புதன், 18 மார்ச், 2015

அண்ணனுமானவன்!

சிறு வயதில் சண்டை வந்தால், என் தம்பி என் கையை கிள்ளியே Mehendi போட்டு விட்டு விடுவான். நானும் நல்லா கிள்ளி விடுவேன். அதற்காகவே நகம் வளர்ப்போம்.



தம்பி ஒரு 8,9 வயதில் ஒரு விஷயம் சொன்னான், தினம் ஒரு அணில் வந்து அவனுக்கு ஒரு பழம் தருவதாக. அவன் கையிலும் பழம் இருக்கும்( கொய்யா, மாதுளை, மாம்பழம், வாழைபழம் என), யாராலையும் நம்ப முடியவில்லை. என் அண்ணன் இருவரும் துப்பறிந்தும் ஒரு தடயமும் கிடைக்க வில்லை.

பாசி படிந்த சுவரில் மூன்று கொடு இருக்கும், அதை காமிச்சு, அணில் பழம் கொடுத்து விட்டு இந்த சுவரில் தன் நகத்தால் அடையலாம் விட்டு சென்றிருக்கிறது என காண்பித்தான்.

அனைவருமே நம்பிவிட்டோம். அவனை கிட்டதட்ட அணில் தூதூவனாக நினைக்க ஆரம்பித்து அனைவரிடமும் சொல்ல ஆரம்பித்தேன், அப்ப பக்கத்து வீட்டு பாயம்மாவிடம் சொல்ல, அவர்கள் "அவர்கள்தான் அந்த அணில்!" என்றார்கள்..அன்னைக்கு எங்க கிட்ட அவன் மாட்டிக்கிட்டு பட்டபாடு இருக்கே...இம்ஹும் வார்த்தையாலே வர்ணிக்க முடியாது. நான்தான் நம்பினன்னா...எனக்கு 2, 4, வயது மூத்த அண்ணன்கள், 7 வயது மூத்த அக்கா எப்படி நம்பினார்கள் என தெரியவில்லை.

அதே நினப்புல நாமளும் எப்படியாவது ஒரு அணில Friend பிடிக்கணும் அதுக பின்னால போய், அதுக எகிறி குத்திச்சு ஓட, Bulb வாங்கின கதை வேற!

ஒரு அணிலால எப்படி ஒரு மாம்பழம் தூக்க முடியும்னு யோசிக்க வேண்டாமான்னு நீங்க கேக்கறது காதுல விழுது. பய பிள்ளை அவ்வளவு தத்ருபமா சொல்லும் பாருங்க... ஷ்ஸ் அப்பா கண்ண கட்டும்!

இன்றும் எதாவது கலாய்க்கனும்னா...நீ  சின்ன வயசுல அணில் கதை சொல்லி ஏமாத்துனவன் தானே என கலாய்போம்.

இப்பெல்லாம் நிறைய பொறுப்பானவர் ஆயிட்டார், வீட்டில் அனைவரின் திருமணத்திலும் அவரின் முக்கிய பங்கு இருக்கிறது.  எதையும் அர்ப்பணிப்போடு(dedication) செய்யணும் என்பார்.  ஒரு வேலை எடுத்துகொண்டார் எனில் அதை முடித்துவிட்டு தான் அடுத்த வேலை எடுப்பார், இதை பார்த்துக்கொண்டே அதை பாப்போம் என்பது அவர் அகராதியிலே கிடையாது.
தீவிர முருக பக்தர்.

கந்தசஷ்டி கவசம், அவர் வாழ்வில் ஒரு திருப்புமுனை தந்தது எங்கள் அனைவரையும் தினம் படிக்க சொல்வார். நான் பாட்டு போட்டு கேக்குறேன் என்பேன். இப்படியே என்னை கந்தசஷ்டி கவசம் படிக்க சொல்லி ரொம்ப Tired ஆயிட்டார்.
                                                             

இன்னைக்கு உன்  Birthday Gift நான் கந்த சஷ்டி கவசம் படிக்க ஆரம்பிச்சுட்டேன் ...படிக்க ஆரம்பிச்சுட்டேன். இதைவிட உனக்கு வேற சந்தோசம் கிடையாது எனக்கு தெரியும்.

