்ணி இருந்தது!பக்கத்துலயே இருந்தும் பயபுள்ள எதோ நம்மகிட்ட மறைக்குதுன்னு தோணுச்சு! கோயில்ல வேற யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்தேன். 4, 5 பெண்கள் தென்பட்டார்கள்! இனிமே இவமேல ஒரு கண்ணை வைக்கணும்னு நினைச்சு கிட்டேன்!


அம்மாகிட்ட, இந்த Gift நான் கொடுத்தேன்னு தானே சொல்லுவேன்னு கேட்டேன்!, உடனே அவள், "அதேதான்..!  பிடிச்சிட்டியே குட் கேர்ள்ண்ணா" . அப்படியே ஆடிபோய்ட்டேன்!



Mind voice - உண்மையிலேயே குருக்கள் தாத்தா கொடுத்தாதுன்னா, நான் கொடுத்ததா ஏன் சொல்லணும்?. நம்பள "Take diversion " எடுக்க வச்சுட்டு, பய பிள்ளை!எதோ பண்ணி இருக்கு! ஓ! எலும்மிச்சம்பழம் பிழியவைச்சுட்டு, என்னவோ பண்ணி இருக்கான்னு தோணுச்சு! "  ரொம்ப கேள்வி கேட்டா  உசார் ஆயிடுவான்னு "நீ செத்தடி மவளேன்னு" இருக்குன்னு நினைச்சு கிட்டே வீட்டுக்கு போய்ட்டேன்!".



இதே மாதிரி எதனை பல்பு வாங்கினேன் தெரியுமா? Wait பண்ணுங்கப்பு!

ஞாயிறு, 15 நவம்பர், 2015

DD - 2 (தெய்வீக ராகம்! திவ்யா! -2)

நீங்க திவ்யாவுக்கு கொடுத்த வரவேற்ப்ப நினைச்சு ரொம்ப ஆச்சரியமா போச்சு! எந்த பதிவும் இல்லாத அளவு, இந்த பதிவு Reach ஆயிருக்கு! Thanks to everybody who read continuously!

தெய்வீக ராகம்! திவ்யா! -2!

நான் தஞ்சையில் ஒரு Computer Centre - ல் வேலை பார்த்த விபரம் முன்னரே சொல்லி இருந்தேன்ல, அங்க தான் திவ்யாவ பார்த்தேன். திவ்யாவும் அங்க Class எடுத்துட்டு இருக்கிற விவரம் தெரிஞ்சது. அவ அங்க மூன்றாம் வருடம், B.E படித்து கொண்டே, அங்கு Part time class எடுத்து கொண்டு இருந்தாள். மாலை நேரம் மற்றும் சனி, ஞாயிறு தான் அதிகம் சந்திப்போம். விடுமுறை நாட்களில் பகலில் சந்திப்போம்.

அவள் அப்பா, அவள் ரெண்டாம் வருடம் படிக்கும் பொழுது (ஒரு வருடத்திருக்கு முன்னால்) Heart Attack - ல் இறந்து விட்டதாகவும், அவர் இருக்கும் வரை, அவரது General Store வருமானம், தங்களது தேவைக்கே சரியாக இருந்ததாகவும்,  ரெண்டு அக்காவிற்கு, திருமணம் ஆகி விட்டதாகவும், ஒரு தங்கை இருப்பதாகவும் சொன்னாள்.

சித்தப்பா மற்றும், சித்தப்பாவின், மகன் (அண்ணன்) மேல் பார்வையில் இவர்கள் இருப்பதாகவும் சொன்னாள்.  சித்தப்பா உதவி செய்வதாகவும், ஆனால், College fees அதிகம் ஆதலால், படிப்பை பாதியிலே நிறுத்த சொன்னதால், குடும்ப நண்பர் ஒருவரின் Centre இது, அவர் recommend வேலைக்கு வந்து கொண்டே படிக்கிறேன், என சொன்னாள். B.E படிப்பது அவள் கனவென்றாள். "நீ நேசிச்சு படிக்கிற படிப்பு உனக்கு வந்தே சேரும்னு ஆறுதல் சொன்னேன்."

எனக்கு அம்மா இல்லை, அவளுக்கு அப்பா இல்லை, அது போதுமே! சீக்கிரமே Friends ஆயிட்டோம்.

நான் regular staff , திவ்யா Study Holidays - என்பதால், ரெகுலரா  வந்துட்டு இருந்தா.
அப்ப ஒரு நாள். என்னைக்கும் Use பண்ற System அன்னைக்கு மக்கர் பண்ணதால, வேற ஒரு system மாத்தி உக்காந்தேன். அப்பத்தான், நான் இருந்த System, Key board-க்கு கீழே ஒரு Cover இருந்தத பார்த்தேன். அது கொஞ்சம் கனமாக இருந்தது.

நான் சுத்தி முத்தி பாக்க, எல்லாரும் System-ல Busy-ஆ இருந்ததால் என்னை கவனிக்கவில்லை,ஆனால் எனக்கு பின்னால் நின்ற திவ்யா "என்ன?" என்றாள். "தெரியல"ன்னேன்.அங்க இருந்தவங்க கிட்ட "இந்த Cover உங்களோடதான்னு கேட்டேன்," எல்லாரும் இல்லை என்றார்கள்.

Admin Staff யாரிடமாவது, அந்த Cover கொடுத்துட்டு கிளம்பலாம்னா,  யாரும் இல்லை. எல்லாரும் கிளம்பினதும், அந்த Cover எடுத்து முன்ன பின்ன பார்த்தேன், ஒரு ஊரு, பேரு ஒன்னும் இல்லை. என்னவா இருக்கும்? என திவ்யாவ பார்த்து கேட்டேன், "தெரியல" , பேசாம Admin Table-ல வச்சுட்டு கிளம்புன்னா. எனக்கு அது என்னவா இருக்கும்னு ஒரு தெரிஞ்சுக்க ஒரே ஆவல்,

பிரிச்சு பாப்போமா? ன்னு திவ்யாகிட்ட கேட்டேன், "என்னைய இந்த வம்புல மாட்டி விடாதேன்னு" சொன்னாள். வச்சுட்டு வரியா? நான் கிளம்புறேன்னு கிளம்பி முன்னாடி போனாள். எனக்கு மனசே இல்ல, "கொஞ்சம் பிரிச்சு, அது என்னனு பார்த்துட்டு திரும்ப வைக்கலாம்" னேன். அவள் பதில் சொல்வதற்குள், நானே ஒட்டி இருந்த கவரை, தண்ணி தொட்டு, பிரிச்ச சுவடு தெரியாமல், பிரித்தேன். ஷ் ஷ்..Unauthorized - ஆ ஒரு வேலை செய்ஞ்சா எவ்ளோ டென்ஷன் இருக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சது. முடியல...அவ்!

Cover பிரிக்குமுன், அவள் வேற, யாரோ வர்ற சத்தம் கேக்குதுன்னு திகிலுட்டினாள். "அடிபாவி இங்க என்ன murder - ஆ பண்ணிட்டு இருக்கேன்னு, கொஞ்சம் பேசாம இருக்கியான்னு அதட்டினேன்."

ஆகா!! பிரிச்சவுடன் தெரிஞ்சது, அது ஒரு காதல் கடிதம் என...தெரிஞ்சவங்க யாருக்கோ, எழுதனதுன்னா படிக்க கூடாதுன்னு, மேலோட்டமா பார்த்தேன்.

"அன்புள்ள தீபாவிற்கு", என ஆரம்பித்து, கடிதமும், கவிதையுமா ஒரு 6, 7 பக்கம் இருந்தது.  கடைசி பக்கத்தில், அன்புடன் "சத்யா" என முடித்து இருந்தது. அதை தான் பார்த்தேன், அதற்குள், "நான் கிளம்புறேன் பா" சொல்லிட்டு அவள் ஓட்டமும் நடையுமா கிளம்பினாள்.

 திவ்யா, உனக்கு "தீபா" தெரியுமான்னு கேட்டேன், "தெரியல", சென்டர்-ல எங்க யாரும் அந்த பேர்ல இல்லைன்னா. எனக்கும் தெரிந்து யாருமே இல்லை. "அப்படின்னா யாரோ யார்கிட்டையோ , கொடுக்க சொன்னதா கூட இருக்கலாம்" ..அப்படின்னா இந்த லெட்டெர் முழுசா படிக்கறது தப்பில்லன்னு தோனுச்சு, அவள் கிட்ட சொன்னேன். "அசிங்கமா, இல்ல, அடுத்தவங்க லெட்டெர், எப்படி நாம படிக்கறது?" ன்னு கேட்டா.."ஹலோ!, எனக்கு Love letter எப்படி இருக்கும்னு பாக்கணும் "ன்னேன். கொஞ்ச நேரம் உக்காருன்னு சொல்லி, அவள் உக்காரவச்சு படிக்க ஆரம்பிச்சேன்.

மனசுல நின்ன அந்த வரிகள் மட்டும் உங்களுக்காக...(நாகரிகம் கருதி, அந்த கடிதத்தில் சம்மந்தபட்டவர்களின், சொந்த வரிகளை, இங்கு நான் குறுப்பிடவில்லை!)

"நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது..
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே..
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே.."

என ஆரம்பித்து எழுத பட்டிருந்தது.."அடடே...என்னமா! கவிதை எழுதி இருக்கான் பாரு?" அப்படின்னு திவ்யாவ பார்த்து கேட்டேன், அவ மூஞ்சு ஏகத்துக்கு மாறி இருந்துச்சு, "உன் மூஞ்சி, அது "பூவே, செம்பூவே, சினிமா பாட்டு வரிகள்" ன்னு ..தலையில அடிச்சுகிட்டா...."அடங்கொக்கமக்கா!"ன்னு Continue பண்ணேன்.

"நேற்று போல் இன்று இல்லை,
இன்று போல் நாளை இல்லை.
அன்பிலே வாழும் நெஞ்சில்,
ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால்,
உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும் சொல்லவா".

என ஆரம்பிச்சதுமே, அது எந்த பாட்டுன்னு எனக்கே தெரிஞ்சது, இருந்தாலும் Continue பண்ணேன்..

என்னை நான் தேடி தேடி,
உன்னிடம் கண்டுக் கொண்டேன்.
பொன்னிலே பூவை அள்ளும்,
புன்னகை மின்னுதே.
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே.
அன்பே இன்பம் சொல்ல வா

காதலின் தீபம் ஒன்று,
ஏற்றினாளே என் நெஞ்சில்.
ஊடலில் வந்த சொந்தம்,
கூடலில் கண்ட இன்பம்.
மயக்கம் என்ன,காதல் வாழ்க."

"பொண்ணு , காதல் விளக்க ரொம்ப தூண்டி விட்டு எரிய விட்டா போலவே? ன்னு கேட்டுகிட்டே..திவ்யா முறைக்க, முறைக்க ..அடுத்து படிக்க ஆரம்பிச்சேன்.."

"வைகை கரை காற்றே நில்லு
வஞ்சி தனை பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
வஞ்சி தனை தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளை
கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு"

இன்னும் சில வரிகள், அந்த பையன் சொந்த நடையில் இருக்க, கொஞ்சம் சோகமா இருந்தது....மனசுக்கு கஷ்டமா ஆச்சு.....அந்த எழுத்துக்கள் அவ்ளோ powerful-ஆ இருந்தது..படிக்க படிக்க..அந்த தீபா, சத்தியாவ பாக்கனும்னு ஆர்வம் ஜாஸ்தியாச்சு..அதுவரை கிண்டல் பண்ணின நான்..கொஞ்சம் மரியாதையுடன் அந்த கடிதத்தை தொடர்ந்தேன்..


"உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது ..
இன்பம் பிறந்தது ..

(உறவுகள் தொடர்கதை ....)"

கடைசியா முடித்த அந்த வரிகள், அந்த பெண்ணின் நிலையை, கொஞ்சம் சோகமாகவே காட்டபட்டது ரொம்பவே மனசு கஷ்டம்மாச்சு.
"இன்னும், சில சொந்தவரிகளில் எழுதி முடித்து விட்டு,  குறிப்பு:  நாளைக்கு வரும் பொழுது, Yellow கலர் சுடிதாரில் வரவும்னு, போட்டு இருந்தது."

வாவ்..என்ன லெட்டெர் ?, பயபுள்ள, சினிமா பாட்டு வரியா போட்டு அந்த பொண்ண மடக்கி இருப்பானோ?" என நான் நினைக்கும் நேரத்தில், அவளிடமிருந்து சத்தம்.."படிச்சுட்டியா?"  "போய்,  அந்த table-ல, அந்த Cover, வைச்சுட்டு வா!"ன்னா..

"இல்ல, நான் வைக்க மாட்டேன், வேற யாரும் இந்த படிக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல, யாருன்னு தெரிஞ்சுகிட்டு , அவங்க கிட்ட சேர்ப்போம், இல்லன்னா..அப்படியே விட்டுடுவோம். நல்ல ரெண்டு மனச வேற யாரும் கிண்டல் பண்றது பாவம்.அப்படின்னு, நானே என் Bag -ல போட்டு கிளம்புனேன், "என்னமாச்சும் பண்ணுன்னு அவ வீட்டுக்கு போய்ட்டா"

நான் வீட்டுக்கு போயிட்டேன், அந்த வரிகள் மீண்டும், மீண்டும் மனசுல ஓடிகிட்டே இருந்தது. அந்த தீபா யாராக இருக்கும், அவளுக்கு அப்படி என்ன கஷ்டம்? அப்படி. கொஞ்ச நேரத்துல அப்படியே மறந்துட்டு, சொந்த வேலையில Busyஆயிட்டேன். அப்புறம், நம்ம அண்ணனுமானவர்,(அதான் தம்பி) வீட்டுக்கு வந்தார். அப்பத்தான் அந்த லெட்டெர்  இருக்கிற ஞாபகம் வந்துச்சு. ஏதாவது Money Change வேணும்ன்னா, என் Bag எடுப்பாரு, ஆகா, அந்த Letter பாத்துட்டா...கடவுளே..!

யாரோ, யாருக்கோ எழுதுன லெட்டெர், நான் என் பதறனும்னு, உங்க mind voice எனக்கு கேக்குது. என்னன்னா?, என் தம்பி இருக்காரே, கற்பனையிலே கதாகாலேட்சபம் பண்ணுவாரு!

பொதுவா UG-ல ஒரு 10 நாள் இடைவெளி விட்டுதான் Allied paper exam நடக்கும் இல்ல? ..நான் Statistics Exam (B.sc Maths) முடிச்சு வரப்ப, ஒரு பஞ்சாயத்த வீட்ல கூட்டி (வேற யாரு, நம்ம அக்கா, அண்ணன் ) இருந்தாரு தம்பி, "Regular paper exams,  Continuous- ஆ தான் வரும், இவ்ளோ Gap விட்டு வைக்க மாட்டங்கன்னு"உண்மைய சொல்லு ,  Arear Exam தானே எழுத போனே?"ன்னு கேட்டாரு . ஒரு முறை முறைச்சு, Time table எடுத்து தூக்கி போட்டேன்,

இப்படியானப்பட்டவர் , இந்த கடிதத்தை பார்க்கும் பட்சத்தில், அந்த தீபாவுக்கும், சத்தியாவுக்கும் நான்தான் Courier Service பண்றேன்னு, பஞ்சாயத்த கூட்டுவாரே!, அது மட்டும் இல்ல, அந்த சத்யாவும், தீபாவும், யாருன்னு கேட்டு சாமி ஆடுவறேன்னு, நான் யாரென்னு சொல்றது? அவ்..திகிலாச்சு..உலகத்திலேயே, தம்பி பயந்த ஒரே அக்கா, நாந்தேன்.:-(
பய புள்ள அந்த பக்கம் போனதும், Bag-லேந்து Letter எடுத்து ஒளிய வைக்கனும்னு பார்த்தேன்.

அவர் சாமி கும்பிடும் நேரம் பார்த்து, அந்த letter எடுத்து, பக்கத்தில் அடுக்கி வச்சு இருந்த "தி ஹிந்து"  நியூஸ் பேப்பர் Sunday பேப்பர் (கலர் பேப்பர் இருக்கும்) அடையாளம் பார்த்து சொருகி வைத்தேன். ஷ்! அப்பா!...இப்படி தெரியாத ஆளு, தெரியாத ஒருத்திக்கு எழுதுன லெட்டெர மறைக்கறதுக்கே, குடல் வாய் வழியா வந்துடும் போல இருக்கே! எப்படி இந்த பய புள்ளைகளுக்கு இம்புட்டு தைரியம் வருது!..அடச்சே கருமம் புடிச்ச காதல்..அப்படின்னுதான் (சத்தியமா) நினைச்சேன்!.

அத..இப்ப நினைச்சாலும், சிப்பு சிப்பா(சிரிப்பு ) வருது..சில விஷயங்கள் கற்பனையான்னு நீங்க நினைக்கலாம்?, ஆனா அனுபவித்து சொல்றேன். இதெல்லாம் நடந்துச்சு..

முதல்ல காலையில தீபா? யார்னு கண்டுபிடிக்கணும், அவங்க கிட்ட letter ஒப்படைக்கணும், இல்லைன்னா, dispose பண்ணிடணும்னு நினைச்சுக்கிட்டேன்.

திவ்யா சொன்னது எவ்ளோ நிஜம், "இந்த வம்புல என்னை மாட்டிவிடாதேன்னு சொன்னாளே!" நாம சரியா மாட்டிகிட்டோமே!" அவ பேச்சை பேசாம கேட்டு இருக்கலாம்னு..மனசு பொலம்புது..

அப்பன்னு பார்த்து, நம்ம தாயுமானவர்(அதான் அப்பா) ..அந்த ரூமுக்கு வந்தார், என்ன வேணும்னு பதறிட்டு கேட்டேன். பக்கத்துக்கு வீடு பாய், கடைசி நான்கு நாள் , News paper கேட்டு வந்து இருக்காரு. சொல்லிகிட்டே எடுக்க போக..

அன்னைக்கு. செவ்வாய் கிழமை, .நான்கு நாள் என்றால் சனி, ஞாயிறு, திங்கள் செவ்வாய், (விரல் விட்டு எண்ணுனது நானுல்ல) கடவுளே...பாய்,அவர் பையனுக்கு வேலை வாய்ப்பு பார்க்க, தினம் முதல் நாள் பேப்பர் வாங்கி பார்பார். இப்படி நாலு நாள் சேர்த்து வாங்குவாருன்னு நினைச்சு கூட பாக்கல!.அப்பா பேப்பர் எடுக்க போறாங்க Letter கிழே விழ போகுது..இல்ல பாய் கையிலே கிடைக்கபோகுது..போச்சு...எல்லாம் போச்சு...

நான் மாட்டிகிட்டேனா?
தீபாவ கண்டு பிடிச்சேனா?  Wait பண்ணுங்க ப்ளீஸ்..
                                                                                                                             (தொடரும்..) 

புதன், 4 நவம்பர், 2015

தெய்வீக ராகம்! திவ்யா!

திவ்யா...(பெயர் மாற்ற பட்டுள்ளது, அவள் நலன் கருதி)

அவளது நம்பிக்கைக்குகுரிய சினேகிதி நான்..ஏன் அப்படி சொன்னேன்னு உங்களுக்கு பிறகு புரியும்..

ஜனவரி மூன்றாவது வார சனி கிழமை(தை மாதம்),  காலை 8.30 மணி (ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு), திருச்சியில் நான் Hostel -ல் இருந்த பொழுது இரண்டு நாட்கள் என்னுடன் தங்க வேண்டும் என தஞ்சையில் இருந்து வந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திருச்சியில் எந்த வேலையும் இல்லை..என்ன விஷயம் என்று கேட்டால் எல்லா கோயிலுக்கும் போகணும்னு சொன்னாள்.

வார வாரம், நான் தஞ்சை வீட்டுக்கு போய்டுவேன், இவ வரதுனால, ஒரு பிரார்த்தனை இருக்கு, இவ வர்ற விஷயம் சொல்லிட்டு வீட்டுக்கு இந்த வாரம்  Leave சொல்லிட்டேன்.

அப்பொழுதுதான் Cell Phone Use பண்ண ஆரம்பிச்ச நேரம். அதுவும் நான் வேலைக்கு சென்றதால். என்னிடம் Cell Phone இருந்தது. அவளிடம் Cell phone இல்லை. அவள் அம்மாவிடம் இருந்து Call வந்தது. "இரண்டு நாளைக்கு எதுவும் தொந்தரவு பண்ணாதீங்க, மௌன விரதம் இருந்துட்டு, திருச்சில எல்லா கோயிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு தான் வந்தா" "ஒரு வாரமாக, ஒரு மாதிரியாக இருக்கிறாள், உன்கிட்ட ஏதும் சொன்னாளா? என பதட்டமாக கேட்டார்கள்". "இல்லைம்மா, நான் எதுவும்னா உங்களுக்கு Phone பண்றேன்ன்னு சொல்லிட்டு வச்சுட்டேன். "

ஏதும் பிரச்சனையான்னு அவள்கிட்ட கேட்டேன்..

"மௌன விரதம் இருந்து இன்னைக்கு எல்லா கோயிலுக்கும் போகணும், நீ என் கூட வான்னு கூப்பிட்டா.."பேசாம என்னால முடியாது..உனக்காக வரேன்னு" சொன்னேன்.

இன்னைக்கு ஒருநாள் தானே, நாளைக்கு பேசுவ இல்ல? ன்னு கேட்டேன்
அதற்க்கு அவள், "இன்னைக்கு மட்டும் எல்லா கோயிலுக்கும் போறோம், நாளைக்கு உன்கூடதான் இருப்பேன், ஆனா நீ எங்கிட்ட பேசமாட்ட, என்னைய பாக்கவும் முடியாது.." என்னோட மௌன விரதம் இன்னைக்கு காலை 9 மணிக்கு ஆரம்பிக்குது. திங்கள் காலை 8 மணிக்கு முடியுது, நீ Monday Office கிளம்பறப்ப, நான் உன் கூடவே, கிளம்பி தஞ்சை போயிடுறேன்னா!"

"அடிபாவி, என்னடி புதிர் போடறன்னு சொல்றதுக்குல்லையே...சைகையில, நேரம் 9 ஆச்சுன்னு காமிச்சா..."
                                                      

பொலம்பிகிட்டே போனேன்..எல்லா கோயிலுக்கும் போனோம்..உச்சி பிள்ளையார், வெக்காளியம்மன் கோயில், ஸ்ரீ ரங்கம்...கிட்டத்தட்ட 9, 10 கோயில்..


பயபுள்ள 50 Km (Trichy) தள்ளி வந்தும், ஏதும் ஆப்பு வைக்க வந்துருக்கோ(?) அப்படின்னு ஒரே பதட்டம்.

இதற்கிடையில், 2, 3 தடவை அவங்க அம்மாவிடமிருந்து போன், அவள் மௌன விரதம் இருப்பதால். நான் இடையில் மாட்டிக்கொண்டேன்.
இரவு 9 மணிக்கு, திரும்ப வந்தோம். ஒரு பேப்பர்-ல் எழுதி காமித்தாள். "நான் தூங்க போறேன். என்னை திங்கள் காலை எட்டு மணிக்கு எழுப்பவும்"!", இதுனால உனக்கு எந்த பிரச்னையும் வராது, உனக்கு எள்ளளவும் தீங்க செய்ய மாட்டேன்னு" (உறுதி மொழி வேற) இதை யாரிடமும் சொல்ல கூடாது, என்னை எழுப்பவோ, என்னை Disturb பண்ணவோ கூடாது...என் மேல் சாத்தியம்.( அவளே சத்தியம் பண்ணிகிட்டா(?)" இந்த மாதிரி Sentiment பேத்தல் எல்லாம், பொண்ணுங்க கிட்டசெல்லுமே!.என்கிட்டேயும் செல்லுச்சு..

ஆகா..பயபுள்ள எதோ திட்டத்துல தான் வந்து இருக்கு போல..பதட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல, எகிறி போச்சு. வீட்ல சொல்றதா வேணாமா? ஒரே பயம்..நம்மகூட தான் காலையிலிருந்து இருக்கா. ஏதும் விபரீதமா தெரியல!
என்ன பண்ண, என்ன நம்பி வந்துட்டா..என்ன ஒரு நாளைக்கு தூங்க போறா? தூங்கட்டும். என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு நொடியை நகர்த்தினேன்..

சனி இரவு(9.30), அவ எங்க போனாலும் ஒரு கண்ணு அவ மேல வச்சு இருந்தேன், அவள் இல்லாத நேரத்தில், அவள் பையில் ஏதும் இருக்கான்னு பாத்தேன் (விஷம், sleeping tablet ..அப்படி, இப்படி)  ஆமா கிட்டத்தட்ட 36 மணி நேரம் கழிச்சு எழுப்புன்னு சொன்னா? யாருக்கு பொறுக்கும்.?

இன்னைக்கு கடைய சாத்துனா, Monday தான் கடைய திறப்பா?? ..ஆகா மொத்தம் என் கடைய காலி பண்ண வந்து இருக்கான்னு தெரியுது..மனசுல நினைச்சு கிட்டேன்...அவ மூஞ்ச பார்த்தா திட்டணும்னு தோணல...அப்படி என்ன வேண்டுதலா இருக்கும்?

பாத்ரூம் அப்படி இப்படி, எங்க போனாலும், கையில எதாவது இருக்கான்னு பார்த்தேன்..ஒன்னும் சந்தேக படர மாதிரி இல்லை...

                          

இரவு(11.30) :


அவ தூங்கிட்டா!(??) , எனக்கு தூக்கம் வரல...12 இருக்கும் அசந்து தூங்கறேன்..ஒரு 2 மணி நேரம் தூங்கி இருப்பேன்...முகத்துல எதோ இடிக்கற மாதிரி இருக்க...அப்படியே விலக்கி, பார்த்தா...அவ...மேல Fanla தொங்க....அப்படியே காலு என் முகத்துல இடிக்குது........ஆ ஆ!!!!!!!


நான் வீச்சுன்னு கத்தி ...திடுக்குன்னு முழிச்சு பார்த்தா....ரூம் அப்படியே இருக்கு...அவ அப்படியே தூங்குறா!...ரோட்டுல் எதோ ஒரு நாய் கத்துற சத்தம் கேக்குது....

இந்த  மூளை ஏன் இவ்ளோ யோசிக்குதுன்னு தெரியல...நெறைய சினிமா பார்த்துட்டோம் போல.. அவ்வ்வ்வ்வ்....

இவ்ளோ பெரிய சத்தம் போட்டும், ஒரு சலனம் இல்லையேன்னு போத்தி படுத்து இருந்த அவள் உருவத்தை பார்த்து முறைத்தேன்..ஆமா...நான் கத்துனது கனவுல இல்ல??(!) அவளுக்கு எப்படி கேட்டு இருக்கும்..அடச்சே...ஒரு நாள்ல இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டாளே!

இன்னைக்கு தூங்கின மாதிரி தான் நினைச்சு..உருண்டு பிரண்டு கொண்டு, அந்த இரவு போனது....

மறு நாள், ஞாயிறு காலை 9.00,
Breakfast time, Dining Hall போறாப்ப, அடுத்த room பொண்ணுங்க விசாரிக்க, உடம்பு சரியில்ல, படுத்து இருக்கான்னு சொல்லி சமாளிச்சேன்..அவளுக்கு ரெண்டு பூரி, தட்டுல எடுத்து வர மாதிரி எடுத்து வந்தேன்..சந்தேகம் வரகூடாது பாருங்க?(!)... என்னால சாப்பிட முடியல, சாதாரண நாள்ல, 5, 6 பூரி ன்னு 2 round போவேன்...அன்னைக்கு ஒன்னு கூட இரங்கல..அதையும் Dust bin - ல போட்டேன்...பக்கத்துல அப்பப்ப சும்மா ஒரு கப் , தட்டு சாப்பிட்டு வச்ச மாதிரி வச்சு இருந்தேன் (இப்பதான் சாப்பிட்டு, தூங்குறான்னு சொல்ல!) Sister rounds (christian hostel) வந்தப்ப கேட்டாங்க, அவங்க கிட்டயும் சமாளிச்சேன்.

ஞாயிறு மணி 10

ஏதாவது 1, 2 ன்னு போக, பொண்ணு எழுந்து இருக்கும்னு பார்த்தா...ஹிம்கும்...ஒன்னும் இல்ல..அப்பதான் ஞாபகம் வந்தது. முதல் நாள் சனி அன்று, பிரசாதம் போல கொஞ்சம் சாப்பிட்டதும். நான் தண்ணி
bottle, bottle -ஆ  குடிச்சப்ப, வேணுமா? வேணுமா? கேட்டப்ப..அவ ..வேணாம் வேணாம்னு சொன்னதும்...அடிபாவி!

ஞாயிறு மணி 12, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்!அவளிடம் எ ந்த சலனமும் இல்லை, அசைவும் இல்லை, வைத்துள்ள புளி கரைக்குது...நெஞ்சு பட படைக்க, அவள் போர்வை விலக்கி, கை தொட்டு பார்த்தேன்..அப்பா...கதகதப்பு இருந்தது (வேறு எதும்னா, உடம்பு சில்லுன்னு ஆயுடும்னு படிச்ச ஞாபகம்)..எப்படியெல்லாம் யோசிக்க வச்சுட்டு படுத்து இருக்கா? சத்தியம் வேற...கடவுளே...நீதான் என்ன காப்பாத்தனும். இன்னும் 20 மணி நேரம் போகணுமே....போன் Silent - ல போட்டு , அதையே பாத்துக்கிட்டு, அவங்க அம்மா phone வந்தா சமாளிச்சுகிட்டு, பேசிகிட்டு, முடியல....ஷ்..ஷ்..

எனக்கு அவளை பற்றி நன்றாக தெரியும் என்பதால், அவள் மனதை நோகடிக்க விரும்ப வில்லை, என்னிடம் பேசுவதை தவிர்க்கவே, அவள் மௌன விரத நாடகம் போட்டிருப்பதாக, தோணியது" , திங்ககிழமை பேசுவ இல்லை, இருக்குடி உனக்குன்னு நினைச்சுக்கிட்டேன்"

அன்னைக்கு ஒரு நாள் குளிக்கறது இல்லைன்னு முடிவு பண்ணேன். அவளை விட்டு நகர மனம் இல்லை. சுத்தி, சுத்தி வந்தேன். சாப்பாடும் செல்லல!..

திவ்யா!
இந்த அன்பு ராட்சசிக்காக, நான் ஏன் இவ்ளோ பெரிய risk எடுக்கிறேன்?
இவள் எப்படி என் நட்பு வட்டத்துக்குள் வந்தாள்? என்ன அப்படி ஒரு பந்தம்?" என பலவாறு எண்ணியவரே, என் மனம் 3 வருடம் பின்னோக்கி போனது!(எதையும் சுவாரசியமா சொல்லணும் இல்ல?,திவ்யா எப்ப எழுந்தா? எழுந்தாளா? இல்லையா? என்னாச்சு...தொடர்ந்து படிங்க..உங்களைவிட நானும் ஆவலா இருக்கேன், நான் அனுபவத்த அந்த சுவாரசியம்..tention....அப்படியே உங்களுக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன்..பாக்கலாம்...)"

---தொடரும்