வெள்ளி, 19 ஜூன், 2015

என் இலட்சியத்தை தேடி! - 1

அப்பாடி ஒரு வழியா ஐயாவிடம் OK வாங்கி M.C.A Admission சேர்ந்தாச்சு.
 
எதாவது Programmer - ஆ  Partime Job பாக்கலாம்னு  என் தேடுதலை ஆரம்பித்தேன் . அப்பொழுது Basic Computer Class - Training  எடுத்த அனுபவமும், College students Project Guidance கொடுத்த அனுபவம் மட்டுமே இருந்தது. அதான் உங்களுக்கு தெரியுமே..அதுவும் நம்ப ஊர்ல College Project எல்லாம் நாலு Form பண்ணி DB-Connect பண்ணி Data load பண்ணி காமிச்சாலே Project முடிஞ்சது. (எல்லா College சொல்லப்பா). அம்ம்புட்டு தான் நம்ப Experience.
அந்த சமயத்துல Real time Project experience வேணும்னு  openings பாத்துக்கிட்டே இருந்தேன்.
 
அப்பொழுது  Final year M.C.A ஆரம்பிக்கும் பொழுது,ஒரு May மாதம் "The Hindu" வில் "S/w Programmer" Wanted, Walk- In, TRICHY, Minimum 2 years exp. என Advt வந்தது. கிளம்பிட்டேன். ஒரு 2 Project- local client க்கு, பண்ணாத பீலாவுட்டு Resume Ready பண்ணிகிட்டேன்.  நான் Class எடுத்த Centre -லையும் Inform பண்ணிட்டேன், எதாவது Cross check பண்ணா கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் என்றேன். அவர்களும் நல்ல விஷயம் என்பதால் OK சொன்னார்கள்.

 
அதுவும் மறுநாள் walk-in interview, நிறைய Prepare பண்ண time இல்லை. விசாரித்தேன், யாரவது Detail Project பண்ணி இருக்காங்களா என,  M.C. A friend புவனாவின்  சகோதரர் செய்து இருப்பதாக சொன்னாள் . உடனே அத வாங்கி கிட்டு வாங்கி கொண்டு திருச்சி சென்றேன். (போகும்போது Prepare பண்ண).

9 மணிக்கு Trichy, Company அடைந்து விட்டேன். கூட்டம் பார்த்ததும் ஆ என வாயை பிளந்தேன். சரி எவ்ளோ time ஆனாலும் என்னைய examineபண்ணி பாக்கணும்னு  wait பண்ணேன். 1st Round, Written test, 15 கேள்விகள் - Objective Type, பரவாயில்லை OK பண்ணிட்டேன். கிட்டத்தட்ட 300 பேர்ல அப்பவே 130 per filter பண்ணினார்கள், next level Technical Interview க்கு  எனக்கு வந்தது  Queue no.103.
 
3 பேர் கொண்ட குழு, Interview பண்ணியதால் அன்றே முடிக்க திட்டமிட்டார்கள்.
ஐயாவிடம், Phone பண்ணி சொல்லி விட்டு, நான் அந்த Project Record note - detail பார்க்க ஆரம்பித்தேன். வெளியே வருபவரிடம், என்ன Interview, என்ன  கேள்வி , எதுவும் கேட்க  தோணவில்லை. Interview Panel இருக்கிற யாரவது நம்மபள பாத்துட்டா , நம்பள பத்தின Image போயுடுமேன்னு ..ஒரு ஜாக்கிரதை...
 
சரியாக..5 மணி போல் என்னை அழைத்தார்கள். ஷ் அப்பா! அந்த நிமிடம்..அந்த நொடி...சான்ஸ் இல்லை...கண்ண கட்டுச்சு.."கைபிள்ளை எதுவும் காட்டிக்கதேன்னு என்னைய மனச தேத்திக்கிட்டு" உள்ளே போனேன்.
எனக்கு ஒரு 10 technical Question கேட்டு இருப்பார்கள், அதில் 8-ம் , நான் கடைசியாக பார்த்த அந்த Project Note -ல் அடங்கி இருந்தது. என நான் சொன்னால்  நீங்கள் நம்புவீர்களா?
 
Project - Its a product for NBFC (non banking financial companies),VB- க்கான ஆள் எடுப்பதாக சொன்னார்கள். சத்தியமாக, Technical Interview இவ்வளவு சுலபமாக முடியும் நான் எதிர் பார்க்க வில்லை. Result பிறகு தெரிவிப்பதாக சொன்னார்கள். .நான் Tanjore திரும்பினேன். புவனாவுக்கு THANKS சொன்னேன்

சரியாக ஒரு வாரத்தில், எனக்கு Phone செய்து நேரில் வர சொன்னார்கள். Hi, Select ஆயாச்சு, Salary Confirm பண்ண HR Interview  கூப்பிடுவாங்கன்னு, ஜாலியா கிளம்பி போனேன். அங்க போனால், திரும்ப சின்ன கூட்டம், 10  பேர் தானே எடுப்பதாக சொன்னார்கள்!. கிட்டத்தட்ட 25 பேர் நின்னர்கள். கொஞ்சம் கலக்க மாயிருந்தது. உள்ள போனவுடனே..அவர்கள் சொன்னதை கேட்டு. கிர்ருன்னு ஆச்சு..என்ன தெரியுமா?
 
System கொடுத்து ஒரு Task சொல்வார்களாம். அதை செய்து காட்டனும். வடிவேலு Voice-ல "சொல்லவே இல்லைன்னு" Mind voice கேட்டுச்சு.
 
அப்படியே எகிறி குதிக்க்கலாமனு பார்த்தா..2 வது மாடி வேற..சும்மா தமாசுக்கு சொன்னேன்..அப்படி நினைக்கல!
 
எனக்கு வந்த Task என்ன தெரியுமா??  2 hours time, VB Use பண்ணி Graph போட்டு காட்டனும். சத்தியமா எனக்கு தெரியல. Basic Program- னா OK .
அப்படியே Google Try பண்ணேன். Internet Connection வைக்கலை. படுபாவிங்க!
 
அப்பத்தான். Google இல்லன்னா பாதி பேருக்கு இங்க வேலை இல்லைன்னு எங்கோ படிச்சா ஜோக் வேற நாபகம் வந்துச்சு. ஹி ஹி 

 
Application Open பண்ணி, Insert Object போட்டு, Graph Insert பண்ணேன் . Application run பண்ணி Check பண்ணேன், X, Y position Input கொடுத்தா Graph Generate ஆயிடும். நான் ஒன்னும் பன்னல, அது plug-in control தான். ஷ் ஷ் அப்பா!
45 mins -ல, Task கொடுத்தவர கூப்பிட்டு காமிச்சேன். அவரும் test பண்ணிட்டு. வெளியே wait பண்ண சொன்னார்கள். அரை மணி நேரத்தில் என்னை அழைத்து  Salary Confirm பண்ணி Appointment Order கொடுத்து விட்டார்கள்.
 
Final Round Interview - என் திறமைக்கான வெற்றி அல்ல, என் முயற்சிக்கான வெற்றி என தெளிவாக விளங்கியது.
 
 
அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கையை காப்பாத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் வந்தது. 5 நாளில் வேலைக்கு சேர்ந்தேன்.

வேளையில் சமாளிக்க முடிந்ததா? 
முடியல. யாரடி மோகினி படத்துல  தனுஷ், ஒரே நாள் படிச்சு Project பண்ற மாதிரி விஷயம் இல்லைன்னு தெளிவா விளங்குச்சு!

தாக்கு பிடிச்சேனா?

Pls Wait...
 
குறள்:611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
        
குறள் விளக்கம்:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

குறள்:620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
        
குறள் விளக்கம்:
மனம் தளராதும் தாமதிக்காதும் முயற்சி செய்பவர், தமக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியுறச் செய்வர்.
 

புதன், 17 ஜூன், 2015

என் லட்சியம்!

Bsc (Maths), கல்லூரி படிப்புக்கு பின்,  ஐயாவின் ஆசைப்படி Group - 1, Main exam, Mathematics. எடுத்து எழுதினேன். மிகவும் சிரமமாக இருந்தது. 
ஏனோ தானோன்னு எழுதினேன். தேர்வாகவில்லை(ஐயா சொல்ற மாதிரி நானெல்லாம் நுனி புள் மேஞ்ச மாடு).

 M.C.A படிக்கணும்னு ஐயாகிட்ட கேட்டேன், ஐயாவோ, விரைவில் எனக்கு திருமணம் செய்ய இருப்பதாகவும், 3 வருடம் படிப்பு தாமதமாகிவிடும் என்றார்கள். (எல்லாம் அம்மா இல்லாததால் தான், அவர் கடமையை நேரத்தில் செய்ய நினைத்தார்கள்)

உறவிலே ஒரு வரன் வர, அதை முடிக்க ஆயத்தமானார்கள்.அவர்கள் வரதட்சணை குறியாக இருந்தாது எனக்கு பிடிக்க வில்லை.என் மனதுக்கு பிடிக்க வில்லை, என ஆஷ்தான பிள்ளையாரிடம்(Municipal colany) போய் வேண்டினேன். "கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடு" "உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன் என"

 
அட!!!..2 நாளில் பிறிதொரு கல்யாண  பேச்சு வார்த்தையில், அவர்கள்
பேச்சு வார்த்தை பிடிக்காமல், ஐயாவே "என் மகளுக்கு இப்போதைக்கு திருமணம் செய்வதாய் இல்லை, நீங்கள் கிளம்புங்கள்" என சொல்லி விட்டார்கள்.
 
அந்த சமயத்தில் தான், நாம இப்படியே இருக்க கூடாது ..மேல படிக்கணும், அதுவும்   M.C.A படிக்கணும்னு தோணுச்சு

அப்ப, நம்ப தம்பி சிங்கையில் தான் இருந்தார். அவர் அனுப்பிய Colorful photo பாத்து மெர்சலாயிட்டேன் .
 
M.C.A முடித்து , சிங்கப்பூரில் Software Engineer வேலை பாக்கணும் என லட்சியம் தோன்றியது . என் லட்சியம் அடையும் நோக்கத்தில், பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க மறந்தேன். அதுக்கு அந்த பிள்ளையார் என்ன பண்ணார் தெரியுமா?
Pls..wait...I will tell you later...
 
வீட்டையும் பாத்துக்கிட்டு படிக்கனும்னா, Distance Education தான் சரின்னு, check பண்ணா, அடுத்த நாள், Bharathidasan university, M.C.A படிப்புக்கு Application கொடுக்க
கடைசி நாள், ஐயா, உடனே OK சொல்லும் மன நிலையில் இல்லை என தெரிந்தது.
 
 
மொள்ளமாரிதனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும்..மனசு சொல்லுச்சு
நானே ஐயா Sign, போட்டு Application, கொடுத்து வந்துவிட்டேன்.
Acknowldgement / Admission card ஏதும் வீட்டுக்கு வந்துட கூடாது வேற ..
தாத்தா வீட்டு Address கொடுத்துவிட்டேன். அப்பால நாலு தெரு தள்ளி தான் தாத்தா(அம்மா வழி தாத்தா) இருந்தாக..

அப்பாவும், தாத்தாவும் பேசிக்க மாட்டாக, போட்டு கொடுக்கவும் வேலை இல்லை...ஷ்ஷ் ..அப்பா!! இந்த ஒரு சின்ன மூளை..  என்னவெல்லாம் யோசிக்க வைக்குது...
 
மனசு பக் பக் என அடித்து கொண்டிருந்தது. 
 
என் லட்சியம் நிறைவேறியதா? ஐயா OK சொன்னார்களா ?
 
Pls wait....
 
அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:67)
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
 
பொருள்:
தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவனைக் கற்றோர் கூடி இருக்கும் அவையில் முந்தியிருக்குமாறு கல்வியில் வல்லனாக்குதல்.

புதன், 18 மார்ச், 2015

அண்ணனுமானவன்!

சிறு வயதில் சண்டை வந்தால், என் தம்பி என் கையை கிள்ளியே Mehendi போட்டு விட்டு விடுவான். நானும் நல்லா கிள்ளி விடுவேன். அதற்காகவே நகம் வளர்ப்போம்.



தம்பி ஒரு 8,9 வயதில் ஒரு விஷயம் சொன்னான், தினம் ஒரு அணில் வந்து அவனுக்கு ஒரு பழம் தருவதாக. அவன் கையிலும் பழம் இருக்கும்( கொய்யா, மாதுளை, மாம்பழம், வாழைபழம் என), யாராலையும் நம்ப முடியவில்லை. என் அண்ணன் இருவரும் துப்பறிந்தும் ஒரு தடயமும் கிடைக்க வில்லை.

பாசி படிந்த சுவரில் மூன்று கொடு இருக்கும், அதை காமிச்சு, அணில் பழம் கொடுத்து விட்டு இந்த சுவரில் தன் நகத்தால் அடையலாம் விட்டு சென்றிருக்கிறது என காண்பித்தான்.

அனைவருமே நம்பிவிட்டோம். அவனை கிட்டதட்ட அணில் தூதூவனாக நினைக்க ஆரம்பித்து அனைவரிடமும் சொல்ல ஆரம்பித்தேன், அப்ப பக்கத்து வீட்டு பாயம்மாவிடம் சொல்ல, அவர்கள் "அவர்கள்தான் அந்த அணில்!" என்றார்கள்..அன்னைக்கு எங்க கிட்ட அவன் மாட்டிக்கிட்டு பட்டபாடு இருக்கே...இம்ஹும் வார்த்தையாலே வர்ணிக்க முடியாது. நான்தான் நம்பினன்னா...எனக்கு 2, 4, வயது மூத்த அண்ணன்கள், 7 வயது மூத்த அக்கா எப்படி நம்பினார்கள் என தெரியவில்லை.

அதே நினப்புல நாமளும் எப்படியாவது ஒரு அணில Friend பிடிக்கணும் அதுக பின்னால போய், அதுக எகிறி குத்திச்சு ஓட, Bulb வாங்கின கதை வேற!

ஒரு அணிலால எப்படி ஒரு மாம்பழம் தூக்க முடியும்னு யோசிக்க வேண்டாமான்னு நீங்க கேக்கறது காதுல விழுது. பய பிள்ளை அவ்வளவு தத்ருபமா சொல்லும் பாருங்க... ஷ்ஸ் அப்பா கண்ண கட்டும்!

இன்றும் எதாவது கலாய்க்கனும்னா...நீ  சின்ன வயசுல அணில் கதை சொல்லி ஏமாத்துனவன் தானே என கலாய்போம்.

இப்பெல்லாம் நிறைய பொறுப்பானவர் ஆயிட்டார், வீட்டில் அனைவரின் திருமணத்திலும் அவரின் முக்கிய பங்கு இருக்கிறது.  எதையும் அர்ப்பணிப்போடு(dedication) செய்யணும் என்பார்.  ஒரு வேலை எடுத்துகொண்டார் எனில் அதை முடித்துவிட்டு தான் அடுத்த வேலை எடுப்பார், இதை பார்த்துக்கொண்டே அதை பாப்போம் என்பது அவர் அகராதியிலே கிடையாது.
தீவிர முருக பக்தர்.

கந்தசஷ்டி கவசம், அவர் வாழ்வில் ஒரு திருப்புமுனை தந்தது எங்கள் அனைவரையும் தினம் படிக்க சொல்வார். நான் பாட்டு போட்டு கேக்குறேன் என்பேன். இப்படியே என்னை கந்தசஷ்டி கவசம் படிக்க சொல்லி ரொம்ப Tired ஆயிட்டார்.
                                                             

இன்னைக்கு உன்  Birthday Gift நான் கந்த சஷ்டி கவசம் படிக்க ஆரம்பிச்சுட்டேன் ...படிக்க ஆரம்பிச்சுட்டேன். இதைவிட உனக்கு வேற சந்தோசம் கிடையாது எனக்கு தெரியும்.

என் அண்ணன் தந்தையுமானவன் ஆனதாலோயோ என்னவோ...
என் தம்பி நீ எனக்கு அண்ணனுமானவனாகி விட்டாய்! ...
நீ நல்ல இருக்கனும்யா..உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி பாக்க எங்களுக்கு ஆசையாக இருக்கிறது..சீக்கிரம் நடக்க அந்த முருகன் மனசு வைக்கணும் .

நாளும் பொழுதும் நல்லவனாய்..
காலை உதிக்கும் கதிரவனாய்..
கடமை நினைது வல்லவனாய்...
வாழும் நீ!
பல்லாண்டு நலம் வாழ..
வாழ்த்துகிறோம்!

(படித்ததில் பிடித்தது...சில மாறுதல்களுடன் உனக்காக.. )

* உன் பிறந்தநாள் அன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்....

* அம்மாவின் ஆண்பிள்ளை தேடலுக்கும்,
அப்பாவின் தலைமுறை காக்கவும்,
வரம் பெற்று வந்த
பொறுப்பான மகன்களில் ..
நீயும் ஒருவன் தானே...

* தத்தி தத்தி நீ நடக்க
தங்க மயில் ஆடுதுன்னு,
சொல்லிவச்ச சொந்தங்களுக்கு,
இன்றும் சொக்கத் தங்கம்
நீ தானே...

* கொஞ்சிப் பேச ஒரு அக்காவும்,
சண்டை போட மறு அக்காவும்(நான் ),
சமாதானம் பண்ண
குடும்பமுமாய்,
நாம் அடித்த கூத்துக்கள்
நெஞ்சுக் கூட்டில்
நினைவுகாளாய் ஏராளம்...

* உன் கைபிடித்து
உன்னை நான் பள்ளியனுப்பிய
நாளும்,
அப்பா உனக்கு வாங்கித்தந்த
பொம்மைக்காருக்காய்
உன்னிடம் சண்டை போட்ட
நாளும் என,
அழகான நம் மழலைக் காலம்
மனக்கண்ணில் ஓடுதடா....

* காலங்கள் உருண்டோட,
கனவுகளும் சேர்ந்தோட,
காலத்தின் கோலத்தில்
பொறுப்புகளும் சேர்ந்தாட,
நெருங்கியே இருந்த
நம் அன்பு,
இன்று,
நம் கடமை பயணத்தால்,
இருமடங்கு அதிகமாக,
இதுவரை உன் அருகில் இருந்து
வாழ்த்திய நான்
வார்த்தையைத் தேடுகிறேன்...

* கஷ்டமே அறியாமல்,
காத்திட்ட
எங்கள் அன்பின்,
பொறுப்புக்காய் தாயகம் புறப்பட்டாய்...

* வெயிலும், மழையும்
உன்னை நெருங்காம
(சிங்கையில் )பொத்திப் பொத்தி
வாழ்ந்த நாட்கள்,
புழுதி  நிறைந்த
மாநகரில் நீ அலையத் தானோ?.....

* இங்கு பிடி சோறும்
நீ இன்றி உள்ளிறங்க மறுத்து
உள் நாட்டு கலவரம்
செய்யும்
காரணம் அறிவாயோ?...

* இன்று உந்தன் பிறந்த நாளில்,
கடவுள் உன்னை காத்திடவும்,
காலம் நம்மை கரைசேர்த்திடவும்,
உன்னை தம்பியாய் வ்ரம் பெற்ற.. உன் அக்கா
வெறும் வார்த்தையிலே வாழ்த்துகின்றேன்..

* வயோதிகம் வந்தாலும்,
வளமாக நீ வாழ,
வாஞ்சையோடு வாழ்த்துக்கிறேன்...
ஏழுப்பிறப்பென்பதில்,
எனக்கு நம்பிக்கை இல்லை...
அப்படி ஒன்று இருப்பின்,
என் ஏழுபிறவிக்கும்,
அன்னையாக, தந்தையாக
அண்ணனாக, அக்காவாக
தம்பியாக, தங்கையாக
நீங்களே வேண்டும்
என்று,
இல்லாத கடவுளிடம்
மண்டியிட்டு வேண்டுகின்றேன்....

* உன் பிறந்தநாள் அன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

வாழும் தேவதைகள்-3 - லக்ஷ்மி மேடம்!


நாம் வாழ்கையில எப்பயாவது, எதார்த்தமா சந்திக்கிறவங்க , நம்ம வாழ்க்கைய புரட்டி போட்டுட்டு போய்டுவாங்க, அப்படிதான் எனக்கும் ஒரு விஷயம் நடந்தது.

நான் சாந்திக்கு Cycle ஓட்ட கத்து கொடுத்ததுதான் உங்களுக்கு தெரியுமே!.

அப்ப ஒரு நாள், அவ இருந்த Apartment -ல இருந்த Common pipe-ல, சாந்தியும் நானும் பலூன்ல தண்ணி புடிச்சு விளையாடிக்கிட்டு இருந்தோம்.அப்ப அந்த பக்கம் செடிக்கு தண்ணி ஊற்ற, தண்ணி பிடிக்க ஒரு Aunty வந்தாங்க, நாங்க பத்து பலூன்லையும் தண்ணி புடிச்சுட்டுதான் தருவோம்னு கண்டிப்பா சொல்லிட்டோம். எங்கள பாத்து "என்ன இவ்ளோ பெரிய பசங்களா இருக்கீங்க, பலூன் வச்சு விளையாடுறீங்கன்னு" கேட்டுட்டே போய்ட்டாங்க.

அப்பொழுது கல்லூரியில் சேர வேண்டிய தருணம்.

என் தாயுமானவர், அது தான் எங்க ஐயா, என்னைய IPS ஆகணும்னு நினைச்சதால என்னை B,A History எடுத்து படிக்க சொன்னங்க ( +2-ல்  1st Group எடுத்து இருந்தும் ). அப்பத்தான் சுலபமா பண்ணலாம்னு நினைச்சாங்க. நானும் B.A History மட்டும் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் Apply பண்ணி இருந்தேன்.அப்பொழுது எனக்கென்ற எந்த விருப்பமும் இல்லை. ஆனால் B.A (History) படிக்க சுத்தமாக விருப்பம் இல்லை.

ஐயா சொன்னதால் B.A history Apply பண்ணி, கல்லூரிக்கு Admission செய்யும் நாளில், வரிசையில் அமர்ந்து இருந்தேன். அப்பொழுது ஒரு Madam எங்கிட்ட வந்து, என்ன Group? என்ன Admission?என்ன Subject? என்று கேட்டார்கள். நான் பதில் சொல்லிக்கொண்டே , இவங்கள எங்கோ பாத்திருக்கோமேன்னு நினைச்சேன்..ஆனா சுத்தமா ஞாபகம் வரல! என்ன?  B,A History எடுத்துட்டு படிக்க போற? IPS Try பண்ண  வேற Subject  எடுக்க கூடாதுன்னு யாரு சொன்னா? நீ உன் group, subject எடுத்து படி.ச்சு,  IPS எழுதலாமே! உனக்கு B.sc (Maths) படிக்க இஷ்டமானு கேட்டாங்க. எனக்கு தலை கால் புரியல.

OK ன்னு சொன்னேன், Madam உங்கள எங்கோ பாத்து இருக்கேனே! இழுத்தேன்..அவங்க உடனே, "பலூன் வாங்கித்தரேன்..Water fillup பண்றியான்னு கேட்டாங்க..நான் சிரித்தேன்..அவங்களும் சிரித்தாங்க.."என் கண்ணின் ஓரம் சின்ன நீர்த்துளி!

அங்கயே Maths Dept HOD கிட்ட பேசினார்கள், ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கான 1 Quota இருக்கு , நாளைக்கு Admission கடைசி நாள், அந்த Group-லிருந்து யாரும் வரலைன்னா. Admission.பண்ணிக்குங்க என்று சொல்லி விட்டார். B.Sc Maths Application போடததால, என்னைய  B.A History Admission போட்டு History Class போக சொன்னார்கள்.நாளை பார்க்கலாம் என்றார்கள்.

எனக்கு நம்பிக்கை இருந்தது. அதே போல் மறு நாள் எனக்கு Group மாற்றம் கிடைத்தது,  நல்லபடியாக மூன்று வருடம் படித்து முடித்தேன். என் வாழ்கையே மாற்றிய அந்த வாழும் தேவதை லக்ஷ்மி மேடம். அவர்கள் யார்? எனக்கு என்ன ஒரு உறவு? தெரிந்தவரா? அறிந்தவரா? இது எப்படி நிகழ்ந்தது எனக்கு இன்றுமே ஒரு புரியாத புதிர். எல்லாம் அவன் செயல் அன்றி வேறொன்றும் இல்லை.

தென்றலா நீங்கள்?
என் வாழ்வில் வசந்தம் வீசி சென்றதால்!

மேகமா நீங்கள்?
என் மேல் கல்வி சாரலை தூரி சென்றதால்! 

தெய்வமா  நீங்கள்?
என் வாழ்வை மாற்றி அமைத்ததால்!

Hats off to you Lakshmi Madam!

திருக்குறள்:
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒப்புரவறிதல்.

குறள் 211: 
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

பொருள்: 
பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.

வியாழன், 4 டிசம்பர், 2014

நட்(பூ)- சகோதரியுமானவள்!

பாத்திமா!


சேர்ந்து இருந்த நாட்கள் மிக குறைவு, ஆனாலும் ஏழு ஜென்மம் தொடர்ந்தது போல் ஒரு பந்தம். குறைவாக பேசுவோம், நிறைய சிரிப்போம்!

அவர் திருமணத்திற்கு முன், தன்னுடன் வேலை பார்த்த நண்பர்கள், தோழிகளை வீட்டுக்கு அழைத்து, காபி போட போய்.. பால் எப்படி காச்சுறது எப்படின்னு தெரியாம..தெரியாமல், கொஞ்சம் கருகவிட்டு அதிலே காபி போட்டு, அனைவருக்கும் கொடுத்ததும், அந்த நண்பர்களில் ஒருவர்," அதை குடித்து விட்டு" "இந்த பொண்ணை எல்லாம் எவன் கட்டுவான்னு?" (இவர் இல்லாத பொழுது) கேட்டதும். பின் மற்ற தோழியின் மூலம் பாத்திமா தெரிந்து கொண்டதும். அத கேட்ட அந்த ஒரு கேள்விக்காக...காலம் பூரா அந்த பொண்ணு கையிலேயே  காபி குடின்னு அந்த ஆண்டவன் முடிவு எடுத்தும்..இதை யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு பாத்திமா, என்கிட்டே சொன்னதும், அதை இது வரைக்கும் நான் Maintain பண்ணதும், இனியும் நான் Maintain பண்ண போறதும் ...ரகசியம்...ஷ்ஷ்...முடியல!...

இன்னைக்கு தான் நீங்க பிரியாணி Master ஆயிட்டீங்கள்ள..பாத்திமா Free-யா விடுங்க ....

தோழிகள் கூட்டம் அனைவருக்கும் ஒரு சேர தகவல் பரிமாறுவது, FB-ல தவறாமல் like போடுவது (அனைவருக்கும்). குழந்தைகளையும் கவனித்துகொண்டு, வேலைக்கும் சென்றுகொண்டு  எப்படி இப்படி Personal Relationship maintain பண்ணுகிறார் என வியப்பேன்.  Hats off  to you Fathima!

 என்னை, எத பண்ணலும்  "கலக்குறீங்க" "கலக்குறீங்கன்னு" சொல்லி சொல்லி உசுபேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கும் அன்பு தோழி! 

தானும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்தி பார்க்கும் குணம் கொண்ட உற்ற தோழி!.

காலம் சில நபர்களை, ரத்த பந்தமாக அமைக்காத பொழுது, உடனே பயணிக்கும் தோழியாய், தோழர்களாய் அமைத்து விடும் என்பதை மனபூர்வமாக நம்புபவள் நான்!


உன்போன்ற தோழிகள் 
இல்லை எனில்..
நான் இங்கு இல்லை....
உடன் பிறக்கவில்லை என்றாலும்..
உற்ற தோழி ஆனாய்..
உடன் பட்டவர்களானோம்...
அன்பால் ஆர்பரிக்கிறோம்..
பண்பால் பரவசமானோம்..
என் உடன் பிறவா சகோதரி...நீ..
பல்லாண்டு காலம்...
நோய் நொடி இன்றி...
நீண்ட ஆரோக்கியத்துடன் 
எல்லா வளமும், நலமும் பெற ..
வாழ்த்துகிறேன்....
என் சகோதரியுமானவளுக்கு!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!



குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிகாப்பது போல,  நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.

இந்த நட்புக்கு இலக்கணமானவள் நீ!



பாத்திமா, இதை படிக்கும் பொழுது உங்கள் கண்ணின் ஓரம் நீர் எட்டி பார்த்திருந்தால் அது என் இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றி அல்ல..நம் நட்புக்கு கிடைத்த வெற்றியடி பெண்ணே!

படிச்சுட்டு எப்படி feel பண்ணீங்கன்னு அப்படியே கீழ comments போட்டுடுங்க! அப்படியே Party எங்கன்னு சொல்லிடுங்க! அப்புறம் நம்ப பிரியாணி??

புதன், 3 டிசம்பர், 2014

பாயம்மா (தாயம்மா!)


எனக்கு இஸ்லாம் மதத்தின் மிகுந்த மரியாதை. அவர்கள் இறை நம்பிக்கையும், அவர்கள் இறைவழிபாடும் என்னை ஆச்சர்ய பட வைக்கும். இதற்கெல்லாம் முதல் காரணம், எங்கள் பாயம்மா! இல்லை இல்லை எங்கள் தாயம்மாவாக இருந்தார் எங்கள் சிறு வயது பருவத்தில். பாயம்மா எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்தவர். அவர்களுக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள்.

எங்கள் மீது மிகுந்த பாசமாக இருப்பார். என்ன செய்தாலும் எங்க வீட்டுக்கு ஒரு பார்சல் அனுப்பிவிடுவார்கள்.

அப்பெல்லாம் பாயம்மா வீடு பிரியாணி சாப்பிட்டு தான் வளர்ந்தேன்னு சொல்லலாம். ரம்ஜான், பக்ரித் மட்டும் அல்ல, அவர்கள் பிள்ளைகளில் நான்கு பையன்கள் ஒவ்வொருத்தராக, துபாய் சென்றார்கள். அவர்கள் ஒவ்வொரு முதல் முறை துபாய் செல்லும்பொழுது "பயணம் செய்ய " விருந்து. அவர்கள் ஊருக்கு விடுமுறைக்கு ஊருக்கு வரும் பொழுது விருந்து என பாயம்மா வீடு களை கட்டும்.



பக்ரித் பண்டிகைக்கு, வசதி படைத்தவர்கள், ஏழைகளுக்கு "கறி" இலவசமாக வழங்கும் அவர்கள் வழிமுறை, இஸ்லாம் மதத்தில், எனக்கு மிகவும் பிடிக்கும் ( ஏழைகளுக்கு உதவுவது). , அதற்காக பாயம்மா வீட்டில் 6 , 7 ஆடு வெட்டுவார்கள்.

அவர்கள் பையன்கள் துபாயிலிருந்து வரும் பொழுது, அவர்கள் கொண்டு வந்த பெட்டி பிரிக்க ஒரு நாள் குறித்து, அவர்கள் நெருங்கிய உறவினர்களை வரவழைத்து தான் பிரிப்பார்கள்.அன்னைக்கும் செம விருந்து தான். எங்களுக்கும் things கொடுப்பார்கள், எனக்கு clip, fancy item, dress material கிடைக்கும், அதெல்லாம் ரொம்ப ஸ்பெஷல், சும்மாவா? துபாய் things ஆச்சே.

பாயம்மா செய்த பிரியாணி போல் இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை. அப்படி ஒரு ருசி. அன்பையும், பிரியாணியையும் அள்ளி தருபவர்கள் பாயம்மாக்கள்!

We miss you Baayamma!!

இஸ்லாம் மதத்துடன், நான் சேர்ந்தே பயணிக்கிறேன். இஸ்லாம் தோழிகள், என் சகோதரிகளாக என் வாழ்வில் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.  (தொடரும்) 



ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வாழும் தேவதைகள்-2!-சித்தி!



வாழும் தேவதைகள்-2! -சித்தி

Small mummy...அப்படி தான் என் சித்தியை கூப்பிடுவேன். ..
சித்தி அவ்வளவு அழகு...அமைதி ..பொறுமை..நிறைந்தவர்..மலேசியாவில் வசிக்கிறார்..ஒரு அழகு பையன்..

இரும்பு மனுசி..எவ்வளவு போராட்டத்தையும்,தன்னுள்ளே அடக்கி யாருடைய தயவும் இன்றி வெற்றி காணும் திறன் படைத்தவர்.

Small mummy you are great!

2 பேருக்கு சமைச்சு இருந்தாலும் ..20 பேருக்கு சமைச்சுட்டு இருந்தாலும்..சமைச்சுட்டு இருக்கிற .சுவடே தெரியாது..Kitchenஅவ்வளவு சுத்தமாக இருக்கும்..சமைக்கிற அடையாளமே இருக்காது..அவ்வளவு நேர்த்தி, இன்னும் அவரிடம் இருந்து கடை பிடிக்க முயல்கிறேன்..ஸ்ஸ்ஸ் முடியல சித்தி முடியல...

"தாயாகி பெற்றெடுக்கும் முன்பே
தாய்மையின் ருசி பிறந்தது..அக்காவின் குழந்தை பிறந்ததிலிருந்து...." எங்கோ படித்தது 

ஆமா சித்தி...உங்க அக்காவுக்கு குழந்தை பிறந்தப்ப..உங்களுக்கு 3 வயது.இல்ல? உலகத்திலேயே குட்டி சித்தி எங்களுக்கு தானே? ஆமாம் எங்க அம்மாவிற்கு திருமணதிற்கு பின் பிறந்தவர். வயது வித்தியாசம் ரொம்ப இல்லாததால்..எங்களிடம் ஒரு நட்பு இழையோடும். சித்திகிட்ட என்ன வேணா பேசலாம்..


அம்மாவை உங்கள் உருவில் பார்க்கிறோம் ..

We miss you...

Happy Birthday Small Mummy............


விதிக்கப்பட்ட நம் உறவு..
விதியின் சதியால்..
சிறிது காலம்..பிரித்து விட்ட பொழுதும்...
உள்ளமும், உணர்வுகளும் ..
புரிந்து கொண்டஉறவானது ...
அதுவே..பலமாய் ...
உறவின் பாலமாய் இருக்கிறது..
மனசும்  இதமாய் இருக்கிறது..

சித்தி நீங்க பல்லாண்டு காலம் சந்தோசமா இருக்கணும்..!



குறள்:522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
குறள் விளக்கம்:
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.