என் அண்ணன் தந்தையுமானவன் ஆனதாலோயோ என்னவோ...
என் தம்பி நீ எனக்கு அண்ணனுமானவனாகி விட்டாய்! ...
நீ நல்ல இருக்கனும்யா..உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி பாக்க எங்களுக்கு ஆசையாக இருக்கிறது..சீக்கிரம் நடக்க அந்த முருகன் மனசு வைக்கணும் .

நாளும் பொழுதும் நல்லவனாய்..
காலை உதிக்கும் கதிரவனாய்..
கடமை நினைது வல்லவனாய்...
வாழும் நீ!
பல்லாண்டு நலம் வாழ..
வாழ்த்துகிறோம்!

(படித்ததில் பிடித்தது...சில மாறுதல்களுடன் உனக்காக.. )

* உன் பிறந்தநாள் அன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்....

* அம்மாவின் ஆண்பிள்ளை தேடலுக்கும்,
அப்பாவின் தலைமுறை காக்கவும்,
வரம் பெற்று வந்த
பொறுப்பான மகன்களில் ..
நீயும் ஒருவன் தானே...

* தத்தி தத்தி நீ நடக்க
தங்க மயில் ஆடுதுன்னு,
சொல்லிவச்ச சொந்தங்களுக்கு,
இன்றும் சொக்கத் தங்கம்
நீ தானே...

* கொஞ்சிப் பேச ஒரு அக்காவும்,
சண்டை போட மறு அக்காவும்(நான் ),
சமாதானம் பண்ண
குடும்பமுமாய்,
நாம் அடித்த கூத்துக்கள்
நெஞ்சுக் கூட்டில்
நினைவுகாளாய் ஏராளம்...

* உன் கைபிடித்து
உன்னை நான் பள்ளியனுப்பிய
நாளும்,
அப்பா உனக்கு வாங்கித்தந்த
பொம்மைக்காருக்காய்
உன்னிடம் சண்டை போட்ட
நாளும் என,
அழகான நம் மழலைக் காலம்
மனக்கண்ணில் ஓடுதடா....

* காலங்கள் உருண்டோட,
கனவுகளும் சேர்ந்தோட,
காலத்தின் கோலத்தில்
பொறுப்புகளும் சேர்ந்தாட,
நெருங்கியே இருந்த
நம் அன்பு,
இன்று,
நம் கடமை பயணத்தால்,
இருமடங்கு அதிகமாக,
இதுவரை உன் அருகில் இருந்து
வாழ்த்திய நான்
வார்த்தையைத் தேடுகிறேன்...

* கஷ்டமே அறியாமல்,
காத்திட்ட
எங்கள் அன்பின்,
பொறுப்புக்காய் தாயகம் புறப்பட்டாய்...

* வெயிலும், மழையும்
உன்னை நெருங்காம
(சிங்கையில் )பொத்திப் பொத்தி
வாழ்ந்த நாட்கள்,
புழுதி  நிறைந்த
மாநகரில் நீ அலையத் தானோ?.....

* இங்கு பிடி சோறும்
நீ இன்றி உள்ளிறங்க மறுத்து
உள் நாட்டு கலவரம்
செய்யும்
காரணம் அறிவாயோ?...

* இன்று உந்தன் பிறந்த நாளில்,
கடவுள் உன்னை காத்திடவும்,
காலம் நம்மை கரைசேர்த்திடவும்,
உன்னை தம்பியாய் வ்ரம் பெற்ற.. உன் அக்கா
வெறும் வார்த்தையிலே வாழ்த்துகின்றேன்..

* வயோதிகம் வந்தாலும்,
வளமாக நீ வாழ,
வாஞ்சையோடு வாழ்த்துக்கிறேன்...
ஏழுப்பிறப்பென்பதில்,
எனக்கு நம்பிக்கை இல்லை...
அப்படி ஒன்று இருப்பின்,
என் ஏழுபிறவிக்கும்,
அன்னையாக, தந்தையாக
அண்ணனாக, அக்காவாக
தம்பியாக, தங்கையாக
நீங்களே வேண்டும்
என்று,
இல்லாத கடவுளிடம்
மண்டியிட்டு வேண்டுகின்றேன்....

* உன் பிறந்தநாள் அன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி.

5 கருத்துகள்: